Recounting the deeds of Tirumāl, she sheds tears!
திருமால் செயல் கூறிக் கண்ணீர் விடுகிறாளே!
2067 கன்றுமேய்த்துஇனிதுகந்தகாளாய்! என்றும் *
கடிபொழில்சூழ்கணபுரத்துஎன்கனியே! என்றும் *
மன்றமரக்கூத்தாடிமகிழ்ந்தாய்! என்றும் *
வடதிருவேங்கடம்மேயமைந்தா! என்றும் *
வென்றசுரர்குலங்களைந்தவேந்தே! என்றும் *
விரிபொழில்சூழ்திருநறையூர்நின்றாய்! என்றும் *
துன்றுகுழல்கருநிறத்தென்துணையே! என்றும்
துணைமுலைமேல்துளிசோரச்சோர்கின்றாளே. (2)