PT 4.10.8

ஆழியான் அமரும் கோயில் இது

1345 முடியுடைஅமரர்க்குஇடர்செயும்
அசுரர்தம்பெருமானை * அன்றுஅரியாய்
மடியிடைவைத்துமார்வைமுன்கீண்ட
மாயனார்மன்னியகோயில் *
படியிடைமாடத்தடியிடைத்தூணில்
பதித்தபன்மணிகளினொளியால் *
விடிபகலிரவென்றறிவரிதாய
திருவெள்ளியங்குடியதுவே.
PT.4.10.8
1345 muṭi uṭai amararkku iṭar cĕyyum * acurar-
tam pĕrumāṉai * aṉṟu ari āy
maṭiyiṭai vaittu mārvam muṉ kīṇṭa *
māyaṉār maṉṉiya koyil ** -
paṭiyiṭai māṭattu aṭiyiṭait tūṇil *
patitta pal maṇikal̤iṉ ŏl̤iyāl *
viṭi pakal iravu ĕṉṟu aṟivu-aritu āya * -
tiruvĕl̤l̤iyaṅkuṭi-atuve-8

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1345. Our lord Māyan who took the form of a lion and split open the chest of Hiranyan, the king of the Asurans when he vexed the gods, the kings of the sky, stays in the temple in Thiruvelliyangudi where the jewels studding the pillars of the palaces shine so bright it is hard to know whether it is day or night.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முடி உடை கிரீடம் அணிந்த; அமரர்க்கு தேவர்களுக்கு; இடர் துன்பங்களை; செய்யும் விளைவித்துக் கொண்டிருந்த; அசுரர் தம் அசுரர்களின்; பெருமானை தலைவனான இரணியனை; அன்று பிரகலாதன் நலிவுபட்ட அன்று; அரியாய் நரசிம்மனாய்; மடி இடை வைத்து மடியில் வைத்து; மார்வம் முன் மார்பை; கீண்ட கிழித்து அழித்தவனுமான; மாயனார் மாயன்; மன்னிய கோயில் இருக்கும் கோயில்; படியிடை பூமியிலுள்ள; மாடத்து மாடங்களில்; அடியிடைத் தூணில் நாட்டிய தூண்களில்; பதித்த பல் பதித்த பலவித; மணிகளின் ரத்தினங்களின்; ஒளியால் ஒளியால்; விடி விடியற்காலமென்றும்; பகல் பகற்காலமென்றும்; இரவு என்று இராக்காலமென்றும்; அறிவு அரிது ஆய அறிய முடியாமலிருக்கிற; திருவெள்ளியங்குடி திருவெள்ளியங்குடி; அதுவே என்னும் தலம்
mudiyudai being crowned (and thus prideful); amararkku for dhĕvathās; idar sorrow; seyyum causing; asurar tham for asuras; perumānai hiraṇya, who is the king; anṛu when prahlādhan was tortured; ariyāy being narasimha; mun previously; madiyidai on the lap; vaiththu kept; mārvai his chest; kīṇda tore apart; māyanār amaśing sarvĕṣvaran; manniya remaining fixed; kŏyil dhivyadhĕṣam is; padiyidai on earth; mādaththu in mansions; adiyidai placed; thūṇil pillars; padhiththa embossed; pal many types of; maṇigal̤in gems-; ol̤iyāl lustre; vidi as early morning; pagal as day; iravu enṛu as night; aṛivu aridhāya being difficult to know; thiruvel̤l̤iyangudi adhuvĕ it is thiruvel̤l̤iyangudi