PT 7.3.6

I Will Sing Only of the Reclining Lord

பள்ளிகொண்டானையே நான் பாடுவேன்

1573 எட்டனைப்பொழுதாகிலும் என்றும்

என்மனத்தகலாதிருக்கும்புகழ் *

தட்டலர்த்தபொன்னேயலர்கோங்கின்

தாழ்பொழில்திருமாலிருஞ்சோலையங்

கட்டியை * கரும்பீன்றஇன்சாற்றைக்

காதலால்மறைநான்குமுன்னோதிய

பட்டனை * பரவைத்துயிலேற்றை என்

பண்பனையன்றிப்பாடல்செய்யேனே.

Text size