PT 4.2.7

மேகவண்ணன் மேவும் கோயில் இது

1264 உளையஒண்திறல்பொன்பெயரோன்தனது உரம்பிளந்து உதிரத்தை
அளையும் * வெஞ்சினத்துஅரி பரிகீறிய அப்பன்வந்துறை கோயில் *
இளையமங்கையர்இணையடிச்சிலம்பினோடு எழில்கொள் பந்தடிப்போர் * கை
வளையினின் றொலிமல்கியநாங்கூர் வண்புருடோத்தமமே.
PT.4.2.7
1264 ul̤aiya ŏṇ tiṟal pŏṉpĕyaroṉ * taṉatu uram pil̤antu utirattai
al̤aiyum * vĕm ciṉattu ari pari kīṟiya * appaṉ vantu uṟai koyil **
il̤aiya maṅkaiyar iṇai-aṭic cilampiṉoṭu * ĕzhil kŏl̤ pantu aṭippor * kai
val̤aiyiṉ niṉṟu ŏli malkiya nāṅkūr * vaṇpuruṭottamame -7

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1264. Our father who went as an angry man-lion to the Asuran Hiranyan, the strong king whose name means gold, and split open his chest making the blood flow out stays in the temple of Vanpurushothamam in Nāngur where the sound of the bangles of young girls playing beautifully with balls and the sound of the anklets that ornament their feet spreads everywhere.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஒண் திறல் அதிக பலமுள்ள; பொன்பெயரோன் இரணியன்; உளைய தனது மனம் வருந்தும்படி அவனது; உரம் பிளந்து மார்பைப் பிளந்து; உதிரத்தை உதிரத்தை; அளையும் அளைந்த; வெம் சினத்து அரி உக்ர நரசிம்மனும்; பரி குதிரையாக வந்த கேசியை; கீறிய முடித்தவனுமான; அப்பன் வந்து எம்பெருமான் வந்து; உறை கோயில் இருக்கும் கோயில்; இளைய மங்கையர் சிறுபெண்களின்; இணை அடி கால்களின்; சிலம்பினோடு சிலம்பொலியோடு; எழில் கொள் பந்து அழகிய பந்தடிக்கும்; அடிப்போர் சிறுமிகளின்; கை கைகளில் அணிந்துள்ள; வளையில் வளையல்களின்; நின்று ஒலி ஒலியும்; மல்கிய நாங்கூர் நிறைந்த திருநாங்கூரின்; வண்புருடோத்தமமே வண்புருடோத்தமமே
ol̤ very; thiṛal strong; pon peyarŏn hiraṇyan; ul̤aiya to feel sorrowful; (avan) thanadhu his; uram chest; pil̤andhu tore; udiraththai blood; al̤aiyum stirred with hand; vem cruel; sinaththu angry; ari being narasimha; pari kĕṣi who came in the form of a horse; kīṛiya one who tore down; appan benefactor; vandhu uṛai kŏyil the temple where he came and resided; il̤aiya mangaiyar young girls (while dancing); iṇai adi worn in their both feet; silambinŏdu with the sound from the anklets; ezhil kol̤ beautiful; pandhu adippŏr those who play ball; kai val̤aiyil ninṛu originating from the bangles worn in the hands; oli sound; malgiya is abundant; nāngūr vaṇ purudŏththamamĕ vaṇ purudŏththamam in thirunāngūr