30

Thiruvann Purudothamam

திருவண்புருஷோத்தமம்

Thiruvann Purudothamam

Thiru Nāngur

ஸ்ரீ புருஷோத்தமநாயகீ ஸமேத ஸ்ரீ புருஷோத்தமாய நமஹ

**Moolavar (Main Deity)** Purushothaman stands in the Thirukkolam (standing posture) alongside Sri Devi and Bhoo Devi. Purushothama Nayagi Nachiyar has a separate shrine. Ayodhya's Lord Rama is the deity who has graced this place.

**Types of Men:** There are three kinds of men. One who causes suffering to others to gain pleasure for himself is an + Read more
மூலவர் புருஷோத்தமன் நின்ற திருக்கோலத்தில், ஸ்ரீதேவி, பூதேவிமார்களுடன் காட்சி அளிக்கிறார். புருஷோத்தம நாயகி நாச்சியாருக்கு தனிக்கோவில் உள்ளது. அயோத்தி எம்பெருமானே இங்கு எழுந்தருளினார்.

புருஷர்கள் மூன்று வகை. தான் இன்பம் அடைய, மற்றவனை துன்பறுத்துபவன் அதமன். எல்லோரும் இன்பமுடன் இருக்க + Read more
Thayar: Sri PurushOtthama Nāyaki
Moolavar: Sri PurushOtthaman
Utsavar: Sri PurushOtthaman
Vimaanam: Sanjeevivikraha
Pushkarani: Thiruppārkadal Theertham
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Chozha Nādu
Area: Seerkaazhi
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Timings: 8:00 a.m. to 1:00 p.m. 3:00 p.m. to 8:00 p.m. (Please take the archaga from their home for darshan.)
Search Keyword: Vanpurushothamam
Mangalāsāsanam: Thirumangai Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 4.2.1

1258 கம்பமாகடலடைத்துஇலங்கைக்குமன் கதிர்முடியவை பத்தும்
அம்பினாலறுத்து * அரசவன் தம்பிக்கு அளித்தவனுறை கோயில் *
செம்பலாநிரைசண்பகம்மாதவி சூதகம்வாழைகள்சூழ் *
வம்புலாம்கமுகோங்கியநாங்கூர் வண்புருடோத்தமமே. (2)
1258 ## கம்ப மா கடல் அடைத்து இலங்கைக்கு மன் * கதிர் முடி-அவை பத்தும்
அம்பினால் அறுத்து * அரசு அவன் தம்பிக்கு * அளித்தவன் உறை கோயில் **
செம் பலா நிரை செண்பகம் மாதவி * சூதகம் வாழைகள் சூழ் *
வம்பு உலாம் கமுகு ஓங்கிய நாங்கூர் * வண்புருடோத்தமமே-1
1258
kambamākadaladaiththu ilaNGkaikkumaNn * kathirmudi_avaipaththum ambiNnālaRuththu *
arasu_avan thambikku * aLiththavaNn_uRaikOyil *
chembalān^irai cheNbagammāthavi * choothagam vāzhaigaLchoozh *
vambulām kamukOngiya nāngoor * vaNpurudOththamamE (4.2.1)

Ragam

கல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1258. Our lord as Rāma, who made a bridge over the ocean, went to Lankā, fought with the Rākshasa Rāvana, ' cut off his ten heads with their shining crowns and gave the kingdom to Vibhishanā, Rāvana’s brother stays in the temple of Vanpurushothamam in Nāngur where good jackfruit trees, shenbaga plants, mādhavi plants, mango trees, banana trees and fragrant kamuku trees flourish.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கம்ப மா சலியாத அலைகளுள்ள; கடல் கடலை அடைத்து; இலங்கைக்கு அணைகட்டி; மன் இலங்கை அரசன் ராவணனின்; கதிர் முடி ஒளிவிடும் அவன் தலைகள்; அவை பத்தும் பத்தையும்; அம்பினால் அறுத்து அம்பினால் அறுத்து; அவன் தம்பிக்கு அவன் தம்பி விபீஷணனுக்கு; அரசு அளித்தவன் இராஜ்யம் அளித்த; உறை கோயில் எம்பெருமான் இருக்குமிடம்; செம் பலா நிரை பலாமரங்களின் வரிசைகளும்; செண்பகம் செண்பக மரங்களும்; மாதவி மாமரங்களும்; சூதகம் குருக்கத்திச் செடிகளும்; வாழைகள் வாழை மரங்களும்; சூழ் வம்பு உலாம் சூழ்ந்த மணம் மிக்க; கமுகு பாக்கு மரங்களும்; ஓங்கிய ஓங்கி வளர்ந்துள்ள; நாங்கூர் திருநாங்கூரின்; வண்புருடோத்தமமே வண்புருடோத்தமமே
kambam swaying (having waves); mA vast; kadal ocean; adaiththu building a bridge; ilangaikku for the lankA city; man rAvaNa who is the lord, his; kadhir radiant; avai such; mudi paththum ten heads; ambinAl with arrows; aRuththu severed; avan thambikku for vibhIshaNAzhwAn who was rAvaNa-s brother; arasu aLiththavan chakravarthith thirumagan who mercifully gave the kingdom; uRai firmly residing; dhEsam abode; palA jackfruit trees-; sem best; nirai rows; seNbagam sheNbaga trees; mAdhavi kurukkaththi; sUdhagam mango trees; vAzhaigaL plantain trees (by these); sUzh being surrounded; vambu fragrance; ulA spreading; kamugu areca trees; Ongiya being tall; nAngUr in thirunAngUr; vaN purudOththamam dhivyadhESam named vaN purudOththamam.

PT 4.2.2

1259 பல்லவம்திகழ்பூங்கடம்பேறிய அக்காளியன்பணவரங்கில் *
ஒல்லைவந்திறப்பாய்ந்துஅருநடஞ்செய்த உம்பர்கோனுறைகோயில் *
நல்லவெந்தழல்மூன்றுநால்வேதம் ஐவேள்வியோடுஆறங்கம் *
வல்லஅந்தணர்மல்கியநாங்கூர் வண்புருடோத்தமமே.
1259 பல்லவம் திகழ் பூங் கடம்பு ஏறி * அக் காளியன் பணவு அரங்கில் *
ஒல்லை வந்து உறப் பாய்ந்து அரு நடம் செய்த * உம்பர்-கோன் உறை கோயில் **
நல்ல வெம் தழல் மூன்று நால் வேதம் * ஐவேள்வியோடு ஆறு அங்கம் *
வல்ல அந்தணர் மல்கிய நாங்கூர் * வண்புருடோத்தமமே-2
1259
pallavamthigazh poongadampERi * akkāLiyan paNavarangil *
ollai vanthuRappāynthu aru_nadancheytha * umbarkONnuRaikOyil *
nalla venthazhal mooNnRun^ālvEtham * ai_vELviyODu āRangam *
valla anthaNar malgiya nāngoor * vaNpurudOththamamE (4.2.2)

Ragam

கல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1259. Our lord, the king of the gods who climbed on a blooming Kadamba tree with tender shoots, jumped into a pond swiftly and danced on the snake Kālingan's head stays in the temple of Vanpurushothamam in Nāngur where many divine Vediyars live keeping the three fires, performing the five sacrifices, and reciting the four Vedās and six Upanishads.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பல்லவம் திகழ் தளிர்களும் பூக்களும்; பூங் கடம்பு திகழும் கடம்ப; ஏறி மரத்தில் ஏறி; அக்காளியன் காளியன் என்னும் நாகத்தின்; பண அரங்கில் படங்களாகிற அரங்கில்; ஒல்லை வந்து திடீரென்று வந்து; உறப் பாய்ந்து சிக்கெனக் குதித்து; அரு நடம் செய்த அருமையான நடனம் செய்த; உம்பர் கோன் தேவாதி தேவன்; உறை கோயில் இருக்குமிடம்; நல்ல மூன்று முறைபடி மூன்று வித; வெம் தழல் அக்நிகளையும்; ஆறு அங்கம் ஆறுஅங்கங்களோடு; நால் வேதம் நான்கு வேதங்களையும் ஓதி; ஐ வேள்வியோடு ஐந்து வேள்விகளையும் செய்து; வல்ல மற்றவர்களுக்கும் கற்பிக்கும்; அந்தணர் அந்தணர்கள்; மல்கிய நாங்கூர் நிறைந்த திருநாங்கூரின்; வண்புருடோத்தமமே வண்புருடோத்தமமே
pallavam shoots; thigazh shining; pU blossomed; kadambu on the kadamba tree; ERi climbed; a kALiyan such [cruel] kALiya-s; paNam hoods; arangil on the [dance] stage; uRa to make him tired (and not escape); vandhu approached; ollai quickly; pAyndhu jumped; aru rare; nadam dances; seydha one who did; umbar kOn the lord of dhEvas; uRai kOyil abode where he resides; nalla having the goodness to perform karmAnushtAnams (carrying out deeds prescribed in vEdhas); vem hot; thazhal mUnRu three types of fire; nAl vEdham four vEdhams; ai vELvi five great yagyas; ARu angam six ancillary subjects [of vEdham]; valla those who can teach to others; andhaNar brAhmaNas; malgiya is abundantly filled; nAngUr vaNpurudOththamamE vaN purudOththamam in thirunAngUr.

PT 4.2.3

1260 அண்டரானவர்வானவர்கோனுக்கென்று அமைத்த சோறதுவெல்லாம்
உண்டு * கோநிரைமேய்த்துஅவைகாத்தவன் உகந்தினிதுறைகோயில் *
கொண்டலார்முழவிற்குளிர்வார்பொழில் குலமயில் நடமாட *
வண்டுதானிசைபாடிடுநாங்கூர் வண்புருடோத்தமமே.
1260 அண்டர் ஆனவர் வானவர்-கோனுக்கு என்று * அமைத்த சோறு-அது எல்லாம்
உண்டு * கோ-நிரை மேய்த்து அவை காத்தவன் * உகந்து இனிது உறை கோயில் **
கொண்டல் ஆர் முழவில் குளிர் வார் பொழில் * குல மயில் நடம் ஆட *
வண்டு -தான் இசை பாடிடும் நாங்கூர் * வண்புருடோத்தமமே-3
1260
aNdarāNnavar vāNnavar_kONnukKeNnRu * amaiththachORu_athuvellām uNdu *
kOn^irai mEyththu avaikāththavaNn * uganthiNnithuRaikOyil *
KoNdalār muzhavil kuLirvārPozhil * kulamayil nadamāda *
vaNduthānisaipādidu nāngoor * vaNpurudOththamamE (4.2.3)

Ragam

கல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1260. Our lord who ate the food that cowherds made for Indra the king of the gods in the sky, and grazed the cows and protected them from the storm stays happily in the temple of Vanpurushothamam in Nāngur where peacocks dance in the lovely cool groves when the clouds roar like drums and the bees sing their music.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அண்டர் ஆனவர் இடையர்கள்; வானவர் கோனுக்கு தேவேந்திரனுக்கு; அமைத்த சோறு சமைத்த அன்னம்; அது எல்லாம் முழுவதும்; உண்டு கோ நிரை உண்டு பசுக்களை; மேய்த்து மேய்த்து அவைகளை; அவை காத்தவன் காத்தவன் மகிழ்ந்து; இனிது உறை கோயில் இருக்கும் கோயில்; குளிர் வார் குளிர்ந்து பரந்த; பொழில் சோலைகளில்; கொண்டல் ஆர் மேகங்கள்; முழவில் கர்ஜிக்கும் போது; குலமயில் கூட்டம் கூட்டமாக; நடம் ஆட மயில்கள் ஆட; வண்டு தான் வண்டுகள்; இசை பாடிடும் ரீங்காரம் பண்ண; நாங்கூர் திருநாங்கூரின்; வண்புருடோத்தமமே வண்புருடோத்தமமே
aNdar Anavar cowherds; vAnavar kOnukku enRu considering to offer to dhEvEndhran [the head of celestial entities]; amaiththa prepared; adhu sORu that food; ellAm fully; uNdu mercifully consumed; kO nirai herds of cow; mEyththu tended; avai those cows; kAththavan krishNan who protected; ugandhu joyfully; inidhu being pleased; uRai kOyil abode where he is residing; koNdal clouds; Ar complete; muzhavu having the roar; kuLir rejuvenating; vAr well grown; pozhil in gardens; mayil kulam pride of peacocks; nadam Ada as they dance; vaNdu thAn beetles; isai songs; pAdidum singing; nAngUr vaN purudOththamamE vaN purudOththamam in thirunAngUr.

PT 4.2.4

1261 பருங்கையானையின்கொம்பினைப்பறித்துஅதன்பாகனைச் சாடிப்புக்கு *
ஒருங்கமல்லரைக்கொன்று பின்கஞ்சனையுதைத்தவனுறை கோயில் *
கரும்பினூடு உயர்சாலிகள்விளைதரு கழனியில்மலிவாவி *
மருங்கெலாம்பொழிலோங்கியநாங்கூர் வண்புருடோத்தமமே.
1261 பருங்கை யானையின் கொம்பினைப் பறித்து * அதன் பாகனைச் சாடிப் புக்கு *
ஒருங்க மல்லரைக் கொன்று * பின் கஞ்சனை உதைத்தவன் உறை கோயில் **
கரும்பினூடு உயர் சாலிகள் விளைதரு * கழனியில் மலி வாவி *
மருங்கு எலாம் பொழில் ஓங்கிய நாங்கூர் * வண்புருடோத்தமமே-4
1261
parungai yāNnaiyiNn Kombinaip paRiththu * athaNn pāganaich chādippukku *
oRunga mallaraik KoNnRu * piNnkaNYchanai uthaiththavaNn_uRaikOyil *
karumbiNnoodu uyarchāligaL viLaitharu * kazhaNniyil malivāvi *
marungelām pozhilOngiya nāngoor * vaNpurudOththamamE (4.2.4)

Ragam

கல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1261. Our god who broke the tusks of the long-trunked elephant Kuvalayābeedam, fought with its mahout and killed him and killed the Asuran Kamsan and the wrestlers sent by him stays in the temple of Vanpurushothamam in Nāngur where ponds and groves are abundant and sugarcane grows tall amid the paddy plants in the fields.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பருங் கை பருத்த துதிக்கையையுடைய; யானையின் குவலயாபீட யானையின்; கொம்பினைப் பறித்து தந்தங்களைப் பறித்து; அதன் பாகனை அதன் பாகனை; சாடி கொன்று அதன் பின்; புக்கு ஒறுங்க உள்ளே நுழைந்து; மல்லரை கொன்று மல்லர்களை அழித்து; பின் கஞ்சனை பின் கஞ்சனை; உதைத்தவன் உதைத்தவன்; உறை கோயில் இருக்கும் கோயில்; கரும்பினூடு கரும்புச் சோலையின்; உயர் நடுவே ஓங்கி; சாலிகள் நெற்பயிகள்; விளைதரு விளையும்; கழனியில் மலி வயல்களில்; வாவி நிறைந்திருக்கும் கிணறுகளை; மருங்கு எலாம் சுற்றிலும்; ஓங்கிய ஓங்கி வளர்ந்துள்ள; பொழில் சோலைகளையுடைய; நாங்கூர் திருநாங்கூரின்; வண்புருடோத்தமமே வண்புருடோத்தமமே
parum huge; kai having trunk; yAnaiyin kuvalayApIdam-s; kombinai tusks; paRiththu plucked; adhan pAganai the mahout who can conduct that elephant; sAdi killed; pukku entered inside; orunga who came together; mallarai chANUra and mushtika; konRu destroyed; pin subsequently; kanjanai kamsan; udhaiththavan krishNa who kicked; uRai kOyil the abode where he is residing; karumbin sugarcane garden-s; Udu in the middle; uyar grown tall; sAligaL red paddy crops; viLai tharu growing; kazhaniyil in fertile fields; mali present abundantly; vAvi wells-; marungu elAm in the surroundings; Ongiya grown tall; pozhil having gardens; nAngUr vaN purudOththamE vaN purudOththam in thirunAngUr.

PT 4.2.5

1262 சாடுபோய்விழத்தாள்நிமிர்த்து ஈசன்தன்படையோடும் கிளையோடும்
ஓட * வாணனைஆயிரந்தோள்களும் துணித்தவனுறை கோயில் *
ஆடுவான்கொடிஅகல்விசும்பணவிப்போய்ப் பகலவனொளி மறைக்கும் *
மாடமாளிகைசூழ்தருநாங்கூர் வண்புருடோத்தமமே.
1262 சாடு போய் விழத் தாள் நிமிர்ந்து * ஈசன் தன் படையொடும் கிளையோடும்
ஓட * வாணனை ஆயிரம் தோள்களும் * துணித்தவன் உறை கோயில் **
ஆடு வான் கொடி அகல் விசும்பு அணவிப் போய்ப் * பகலவன் ஒளி மறைக்கும் *
மாட மாளிகை சூழ் தரு நாங்கூர் * வண்புருடோத்தமமே-5
1262
CHāduPOy vizhaththāL n^imirththu * eechaNnthaNn padaiYodum giLaiyOdum_Oda *
vāNaNnai āyiran^thOLkaLum * thuNiththavaNn_uRaikOyil *
āduvān Kodi_akal vichumpaNavip pOyp * pakalavaNn oLimaRaikkum *
mādamāLigai choozhtharu nāngoor * vaNpurudOththamamE (4.2.5)

Ragam

கல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1262. Our god killed Sakatāsuran when he came as a cart and chased away Shivā and his allies when they came to help Vānāsuran in battle and cut off the thousand arms of the Asuran. He stays in the temple of Vanpurushothamam in Nāngur filled with rich palaces where the flags fly and rise to the sky hiding the light of the sun, the god of the day.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சாடு சகடமானது வெகு தூரம்; போய் விழ சென்று விழ; தாள் நிமிர்த்து தன் கால்களை நீட்டினவனும்; ஈசன் தன் ருத்ரன் தனது; படையொடும் ஸேனைகளோடும்; கிளையோடும் சுற்றத்தாரோடும்; ஓட தோற்றுபோய் ஓட; வாணனை பாணாஸுரனின்; ஆயிரம் ஆயிரம்; தோள்களும் தோள்களையும்; உறை கோயில் இருக்கும் கோயில்; ஆடு வான் ஆடும் பெரிய; கொடி கொடிககள்; அகல் விசும்பு பரந்த ஆகாசத்தை; அணவி தழுவிக் கொண்டு; போய் உயரப் போய்; பகலவன் ஒளி சூர்யனுடைய ஒளியை; மறைக்கும் மறைக்கும்; மாட மாளிகை மாட மாளிகைகளால்; சூழ்தரு நாங்கூர் சூழ்ந்த திரு நாங்கூரின்; வண்புருடோத்தமமே வண்புருடோத்தமமே
sAdu the wheel which was possessed by the demon; pOy went far away; vizha to fall down and be destroyed; thAL divine feet; nimirththu stretched; Isan rudhran; than padaiyOdum with his armies; kiLaiyOdum with his close aides such as shaNmukha, gaNapathi et al; Oda made to be defeated and run away; vANanai bANAsura; Ayiram thOLgaLum thousand shoulders; thuNiththavan krishNa who destroyed; uRai kOyil the temple where he is residing; Adu swaying; vAn big; kodi flags; agal vast; visumbu sky; aNavi embracing; pOy flying high; pagalavan sun; oLi rays; maRaikkum blocking, to be not seen; mAdam by halls; mALigai by homes; sUzh tharu being surrounded; nAngUr vaN purudOththamE vaN purudOththam in thirunAngUr.

PT 4.2.6

1263 அங்கையால்அடிமூன்றுநீரேற்று அயன்அலர்கொடு தொழுதேத்த *
கங்கைபோதரக்கால்நிமிர்த்தருளிய கண்ணன்வந்துறைகோயில் *
கொங்கைகோங்கவைகாட்டவாய்குமுதங்கள்காட்ட, மாபதுமங்கள் *
மங்கைமார்முகம்காட்டிடுநாங்கூர் வண்புருடோத்தமமே.
1263 அங் கையால் அடி மூன்று நீர் ஏற்று * அயன் அலர் கொடு தொழுது ஏத்த *
கங்கை போதரக் கால் நிமிர்த்து அருளிய * கண்ணன் வந்து உறை கோயில் **
கொங்கை கோங்கு-அவை காட்ட வாய் குமுதங்கள் காட்ட * மா பதுமங்கள் *
மங்கைமார் முகம் காட்டிடும் நாங்கூர் * வண்புருடோத்தமமே-6
1263
angaiyāl adimooNnRu n^eerERRu * ayaNn_alarKodu THozhuthEththa *
kangaipOtharak kāln^imirththu_aruLiya * kaNNaNnvan^thuRaikOyil *
Kongai kOngavaikātta vāykumuthangaL kātta * māpathumangaL *
mangaimār mugamkāttidu nāngoor * vaNpurudOththamamE (4.2.6)

Ragam

கல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1263. Our dear lord, Kannan who took water from the hands of Mahābali, received three feet of land and measured it with his two feet, raising them to the sky as Nānmuhan worshiped him with flowers while the Ganges flowed swiftly from the sky, stays in the temple of Vanpurushothamam in Nāngur where kongu buds are like the breasts of women, kumudam flowers bloom like their mouths and beautiful lotuses blossom like their faces.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மூன்று அடி மூவடி நிலத்துக்காக; அங் கையால் அழகிய கையில்; நீர் ஏற்று தான நீர் ஏற்று கொண்டும்; அயன் அலர் பிரம்மா பூக்களை; கொடு ஸமர்ப்பித்து; தொழுது ஏத்த துதித்து வணங்கி; கங்கை கங்கை நதி; போதர பெருகும் படியாக; கால் நிமிர்த்தருளிய காலை உயர நீட்டின; கண்ணன் வந்து கண்ணன் வந்து; உறை கோயில் இருக்கும் கோயில்; கோங்கு கோங்குமரத்தின்; அவை அரும்புகள்; கொங்கை பெண்களின் மார்பகங்கள்; காட்ட போன்றிருக்க; குமுதங்கள் குமுதங்கள் பெண்களின்; வாய் காட்ட வாய் போன்றிருக்க; மா பதுமங்கள் சிறந்த தாமரை மலர்கள்; மங்கைமார் முகம் மங்கைமார் முகம் போன்று; காட்டிடும் நாங்கூர் பிரகாசிக்கும் திருநாங்கூரில்; வண்புருடோத்தமமே வண்புருடோத்தமமே
mUnRu adi for three steps of land; am beautiful; kaiyAl with his divine hand; nIr ERRu accepting the water which was given in charity; (then) ; ayan brahmA; alar kodu gathering flowers; thozhudhu worshipped; Eththa to praise; gangai river gangA; pOdhara to start the flow of; kAl divine feet; nimirththu aruLiya one who stretched; kaNNan sarvESvaran; vandhu (further) came for the protection of devotees; uRai kOyil the temple where he is residing; kOngu avai the buds of the kOngu tree; mangaimAr the women (of that town); kongai bosoms; kAtta show; kumudhangaL reddish Ambal flowers; vAy kAtta show their lips; mA beautiful; padhumangaL lotus flowers; mugam face; kAttidum showing (things which resemble various limbs of the women); nAngUr vaN purudOththamamE vaN purudOththamam in thirunAngUr

PT 4.2.7

1264 உளையஒண்திறல்பொன்பெயரோன்தனது உரம்பிளந்து உதிரத்தை
அளையும் * வெஞ்சினத்துஅரி பரிகீறிய அப்பன்வந்துறை கோயில் *
இளையமங்கையர்இணையடிச்சிலம்பினோடு எழில்கொள் பந்தடிப்போர் * கை
வளையினின் றொலிமல்கியநாங்கூர் வண்புருடோத்தமமே.
1264 உளைய ஒண் திறல் பொன்பெயரோன் * தனது உரம் பிளந்து உதிரத்தை
அளையும் * வெம் சினத்து அரி பரி கீறிய * அப்பன் வந்து உறை கோயில் **
இளைய மங்கையர் இணை-அடிச் சிலம்பினோடு * எழில் கொள் பந்து அடிப்போர் * கை
வளையின் நின்று ஒலி மல்கிய நாங்கூர் * வண்புருடோத்தமமே -7
1264
uLaiya oNdhiRal PonPeyarONn * thaNnathu_urampiLan^thu uthiraththaiaLaiyum *
VenchiNnaththu ariparikeeRiya * appaNnvan^thuRaikOyil *
iLaiya mangaiyar iNaiyadich chilambiNnODu * ezhilKoL pan^thadippOr *
kaivaLaiyil ninRoli malkiya nāngoor * vaNpurudOththamamE (4.2.7)

Ragam

கல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1264. Our father who went as an angry man-lion to the Asuran Hiranyan, the strong king whose name means gold, and split open his chest making the blood flow out stays in the temple of Vanpurushothamam in Nāngur where the sound of the bangles of young girls playing beautifully with balls and the sound of the anklets that ornament their feet spreads everywhere.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒண் திறல் அதிக பலமுள்ள; பொன்பெயரோன் இரணியன்; உளைய தனது மனம் வருந்தும்படி அவனது; உரம் பிளந்து மார்பைப் பிளந்து; உதிரத்தை உதிரத்தை; அளையும் அளைந்த; வெம் சினத்து அரி உக்ர நரசிம்மனும்; பரி குதிரையாக வந்த கேசியை; கீறிய முடித்தவனுமான; அப்பன் வந்து எம்பெருமான் வந்து; உறை கோயில் இருக்கும் கோயில்; இளைய மங்கையர் சிறுபெண்களின்; இணை அடி கால்களின்; சிலம்பினோடு சிலம்பொலியோடு; எழில் கொள் பந்து அழகிய பந்தடிக்கும்; அடிப்போர் சிறுமிகளின்; கை கைகளில் அணிந்துள்ள; வளையில் வளையல்களின்; நின்று ஒலி ஒலியும்; மல்கிய நாங்கூர் நிறைந்த திருநாங்கூரின்; வண்புருடோத்தமமே வண்புருடோத்தமமே
oL very; thiRal strong; pon peyarOn hiraNyan; uLaiya to feel sorrowful; (avan) thanadhu his; uram chest; piLandhu tore; udiraththai blood; aLaiyum stirred with hand; vem cruel; sinaththu angry; ari being narasimha; pari kESi who came in the form of a horse; kIRiya one who tore down; appan benefactor; vandhu uRai kOyil the temple where he came and resided; iLaiya mangaiyar young girls (while dancing); iNai adi worn in their both feet; silambinOdu with the sound from the anklets; ezhil koL beautiful; pandhu adippOr those who play ball; kai vaLaiyil ninRu originating from the bangles worn in the hands; oli sound; malgiya is abundant; nAngUr vaN purudOththamamE vaN purudOththamam in thirunAngUr

PT 4.2.8

1265 வாளையார்தடங்கண்உமைபங்கன் வன்சாபமற்றதுநீங்க *
மூளையார்சிரத்துஐயமுன்னளித்த எம்முகில்வண்ணனுறைகோயில் *
பாளைவான்கமுகூடுயர்தெங்கின் வன்பழம்விழவெருவிப்போய் *
வாளைபாய்தடம்சூழ்தருநாங்கூர் வண்புருடோத்தமமே.
1265 வாளை ஆர் தடங் கண் உமை-பங்கன் * வன் சாபம் மற்று அது நீங்க *
மூளை ஆர் சிரத்து ஐயம் முன் அளித்த * எம் முகில் வண்ணன் உறை கோயில் **
பாளை வான் கமுகு ஊடு உயர் தெங்கின் * வண் பழம் விழ வெருவிப் போய் *
வாளை பாய் தடம் சூழ்தரு நாங்கூர் * வண்புருடோத்தமமே -8
1265
vāLaiyār_ thadaNGkaN umaipangaNn * vaNnchāpamaRRathun^eenga *
mooLaiyār_chiraththu aiyamuNnnaLiththa * emmukilvaNNaNnuRaikOyil *
pāLaiVān _kamukooduyar THengiNn * vaNpazhamvizha VeruvippOy *
vāLaipāythadam choozhtharu nāngoor * vaNpurudOththamamE (4.2.8)

Ragam

கல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1265. Our cloud-colored god who shed his blood on the skull of Nānmuhan that was stuck to Shivā’s hand so that Shivā, who gave half of his body to Uma with eyes like vālai fish, would be released from his terrible curse stays in the temple of Vanpurushothamam in Nāngur surrounded with ponds where a vālai fish jumps in fright and makes huge coconuts fall from the tall trees that grow among the flourishing branches of the kamugu trees.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாளை ஆர் மீன்போன்ற அழகிய; தடங் கண் விசாலமான கண்களையுடைய; உமை பார்வதியின்; பங்கன் கணவனான சிவனுடைய; வன் சாபம் வலிய சாபம்; மற்று அது நீங்க நீங்க; முன் மூளை சிவனுக்கு முன்பொரு; ஆர் சிரத்து சமயம் கபாலத்தில்; ஐயம் அளித்த பிச்சையிட்ட; எம் முகில் எம்முடைய மேக; வண்ணன் வண்ண எம்பெருமான்; உறை கோயில் இருக்குமிடம்; பாளை வான் பாளைகளையுடைய; கமுகு ஊடு பாக்குமரங்களின் நடுவே; உயர் ஓங்கி வளர்ந்துள்ள; தெங்கின் தென்னை மரங்களின்; வண் பழம் பெரிய காய்கள்; விழ தடாகங்களில் விழ; வாளை வாளைமீன்கள்; வெருவிப் பாய் பயந்து ஓடி வேறிடம் சென்று; தடம் சூழ்தரு தடாகங்களினால் சூழப்பட்ட; நாங்கூர் திருநாங்கூரில்; வண்புருடோத்தமமே வண்புருடோத்தமமே
vAL radiance; Ar filled; thadam vast; kaN having eyes; umai pArvathi; pangan rudhra who is having in one part (of his body), his; van cruel; sAbam curse; nInga to rid; adhu the sin which caused such curse; aRRu to be exhausted; mULai bone; Ar complete; siraththu brahmA-s skull (which got stuck to his hand); aiyam alms; mun previously; aLiththa who gave; em being my benefactor; mugil vaNNan sarvESvaran who has cloud like nature; uRai kOyil the temple where he resides; pALai having swathes; vAn grown tall reaching up to the sky; kamugu areca trees-; Udu in the middle; uyar tall; thengin coconut trees-; van big; pazham fruit; vizha fall (into the tank); vALai fish which are present there; veruvi got afraid; pOy leaving that place; pAy jumping into another place; thadam by ponds; sUzh surrounded by; nAngUr vaN purudOththamamE vaN purudOththamam in thirunAngUr

PT 4.2.9

1266 இந்துவார்சடையீசனைப்பயந்த நான்முகனை, தன்னெழிலாரும் *
உந்திமாமலர்மீமிசைப்படைத்தவன் உகந்துஇனிதுறைகோயில் *
குந்திவாழையின்கொழுங்கனிநுகர்ந்து தன்குருளையைத் தழுவிப்போய் *
மந்திமாம்பணைமேல்வைகுநாங்கூர் வண்புருடோத்தமமே.
1266 இந்து வார் சடை ஈசனைப் பயந்த * நான் முகனை தன் எழில் ஆரும் *
உந்தி மா மலர் மீமிசைப் படைத்தவன் * உகந்து இனிது உறை கோயில் **
குந்தி வாழையின் கொழுங் கனி நுகர்ந்து * தன் குருளையைத் தழுவிப் போய் *
மந்தி மாம்பணைமேல் வைகும் நாங்கூர் * வண்புருடோத்தமமே-9
1266
inthuvār sadaiyeechanaip payantha * n^ānmuganaith thaNn_ezhilārum *
undhimāmalar meemisaip padaiththavaNn * uganthiNnithuRaikOyil *
kunthi vāzhaiyin KozhungaNni nugarnthu * thaNn kuruLaiyaith thazhuvippOy *
manthimāmpaNai mElvaiku nāngoor * vaNpurudOththamamE (4.2.9)

Ragam

கல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1266. Our lord who created on his beautiful navel the four-headed Nānmuhan seated on a lotus and Nānmuhan created Shivā with the crescent moon in his matted hair stays happily in the temple of Vanpurushothamam in Nāngur where mother monkeys eat fat ripe banana fruits and embrace their babies as they sit on the branches of mango trees.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இந்து வார் சந்திரனை; சடை சடைமுடியில் தரித்த; ஈசனை சிவனை; பயந்த படைத்த; நான் முகனை நான் முகனை; தன் எழில் ஆரும் தன் அழகு மிக; உந்தி மா மலர் மீமிசை நாபிக் கமலத்தில்; படைத்தவன் படைத்த எம்பெருமான்; உகந்து இனிது மகிழ்ந்து இனிது; உறை கோயில் இருக்கும் கோயில்; மந்தி குந்தி பெண் குரங்குகள்; வாழையின் வாழையின்; கொழுங் கனி கனிந்த பழங்களை; நுகர்ந்து தின்று; தன் குருளையை தன் குட்டிகளை; தழுவி அணைத்துக் கொண்டு; போய் அங்கிருந்து போய்; மாம்பணைமேல் மாமரக் கிளைகளின் மேல்; வைகும் நாங்கூர் உறங்கும் திருநாங்கூரில்; வண்புருடோத்தமமே வண்புருடோத்தமமே
indhu having moon; vAr lengthy; sadai having matted hair; Isanai rudhran; payandha created; nAnmuganai brahmA; than his; ezhil beauty; Arum filled; undhi in divine navel; mA huge; malar lotus flower-s; mImisai on; padaiththavan sarvESvaran who created; ugandhu being joyful; inidhu with pleasure; uRai kOyil the temple where he is residing; mandhi female monkey; vAzhaiyin in plantain tree; kozhu rich; kani fruits; kundhi being in a crouching posture; nugarndhu ate; than its; kuruLaiyai younger one; thazhuvi embraced; pOy left from there; mAm paNai mEl on the branches of the mango tree; vaigu sleeping; nAngUr vaN purudOththamamE vaN purudOththamam in thirunAngUr

PT 4.2.10

1267 மண்ணுளார்புகழ்வேதியர்நாங்கூர் வண்புருடோத்தமத்துள் *
அண்ணல்சேவடிக்கீழடைந்துஉய்ந்தவன் ஆலிமன் அருள்மாரி *
பண்ணுளார்தரப்பாடியபாடல் இப்பத்தும்வல்லார் * உலகில்
எண்ணிலாதபேரின்பமுற்றுஇமையவரோடும்கூடுவரே. (2)
1267 ## மண்ணுளார் புகழ் வேதியர் நாங்கூர் * வண்புருடோத்தமத்துள் *
அண்ணல் சேவடிக்கீழ் அடைந்து உய்ந்தவன் * ஆலி மன் அருள் மாரி **
பண்ணுளார் தரப் பாடிய பாடல் * இப் பத்தும் வல்லார் * உலகில்
எண் இலாத பேர் இன்பம் உற்று * இமையவரோடும் கூடுவரே-10
1267. ##
maNNuLār_pugazh vEthiyar nāngoor * vaNpurudOththamaththuL *
aNNal chEvadik keezhadain^thu uynthavaNn * ālimaNn aruLmāri *
paNNuLār _tharappādiya pādal * ippaththum vallār *
ulagil_eNNilātha pErinbamuRRu * imaiyavarOdum kooduvarE (4.2.10)

Ragam

கல்யாணி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1267. Kaliyan the poet worshiped the feet of the god of Vanpurushothamam in Nāngur where famous Vediyars live, skilled in the Vedās. If devotees learn and recite these ten pāsurams, they will receive countless joys in the world and go to the spiritual world and stay with the gods.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மண்ணுளார் பூலோகத்தில் நிறைந்த; புகழ் புகழையுடைய; வேதியர் வைதிகர்கள் வாழும்; நாங்கூர் திருநாங்கூரிலுள்ள; வண்புருடோத்தமத்துள் வண்புருடோத்தமத்தில் இருக்கும்; அண்ணல் சேவடிக்கீழ் எம்பெருமானின் திருவடியை; அடைந்து உய்ந்தவன் அடைந்து உய்ந்தவரான; ஆலி மன் திருவாலி நாட்டுக்குத் தலைவரும்; மாரி மழை போல்; அருள் அருளும் திருமங்கை ஆழ்வார்; பண்ணுள் பண்ணுள்; ஆர்தர பொருந்தும்படி; பாடிய பாடல் அருளிச்செய்த; இப்பத்தும் இப்பத்துப் பாசுரங்களையும்; வல்லார் உலகில் ஓத வல்லார்; எண் இலாத இவ்வுலகில் அளவற்ற; பேரின்பம்உற்று பேரின்பம் பெற்று; இமையவ ரோடும் நித்யசூரிகளோடு; கூடுவரே கூடுவர்
maNNuL In earth; Ar abundant; pugazh having fame; vEdhiyar where SrIvaishNavas, who are naturally engaged in vEdha adhyayanam, are residing; nAngUr in thirunAngUr; vaN purudOththamaththuL mercifully present in dhivyadhESam named vaN purudOththamam; aNNal sarvESvaran, who is lord; sE beautiful; adik kIzh under the divine feet; adaindhu reached; uyndhavan who became redeemed; Ali for the residents of thiurvAli; man being the king; aruL mAri thirumangai AzhwAr who is a cloud, raining mercy; paNNuL in tune; Ar thara being complete; pAdiya sang; pAdal being pAsurams; ip paththum these ten pAsurams; vallAr those who have learnt; ulagil in this world; eN ilAdha countless; pEr inbam great joy; uRRu attain (and subsequently); imaiyavarOdum with nithyasUris; kUduvar will unite.