PT 4.2.6

இரணியனைக் கொன்றவன் கோயில் இது

1263 அங்கையால்அடிமூன்றுநீரேற்று அயன்அலர்கொடு தொழுதேத்த *
கங்கைபோதரக்கால்நிமிர்த்தருளிய கண்ணன்வந்துறைகோயில் *
கொங்கைகோங்கவைகாட்டவாய்குமுதங்கள்காட்ட, மாபதுமங்கள் *
மங்கைமார்முகம்காட்டிடுநாங்கூர் வண்புருடோத்தமமே.
PT.4.2.6
1263 aṅ kaiyāl aṭi mūṉṟu nīr eṟṟu * ayaṉ alar kŏṭu tŏzhutu etta *
kaṅkai potarak kāl nimirttu arul̤iya * kaṇṇaṉ vantu uṟai koyil **
kŏṅkai koṅku-avai kāṭṭa vāy kumutaṅkal̤ kāṭṭa * mā patumaṅkal̤ *
maṅkaimār mukam kāṭṭiṭum nāṅkūr * vaṇpuruṭottamame-6

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1263. Our dear lord, Kannan who took water from the hands of Mahābali, received three feet of land and measured it with his two feet, raising them to the sky as Nānmuhan worshiped him with flowers while the Ganges flowed swiftly from the sky, stays in the temple of Vanpurushothamam in Nāngur where kongu buds are like the breasts of women, kumudam flowers bloom like their mouths and beautiful lotuses blossom like their faces.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மூன்று அடி மூவடி நிலத்துக்காக; அங் கையால் அழகிய கையில்; நீர் ஏற்று தான நீர் ஏற்று கொண்டும்; அயன் அலர் பிரம்மா பூக்களை; கொடு ஸமர்ப்பித்து; தொழுது ஏத்த துதித்து வணங்கி; கங்கை கங்கை நதி; போதர பெருகும் படியாக; கால் நிமிர்த்தருளிய காலை உயர நீட்டின; கண்ணன் வந்து கண்ணன் வந்து; உறை கோயில் இருக்கும் கோயில்; கோங்கு கோங்குமரத்தின்; அவை அரும்புகள்; கொங்கை பெண்களின் மார்பகங்கள்; காட்ட போன்றிருக்க; குமுதங்கள் குமுதங்கள் பெண்களின்; வாய் காட்ட வாய் போன்றிருக்க; மா பதுமங்கள் சிறந்த தாமரை மலர்கள்; மங்கைமார் முகம் மங்கைமார் முகம் போன்று; காட்டிடும் நாங்கூர் பிரகாசிக்கும் திருநாங்கூரில்; வண்புருடோத்தமமே வண்புருடோத்தமமே
mūnṛu adi for three steps of land; am beautiful; kaiyāl with his divine hand; nīr ĕṝu accepting the water which was given in charity; (then) ; ayan brahmā; alar kodu gathering flowers; thozhudhu worshipped; ĕththa to praise; gangai river gangā; pŏdhara to start the flow of; kāl divine feet; nimirththu arul̤iya one who stretched; kaṇṇan sarvĕṣvaran; vandhu (further) came for the protection of devotees; uṛai kŏyil the temple where he is residing; kŏngu avai the buds of the kŏngu tree; mangaimār the women (of that town); kongai bosoms; kātta show; kumudhangal̤ reddish āmbal flowers; vāy kātta show their lips; beautiful; padhumangal̤ lotus flowers; mugam face; kāttidum showing (things which resemble various limbs of the women); nāngūr vaṇ purudŏththamamĕ vaṇ purudŏththamam in thirunāngūr