PT 4.2.9

இவற்றைப் படிப்போர் தேவரோடு கூடுவர்

1266 இந்துவார்சடையீசனைப்பயந்த நான்முகனை, தன்னெழிலாரும் *
உந்திமாமலர்மீமிசைப்படைத்தவன் உகந்துஇனிதுறைகோயில் *
குந்திவாழையின்கொழுங்கனிநுகர்ந்து தன்குருளையைத் தழுவிப்போய் *
மந்திமாம்பணைமேல்வைகுநாங்கூர் வண்புருடோத்தமமே.
PT.4.2.9
1266 intu vār caṭai īcaṉaip payanta * nāṉ mukaṉai taṉ ĕzhil ārum *
unti mā malar mīmicaip paṭaittavaṉ * ukantu iṉitu uṟai koyil **
kunti vāzhaiyiṉ kŏzhuṅ kaṉi nukarntu * taṉ kurul̤aiyait tazhuvip poy *
manti māmpaṇaimel vaikum nāṅkūr * vaṇpuruṭottamame-9

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1266. Our lord who created on his beautiful navel the four-headed Nānmuhan seated on a lotus and Nānmuhan created Shivā with the crescent moon in his matted hair stays happily in the temple of Vanpurushothamam in Nāngur where mother monkeys eat fat ripe banana fruits and embrace their babies as they sit on the branches of mango trees.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இந்து வார் சந்திரனை; சடை சடைமுடியில் தரித்த; ஈசனை சிவனை; பயந்த படைத்த; நான் முகனை நான் முகனை; தன் எழில் ஆரும் தன் அழகு மிக; உந்தி மா மலர் மீமிசை நாபிக் கமலத்தில்; படைத்தவன் படைத்த எம்பெருமான்; உகந்து இனிது மகிழ்ந்து இனிது; உறை கோயில் இருக்கும் கோயில்; மந்தி குந்தி பெண் குரங்குகள்; வாழையின் வாழையின்; கொழுங் கனி கனிந்த பழங்களை; நுகர்ந்து தின்று; தன் குருளையை தன் குட்டிகளை; தழுவி அணைத்துக் கொண்டு; போய் அங்கிருந்து போய்; மாம்பணைமேல் மாமரக் கிளைகளின் மேல்; வைகும் நாங்கூர் உறங்கும் திருநாங்கூரில்; வண்புருடோத்தமமே வண்புருடோத்தமமே
indhu having moon; vār lengthy; sadai having matted hair; īsanai rudhran; payandha created; nānmuganai brahmā; than his; ezhil beauty; ārum filled; undhi in divine navel; huge; malar lotus flower-s; mīmisai on; padaiththavan sarvĕṣvaran who created; ugandhu being joyful; inidhu with pleasure; uṛai kŏyil the temple where he is residing; mandhi female monkey; vāzhaiyin in plantain tree; kozhu rich; kani fruits; kundhi being in a crouching posture; nugarndhu ate; than its; kurul̤aiyai younger one; thazhuvi embraced; pŏy left from there; mām paṇai mĕl on the branches of the mango tree; vaigu sleeping; nāngūr vaṇ purudŏththamamĕ vaṇ purudŏththamam in thirunāngūr