My Mind Contemplates Only Lord Kaṇṇa
கண்ணபிரானையே என் மனம் சிந்தை செய்யும்
1572 ஆங்குவெந்நரகத்துஅழுந்தும்போது
அஞ்சேலென்றுஅடியேனை அங்கேவந்து
தாங்கு * தாமரையன்னபொன்னாரடி
எம்பிரானை உம்பர்க்கணியாய்நின்ற *
வேங்கடத்தரியைப்பரிகீறியை
வெண்ணெயுண்டுஉரலினிடையாப்புண்ட
தீங்கரும்பினை * தேனைநன்பாலினையன்றி
என்மனம்சிந்தைசெய்யாதே.