PT 4.10.5

கோலவில்லிராமன் கோயில் இது

1342 பாரினையுண்டுபாரினையுமிழ்ந்து
பாரதம்கையெறிந்து * ஒருகால்
தேரினையூர்ந்துதேரினைத்துரந்த
செங்கண்மால்சென்றுறைகோயில் *
ஏர்நிரைவயலுள்வாளைகள்மறுகி
எமக்கிடமன்றுஇதென்றெண்ணி *
சீர்மலிபொய்கைசென்றணைகின்ற
திருவெள்ளியங்குடியதுவே.
PT.4.10.5
1342 pāriṉai uṇṭu pāriṉai umizhntu *
pāratam kaiyĕṟintu * ŏrukāl
teriṉai ūrntu teriṉait turanta *
cĕṅ kaṇ māl cĕṉṟu uṟai koyil ** -
er nirai vayalul̤ vāl̤aikal̤ maṟuki *
ĕmakku iṭam aṉṟu itu ĕṉṟu ĕṇṇi *
cīr mali pŏykai cĕṉṟu aṇaikiṉṟa * -
tiruvĕl̤l̤iyaṅkuṭi-atuve-5

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1342. The lovely-eyed Thirumāl who swallowed the whole earth and spat it out and fought in the Bhārathā war and drove the chariot for Arjunā stays in the temple in Thiruvelliyangudi where vālai fish living in the fields, frightened when farmers plow the land, decide, “This is not the place for us!” and move to other beautiful ponds.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பாரினை உலகத்தை; உண்டு உண்டவனும்; பாரினை அந்த உலகங்களை; உமிழ்ந்து உமிழ்ந்து காத்தவனும்; ஒருகால் ஒரு சமயம்; பாரதம் பாரதப் போரில்; கையெறிந்து சேனைகளை அணி வகுத்து; தேரினை ஊர்ந்து தேரை ஓட்டினவனும்; தேரினை எதிரிகளினுடைய தேர்களை; துரந்த துரத்தினவனுமான; செங்கண் தாமரைப் போன்ற கண்களையுடைய; மால் திருமால்; சென்று சென்று; உறை கோயில் உறையும் கோயில்; ஏர் நிரை உழுகிற ஏர்களின்; வயலுள் வயல்களிலிருந்து; வாளைகள் வாளை மீன்கள்; மறுகி பயந்து; எமக்கு இந்த வயல் நாம்; இடம் அன்று வஸிக்கத் தக்கதன்று; இது என்று எண்ணி என்று நினைத்து; சீர் மலி அழகுமிக்க; பொய்கை தடாகங்களிலே; சென்று அணைகின்ற சென்று அணைகின்ற; திருவெள்ளியங்குடி திருவெள்ளியங்குடி; அதுவே என்னும் தலம்
pārinai earth; uṇdu (during deluge) mercifully consumed; pārinai earth; umizhndhu (during creation) spat out; oru kāl during krishṇāvathāram; bāradham in mahābhāratha war; kai eṛindhu organised the army in various groups; thĕrinai arjuna-s chariot; ūrndhu conducted; thĕrinai chariots of bhīshma et al; thurandha chased to drive them away; sem kaṇ having reddish eyes (due to motherly forbearance); māl sarvĕṣvaran who is mad about his devotees; senṛu came; uṛai and eternally residing; kŏyil dhivyadhĕṣam is; ĕr ploughs which are used for farming; nirai having rows; vayal ul̤ present in the fertile fields; vāl̤aigal̤ vāl̤ai fish; maṛugi fears; idhu this fertile field; emakku for us to reside; idam anṛu not the apt place; enṛu eṇṇi thinking this way; sīr by beauty; mali abundant; poygai ponds; senṛu went; aṇaiginṛa and reached; thiruvel̤l̤iyangudi adhuvĕ it is thiruvel̤l̤iyangudi.