Chapter 10

nirhEthuka mahOpakArithvam (bestowing great favours out of unconditional grace) - (பொரு மா)

ஈஸ்வரன் காரணமின்றிச் செய்யும் உபகாரம்
It is in His nature for Bhagavān to show His love, mercy and bestow His blessings on us. Āzhvār says, these actions by Bhagavān are not reciprocated based on our actions.
பகவான் நம் மீது கொண்டிருக்கும் அன்பு, இரக்கம், அனுக்ரஹம் ஆகியவை இயற்கை. இவை நம் செயலால் ஏற்படுபவை அல்ல என்கிறார் ஆழ்வார்.
Verses: 2890 to 2900
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: தக்கராகம்
Timing: 6.00-7.30 PM
Recital benefits: will become good scholars
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 1.10.1

2890 பொருமாநீள்படை ஆழிசங்கத்தொடு *
திருமாநீள்கழல் ஏழுலகும்தொழ *
ஒருமாணிக்குறளாகிநிமிர்ந்த * அக்
கருமாணிக்கம் என்கண்ணுளதாகுமே. (2)
2890 ## பொரு மா நீள் படை * ஆழி சங்கத்தொடு *
திரு மா நீள் கழல் * ஏழ் உலகும் தொழ **
ஒரு மாணிக் குறள் ஆகி நிமிர்ந்த * அக்
கரு மாணிக்கம் * என் கண்ணுளது ஆகுமே (1)
2890 ## pŏru mā nīl̤ paṭai * āzhi caṅkattŏṭu *
tiru mā nīl̤ kazhal * ezh ulakum tŏzha **
ŏru māṇik kuṟal̤ āki nimirnta * ak
karu māṇikkam * ĕṉ kaṇṇul̤atu ākume (1)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The peerless Vamāna, who carries the conch and discus as his weapons, has long and beautiful feet worshipped by the seven worlds when he grew into space. Now, I can see that blue-gem Lord!

Explanatory Notes

Even in his dreams, Mahābali had not conjured up the vision of the charming Lord presenting Himself before him, in all His grandeur and asking for a gift. Likewise, the Āzhvār had not the remotest idea that the Lord would ever come to him and reveal His exquisite charm to his naked eyes. No wonder then, he goes into raptures over the Lord’s spontaneous grace. This is indeed the key stanza for this decad.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொருமா பகைவர்களோடு போர் செய்ய வல்ல; நீள் படை பெருமை பொருந்திய சிறந்த ஆயுதங்களான; ஆழி சங்கத்தொடு சங்கு சக்கரங்களோடு; திரு மா நீள் கழல் தனது மிகச்சிறந்த திருவடிகளை; ஏழ் உலகும் ஏழு உலகத்திலுள்ளவர்களும்; தொழ தொழுது வணங்கும்படியாக; ஒரு மாணிக் குறள் ஒப்பற்ற பிரம்மசாரி வாமனனாக; ஆகி நிமிர்ந்த ஆகி பிறகு நிமிர்ந்து வளர்ந்த; அக்கரு மாணிக்கம் அந்த கரிய மாணிக்கம் போன்ற பெருமான்; என் கண்ணுளது ஆகுமே என் கண்ணுக்குள் இருக்கின்றவன் ஆனான்
poru to destroy the enemies; (because of that) being great; nīl̤ that which grows (along with his form); padai weapons; āzhi sangaththodu with sangu (conch), chakkaram (disc); thiru having the symbols indicating that he is the master of srī mahālakshmi; being great; nīl̤ reaching (up to the devotees); kazhal lotus feet; ĕzh ulagum (without any discrimination between learned and ignorant) all universes; thozha performing service joyfully which is fitting for a servitor; oru distinct; māṇik kuṛal̤āy assuming the form of a celibate dwarf (who has the quality of taking alms); nimirndha mercifully grew (after accomplishing the goal); a(k) one with such glories; karumāṇikkam one who is beautiful to the sight like a blue gem; en kaṇṇul̤adhu become visible for my eyes; āgum happens

TVM 1.10.2

2891 கண்ணுள்ளேநிற்கும் காதன்மையால்தொழில் *
எண்ணிலும்வரும் என்னினிவேண்டுவம்? *
மண்ணும்நீரும் எரியும்நல்வாயுவும் *
விண்ணுமாய்விரியும் எம்பிரானையே.
2891 கண்ணுள்ளே நிற்கும் * காதன்மையால் தொழில் *
எண்ணிலும் வரும் * என் இனி வேண்டுவம் ? **
மண்ணும் நீரும் * எரியும் நல் வாயுவும் *
விண்ணும் ஆய் விரியும் * எம் பிரானையே? (2)
2891 kaṇṇul̤l̤e niṟkum * kātaṉmaiyāl tŏzhil *
ĕṇṇilum varum * ĕṉ iṉi veṇṭuvam ? **
maṇṇum nīrum * ĕriyum nal vāyuvum *
viṇṇum āy viriyum * ĕm pirāṉaiye? (2)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 7-18, 9-14, 29

Simple Translation

My Lord's body is composed of the five elements, and He expands as the vast universe. When worshipped with love, He may not appear to the unworthy. What else does one need for salvation?

Explanatory Notes

(i) It is by no means surprising that the Lord Who is bound by the deep love of the devotees, always keeps Himself in their vicinity. But the Āzhvār now touches upon the Lord’s overwhelming generosity in presenting Himself even to those who utter the number twenty-six, in the course of casual enumeration. The non-sentient body has 24 ingredients, such as Mind, senses, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மண்ணும் நீரும் எரியும் பூமி நீர் அக்னி; நல் வாயுவும் விண்ணும் ஆய் நல்ல காற்றும் ஆகாயமுமாய்; விரியும் எம் பிரானையே ஆகிய இவற்றின் உருவமாக; காதன்மையால் தொழில் எம்பெருமானை பக்தியோடு தொழுதால்; கண்ணுள்ளே நாம் காணும்படி; நிற்கும் நம் கண்ணுக்குள் வந்து இருப்பான்; எண்ணிலும் ஒன்று இரண்டு என்று எண்ணினாலும்; வரும் வருவான்; என் இனி இறைவன் தன்மை இப்படியாயின் இனி; வேண்டுவம்? நமக்கு என்ன குறை?
maṇṇum nīrum eriyum nal vāyuvum viṇṇum āy ḥaving the five elements- pruthivi (earth), ap (water), agni (fire), vāyu (air) and ākāṣam (ether) as prakāram (forms); viriyum expand into the form of universe; empirānai my master; kādhanmaiyāl attachment out of devotion; thozhil while doing praṇāmam (obeisances), archanā (glorification) etc; kaṇ ul̤l̤ĕ not leaving their vision as said in bhagavath gīthā 4.11 -thāms thathaiva bhajāmi aham- (ī reciprocate appropriately for those devoted persons); niṛkum eternally exist; eṇṇilum merely by contemplating his existence as said in thaiththiriya upanishath -asthi brahmĕthi chĕdhvĕdha- (when he knows that brahmam exists); varum arrive at him (at his disposal); ini after emperumān being easily approachable in both difficult and easy means; en vĕṇduvam (for us who have no other refuge) is there anything to be done?

TVM 1.10.3

2892 எம்பிரானை எந்தைதந்தைதந்தைக்கும்
தம்பிரானை * தண்தாமரைக்கண்ணனை *
கொம்பராவு நுண்ணேரிடைமார்வனை *
எம்பிரானைத்தொழாய் மடநெஞ்சமே!
2892 எம்பிரானை * எந்தை தந்தை தந்தைக்கும்
தம்பிரானை * தாமரைக் கண்ணனை **
கொம்பு அராவு * நுண் நேர் இடை மார்பனை *
எம்பிரானைத் தொழாய் * மட நெஞ்சமே (3)
2892 ĕmpirāṉai * ĕntai tantai tantaikkum
tampirāṉai * tāmaraik kaṇṇaṉai **
kŏmpu arāvu * nuṇ ner iṭai mārpaṉai *
ĕmpirāṉait tŏzhāy * maṭa nĕñcame (3)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My obedient mind, bow to the great Benefactor of our whole clan, the lotus-eyed Lord who offers soothing grace and bears the divine Mother, lovely and slim-waisted, on His beautiful chest.

Explanatory Notes

The Lord’s tender solicitude for the devotees, overlooking their countless transgressions, springs from His close contact with the Divine Mother who is the very personification of grace.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மட நெஞ்சமே! மட நெஞ்சமே!; எம் பிரானை எனக்கு உபகாரம் செய்பவனும்; எந்தை தந்தை நம்மளவில் நில்லாமல்; தந்தைக்கும் தம்பிரானை நம் குலத்திற்கெல்லாம் நாதனும்; தண் தாமரை குளிர்ந்த தாமரை போன்ற; கண்ணனை கண்களை உடையவனும்; கொம்பு அராவு வஞ்சிக்கொடியினும் ஸர்ப்பத்தினும்; நுண் நேர் இடை நுட்பமான இடையையுடைய திருமகளை; மார்பனை மார்பிலே உடையவனுமான; எம் பிரானை தொழாய்! எம்பெருமானை வணங்குவாய்
madam having humility to obey the instructions; nenjamĕ ŏh heart!; em my; pirānai ŏne who favours (by bestowing adhvĕsham (not having hatred), ābhimukyam (friendliness) etc); endhai thandhai thandhaikkum for our clan (instead of stopping with just us); tham pirānai being the master; thaṇ cool vision (due to this relationship between us); thāmaraik kaṇṇanai having lotus eyes; kombu a type of wind instrument (like a horn); arāvu snake; nuṇ leaner than; nĕr honest/straight; idai srī mahālakshmi who is having such waist; mārbanai having in the chest; em pirānai master; thozhāy worship him

TVM 1.10.4

2893 நெஞ்சமே! நல்லைநல்லைஉன்னைப்பெற்றால்
என்செய்யோம்? இனியென்னகுறைவினம்? *
மைந்தனை மலராள்மணவாளனை *
துஞ்சும்போதும் விடாதுதொடர்கண்டாய்.
2893 நெஞ்சமே நல்லை நல்லை * உன்னைப் பெற்றால்
என் செய்யோம்? * இனி என்ன குறைவினம்? **
மைந்தனை * மலராள் மணவாளனை *
துஞ்சும்போதும் * விடாது தொடர்கண்டாய் (4)
2893 nĕñcame nallai nallai * uṉṉaip pĕṟṟāl
ĕṉ cĕyyom? * iṉi ĕṉṉa kuṟaiviṉam? **
maintaṉai * malarāl̤ maṇavāl̤aṉai *
tuñcumpotum * viṭātu tŏṭarkaṇṭāy (4)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Good job, my mind! With you around, there's nothing we can't achieve. Is there anything else we could want? Consort of Lotus-born Lakṣmī, always young, don't leave me, even if I wander off.

Explanatory Notes

The Āzhvār’s mind exhorted by him in the preceding stanza to worship the Lord, responded so well that he now pats it on its back and prays that it shall cling to the Lord under all circumstances. The Āzhvār apprehends the off-chance of his shrinking back from the Lord once again, when his own humility haunts him, in dire contrast to the Lord’s overwhelming superiority. Right now, the Āzhvār counsels his mind, never to get parted from the Lord, whatever might be his own vicissitudes,

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சமே! நல்ல மனமே!; நல்லை! நல்லை! நீ மிகவும் நல்ல தன்மையையுடைய மனம்; உன்னைப் பெற்றால் உன்னைப் பெற்றால்; என் செய்யோம்? எதைத்தான் செய்து முடிக்க மாட்டோம்?; இனி என்ன குறைவினம் இனிமேல் என்ன குறை நமக்கு; மைந்தனை நித்யயௌவன முடையவனும்; மலராள் திருமகள் நாதனுமான; மணவாளனை எம்பெருமானை; துஞ்சும் போதும் நான் பிரிகின்ற காலத்திலும்; விடாது தொடர் கண்டாய் நீ விடாமல் அவனைத் தொடர்வாயாக
nenjamĕ ŏh heart (which is the abode of knowledge)!; nallai nallai (what you have done is) very good.; unnaip peṝāl when ī have you; en seyyŏm what can ī not accomplish?; ini after having acquired your acceptance; enna kuṛaivinam is there anything that is impossible for us? What deficiency do we have?; maindhanai (then) one who is eternally youthful; malarāl̤ to ṣrī mahālkshmi who is infinitely enjoyable; maṇavāl̤anai one who is the enjoyer; thunjum pŏdhum even while we are finished; vidādhu without leaving; thodar kaṇdāy try to engage with him

TVM 1.10.5

2894 கண்டாயேநெஞ்சே! கருமங்கள்வாய்க்கின்று * ஓர்
எண்டானுமின்றியே வந்தியலுமாறு *
உண்டானை உலகேழும்ஓர்மூவடி
கொண்டானை * கண்டுகொண்டனைநீயுமே.
2894 கண்டாயே நெஞ்சே ! * கருமங்கள் வாய்க்கின்று * ஓர்
எண் தானும் இன்றியே * வந்து இயலுமாறு **
உண்டானை * உலகு ஏழும் ஓர் மூவடி
கொண்டானை * கண்டுகொண்டனை நீயுமே (5)
2894 kaṇṭāye nĕñce ! * karumaṅkal̤ vāykkiṉṟu * or
ĕṇ tāṉum iṉṟiye * vantu iyalumāṟu **
uṇṭāṉai * ulaku ezhum or mūvaṭi
kŏṇṭāṉai * kaṇṭukŏṇṭaṉai nīyume (5)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Haven't you noticed, my mind, how things happen unexpectedly? Did the seven worlds know the Lord would sustain them during the deluge? Who knew the Lord would measure the worlds in three strides and set His feet on them? Did you ever think you would see Him?

Explanatory Notes

The Lord extends His grace out of His own sweet will, unasked and un-premeditated by us. It is this spontaneous grace of the Lord that Bhaṭṭar has emphasised all along in this decad.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சே! மனமே!; கருமங்கள் காரியங்கள்; வாய்க்கின்று பலிக்கும் காலத்தில்; ஓர் எண் நம் நினைவு; தானும் இன்றியே சிறிதும் இல்லாதிருப்பினும்; வந்து இயலுமாறு பலித்து வருவதை; கண்டாயே இப்போது பார்த்தாய் அல்லவா; உலகு ஏழும் ஏழு உலகங்களையும்; உண்டானை பிரளயத்தில் விழுங்கி காப்பாற்றினவனும்; ஓர் மூவடி பின்பு உலகங்களை மூன்றடிகளாலே; கொண்டானை அளைந்து கொண்டவனுமான பெருமானை; நீயுமே கண்டு கொண்டனை நீ கண்டு கொண்டாயன்றோ?
nenjĕ ŏh mind!; karumangal̤ actions (such as adhvĕsham (not having enmity), ābhimukyam (friendliness), āsrayaṇam (surrendering), aṛivu (knowledge), nalam (bhakthi/devotion) etc); vāykkinṛu fructifying; ŏr a; eṇdhānum inṛiyĕ even without contemplation; vandhiyalum happening for us; āṛu way/means; kaṇdāyĕ have you seen?; ulagu ĕzhum all universes; uṇdānai safely placed in his stomach (during pral̤ayam (annihilation)); ŏr unique/distinct; mūvadi koṇdānai established them as subservient to him by assuming the form of thrivikrama; nīyum you too (who don-t have ābhimukyam (friendliness) towards him); kaṇdu koṇdanai received it

TVM 1.10.6

2895 நீயும்நானும் இந்நேர்நிற்கில் * மேல்மற்றோர்
நோயும்சார்கொடான் நெஞ்சமே!சொன்னேன் *
தாயும்தந்தையுமாய் இவ்வுலகினில் *
வாயுமீசன் மணிவண்ணனெந்தையே.
2895 நீயும் நானும் * இந் நேர்நிற்கில் * மேல் மற்றோர்
நோயும் சார்கொடான் * நெஞ்சமே சொன்னேன் **
தாயும் தந்தையும் ஆய் * இவ் உலகினில்
வாயும் ஈசன் * மணிவண்ணன் எந்தையே (6)
2895 nīyum nāṉum * in nerniṟkil * mel maṟṟor
noyum cārkŏṭāṉ * nĕñcame cŏṉṉeṉ **
tāyum tantaiyum āy * iv ulakiṉil
vāyum īcaṉ * maṇivaṇṇaṉ ĕntaiye (6)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

My mind, if we keep going as we are, our sapphire-hued Lord, the Master of all, who is both our Father and Mother, will remove all our troubles and guide us to our true state.

Explanatory Notes

Addressing his mind, the Āzhvār says: “Our eternal Lord Who endears Himself to us like the Mother, whose love is proverbial, chastises like the Father, bent upon reforming us, revealed His resplendent form like unto a sapphire and enthralled me. If you and I persevere in this state, the Lord will see to it that we enjoy this perennial bliss for all time, keeping away all ills and evils”.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாயும் தந்தையுமாய் தாய் தந்தை போன்று பரிவுள்ளவனாய்; இவ் உலகினில் இந்த உலகத்தில்; வாயும் ஈசன் வந்து அவதரிக்கின்றவனும்; மணி வண்ணன் நீலரத்தினம் போன்றவனும்; எந்தையே என் ஸ்வாமியானவனும்; நெஞ்சமே! மனமே!; நீயும் வணங்கு என்று கூறுவதற்கு தகுதியாக உள்ள நீயும்; நானும் வணங்கச் சொல்லுகிற நானும்; இந் நேர் நிற்கில் இந்த நிலையில் நின்றால்; மேல் மற்றோர் இனி மேலுள்ள காலங்களில்; நோயும் வேறொரு துன்பமும்; சார்கொடான் நம்மைச் சார்வதற்கு விடமாட்டான்; சொன்னேன் இது உண்மை
thāyāyum being affectionate like mother; thandhaiyāyum looking after the well-being like father; ivvulaginil in this world (which does not understand his glories); vāyum descended; īsan out of his eternal lordship; maṇivaṇṇan manifesting his beautiful bluish gem like form to me, benevolently; endhai being my master accepting my service (by doing all which had been said thus far); nenjamĕ ŏh heart!; nīyum you (who are humble to be ordained to worship) also; nānum me (who is having you as my tool); i in this manner explained thus far; nĕr not reject his favour; niṛkil if we stand by; mĕl future; maṝu anything else (other than what is natural); ŏr nŏyum any disease; sārkodān will not let them approach us; sonnĕn told you (this most important meaning)

TVM 1.10.7

2896 எந்தையே! என்றும் எம்பெருமான்! என்றும் *
சிந்தையுள்வைப்பன் சொல்லுவன்பாவியேன் *
எந்தை! எம்பெருமான்! என்று வானவர்
சிந்தையுள்வைத்துச் * சொல்லும்செல்வனையே.
2896 எந்தையே என்றும் * எம் பெருமான் என்றும் *
சிந்தையுள் வைப்பன் * சொல்லுவன் பாவியேன் **
எந்தை! எம் பெருமான் ! என்று * வானவர்
சிந்தையுள் வைத்துச் * சொல்லும் செல்வனையே (7)
2896 ĕntaiye ĕṉṟum * ĕm pĕrumāṉ ĕṉṟum *
cintaiyul̤ vaippaṉ * cŏlluvaṉ pāviyeṉ **
ĕntai! ĕm pĕrumāṉ ! ĕṉṟu * vāṉavar
cintaiyul̤ vaittuc * cŏllum cĕlvaṉaiye (7)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

The Sovereign Lord is worshipped by the Celestials, who praise Him as their creator. How can I, a sinner, dare to meditate on Him and call Him my Father, Master, and everything?

Explanatory Notes

The Scriptures warn that one shall not utter anything ominous (inauspicious), lest it should actually come to pass. In the fourth stanza of this decad, the Āzhvār, while exhorting his mind, apprehended the frightful possibility of his moving away from the Lord, haunted by his own lowliness. And here we find him suffering from that obsession again and so soon!

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வானவர் நித்யஸூரிகள்; எந்தையே! என்றும் என் ஸ்வாமியே என்றும்; எம்பெருமான்! என்றும் எம்பெருமானே! என்றும்; சிந்தையுள் வைப்பன் மனத்தினால் சிந்தித்து; சொல்லுவன் துதிக்கும்படியான; செல்வனையே எம்பெருமானை; பாவியேன் பாவியான நான்; எந்தை! எந்தையே!; எம்பெருமான்! என்று எம்பெருமானே! என்று; சிந்தையுள் வைத்து மனதால் தியானிப்பேன்; சொல்லும் வாயாலும் சொல்லுவேன் அந்தோ!
vānavar residents of paramapadham (srīvaikuṇtam); endhai one who is our sustenance etc; emperumān enṛu our supreme master; sindhaiyul̤ vaiththu contemplating thus; sollum one who is said like that; selvanai one who has such wealth; pāviyĕn sinful me; endhaiyĕ enṛum saying -ŏh the one who looks after my well-being!-; emperumān enṛum saying -ŏh my master!-; sindhaiyul̤ in my heart too; vaippan keeping; solluvan will say as well

TVM 1.10.8

2897 செல்வநாரணனென்றசொல்கேட்டலும் *
மல்கும்கண்பனி நாடுவன்மாயமே *
அல்லும்நன்பகலும் இடைவீடின்றி
நல்கி * என்னைவிடான் நம்பிநம்பியே.
2897 செல்வ நாரணன் * என்ற சொல் கேட்டலும் *
மல்கும் கண் பனி * நாடுவன் மாயமே **
அல்லும் நன் பகலும் * இடைவீடு இன்றி *
நல்கி என்னை விடான் * நம்பி நம்பியே (8)
2897 cĕlva nāraṇaṉ * ĕṉṟa cŏl keṭṭalum *
malkum kaṇ paṉi * nāṭuvaṉ māyame **
allum naṉ pakalum * iṭaivīṭu iṉṟi *
nalki ĕṉṉai viṭāṉ * nampi nampiye (8)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Someone said 'Celvanāraṇaṉ' and I heard it, causing tears to run from my eyes. I searched for Him while He was away; what a wonder! Through days and nights without pause, the perfect Lord, full of grace, tries to win my love and chooses to stay with me always.

Explanatory Notes

“How unworthy and unbecoming,” the Āzhvār rattled, “would be the union of one so vile and abject like me and the Supreme Lord, pure and exalted beyond words!” And so, he fled away and hid himself behind a ruined wall, in a remote corner, with little or no scope of hearing and talking about the Lord. Thus he would forget all about God and, as a further precaution against + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செல்வ நாரணன் என்ற ஸ்ரீமந்நாராயணன் என்கிற; சொல் கேட்டலும் சொல்லைக் கேட்டதும்; கண் பனி மல்கும் கண்களில் நீர் ததும்பும்; நாடுவன் பெருமான் எங்கே என்று தேடினேன்; மாயமே! என்ன ஆச்சர்யம்; நம்பி எங்கும் நிறைந்த பெருமான்; நன் அல்லும் பகலும் நல்ல இரவும் பகலும் எப்போதும் என்னை; இடை வீடு இன்றி பெரியவனாக நினைத்து இடைவிடாமல்; நல்கி நம்பியே என் நன்மையையே விரும்பி; என்னை விடான் என்னை விடாமல் என் அருகிலேயே இருக்கிறான்
selva(n) nāraṇan enṛa -srīman nārāyaṇan-; sol divine name; kĕttalum on hearing; kaṇ eye; pani tears; malgum flowing; nāduvan started searching (from where is this coming); māyamĕ this is amaśing; nambi bhagavān who is complete; nal having goodness (to be approached); allum in the night; pagalum in the day; idai vīdinṛi without any break; nalgi being friendly; ennai me; nambi considering me as his property; vidān will not leave me

TVM 1.10.9

2898 நம்பியைத் தென்குறுங்குடி நின்ற * அச்
செம்பொனேதிகழும் திருமூர்த்தியை *
உம்பர்வானவர் ஆதியஞ்சோதியை *
எம்பிரானை என்சொல்லிமறப்பனோ? (2)
2898 நம்பியை * தென் குறுங்குடி நின்ற * அச்
செம்பொனே திகழும் * திரு மூர்த்தியை **
உம்பர் வானவர் * ஆதி அம் சோதியை *
எம் பிரானை * என் சொல்லி மறப்பனோ? (9)
2898 nampiyai * tĕṉ kuṟuṅkuṭi niṉṟa * ac
cĕmpŏṉe tikazhum * tiru mūrttiyai **
umpar vāṉavar * āti am cotiyai *
ĕm pirāṉai * ĕṉ cŏlli maṟappaṉo? (9)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

How could I ever forget my Lord of dazzling charm, the creator of the exalted beings in SriVaikuntam? He is the perfect Lord who stands in Tentirukkuṟuṅkuṭi with a beautiful form that shines like red gold.

Explanatory Notes

(i) Asked whether he would not forget the Lord like the worldlings and go in pursuit of food and material pleasures, the Āzhvār says, he just does not know how and on what grounds he can forget the Lord. By exhibiting His exquisite charm in His Arcā form at Tirukkuṟuṅkuṭi (Tirunelveli, in Tamil Nadu), He enthralled the Āzhvār. How then could he forget Him? Could it be + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தென் குறுங்குடி நின்ற திருக்குறுங்குடியில் நின்ற; நம்பியை எம்பெருமானை; அச்செம்பொனே திகழும் அழகிய செம்பொன் போன்ற; திரு மூர்த்தியை ஒளிமயமான மூர்த்தியை உடையவனும்; உம்பர் வானவர் நித்ய ஸூரிகளுக்கு; ஆதி காரணபூதனுமான; அம் சோதியை அழகிய ஒளி உருவனுமான; எம் பிரானை எம் பிரானை; என் சொல்லி என்ன காரணம் கூறி; மறப்பனோ? மறப்பேன்
then kuṛungudi īn thirukkuṛungudi [then- south/beautiful]; ninṛa due to him standing there; nambiyai one who is filled with all auspicious qualities; a such (even more beautiful than in paramapadham); chempon like molten-red gold; thigazhum radiant; thirumūrththiyai having divine form; umbar great; vānavar for nithyasūris; ādhi being the cause for their sustenance, etc; am most beautiful that makes others see him always; sŏdhiyai one who is known by the term -paramjyŏthi #(supremely effulgent); em pirānai one who accepted my servitude after making me experience (such wonderful form); en solli what will ī say; maṛappan to forget

TVM 1.10.10

2899 மறப்பும்ஞானமும் நானொன்றுணர்ந்திலன் *
மறக்குமென்று செந்தாமரைக்கண்ணொடு *
மறப்பறஎன்னுள்ளே மன்னினான் தன்னை *
மறப்பனோ? இனியானென்மணியையே.
2899 மறப்பும் ஞானமும் * நான் ஒன்று உணர்ந்திலன் *
மறக்கும் என்று * செந்தாமரைக் கண்ணொடு **
மறப்பு அற என் உள்ளே * மன்னினான் தன்னை *
மறப்பனோ ? * இனி யான் என் மணியையே? (10)
2899 maṟappum ñāṉamum * nāṉ ŏṉṟu uṇarntilaṉ *
maṟakkum ĕṉṟu * cĕntāmaraik kaṇṇŏṭu **
maṟappu aṟa ĕṉ ul̤l̤e * maṉṉiṉāṉ taṉṉai *
maṟappaṉo ? * iṉi yāṉ ĕṉ maṇiyaiye? (10)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

I don't know what it is to remember or forget, yet the Lord with red-lotus eyes knows I might forget Him. So, He has firmly settled in my heart, as if anticipating this. How could I forget such a precious Lord now?

Explanatory Notes

(i) The Āzhvār feels that he is incapable of thinking and there is, therefore, no question of his forgetting either. The Lord is, however, anxious that the knowledge now dawned on the Āzhvār as a result of His union with him, should remain intact, leaving ṇo more scope for his sliding down or slipping off. He has, therefore, lodged Himself firmly inside the Āzhvār, casting + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மறப்பும் ஞானமும் மறதி என்றும் ஞானம் என்றும்; நான் ஒன்று உணர்ந்திலன் நான் சிறிது அறிந்திலேன்; மறக்கும் என்று நான் மறக்கக்கூடும் என்று நினைத்து; செந்தாமரை செந்தாமரை போன்ற; கண்ணொடு கண்களைக் கொண்டு; மறப்பு அற ஒரு நாளும் மறக்க ஒண்ணாதபடி; என் உள்ளே என்னைக் குளிர நோக்கி எனது நெஞ்சினுள்ளே; மன்னினான் தன்னை நிலைபெற்று நின்ற பெருமானை; என் மணியையே எனக்கு மணிபோன்றவனை; இனி யான் மறப்பனோ? இனி நான் மறப்பேனோ?
maṛappum forgetfulness; gyānamum remembrance/knowledge; onṛu one; uṇarndhilan when ī don-t know; maṛakkum that -āzhvār will forget-; enṛu considering; sem reddish; thāmarai l̤ike a lotus; kaṇṇodu with the eye(s); maṛappaṛa ensuring that forgetfulness does not occur; en ul̤l̤ĕ inside my heart; manninān thannai one who arrived to stay eternally; en maṇiyai the most easily approachable emperumān who can be tied in a cloth like a precious gem and enjoyed; ini now on; yān ī; maṛappanŏ how to forget?

TVM 1.10.11

2900 மணியைவானவர் கண்ணனைத் தன்னதோ
ரணியை * தென்குருகூர்ச்சடகோபன் * சொல்
பணிசெயாயிரத்துள் இவைபத்துடன் *
தணிவிலர் கற்பரேல் கல்விவாயுமே. (2)
2900 ## மணியை * வானவர் கண்ணனை தன்னது ஓர்
அணியை * தென் குருகூர்ச் சடகோபன் ** சொல்
பணிசெய் ஆயிரத்துள் * இவை பத்துடன் *
தணிவிலர் கற்பரேல் * கல்வி வாயுமே (11)
2900 ## maṇiyai * vāṉavar kaṇṇaṉai taṉṉatu or
aṇiyai * tĕṉ kurukūrc caṭakopaṉ ** cŏl
paṇicĕy āyirattul̤ * ivai pattuṭaṉ *
taṇivilar kaṟparel * kalvi vāyume (11)

Ragam

Bhairavi / பைரவி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Those who eagerly learn these ten songs out of the thousand sung by Tenkurukūr Caṭakōpaṉ as a service to the Lord of sapphire hue, the one-of-a-kind jewel and overlord of the Celestials, will be filled with divine knowledge.

Explanatory Notes

(i) In accordance with the text of the song, those that learn these ten songs will have their fill of knowledge. The ultimate aim of knowledge is Divine Service and so, this knowledge should blossom into service.

(ii) The blue-gem is likened to the Lord in a number of ways. In it, there is a happy blending, as in the case of the supreme Lord, of ‘Paratva’ and ‘Saulabhya’, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மணியை மாணிக்கம் போன்றவனை; வானவர் கண்ணனை நித்யஸூரிகளின் தலைவனை; தன்னது ஓர் தனக்குத்தானே; அணியை ஆபரணம் போன்ற அழகையுடையவனை; தென் குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொல் பணி செய் சொற்களால் அருளிச்செய்த; ஆயிரத்துள் ஆயிரத்துள்; இவை பத்துடன் இப்பத்துப் பாசுரங்களையும்; தணிவிலர் கற்பரேல் ஆசையுடன் கற்பர்களாகில்; கல்வி அந்தக் கல்வி கைங்கர்யத்தை; வாயுமே பெற்றுத் தரும்
maṇiyai ŏne who has a form like (radiant) ruby; vānavar ḫor those residents of paramapadham; kaṇṇanai being the controller; thannadhŏr aṇiyai the distinct one who himself is a decoration for him; then obedient; kurukūr the leader of āzhvārthirunagari; satakŏpan āzhvār; sol by his word; paṇisey served; āyiraththul̤ among the thousand pāsurams; ivai paththu this decad; udan agreeing in principle; thaṇivilar those who are being disturbed; kaṛparĕl if learnt (with great desire through an āchārya); kalvi that learning/knowledge; vāyum will lead to the result in the form of kainkaryam