PT 2.8.6

நீலமேகம் போன்றவரை நான் கண்டேன்

1123 எங்ஙனும்நாம்இவர்வண்ணம்எண்ணில்
ஏதும்அறிகிலம், ஏந்திழையார் *
சங்கும்மனமும்நிறைவும்எல்லாம்
தம்மனவாகப்புகுந்து * தாமும்
பொங்குகருங்கடல்பூவைகாயா
போதவிழ்நீலம்புனைந்தமேகம் *
அங்ஙனம்போன்றுஇவரார்கொல்? என்ன
அட்டபுயகரத்தேனென்றாரே.
PT.2.8.6
1123 ĕṅṅaṉum nām ivar vaṇṇam ĕṇṇil *
etum aṟikilam entizhaiyār *
caṅkum maṉamum niṟaiyum ĕllām *
tammaṉa ākap pukuntu ** tāmum
pŏṅku karuṅ kaṭal pūvai kāyā *
potu avizh nīlam puṉainta mekam *
aṅṅaṉam poṉṟivar ārkŏl? ĕṉṉa- *
aṭṭapuyakaratteṉ ĕṉṟāre-6 **

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1123. She asked her neighbors, “I don’t know anything about him. He attracts the minds of girls and steals their chastity and enters their hearts. He makes their conch bangles loose. He has the color of the rising dark ocean, a puuvai bird, a kāyām flower, a blossoming neelam flower or thick clouds. Who is he?” They replied, “He said that he is from Attapuyaharam. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாம் இவர் வண்ணம் நாம் இவரைப் பற்றி; எங்ஙனும் எண்ணில் எவ்விதமாக அறியப் பார்த்தாலும்; ஏதும் அறிகிலம் ஒன்றும் அறிய முடியவில்லை; ஏந்திழையார் ஆபரணம் அணிந்திருக்கும் அபலைப் பெண்களின்; சங்கும் மனமும் வளைகளும் மனமும்; நிறையும் எல்லாம் அடக்கமுமாகிய எல்லாம்; தம்மன ஆக தம்முடையது என்று நினைத்து; புகுந்து தாமும் இங்கு வந்து சேர்ந்து; பொங்கு கருங்கடல் பொங்கும் கருங்கடல்; பூவை காயா பூவைப்பூ காயாம்பூ; போது அவிழ் நீலம் மலர்ந்த கருநெய்தல் பூ; புனைந்த மேகம் அழகிய மேகம் ஆகிய; அங்ஙனம் போன்றிவர் இவற்றைப் போலேயிருக்கிற இவர்; ஆர்கொல்? என்ன யார்? என்று நான் கேட்க அவர்; அட்டபுயகரத்தேன் நான் அட்டபுயகரத்தான்; என்றாரே உனக்காக வந்தேன் என்றாரே
nām we; ivar vaṇṇam his qualities/aspects; engan in any which way; eṇṇilum try to find out; ĕdhum even a little bit; aṛigilam unable to know;; ĕndhu decorated; izhaiyār helpless girls who are with ornaments, their; sangum bangle; manamum mind; niṛaivum humility; ellām all of these; tham manavāga considering to be his; pugundhu arrived and entered; pongu very tumultuous; karum dark; kadal ocean; pūvai leaved bilberry tree; kāyā another tree named kāyā, its flower; pŏdhu avizh blossoming at the right time; neelam another dark coloured flower named karuneydhal; punaindha spoken along with these; mĕgam cloud groups; anganam pŏnṛa one who resembles those; ivar ār kol? enna when asked “Who is he?”; attabuyagaraththĕn ī am the lord of thiruvattabuyagaram; enṛār mercifully said