Kannamangai
Your browser does not support the audio element.
audio
1578 கண்சோரவெங்குருதிவந்திழிய
வெந்தழல்போல்கூந்தலாளை *
மண்சேரமுலையுண்டமாமதலாய்!
வானவர்தம்கோவே! என்று *
விண்சேரும்இளந்திங்கள்அகடுரிஞ்சு
மணிமாடமல்கு * செல்வத்
தண்சேறையெம்பெருமான்தாள்தொழுவார் காண்மின்
என்தலைமேலாரே. (2)
1579 அம்புருவவரிநெடுங்கண் * அலர்மகளை
வரையகலத்தமர்ந்து * மல்லல்
கொம்புருவவிளங்கினமேல்
இளங்கன்றுகொண்டெறிந்தகூத்தர்போலாம் *
வம்பலரும்தண்சோலை வண்சேறை
வானுந்துகோயில்மேய *
எம்பெருமான்தாள்தொழுவார்
எப்பொழுதும்என்மனத்தேஇருக்கின்றாரே.
1580 மீதோடிவாளெயிறுமின்னிலக
முன்விலகும்உருவினாளை *
காதோடுகொடிமூக்கன்றுடனறுத்த
கைத்தலத்தா! என்றுநின்று *
தாதோடுவண்டலம்பும்
தண்சேறையெம்பெருமான்தாளையேத்தி *
போதோடுபுனல்தூவும்புண்ணியரே
விண்ணவரில்பொலிகின்றாரே.
1581 தேராளும்வாளரக்கன்
தென்னிலங்கைவெஞ்சமத்துப்பொன்றிவீழ *
போராளும்சிலையதனால்பொருகணைகள்
போக்குவித்தாயென்று * நாளும்
தாராளும்வரைமார்பன்
தண்சேறையெம்பெருமானும்,உம்பராளும் *
பேராளன்பேரோதும்பெரியோரை
ஒருகாலும்பிரிகிலேனே.
1582 வந்திக்கும்மற்றவர்க்கும் மாசுடம்பில்
வல்லமணர்தமக்கும்அல்லேன் *
முந்திசென்றரியுருவாய்இரணியனை
முரணழித்தமுதல்வர்க்கல்லால் *
சந்தப்பூமலர்ச்சோலைத்
தண்சேறையெம்பெருமான்தாளை * நாளும்
சிந்திப்பார்க்குஎன்னுள்ளம்
தேனூறிஎப்பொழுதும்தித்திக்குமே.
1583 பண்டுஏனமாய்உலகை அன்றிடந்த
பண்பாளாஎன்றுநின்று *
தொண்டானேன் திருவடியேதுணையல்லால்
துணையில்லேன்சொல்லுகின்றேன் *
வண்டேந்தும்மலர்ப்புறவில் வண்சேறை
எம்பெருமானடியார்தம்மை *
கண்டேனுக்குஇதுகாணீர்என்நெஞ்சம்
கண்ணிணையும்களிக்குமாறே.
1584 பைவிரியும்வரியரவில்படுகடலுள்
துயிலமர்ந்தபண்பா! என்றும் *
மைவிரியும்மணிவரைபோல்மாயவனே!
என்றென்றும், வண்டார் நீலம் *
செய்விரியும்தண்சேறையெம்பெருமான்
திருவடியைச்சிந்தித்தேற்கு * என்
ஐயறிவும்கொண்டானுக்குஆளானார்க்குஆளாம்
என் அன்புதானே.
1585 உண்ணாதுவெங்கூற்றம்
ஓவாதுபாவங்கள்சேரா * மேலை
விண்ணோரும்மண்ணோரும்வந்திறைஞ்சும்
மென்தளிர்போலடியினானை *
பண்ணாரவண்டியம்பும்
பைம்பொழில்சூழ்தண்சேறையம்மான்தன்னை *
கண்ணாரக் கண்டுருகிக்
கையாரத்தொழுவாரைக் கருதுங்காலே.
1586 கள்ளத்தேன்பொய்யகத்தேனாதலால்
போதொருகால்கவலையென்னும் *
வெள்ளத்தேற்குஎன்கொலோ?
விளைவயலுள்கருநீலம்களைஞர்தாளால்
தள்ள * தேன்மணநாறும்
உள்ளத்தேவைப்பாருக்குஇதுகாணீர்
என்னுள்ளம்உருகுமாறே.
1587 பூமாண்சேர்கருங்குழலார்போல்நடந்து
வயல்நின்றபெடையோடு * அன்னம்
தேமாவினின்னிழலில்கண்துயிலும்
தண்சேறையம்மான்தன்னை *
வாமான்தேர்ப்பரகாலன்
கலிகன்றியொலிமாலைகொண்டுதொண்டீர்! *
தூமாண்சேர்பொன்னடிமேல்சூட்டுமின்
நும்துணைக்கையால்தொழுதுநின்றே. (2)
1853 வானை ஆரமுதம்தந்தவள்ளலை *
தேனைநீள்வயல் சேறையில்கண்டுபோய் *
ஆனைவாட்டியருளும் அமரர்தம்
கோனை * யாம்குடந்தைச்சென்றுகாண்டுமே.
2706 ## காரார்திருமேனி காணுமளவும்போய் *
சீரார் திருவேங்கடமே திருக்கோவ (2)
லூரே * - மதிட்கச்சியூரகமே பேரகமே *
பேராமருதிறுத்தான் வெள்ளறையேவெஃகாவே *
பேராலிதண்கால் நறையூர்திருப்புலியூர் *
ஆராமம்சூழ்ந்த அரங்கம் * - கணமங்கை (2)
2772 தாமரைமேல்
மின்னிடையாள்நாயகனை விண்ணகருள்பொன்மலையை *
பொன்னிமணிகொழிக்கும் பூங்குடந்தைப்போர் விடையை *
தென்னன்குறுங்குடியுள் செம்பவளக்குன்றினை *
மன்னியதண் சேறை வள்ளலை * -