PT 4.2.3

கம்சனைக் கொன்றவன் உறையும் கோயில் இது

1260 அண்டரானவர்வானவர்கோனுக்கென்று அமைத்த சோறதுவெல்லாம்
உண்டு * கோநிரைமேய்த்துஅவைகாத்தவன் உகந்தினிதுறைகோயில் *
கொண்டலார்முழவிற்குளிர்வார்பொழில் குலமயில் நடமாட *
வண்டுதானிசைபாடிடுநாங்கூர் வண்புருடோத்தமமே.
PT.4.2.3
1260 aṇṭar āṉavar vāṉavar-koṉukku ĕṉṟu * amaitta coṟu-atu ĕllām
uṇṭu * ko-nirai meyttu avai kāttavaṉ * ukantu iṉitu uṟai koyil **
kŏṇṭal ār muzhavil kul̤ir vār pŏzhil * kula mayil naṭam āṭa *
vaṇṭu -tāṉ icai pāṭiṭum nāṅkūr * vaṇpuruṭottamame-3

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1260. Our lord who ate the food that cowherds made for Indra the king of the gods in the sky, and grazed the cows and protected them from the storm stays happily in the temple of Vanpurushothamam in Nāngur where peacocks dance in the lovely cool groves when the clouds roar like drums and the bees sing their music.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அண்டர் ஆனவர் இடையர்கள்; வானவர் கோனுக்கு தேவேந்திரனுக்கு; அமைத்த சோறு சமைத்த அன்னம்; அது எல்லாம் முழுவதும்; உண்டு கோ நிரை உண்டு பசுக்களை; மேய்த்து மேய்த்து அவைகளை; அவை காத்தவன் காத்தவன் மகிழ்ந்து; இனிது உறை கோயில் இருக்கும் கோயில்; குளிர் வார் குளிர்ந்து பரந்த; பொழில் சோலைகளில்; கொண்டல் ஆர் மேகங்கள்; முழவில் கர்ஜிக்கும் போது; குலமயில் கூட்டம் கூட்டமாக; நடம் ஆட மயில்கள் ஆட; வண்டு தான் வண்டுகள்; இசை பாடிடும் ரீங்காரம் பண்ண; நாங்கூர் திருநாங்கூரின்; வண்புருடோத்தமமே வண்புருடோத்தமமே
aṇdar ānavar cowherds; vānavar kŏnukku enṛu considering to offer to dhĕvĕndhran [the head of celestial entities]; amaiththa prepared; adhu sŏṛu that food; ellām fully; uṇdu mercifully consumed; kŏ nirai herds of cow; mĕyththu tended; avai those cows; kāththavan krishṇan who protected; ugandhu joyfully; inidhu being pleased; uṛai kŏyil abode where he is residing; koṇdal clouds; ār complete; muzhavu having the roar; kul̤ir rejuvenating; vār well grown; pozhil in gardens; mayil kulam pride of peacocks; nadam āda as they dance; vaṇdu thān beetles; isai songs; pādidum singing; nāngūr vaṇ purudŏththamamĕ vaṇ purudŏththamam in thirunāngūr.