MUT 99

திருமாலின் திருவடிகளே நமக்குத் துணை

2380 தொட்டபடையெட்டும் தோலாதவென்றியான் *
அட்டபுயகரத்தானஞ்ஞான்று * - குட்டத்துக்
கோள்முதலைதுஞ்சக் குறித்தெறிந்தசக்கரத்தான் *
தாள்முதலேநங்கட்குச்சார்வு. (2)
2380 ## tŏṭṭa paṭai ĕṭṭum * tolāta vĕṉṟiyāṉ *
aṭṭapuyakarattāṉ aññāṉṟu ** - kuṭṭattuk
kol̤ mutalai tuñca * kuṟittu ĕṟinta cakkarattāṉ *
tāl̤ mutale naṅkaṭkuc cārvu -99

Ragam

Mohana / மோஹன

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

2380. Our refuge is the feet of the god of Attapuyaharam who fought and conquered all his enemies and killed the murderous crocodile with his discus when it caught the elephant Gajendra.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொட்ட ஏந்தின; படை எட்டும் எட்டு ஆயுதங்களாலும்; தோலாத தோல்வி அடையாமல்; வென்றியான் வெற்றி அடைபவனும்; அட்டபுயகரத்தான் திருஅட்டபுயகரத்தில்; அஞ்ஞான்று முன்பு இருப்பவனும்; குட்டத்து நீர்ப் பொய்கையில்; கோள் வலிமையுள்ள; முதலை துஞ்ச முதலை முடியும்படியாக; குறித்து எறிந்த குறி தவராமல் எறியப்பட்ட; சக்கரத்தான் சக்கரத்தையுடையவனுமான; தாள் முதலே பெருமானின் திருவடிகளே; நங்கட்குக் சார்வு நமக்கு தஞ்சமாகும்
thotta carrying in the hand; padai ettum the eight divine weapons; thŏlādha without losing; venṛiyān one who always wins; attabuyakaraththān one who dwells in the divine abode attabuyakaram in kānchīpuram; annānṛu once upon a time; kuttaththu in the water reservoir; kŏl̤ mudhalai thunja the powerful crocodile to be killed; kuṛiththu eṛindha chakkaraththān one who aimed the divine discus without losing the target, his; thāl̤ mudhalĕ nangatkuch chārvu divine feet alone are our refuge