PT 4.2.5

கண்ணன் உறைகோயில் வண்புருடோத்தமம்

1262 சாடுபோய்விழத்தாள்நிமிர்த்து ஈசன்தன்படையோடும் கிளையோடும்
ஓட * வாணனைஆயிரந்தோள்களும் துணித்தவனுறை கோயில் *
ஆடுவான்கொடிஅகல்விசும்பணவிப்போய்ப் பகலவனொளி மறைக்கும் *
மாடமாளிகைசூழ்தருநாங்கூர் வண்புருடோத்தமமே.
PT.4.2.5
1262 cāṭu poy vizhat tāl̤ nimirntu * īcaṉ taṉ paṭaiyŏṭum kil̤aiyoṭum
oṭa * vāṇaṉai āyiram tol̤kal̤um * tuṇittavaṉ uṟai koyil **
āṭu vāṉ kŏṭi akal vicumpu aṇavip poyp * pakalavaṉ ŏl̤i maṟaikkum *
māṭa māl̤ikai cūzh taru nāṅkūr * vaṇpuruṭottamame-5

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1262. Our god killed Sakatāsuran when he came as a cart and chased away Shivā and his allies when they came to help Vānāsuran in battle and cut off the thousand arms of the Asuran. He stays in the temple of Vanpurushothamam in Nāngur filled with rich palaces where the flags fly and rise to the sky hiding the light of the sun, the god of the day.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சாடு சகடமானது வெகு தூரம்; போய் விழ சென்று விழ; தாள் நிமிர்த்து தன் கால்களை நீட்டினவனும்; ஈசன் தன் ருத்ரன் தனது; படையொடும் ஸேனைகளோடும்; கிளையோடும் சுற்றத்தாரோடும்; ஓட தோற்றுபோய் ஓட; வாணனை பாணாஸுரனின்; ஆயிரம் ஆயிரம்; தோள்களும் தோள்களையும்; உறை கோயில் இருக்கும் கோயில்; ஆடு வான் ஆடும் பெரிய; கொடி கொடிககள்; அகல் விசும்பு பரந்த ஆகாசத்தை; அணவி தழுவிக் கொண்டு; போய் உயரப் போய்; பகலவன் ஒளி சூர்யனுடைய ஒளியை; மறைக்கும் மறைக்கும்; மாட மாளிகை மாட மாளிகைகளால்; சூழ்தரு நாங்கூர் சூழ்ந்த திரு நாங்கூரின்; வண்புருடோத்தமமே வண்புருடோத்தமமே
sādu the wheel which was possessed by the demon; pŏy went far away; vizha to fall down and be destroyed; thāl̤ divine feet; nimirththu stretched; īsan rudhran; than padaiyŏdum with his armies; kil̤aiyŏdum with his close aides such as shaṇmukha, gaṇapathi et al; ŏda made to be defeated and run away; vāṇanai bāṇāsura; āyiram thŏl̤gal̤um thousand shoulders; thuṇiththavan krishṇa who destroyed; uṛai kŏyil the temple where he is residing; ādu swaying; vān big; kodi flags; agal vast; visumbu sky; aṇavi embracing; pŏy flying high; pagalavan sun; ol̤i rays; maṛaikkum blocking, to be not seen; mādam by halls; māl̤igai by homes; sūzh tharu being surrounded; nāngūr vaṇ purudŏththamĕ vaṇ purudŏththam in thirunāngūr.