PT 2.8.5

அலைகடல் போன்றவரை நான் கண்டேன்

1122 கலைகளும்வேதமும்நீதிநூலும்
கற்பமும்சொற்பொருள்தானும் * மற்றை
நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்
நீர்மையினால்அருள்செய்து * நீண்ட
மலைகளும்மாமணியும் மலர்மேல்
மங்கையும்சங்கமும் தங்குகின்ற *
அலைகடல்போன்றுஇவரார்கொல்? என்ன
அட்டபுயகரத்தேனென்றாரே.
PT.2.8.5
1122 kalaikal̤um vetamum nīti nūlum *
kaṟpamum cŏl pŏrul̤-tāṉum * maṟṟai
nilaikal̤um vāṉavarkkum piṟarkkum *
nīrmaiyiṉāl arul̤cĕytu ** nīṇṭa
malaikal̤um mā maṇiyum * malarmel
maṅkaiyum caṅkamum taṅkukiṉṟa *
alai kaṭal poṉṟivar ārkŏl? ĕṉṉa- *
aṭṭapuyakaratteṉ ĕṉṟāre-5 **

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1122. She asked her neighbors, “He gave the arts, the Vedās, the books on morals, the garbhasutras, grammar, philosophy and all other things to the gods in the sky and to the world. He has a strong mountain-like body and he is ornamented with precious jewels. Lakshmi on a lotus stays on his chest. Who is he with a conch in his hand?” They replied, “He said he is from Attapuyaharam. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கலைகளும் வேதமும் வேதமும் உபநிஷதங்களும்; நீதி நூலும் இதிகாசங்களும் புராணங்களும்; கற்பமும் சொல் கல்ப சூத்திரமும் வியாகரணமும்; பொருள் தானும் மீமாம்சையும்; மற்றை மற்றும்; நிலைகளும் அவரவர்க்கு உரிய ஸ்தானங்களையும்; நீர்மையினால் கிருபையினால்; வானவர்க்கும் தேவர்களுக்கும்; பிறர்க்கும் மனிதர்களுக்கும்; அருள் செய்து அளித்தவரும்; நீண்ட மலைகளும் பெரிய மலை போன்ற தோள்களும்; மா மணியும் சிறந்த கௌஸ்துபமணியும்; மலர் மேல் தாமரையில் பிறந்த; மங்கையும் மஹாலக்ஷ்மியும்; சங்கமும் தங்குகின்ற சங்கும் இருக்கும்; அலை கடல் போன்று அலை கடல் போன்றவருமான; இவர் ஆர்கொல்?என்ன இவர் யார்? என்று நான் கேட்க அவர்; அட்டபுயகரத்தேன் நான் அட்டபுயகரத்தான்; என்றாரே உனக்காக வந்தேன் என்றாரே
kalaigal̤um the second half of vĕdham (i.e. vĕdhāntham) and brahma sūthram; vĕdhamum the first half of vĕdham; nīdhi nūlum ithihāsam etc; kaṛpamum kalpa sūthram; sollum vyākaraṇam (grammar); porul̤um mīmāsā; maṝai further; nilaigal̤um the abodes (which are attained by those who follow these ṣāsthrams); nīrmaiyināl by the quality of being a lord; vānavarkkum for the dhĕvathās; piṛarkkum for the humans; arul̤ seydhu bestowed; nīṇda malaigal̤um divine shoulders which resemble huge mĕru mountain; māmaṇiyum ṣrī kausthuba jewel; malar mĕl mangaiyum periya pirāttiyār who has lotus flower as her birth place; sangamum ṣrī pānchajanyam; thanguginṛa eternally and firmly present; alai kadal pŏnṛa like an ocean with rising tides; ivar ār kol? enna when asked “Who is he?”; attabuyagaraththĕn ī am the lord of thiruvattabuyagaram; enṛār mercifully said