PT 4.2.8

நான்முகனைப் படைத்தவன் உறையும் கோயில் இது

1265 வாளையார்தடங்கண்உமைபங்கன் வன்சாபமற்றதுநீங்க *
மூளையார்சிரத்துஐயமுன்னளித்த எம்முகில்வண்ணனுறைகோயில் *
பாளைவான்கமுகூடுயர்தெங்கின் வன்பழம்விழவெருவிப்போய் *
வாளைபாய்தடம்சூழ்தருநாங்கூர் வண்புருடோத்தமமே.
PT.4.2.8
1265 vāl̤ai ār taṭaṅ kaṇ umai-paṅkaṉ * vaṉ cāpam maṟṟu atu nīṅka *
mūl̤ai ār cirattu aiyam muṉ al̤itta * ĕm mukil vaṇṇaṉ uṟai koyil **
pāl̤ai vāṉ kamuku ūṭu uyar tĕṅkiṉ * vaṇ pazham vizha vĕruvip poy *
vāl̤ai pāy taṭam cūzhtaru nāṅkūr * vaṇpuruṭottamame -8

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1265. Our cloud-colored god who shed his blood on the skull of Nānmuhan that was stuck to Shivā’s hand so that Shivā, who gave half of his body to Uma with eyes like vālai fish, would be released from his terrible curse stays in the temple of Vanpurushothamam in Nāngur surrounded with ponds where a vālai fish jumps in fright and makes huge coconuts fall from the tall trees that grow among the flourishing branches of the kamugu trees.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாளை ஆர் மீன்போன்ற அழகிய; தடங் கண் விசாலமான கண்களையுடைய; உமை பார்வதியின்; பங்கன் கணவனான சிவனுடைய; வன் சாபம் வலிய சாபம்; மற்று அது நீங்க நீங்க; முன் மூளை சிவனுக்கு முன்பொரு; ஆர் சிரத்து சமயம் கபாலத்தில்; ஐயம் அளித்த பிச்சையிட்ட; எம் முகில் எம்முடைய மேக; வண்ணன் வண்ண எம்பெருமான்; உறை கோயில் இருக்குமிடம்; பாளை வான் பாளைகளையுடைய; கமுகு ஊடு பாக்குமரங்களின் நடுவே; உயர் ஓங்கி வளர்ந்துள்ள; தெங்கின் தென்னை மரங்களின்; வண் பழம் பெரிய காய்கள்; விழ தடாகங்களில் விழ; வாளை வாளைமீன்கள்; வெருவிப் பாய் பயந்து ஓடி வேறிடம் சென்று; தடம் சூழ்தரு தடாகங்களினால் சூழப்பட்ட; நாங்கூர் திருநாங்கூரில்; வண்புருடோத்தமமே வண்புருடோத்தமமே
vāl̤ radiance; ār filled; thadam vast; kaṇ having eyes; umai pārvathi; pangan rudhra who is having in one part (of his body), his; van cruel; sābam curse; nīnga to rid; adhu the sin which caused such curse; aṝu to be exhausted; mūl̤ai bone; ār complete; siraththu brahmā-s skull (which got stuck to his hand); aiyam alms; mun previously; al̤iththa who gave; em being my benefactor; mugil vaṇṇan sarvĕṣvaran who has cloud like nature; uṛai kŏyil the temple where he resides; pāl̤ai having swathes; vān grown tall reaching up to the sky; kamugu areca trees-; ūdu in the middle; uyar tall; thengin coconut trees-; van big; pazham fruit; vizha fall (into the tank); vāl̤ai fish which are present there; veruvi got afraid; pŏy leaving that place; pāy jumping into another place; thadam by ponds; sūzh surrounded by; nāngūr vaṇ purudŏththamamĕ vaṇ purudŏththamam in thirunāngūr