I Will Cherish the Perfect Lord of Naṟaiyūr
நறையூர் நம்பியைக் நான் ஆதரிப்பேன்
1569 தாய்நினைந்தகன்றேயொக்க என்னையும்
தன்னையேநினைக்கச்செய்து * தான்எனக்காய்
நினைந்தருள்செய்யும் அப்பனை
அன்றுஇவ்வையகமுண்டுமிழ்ந்திட்ட
வாயனை * மகரக்குழைக்காதனை
மைந்தனை மதிட்கோவலிடைகழி
யாயனை * அமரர்க்கரியேற்றை என்
அன்பனையன்றிஆதரியேனே.