PT 4.10.3

காளமேகன் கருதும் கோயில் இது

1340 கடுவிடமுடையகாளியன்தடத்தைக்
கலக்கிமுன் அலக்கழித்து * அவன்தன்
படமிறப்பாய்ந்துபல்மணிசிந்தப்
பல்நடம்பயின்றவன்கோயில் *
படவரவல்குல்பாவைநல்லார்கள்
பயிற்றியநாடகத்தொலிபோய் *
அடைபுடைதழுவி அண்டம்நின்றதிரும்
திருவெள்ளியங்குடியதுவே.
PT.4.10.3
1340 kaṭu viṭam uṭaiya kāl̤iyaṉ taṭattaik *
kalakki muṉ alakkazhittu * avaṉ-taṉ
paṭam iṟap pāyntu pal maṇi cintap
pal naṭam payiṉṟavaṉ koyil ** -
paṭa aravu alkul pāvai nallārkal̤ *
payiṟṟiya nāṭakattu ŏli poy *
aṭai puṭai tazhuvi aṇṭam niṉṟu atirum * -
tiruvĕl̤l̤iyaṅkuṭi-atuve-3

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1340. Our lord who entered the pond and danced on the head of the poisonous snake Kaliyan stirring up the water and afflicting him and making many diamonds spill out from his head stays in the temple in Thiruvelliyangudi where the sound of music for a play acted by stately women spreads everywhere, reaching the sky and roaring like thunder.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன் கடு முன்பு ஒரு சமயம்; விடம் உடைய கொடிய விஷத்தையுடைய; காளியன் காளியநாகம் இருந்த; தடத்தை கலக்கி மடுவை கலக்கி; அலக்கழித்து அது வருந்தும்படிபண்ணி; அவன் தன் அக்காளியனின்; படம் இற படங்கள் முறியும்படியாக; பாய்ந்து பாய்ந்து; பல் மணி படத்திலுள்ள; சிந்த மணிகளெல்லாம் சிந்தும்படியாக; பல் நடம் பலவகை; பயின்றவன் நடனம் பயின்ற கண்ணன்; கோயில் இருக்கும் கோயில்; பட அரவு படமெடுத்த பாம்பின்; அல்குல் இடையை ஒத்த; பாவை நல்லார்கள் அழகிய நல்ல பெண்கள்; பயிற்றிய பயிலும்; நாடகத்து நாடகத்தினுடைய; ஒலி போய் ஒலி உயரப் போய்; அடை புடை தழுவி ஆகாசத்தில் சென்று; அண்டம் நின்று அண்டம்; அதிரும் அதிரும்படி நின்ற; திருவெள்ளியங்குடி திருவெள்ளியங்குடி; அதுவே என்னும் தலம்
mun īn the past; kadu cruel; vidam udaiya having poison; kāl̤iyan kāl̤iyan-s; thadaththai pond; kalakki agitated it to become slushy; alakkazhiththu tormented him; avan than his; padam hood; iṛa to break; pāyndhu jumped; palmaṇi many gems (which were on his head); sindha to scatter; pal nadam many types of dances; payinṛavan krishṇa who danced, where he is residing; kŏyil dhivyadhĕṣam is; padam having vast hood; aravu like a snake; algul thigh region; nallār distinguished; pāvaigal̤ ladies; payiṝiya practicing; nādagaththu oli the sound of the drama; pŏy rising high; adai pudai day and night; thazhuvi being together; aṇdam on the sky; ninṛu remaining firm; adhirum sounding tumultuously; thiruvel̤l̤iyangudi adhuvĕ the dhivyadhĕṣam named thiruvel̤l̤iyangudi.