PT 2.8.7

அழகிய ஓவியம் போன்றவரை நான் கண்டேன்

1124 முழுசிவண்டாடியதண்டுழாயின்
மொய்ம்மலர்க்கண்ணியும் * மேனியஞ்சாந்
திழிசியகோலம்இருந்தவாறும்
எங்ஙனம்சொல்லுகேன்? ஓவிநல்லார் *
எழுதியதாமரையன்னகண்ணும்
ஏந்தெழிலாகமும் தோளும்வாயும் *
அழகியதாம்இவரார்கொல்? என்ன
அட்டபுயகரத்தேனென்றாரே.
PT.2.8.7
1124 muzhuci vaṇṭu āṭiya taṇ tuzhāyiṉ *
mŏym malark kaṇṇiyum meṉi * am cāntu
izhuciya kolam iruntavāṟum *
ĕṅṅaṉam cŏllukeṉ? ovi nallār **
ĕzhutiya tāmarai aṉṉa kaṇṇum *
entu ĕzhil ākamum tol̤um vāyum *
azhakiyatām ivar ārkŏl? ĕṉṉa- *
aṭṭapuyakaratteṉ ĕṉṟāre-7 **

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1124. She asked her neighbors, “How can I describe the beauty of the thulasi garland that adorns him, swarming with bees? His body is fragrant with sandal paste and his lotus eyes look like a picture painted by a master. He has a majestic chest and arms and a beautiful mouth. Who is this handsome one?” They said, “He said he is from Attapuyaharam. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு வண்டுகள்; முழுசி ஆடிய முழுகி ஆடிய தேனிலே; தண் துழாயின் குளிர்ந்த திருத்துழாயினால்; மொய்ம் அடர்த்தியாக தொடுக்கப்பட்ட; மலர்க் கண்ணியும் பூமாலையும்; மேனி அம் சாந்து திருமேனியிலே அழகிய சந்தனமும்; இழுசிய கோலம் இருந்தவாறும் பூசப்பெற்ற கோலத்தை; எங்ஙனம் சொல்லுகேன்? என்னவென்று சொல்லுவேன்?; ஓவி நல்லார் சித்ரமெழுதுவதில் வல்லவர்கள்; எழுதிய தாமரை எழுதின தாமரை இதழ்; அன்ன கண்ணும் போன்ற கண்களும்; ஏந்து எழில் ஆகமும் மிக்க அழகையுடைய திருமார்வும்; தோளும் வாயும் தோளும் வாயும்; அழகியதாம் அழகியதாக அமையப்பெற்ற இவர்; இவர் ஆர்கொல்? என்ன யார்? என்று நான் கேட்க அவர்; அட்டபுயகரத்தேன் நான் அட்டபுயகரத்தான்; என்றாரே உனக்காக வந்தேன் என்றாரே
vaṇdu beetles; muzhusi being drowned (in honey); ādiya dancing with great joy; thaṇ cool; thuzhāyin thiruththuzhāy-s; moy densely strung; malark kaṇṇiyum the way in which the garland (was mercifully worn); mĕni on the divine form; am beautiful; sāndhu izhusiya decorated with sandalwood paste; kŏlam irundhavāṛum the way in which such decoration was; enganam how; sollugĕn am ī going to completely speak about it?; ŏvi in drawing; nallār experts; ezhudhiya drawn; thāmarai anna like a lotus petal; kaṇṇum divine eyes; ĕndhu ezhil having great radiance; āgamum divine chest; thŏl̤um divine shoulders; vāyum divine lips; azhagiyadhām are beautiful!; ivar ār kol? enna when asked “Who is he?”; attabuyagaraththĕn ī am the lord of thiruvattabuyagaram; enṛār mercifully said