I Saw and Rejoiced in the Perfect Lord of Naṟaiyūr
நறையூர் நம்பியைக் கண்டுகளித்தேன்
1568 சினவில்செங்கண்அரக்கருயிர்மாளச்
செற்றவில்லியென்றுகற்றவர்தந்தம்
மனமுள்கொண்டு * என்றும்எப்போதும்நின்றேத்தும்
மாமுனியை மரமேழெய்தமைந்தனை *
நனவில்சென்றார்க்கும்நண்ணற்கரியானை
நான்அடியேன்நறையூர்நின்றநம்பியை *
கனவிற்கண்டேன்இன்றுகண்டமையால் என்
கண்ணிணைகள்களிப்பக்களித்தேனே. (2)