PT 4.10.6

திருவிக்கிரமன் கோயில் இது

1343 காற்றிடைப்பூளைகரந்தனஅரந்தையுறக்
கடலரக்கர்தம்சேனை *
கூற்றிடைச்செல்லக்கொடுங்கணைதுரந்த
கோலவில்லிஇராமன்தன்கோயில் *
ஊற்றிடைநின்றவாழையின்கனிகள்
ஊழ்த்துவீழ்ந்தனஉண்டுமண்டி *
சேற்றிடைக்கயல்களுகள்திகழ்வயல்சூழ்
திருவெள்ளியங்குடியதுவே.
PT.4.10.6
1343 kāṟṟiṭaip pūl̤ai karantĕṉa arantai uṟak *
kaṭal arakkar-tam ceṉai *
kūṟṟiṭaic cĕlla kŏṭuṅ kaṇai turanta *
kola vil irāmaṉ-taṉ koyil ** -
ūṟṟiṭai niṉṟa vāzhaiyiṉ kaṉikal̤ *
ūzhttu vīzhntaṉa uṇṭu maṇṭi *
ceṟṟiṭaik kayalkal̤ ukal̤ tikazh vayal cūzh * -
tiruvĕl̤l̤iyaṅkuṭi-atuve-6

Ragam

Mohana / மோஹன

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

1343. Our god Rāma who shot cruel arrows from his beautiful bow at the army of the Rakshasās of Lankā surrounded with oceans and destroyed them, making their army fly away like cotton in the wind stays in the temple in Thiruvelliyangudi surrounded with flourishing fields where kayal fish that live in the wet mud glitter after eating ripe banana fruits that have fallen from the trees.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
காற்றிடை பெருங்காற்றிலே; பூளை பூளைப் பூவானது; கரந்து என உருமாய்ந்து அழிவது போல்; கடல் கடல் போன்ற; அரக்கர் தம் சேனை அரக்கர் சேனையானது; அரந்தை உற துன்பமடையும்படியும்; கூற்றிடை யமனிடம்; செல்ல செல்லும்படியும்; கொடுங்கணை கொடிய அம்புகளைப்; துரந்த பிரயோகித்த; கோல வில்லி அழகிய வில்லையுடைய; இராமன் இராமன்; தன் கோயில் இருக்கும் கோயில்; ஊற்றிடை நீரூற்று உள்ள; நின்ற நிலங்களிலே இருக்கும்; வாழையின் கனிகள் வாழைப் பழங்கள்; ஊழ்த்து இற்று உதிர்ந்த; வீழ்ந்தன பழங்களை; மண்டி போட்டியிட்டுக்; உண்டு கொண்டு உண்டு; கயல்கள் கயல் மீன்கள்; சேற்றிடை சேற்று நிலங்களிலே; உகள் துள்ளி விளையாடும்; திகழ் வயல் சூழ் செழித்த வயல்களால் சூழ்ந்த; திருவெள்ளியங்குடி திருவெள்ளியங்குடி; அதுவே என்னும் தலம்
kāṝidai in great wind; pūl̤ai a tender flower; karandhana just as it will be destroyed; kadal like ocean; arakkar tham rākshasas-; sĕnai army; arandhai uṛa to suffer; kūṝidai yama-s place; sella to reach; kodu cruel; kaṇai arrows; thurandha shot; kŏla beautiful; villi having bow; rāman than chakravarthith thirumagan-s; kŏyil dhivyadhĕṣam is; ūṝidai in the land where there are water-springs; ninṛa sprouted; vāzhaiyin plantain trees-; ūzhththu (well ripened and) separated; vīzhndhana and fell down; kanigal̤ fruits; maṇdi eagerly; uṇdu ate; kayalgal̤ kayal fish; sĕṝidai in the muddy areas; ugal̤ jumping; thigazh shining; vayal by fertile fields; sūzh surrounded; thiruvel̤l̤iyangudi adhuvĕ it is thiruvel̤l̤iyangudi