O Perfect Lord! You Cannot Leave My Heart.
நம்பியே! என் வனத்தை விடுத்து அகலமுடியாது
1562 நீண்டாயைவானவர்கள் நினைந்துஏத்திக்காண்பரிதால் *
ஆண்டாயென்றுஆதரிக்கப்படுவாய்க்கு நான்அடிமை *
பூண்டேன் * என் நெஞ்சினுள்ளே புகுந்தாயைப் போகலொட்டேன் *
நாண்தான்உனக்கொழிந்தேன் நறையூர்நின்றநம்பீயோ!