PT 4.10.1

கண்ணன் கருதிய கோயில் இது

1338 ஆய்ச்சியரழைப்பவெண்ணெயுண்டொருகால்
ஆலிலைவளர்ந்தஎம்பெருமான் *
பேய்ச்சியைமுலயுண்டுஇணைமருதிறுத்துப்
பெருநிலம்அளந்தவன்கோயில் *
காய்த்தநீள்கமுகும்கதலியும்தெங்கும்
எங்குமாம்பொழில்களின்நடுவே *
வாய்த்தநீர்பாயும்மண்ணியின்தென்பால்
திருவெள்ளியங்குடியதுவே. (2)
PT.4.10.1
1338 ## āycciyar azhaippa vĕṇṇĕy uṇṭu ŏrukāl *
āl ilai val̤arnta ĕm pĕrumāṉ *
peycciyai mulai uṇṭu iṇai marutu iṟuttup *
pĕru nilam al̤antavaṉ koyil ** -
kāytta nīl̤ kamukum kataliyum tĕṅkum *
ĕṅkum ām pŏzhilkal̤iṉ naṭuve *
vāytta nīr pāyum maṇṇiyiṉ tĕṉpāl * -
tiruvĕl̤l̤iyaṅkuṭi-atuve-1

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1338. Our dear lord who ate the butter that the cowherd women gave him, slept on a banyan leaf at the end of the eon, drank the milk of the devil Putanā, broke the two marudu trees, and who measured the world and the sky with his two feet at king Mahabali’s sacrifice, stays in the temple in Thiruvelliyangudi in the southern land where the Manni river flows among the groves with its abundant water and coconut, banana and tall kamugu trees grow.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆய்ச்சியர் அழைப்ப ஆய்ச்சியர் அழைக்கும்படி; வெண்ணெய் உண்டு வெண்ணெய் உண்டவனும்; ஒருகால் ஆலிலை பிரளயகாலத்தில் ஆலிலையில்; வளர்ந்த எம் பெருமான் இருந்தவனுமான எம்பெருமான்; பேய்ச்சியை பூதனையின்; முலை உண்டு பாலை உண்டவனும்; இணை மருது இரட்டை மருதமரங்களை; இறுத்து முறித்தவனும்; பெரு நிலம திருவிக்ரமனாய்; அளந்தவன் அளந்தவனானவன்; கோயில் இருக்கும் கோயில்; காய்த்த காய்கள் நிறைந்த; நீள் ஓங்கியிருக்கும்; கமுகும் பாக்குமரங்களும்; கதலியும் வாழைமரங்களும்; தெங்கும் தென்னை மரங்களும்; எங்கும் ஆம் எங்கும்; பொழில்களின் நடுவே சோலைகளினிடையே; வாய்த்த நீர் பாயும் போதுமான ஜலம் பாயும்; மண்ணியின் மண்ணியாற்றின்; தென்பால் தென்கரையிலுள்ள; திருவெள்ளியங்குடி திருவெள்ளியங்குடி; அதுவே என்னும் தலம்
āychchiyar cowherd women; azhaippa to complain; veṇṇey butter; uṇdu mercifully ate; oru kāl once (during deluge); ālilai on a banyan leaf; val̤arndha mercifully resting there; emperumān my lord; pĕychchiyai pūthanā-s; mulai bosom; uṇdu mercifully sucked (and finished her); iṇai joined; marudhu marudha trees; iṛuththu broke; peru nilam vast earth; al̤andhavan the eternal abode of sarvĕṣvaran who accepted (from mahābali) and measured; kŏyil dhivyadhĕṣam is; kāyththa having unripe fruits; nīl̤ tall; kamugum areca trees; kadhaliyum plantain trees; thengum coconut trees; engumām present everywhere; pozhilgal̤in gardens-; naduvĕ in the middle; vāyndha abundant; nīr water; pāyum flowing; maṇṇiyil maṇṇi river-s; thenpāl present on the southern bank; thiruvel̤l̤iyangudi known as thiruvel̤l̤iyangudi; adhuvĕ is that dhivyadhĕṣam.