PT 2.8.9

யாரென்று அறியமுடியாதவரைக் கண்டேன்

1126 தஞ்சம்இவர்க்கென்வளையும்நில்லா
நெஞ்சமும்தம்மதேசிந்தித்தேற்கு *
வஞ்சிமருங்குல்நெருங்கநோக்கி
வாய்திறந்துஒன்றுபணித்ததுஉண்டு *
நஞ்சமுடைத்திவர்நோக்கும்நோக்கம்
நான்இவர்தம்மைஅறியமாட்டேன்
அஞ்சுவன்மற்றிவரார்கொல்? என்ன
அட்டபுயகரத்தேனென்றாரே.
PT.2.8.9
1126 tañcam ivarkku ĕṉ val̤aiyum nillā *
nĕñcamum tammate cintitteṟku *
vañci maruṅkul nĕruṅka nokki *
vāy tiṟantu ŏṉṟu paṇittatu uṇṭu **
nañcam uṭaittu ivar nokkum nokkam *
nāṉ ivar-tammai aṟiyamāṭṭeṉ *
añcuvaṉ maṟṟu ivar ārkŏl? ĕṉṉa- *
aṭṭapuyakaratteṉ ĕṉṟāre-9 **

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1126. She asked her neighbors, “I belong to him and my bangles don’t stay on my hands. My heart doesn’t want to stay with me. Even my waist that is thin as a vine has opened its mouth and said that it belongs to him. His look kills me like poison. I don’t understand him and I am afraid of him. Who is he?” They said, “He said he is from Attapuyaharam. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் வளையும் என் வளையும்; தஞ்சம் இவர்க்கு நிச்சயமாக இவருக்காக; நில்லா என் கையில் நிற்பதில்லை; சிந்தித்தேற்கு சிந்தித்துப் பார்த்தால்; நெஞ்சமும் தம்மதே எனது மனமும் அவருடையதே; வஞ்சி மருங்குல் வஞ்சிக்கொடிபோன்ற என் இடையும்; நெருங்க நோக்கி துவளும்படியாக பார்த்து; வாய் திறந்து ஒன்று வாய் திறந்து ஒன்று; பணித்தது உண்டு சொன்னதும் உண்டு; இவர் நோக்கும் நோக்கம் இவர் பார்க்கிற பார்வையானது; நஞ்சம் உடைத்து விஷங்கலந்ததுபோலே கொடியது; நான் இவர் தம்மை நான் இவரை; அறியமாட்டேன் அறியமாட்டேன்; என்ன இவர் ஆர்கொல்? யார்? இவர் என்று கேட்க; அஞ்சுவன் மற்று நான் பயப்படுகின்றேன் தாமாகவே; அட்டபுயகரத்தேன் என்றாரே நான் அட்டபுயகரத்தான்; என்றாரே உனக்காக வந்தேன் என்றாரே
en my; val̤aiyum bangles; thanjam surely; ivarkku for him; nillā they are not staying (they are slipping); sindhiththĕṛku ī have analysed this, my; nenjamum heart; thammadhĕ is his;; vanji like a tender creeper named nīr vanji; marungul waist; nerunga to become weak; nŏkki saw; vāy thiṛandhu opening his divine mouth; paṇiththadhu mercifully spoke; onṛu uṇdu there was a very secretive meaning; nŏkkum nŏkkam his vision; nanjum udaiththu appears to be poisoned;; nān ī; ivar thammai him; aṛiya māttĕn unable to know;; maṝu further (as soon as ī saw him); anjuvan became fearful;; ivar ār kol? enna when asked “Who is he?”; attabuyagaraththĕn ī am the lord of thiruvattabuyagaram; enṛār mercifully said