PT 7.3.4

My Mind Bows Only to Kaṇṇa

கண்ணனுக்கே என் மனம் தாழும்

1571 உரங்களால்இயன்றமன்னர்மாளப்

பாரதத்துஒருதேரைவர்க்காய்ச்சென்று *

இரங்கியூர்ந்துஅவர்க்குஇன்னருள்செய்யும்

எம்பிரானை வம்பார்புனல்காவிரி *

அரங்கமாளிஎன்னாளிவிண்ணாளி

ஆழிசூழிலங்கைமலங்கச்சென்று *

சரங்களாண்டதண்தாமரைக்கண்ணனுக்கன்றி

என்மனம்தாழ்ந்துநில்லாதே.

Text size