PT 2.8.3

நான் கண்டவர் அட்டபுயகரத்தாரே

1120 செம்பொனிலங்குவலங்கைவாளி
திண்சிலைதண்டொடுசங்கம்ஒள்வாள் *
உம்பரிருசுடராழியோடு
கேடகம்ஒண்மலர்பற்றிஎற்றே! *
வெம்புசினத்துஅடல்வேழம்வீழ
வெண்மருப்பொன்றுபறித்து * இருண்ட
அம்புதம்போன்றிவரார்கொல்? என்ன
அட்டபுயகரத்தேனென்றாரே.
PT.2.8.3
1120 cĕm pŏṉ ilaṅku valaṅkai vāl̤i *
tiṇ cilai taṇṭŏṭu caṅkam ŏl̤ vāl̤ *
umpar iru cuṭar āzhiyoṭu *
keṭakam ŏṇ malar paṟṟi ĕṟṟe **
vĕmpu ciṉattu aṭal vezham vīzha *
vĕṇ maruppu ŏṉṟu paṟittu * iruṇṭa
amputam poṉṟivar ārkŏl? ĕṉṉa- *
aṭṭapuyakaratteṉ ĕṉṟāre-3 **

Ragam

Darbhār / தர்பார்

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Nāyaki (lovelorn lady)

Divya Desam

Simple Translation

1120. She asked her neighbors, “He carries arrows that shine like pure gold, a strong bow, a club, a conch, the shining sword Nanthaham, a discus, a shield and flowers. He broke the white tusks of the strong angry elephant Kuvalayabeedam and killed it. Who is that dark cloud-colored one?” They replied, “He told us he is from Attapuyaharam. ”

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வலங்கை இலங்கு வலது கையில் பிரகாசிக்கும்; செம் பொன் செம் பொன்னால் செய்யப்பட்ட; வாளி திண் பாணங்களையும் திடமான; சிலை வில்லையும்; தண்டொடு சங்கம் ஒள் வாள் கதை சங்கு வாள்; உம்பர் இரு சுடர் மிக உயர்ந்த பிரகாசமான; ஆழியோடு சக்கரமும்; கேடகம் கடகையும் ஆகியவைகளோடும்; ஒண் மலர் அழகிய மலர்களோடும்; பற்றி எற்றே! இருக்கும்; வெம்பு சினத்து அடல் மிக்க கோபமும் மிடுக்குமுடைய; வேழம் வீழ குவலயாபீடம் என்னும் யானை அழிய; வெண் மருப்பு வெளுத்த தந்தம்; ஒன்று பறித்து ஒன்றை முறித்த; இருண்ட அம்புதம் போன்று கருத்த மேகம் போன்ற இவர்; ஆர்கொல்? என்ன யார்? என்று நான் கேட்க அவர்; அட்டபுயகரத்தேன் நான் அட்டபுயகரத்தான்; என்றாரே உனக்காக வந்தேன் என்றாரே
valam kai in his divine right hand; ilangu shining; sem pon made of fresh gold; vāl̤i arrows; thiṇ strong; silai bow; thaṇdodu mace; sangam ṣrī pānchajanyam, the conch; ol̤ shining; vāl̤ divine dagger; umbar greater than (all other weapons); iru sudar having great radiance; āzhiyodu with the chakkaraththāzhvār (the disc); kĕdagam shield; ol̤ beautiful; malar flower; paṝi holding; eṝĕ wow!; vembu sinam great anger; adal strength; vĕzham kuvalayāpīdam, the elephant; vīzha to be killed; vel̤ maruppu onṛu a white tusk; paṛiththu broke; iruṇda being dark due to abundance of water; ambudham pŏnṛa like a cloud; ivar ār kol? enna when asked “Who is he?”; attabuyagaraththĕn ī am the lord of thiruvattabuyagaram; enṛār mercifully said