75

Thiruvananthapuram

திருவனந்தபுரம்

Thiruvananthapuram

Trivandrum

ஸ்ரீ ஹரிலக்ஷ்மீ ஸமேத ஸ்ரீ அனந்தபத்மநாபாய நமஹ

Thayar: Sri Srihari Lakshmi
Moolavar: Ananthapadmanābhan
Utsavar: Ananthapadmanābhan
Vimaanam: Hemakooda
Pushkarani: Matsya Theertham, Padma Theertham, Varāha Theertham
Thirukolam: Sayana (Reclining)
Direction: East
Mandalam: Malai Nādu
Area: Kerala
State: Kerala
Sampradayam: Common
Timings: 4:00 a.m. to 11:00 a.m. 4:00 p.m. to 9:00 p.m.
Search Keyword: Thiruvanandapuram
Mangalāsāsanam: Namm Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 10.2.1

3794 கெடுமிடராயவெல்லாம் கேசவாவென்ன * நாளும்
கொடுவினைசெய்யும் கூற்றின்தமர்களும்குறுககில்லார் *
விடமுடையரவில் பள்ளிவிரும்பினான்சுரும்பலற்றும் *
தடமுடைவயல் அனந்தபுரநகர்ப்புகுதும்இன்றே. (2)
3794 ## கெடும் இடர் ஆய எல்லாம் * கேசவா என்ன * நாளும்
கொடுவினை செய்யும் * கூற்றின் தமர்களும் குறுககில்லார் **
விடம் உடை அரவில் பள்ளி * விரும்பினான் சுரும்பு அலற்றும் *
தடம் உடை வயல் * அனந்தபுரநகர் புகுதும் இன்றே (1)
3794. ##
ketum idarāyavellām * kEchavā venna * nāLum-
kotuvinai seyyum * kooRRin thamargaLum kuRukakillār *
vidamudai aravilpaLLi * virumpinān surumpalaRRum *
thadamudai vayal * anandhapura_nagarp pukuthuminRE. (2) 10.2.1

Ragam

கமாஸ்

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

Today, let us enter the holy Aṉantapuram, where bees hum merrily in fertile ponds and fields. The Lord lovingly reposes on His serpent bed here. Your entry into this sacred city will not be hindered by Yama’s agents, who are known to continually torment. If we simply utter the holy name 'Kēcava', all our sins shall immediately disappear.

Explanatory Notes

(i) There could possibly be quite a few things, standing in the way of one’s entry into the holy city of Aṉantapuram, (Tiruvaṉantapuram, the capital of Kerala State) which the Āzhvār now longs to laud and enjoy. But then, the Lord’s names are handy enough to dispel the sins of the chanters of these names and thus remove all the impediments in the way of their achieving + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கேசவா! என்ன கேசவா! என்ற நாமத்தைச் சொன்னால்; கெடும் இடர் ஆய நம் துயரங்கள்; எல்லாம் எல்லாம் தீரும்; நாளும் கொடு வினை நிரந்தரமாகக் கொடுமைகளை; செய்யும் செய்ய நிற்கும்; கூற்றின் தமர்களும் யமபடர்களும்; குறுககில்லார் அணுகமாட்டாது ஓடிப்போவர்கள்; விடம் உடை விஷத்தை உடைய; அரவில் ஆதிசேஷன் மேல்; பள்ளி விரும்பினான் விரும்பி சயனித்திருக்கும்; சுரும்பு அலற்றும் வண்டுகள் ஆரவாரிக்கின்ற; தடம் உடை தடாகங்கள் நிறைந்த; வயல் வயல்களையுடைய; அனந்தபுரநகர் திருவனந்தபுர நகரத்திற்கு; புகுதும் இன்றே இன்றே செல்வோம்
kedum will be eliminated and driven out (to unseen place);; nALum eternally; kodu vinai cruel tortures; seyyum doing; kURRin thamargaLum servitors of yama (by the recital of the name of lotus-eyed lord as said in -ithIrayanthi #, as said in -thyaja pata dhUratharENa-, as said in periyAzhwAr thirumozhi #kOlAdi kuRugappeRA[dhE]- (he cannot come close to where I rule) and in periya thirumozhi 8.10 .8 -kaLLar pOl-); kuRugagillAr will run away;; vidam udai having abundant poison; aravil on the divine mattress; paLLi virumbinAn one who mercifully rests, manifesting his desire to be united with his devotees; surumbu beetles which have drunk honey; alaRRum making sounds in a disorderly manner; thadam flower filled ponds; udai having; vayal having fields; ananthapuranagar thiruvananthapuram; inRE (without any further delay) today itself; pugudhum reach.; inRu without any delay, on the same day when the desire is acquired; pOy go

TVM 10.2.2

3795 இன்றுபோய்ப்புகுதிராகில் எழுமையும் ஏதம்சார *
குன்றுநேர்மாடமாடே குருந்துசேர்செருந்திபுன்னை *
மன்றலர்போழில் அனந்தபுரநகர்மாயன்நாமம் *
ஒன்றுமோராயிரமாம் உள்ளுவார்க்கும்பரூரே.
3795 இன்று போய்ப் புகுதிராகில் * எழுமையும் ஏதம் சாரா *
குன்று நேர் மாடம் மாடே * குருந்து சேர் செருந்தி புன்னை **
மன்று அலர் பொழில் * அனந்தபுரநகர் மாயன் நாமம் *
ஒன்றும் ஓர் ஆயிரமாம் * உள்ளுவார்க்கு உம்பர் ஊரே (2)
3795
inRupOyp pukuthirākil * ezumaiyum Ethamchārā *
kunRunNaer mātamātae * kurundhuchEr serundhipunnai *
manRalar pozil * anandhapura_nagar māyan_nāmam *
onRumOr āyiramām * uLLuvārkku umparoorE. 10.2.2

Ragam

கமாஸ்

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

Sins shall not touch you for generations if you enter Aṉantapuram today, with its beautiful gardens, stately trees, and tall castles rising like mountains. The name of the Lord enshrined there is as powerful as a thousand names. For those who chant that name, Aṉantapuram becomes the very essence of SriVaikuntam.

Explanatory Notes

(i) “The name of the Lord at Aṉantapuram shall by itself extend unto you protection, on all fronts. If you’d only get into that holy centre, sins shall not come near you, not only now but in all successive births”, this is how the Āzhvār exhorts the people around. The mere mention of the name of the Lord, enshrined there, will transform that place into spiritual world. + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இன்று போய் இன்றே சென்று திருவனந்தபுரம்; புகுதிராகில் அடைவீர்களாகில்; எழுமையும் ஏழேம் பிறப்புகளிலும்; ஏதம் சாரா துன்பம் வராது; குன்று நேர் மலை போன்ற; மாட மாடே மாடங்களினருகே; குருந்து சேர் குருந்த மரங்களோடு சேர்ந்த; செருந்தி செருந்தி மரங்களும்; புன்னை புன்னை மரங்களும்; மன்று அலர் மணம் பரப்பும்; பொழில் பூஞ்சோலைகளையும் உடைய; அனந்தபுரநகர் திருவனந்தபுர நகரத்தில் இருக்கும்; மாயன் மாயனான பெருமானின்; நாமம் நாமங்களில் ஒவ்வொன்றும்; ஆயிரமாம் ஆயிரம் நாமங்களின் பலன் அளிக்கவல்லவை; ஒன்றும் ஓர் ஏதேனும் ஒன்றாகிலும்; உள்ளுவார்க்கு உள்ளன்போடு அனுஸந்திப்பவர்க்கு; உம்பர் ஊரே இந்த நகரமே பரமபதமாகும்`
pugudhir Agil if you reach; ezhumaiyum forever; Edham the defect of samsAra; sArA will not affect;; kunRu nEr like a mountain; mAdam mansions; mAdE in the proximity; kurundhu sEr with kurundhu tree; serundhi serundhi flower tree; punnai punnai tree; manRu in the centre of the town; alar blossoming; pozhil being enjoyable, having garden; ananthapura nagar in the town of thiruvananthapuram; mAyan (having qualities such as saundharya (beauty), sauSeelya (simplicity), saulabhya (easy approachability) etc which are enjoyed by his devotees) the amazing lord-s; nAmam the names which highlight such qualities; onRum any one of them; Or being distinguished; Ayiram A in thousand ways; uLLuvArkku for those who determine; umbar Ur paramapadham.; puL periya thiruvadi (garudAzhwAr); Urum will ride;

TVM 10.2.3

3796 ஊரும்புட்கொடியுமஃதே உலகெல்லாமுண்டுமிழ்ந்தான் *
சேரும்தண்ணனந்தபுரம் சிக்கெனப்புகுதிராகில் *
தீரும்நோய்வினைகளெல்லாம் திண்ணம்நாம்அறியச் சொன்னோம் *
பேருமோராயிரத்துள் ஒன்றுநீர்பேசுமினே.
3796 ஊரும் புள் கொடியும் அஃதே * உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான் *
சேரும் தண் அனந்தபுர * சிக்கெனப் புகுதிராகில் **
தீரும் நோய் வினைகள் எல்லாம் * திண்ணம் நாம் அறியச் சொன்னோம் *
பேரும் ஓர் ஆயிரத்துள் * ஒன்று நீர் பேசுமினே (3)
3796
oorumput kodiyum aqthE * ulakellām undumizndhān *
chErum thaNNanandhapuram * sikkenap pukuthirākil *
theerum_nOy vinaikaLellām * thiNNa_nām aRiyachchonnOm *
pErum OrāyiraththuL * onRu_neer pEchuminE. 10.2.3

Ragam

கமாஸ்

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

If you steadfastly reach Aṉantapuram, serene and delightful, where our Lord resides with Garuḍa as His vehicle and banner, who once consumed and then released the entire cosmos, rest assured, you will be liberated from all afflictions. Simply utter any one of His thousand names.

Explanatory Notes

“Any one of the Lord’s thousand (innumerable) names is potent enough to destroy all evils. So then, chant but one such name and get rid of all your sins”, exhorts the Āzhvār. The votaries are asked to enter the holy city of Aṉantapuram with firm determination and get their sins destroyed. On reaching the place, no difficult task is set unto them by the Āzhvār; they are required to do nothing more than chant just one of the many holy names of the Lord, the great Deliverer.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊரும் புள் கருடனை வாகனமாகவும்; கொடியும் அஃதே கொடியாகவும் உடையவனும்; உலகுஎல்லாம் பிரளயத்தில் உலகங்களை; உண்டு வயிற்றில் வைத்து காத்து; உமிழ்ந்தான் வெளிப்படுத்தியவனுமான பெருமான்; சேரும் தண் இருக்கும் குளிர்ந்த; அனந்தபுரம் திருவனந்தபுரத்தை; சிக்கென புகுதிராகில் சிக்கென புகுதிராகில்; நோய் வினைகள் நோய்களும் வினைகளும்; எல்லாம் தீரும் எல்லாம் நீங்கிவிடும்; நாம் திண்ணம் நாம் திண்ணமாக; அறிய சொன்னோம் அறியும்படி கூறினோம்; பேரும் ஓர் ஆயிரத்துள் ஆயிர நாமங்களுள்; ஒன்று நீர் ஏதேனும் ஒன்றை; பேசுமினே அனுஸந்தித்து உய்வடையவும்
kodiyum the flag hoisted for protecting; ahdhE is also that;; ulagu ellAm whole world; uNdu consumed (and protected by placing in the stomach); umizhndhAn spat it out after deluge; sErum mercifully resting to give audience to those who are of subsequent times; thaN invigorating; ananthapuram thiruvananthapuram; sikkena with firm faith in not expecting anything other than kainkaryam; pugudhirAgil if you reach; nOy disease (of taste for worldly pleasures); vinaigaL ellam thIrum all karmas (which are the root for such disease) will be eliminated;; nAm we, who are experts in this principle; aRiya to know; thiNNam firmly; sonnOm told;; pErum Or AyiraththuL among his enjoyable thousand divine names; onRu anyone; nIr you; pEsumin recite.; periya abundant; nIr having water

TVM 10.2.4

3797 பேசுமின்கூசமின்றிப் பெரியநீர்வேலைசூழ்ந்து *
வாசமேகமழுஞ்சோலை வயலணியனந்தபுரம் *
நேசம்செய்துறைகின்றானை நெறிமையால்மலர்கள்தூவி *
பூசனைசெய்கின்றார்கள் புண்ணியம்செய்தவாறே!
3797 பேசுமின் கூசம் இன்றிப் * பெரிய நீர் வேலை சூழ்ந்து *
வாசமே கமழும் சோலை * வயல் அணி அனந்தபுரம் **
நேசம் செய்து உறைகின்றானை * நெறிமையால் மலர்கள் தூவி *
பூசனை செய்கின்றார்கள் * புண்ணியம் செய்தவாறே (4)
3797
pEchumin koochaminRip * periya_neer vElaichoozndhu *
vāchamE kamazum chOlai * vayalaNiyanandhapuram *
nEchaNYcheythu uRaikinRānai * neRimaiyāl malargaLthoovi *
poochanai seykinRārgaL * puNNiyam seythavāRE. 10.2.4

Ragam

கமாஸ்

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

Speak openly and without hesitation: what penance do those who worship the Lord with choice flowers in Aṉantapuram perform? This sacred place, well adorned with fertile fields and fragrant gardens, surrounded by vast oceanic waters, is where the Lord delightfully dwells.

Explanatory Notes

The Āzhvār extols those that have the good fortune to worship the Lord at Tiruvaṉantapuram whose gardens are so full of fragrance that it more than offsets the possible stench of the sea around. It is by-no-means surprising that the denizens of the High spiritual worlds, marked by spotless purity and overwhelming devotion to the Lord, worship Him there, in that transcendent + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பெரிய நீர் வேலை பெரும் கடலாலே; சூழ்ந்து சூழ்ந்த; வாசமே கமழும் மணம் கமழும்; சோலை சோலைகளையும்; வயல் வயல்களையும்; அணி அலங்காரமாகக் கொண்ட; அனந்தபுரம் திருவனந்தபுரத்தில்; நேசம் செய்து அன்புடன் விரும்பி; உறைகின்றானை இருக்கும் பெருமானை; நெறிமையால் சாஸ்திர விதிப்படி; மலர்கள் தூவி மலர்கள் தூவி; பூசனை வாழ்த்தி துதித்து; செய்கின்றார்கள் வணங்குகிறார்கள்; புண்ணியம் புண்ணியம்; செய்தவாறே செய்த அந்த அடியார்களின்; கூசம் இன்றி பேசுமின் பேச்சைக் கூசாமல் கேளுங்கள்
vElai by ocean; sUzhndhu surrounded; vAsamE kamazhum spreading the fragrance; sOlai gardens; vayal fields; aNi having as decoration; ananthapuram in thiruvananthapuram; nEsam seydhu showing ultimate vAthsalyam (motherly love) (to manifest himself to the devotees); uRaiginRAnai one who is eternally residing; neRimaiyAl in proper means matching his being the lord; malargaL tools such as flowers; thUvi offering (being overwhelmed by love); pUsanai seyginRArgaL those who worship; puNNiyam fortune; seydha ARu the way they got; kUsam inRi without seeing (your) disqualification and without feeling shy (seeing the overwhelming motherly love of those who worship the vathsalan (emperumAn who is like a mother); pEsumin try to praise.; puNNiyam seydhu performing bhakthi which is enjoyable; nalla that which is dear to him, due to being with bhakthi

TVM 10.2.5

3798 புண்ணியஞ்செய்து நல்லபுனலொடுமலர்கள்தூவி *
எண்ணுமின்எந்தைநாமம் இப்பிறப்பறுக்கும்அப்பால் *
திண்ணம்நாமறியச்சொன்னோம் செறிபொழிலனந்தபுரத்து *
அண்ணலார்கமலபாதம் அணுகுவார்அமரராவார்.
3798 புண்ணியம் செய்து * நல்ல புனலொடு மலர்கள் தூவி *
எண்ணுமின் எந்தை நாமம் * இப் பிறப்பு அறுக்கும் அப்பால் **
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் * செறி பொழில் அனந்தபுரத்து *
அண்ணலார் கமல பாதம் * அணுகுவார் அமரர் ஆவார் (5)
3798
puNNiyam seythu * _nalla punalotu malargaLthoovi *
eNNumiNn endhai_nāmam * ippiRappaRukkum appāl *
thiNNam_nām aRiyachchonnOm * seRipozil anandhapuraththu *
aNNalār kamalapātham * aNukuvār amararāvār. 10.2.5

Ragam

கமாஸ்

Thalam

ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-14

Simple Translation

Meditate on the holy names of our Lord and offer Him pure water and fine flowers with supreme devotion to break free from the bondage of Saṃsāra. I affirm, those who draw near the lotus feet of our Sire at Aṉantapuram, adorned with many fine gardens, are as blessed as the Nithyasuris in SriVaikuntam.

Explanatory Notes

The Āzhvār exhorts the people to approach the Lord at Aṉantapuram and adore His lotus feet, affirming that, by so doing, they will rise to the stature of the ‘Nitya Sūrīs’ in spiritual world. By sacramental water for the Lord’s worship is meant only water, pure and simple, and not the one spiced and flavoured with cloves and cardamoms, the emphasis being on the easy worshippability + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
புண்ணியம் செய்து பரம பக்தியுடனும்; நல்ல புனலொடு தூய நீருடனும்; மலர்கள் தூவி மலர்களாலே அர்ச்சனை செய்து; எந்தை நாமம் எம்பெருமானது திருநாமங்களை; எண்ணுமின் சிந்தனை செய்தீர்களாகில்; இப் பிறப்பு இக் கொடிய ஸம்ஸாரத்தை; அறுக்கும் தொலைத்தருள்வன்; அப்பால் மேலும்; செறிபொழில் செறிந்த சோலைகளையுடைய; அனந்தபுரத்து திருவனந்தபுரத்திலே; அண்ணலார் எம்பெருமானின்; கமல பாதம் கமல பாதங்களை; அணுகுவார் அடைவீர்கள்; அமரர் ஆவார் அமரர் ஆவீர்கள்; நாம் திண்ணம் இதனை நாம் திடமாக; அறியச்சொன்னோம் தெரிவித்தோம்
punalodu malargaL water, flowers etc; thUvi offer (with love); endhai creator-s; nAmam divine names; eNNumin meditate upon them always and enjoy them;; ippiRappu this birth, which hurts when seen; aRukkum will ensure the eradication;; appAl further; seRi pozhil having rich garden; ananthapuraththu in thiruvananthapuram; aNNalAr kamala pAdham divine feet of the unconditional lord; aNuguvAr those who approach in a friendly manner (as said here); amarar AvAr will become one among nithyasUris;; nAm we (who are well versed); thiNNam firmly; aRiya to know; sonnOm told.; kumaranAr thAdhai rudhra, the father of subrahmaNya, his; thunbam thudaiththa eliminated the sorrow

TVM 10.2.6

3799 அமரராய்த்திரிகின்றார்கட்கு ஆதிசேரனந்தபுரத்து *
அமரர்கோனர்ச்சிக்கின்று அங்ககப்பணிசெய்வர் விண்ணோர் *
நமர்களோ! சொல்லக்கேண்மின் நாமும்போய்நணுக வேண்டும் *
குமரனார்தாதைதுன்பம்துடைத்த கோவிந்தனாரே.
3799 அமரராய்த் திரிகின்றார்கட்கு * ஆதி சேர் அனந்தபுரத்து *
அமரர் கோன் அர்ச்சிக்கின்று * அங்கு அகப் பணி செய்வர் விண்ணோர் **
நமர்களோ சொல்லக் கேள்மின் * நாமும் போய் நணுகவேண்டும் *
குமரனார் தாதை * துன்பம் துடைத்த கோவிந்தனாரே (6)
3799
amararāyth thirikinRārgatku * āthichEr anandhapuraththu *
amarar_kOn archchikkinRu * angakappaNi seyvarviNNOr *
namargaLO! sollakkENmin * nāmumpOy naNukavEndum *
kumaranār thāthai * thunbam thudaiththa kOvindhanārE. 10.2.6

Ragam

கமாஸ்

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

Worship the Lord who relieved the distress of Kumaraṉ's father, the proud Chief of the Immortals, residing lovingly in holy Aṉantapuram. Sēṉāpathi Āḻvāṉ, leader of Nithyasuris, is supported by others from SriVaikuntam. Listen closely, my friends; we too shall join that sacred assembly and worship the Lord.

Explanatory Notes

(i) Holy Aṉantapuram is to be coveted even more than spiritual world, inasmuch as the former attracts even the exalted denizens of spiritual world who move down from those dizzy heights and serve the Lord enshrined here. Here then is a pilgrim centre, where parity is enjoyed by the ‘Nitya Sūrīs’ of spiritual world and the ‘Nitya Samsārīs’, down here. The Lord’s face, navel + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குமரனார் தாதை முருகனின் தந்தையான சிவபிரானின்; துன்பம் துடைத்த துயரைப் போக்கின; கோவிந்தனாரே பெருமானான கண்ணனாய்; அமரர் ஆய் அமரரென்று பெயர் பெற்று; திரிகின்றார்கட்கு திரிகின்றவர்களுக்கும்; ஆதி தலைவனாயிருக்கும் அவன்; சேர் அனந்தபுரத்து இருக்கும் திருவனந்தபுரத்தில்; அமரர் கோன் சேனை முதலியார்; அர்ச்சிக்கின்று ஆராதிக்க அதற்குப் பொருத்தமாக; அங்கு அகப்பணி அந்தரங்கமான பணிவிடைகளைச்; செய்வர் செய்யுமவர்கள்; விண்ணோர் நித்ய முக்தர்களாயிருப்பார்; நமர்களோ! நம்முடையவர்களே!; சொல்ல நாம் சொல்வதை; கேண்மின் கேளுங்கள்; நாமும் போய் நாமும் போய் அவர்களோடு; நணுக வேண்டும் கூடி கைங்கரியம் செய்ய வேண்டும்
gOvindhanAr as krishNa; amarar Ay as other dhEvathAs; thirginRArgatku those who roam around; Adhi being the creator; sEr mercifully resting; ananthapuraththu in thiruvananthapuram; amarar kOn sEnai mudhaliyAr (vishvaksEnar); archchikkinRu for the worship; angu arriving in that abode; agap paNi seyvar those who perform confidential services in assisting him in such worship; viNNOr are the residents of paramapadham;; namargaLO Oh our people!; sollak kENmin listen to what I say;; nAmum pOy let us also go (along with them); naNuga vENdum should reach.; ulagu worlds; uyir creatures (such as humans)

TVM 10.2.7

3800 துடைத்தகோவிந்தனாரே உலகுயிர்தேவும்மற்றும் *
படைத்தஎம்பரமமூர்த்தி பாம்பணைப்பள்ளிகொண்டான் *
மடைத்தலைவாளைபாயும் வயலணியனந்தபுரம் *
கடைத்தலைசீய்க்கப்பெற்றால் கடுவினைகளையலாமே.
3800 துடைத்த கோவிந்தனாரே * உலகு உயிர் தேவும் மற்றும் *
படைத்த எம் பரம மூர்த்தி * பாம்பு அணைப் பள்ளி கொண்டான் **
மடைத்தலை வாளை பாயும் * வயல் அணி அனந்தபுரம் *
கடைத்தலை சீய்க்கப்பெற்றால் * கடுவினை களையலாமே (7)
3800
thudaiththa kOvindhanārE * ulakuyir thEvummaRRum *
padaiththa emparamamoorththi * pāmpaNaip paLLikondān *
madaiththalai vāLaipāyum * vayalaNiyanandhapuram *
kadaiththalai seeykkappeRRāl * kaduvinai kaLaiyalāmE. 10.2.7

Ragam

கமாஸ்

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

Seek refuge in Aṉantapuram, adorned with fertile fields, and cleanse the temple doorstep where the Supreme Lord reclines on a serpent-bed. By doing so, your deadly sins will dissolve away. He dissolved the worlds and then restored them to their rightful places.

Explanatory Notes

(i) The Āzhvār affirms that those, who render service unto the Lord reclining at Tiru-Aṉantapuram, will get rid of their age-long sins, however deadly they might be. Of the several kinds of service, prominence is given to cleaning up the temple gates and keeping the temple front, bright and tidy.

(ii) The wiping off of the worlds, that is, the Lord’s act of dissolution + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகு உயிர் உலகிலுள்ள உயிரினங்களையும்; தேவும் தேவர்களையும்; மற்றும் மற்றுமுள்ள அனைத்துப் பொருள்களையும்; துடைத்த ஸம்ஹரித்த; படைத்த எம் பரமமூர்த்தி படைத்த எம் பரமமூர்த்தியே; கோவிந்தனாரே எம்பெருமானாவார்; மடைத்தலை நீர் நிலங்களிலே; வாளை பாயும் வாளை மீன்கள் பாயும்; வயல் அணி வயல்களை அலங்காரமாகவுடைய; அனந்தபுரம் திருவனந்தபுரத்திலே; பாம்பு அணை ஆதிசேஷன் மீது; பள்ளிகொண்டான் சயனித்திருக்கும் பெருமானின்; கடைத்தலை திருவனந்தபுரத்து வாசலைப் பெருக்கி; சீய்க்க மெழுகிக் கோலமிடுதல் போன்ற; பெற்றால் கைங்கர்யங்களைச்செய்தால்; கடுவினை நம் கொடிய வினைகள்; களையலாமே தொலையும்
dhEvum dhEvathAs (celestial beings); maRRum and other entities such as mahath (the great element) etc; thudaiththa one who created them all and annihilated them too; gOvindhanArE (as said in -thama: parEdhEva EkI bhavathi #, as he has a shining form in that stage) one who is known as gOvindha, himself; padaiththa one who created; em one who revealed this kAraNathvam (his being the cause); parama mUrththi lord who is greater than all; pAmbu aNai in the serpent mattress; paLLi koNdAn one who is mercifully resting, his; madaith thalai in the entrance of the canals; vALai pAyum the (schools of fish) jumping around joyfully; vayal aNi having the field as decoration; ananthapuram in thiruvananthapuram; kadaiththalai in the divine entrance; sIykkap peRRAl if we engage in sweeping the floor etc; kadu vinai great sorrow (of not attaining opportunity to do kainkaryam); kaLaiyalAm can be eliminated.; kadu vinai cruel sins (which are the reasons for delay in attaining the result); kaLaiyal Agum can be eliminated

TVM 10.2.8

3801 கடுவினைகளையலாகும் காமனைப்பயந்தகாளை *
இடவகைகொண்டதென்பர் எழிலணியனந்தபுரம் *
படமுடையரவில் பள்ளிபயின்றவன்பாதம்காண *
நடமினோநமர்களுள்ளீர்! நாமுமக்கறியச்சொன்னோம்.
3801 கடுவினை களையலாகும் * காமனைப் பயந்த காளை *
இடவகை கொண்டது என்பர் * எழில் அணி அனந்தபுரம் **
படம் உடை அரவில் பள்ளி * பயின்றவன் பாதம் காண *
நடமினோ நமர்கள் உள்ளீர்! * நாம் உமக்கு அறியச் சொன்னோம். (8)
3801
kaduvinai kaLaiyalākum * kāmanaip payandhakāLai *
idavakai kondathenbar * ezilaNiyanandhapuram *
padamudaiyaravil paLLi * payinRavan pāthamkāNa *
nadaminO namargaLuLLeer! * nām umakkaRiyach chonnOm. 10.2.8

Ragam

கமாஸ்

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

Go and behold, my friends! the beautiful feet of our Lord, the mighty Father of Kāma, who resides in the charming Ānantapuram, reclining on a serpent with many hoods. By doing so, you will be cleansed of your grave sins. This I proclaim to all of you.

Explanatory Notes

(i) Saint Nammāḻvār exhorts the pious Vaiṣṇavas around, to proceed to holy Aṉantapuram and behold the lovely feet of the Lord, reclining there on serpent-couch. The form, this exhortation assumes, is noteworthy; even as people are proceeding towards the holy centre, their deadly sins fall off, this is how the Āzhvār puts it.

(ii) Here is an interesting anecdote; Maṇakkāl + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடுவினை கொடிய பாவங்களை எல்லாம்; களையலாகும் போக்கலாம்; காமனை மன்மதனுக்கு; பயந்த உத்பாதகனான; காளை காளைப் பருவமுடைய கண்ணன்; இடவகை கொண்டது இடமாக கொண்டது; எழில் அணி அழகாய் அலங்காரமாய் இருக்கும்; அனந்தபுரம் என்பர் திருவனந்தபுரம் என்பர்; படம் உடை அரவில் படங்களை உடைய ஆதிசேஷன்; பள்ளி பயின்றவன் மீது துயில்பவனின்; பாதம் காண திருவடிகளைக் கண்டு அநுபவிக்க; நமர்கள் உள்ளீர்! நம்முடையவர்களே!; நடமினோ நடவுங்கள் என்று; நாம் உமக்கு நாம் உமக்கு; அறியச் சொன்னோம் தெரிவித்தோம்
kAmanai kAma (cupid, who is famous for his beauty); payandha one who created; kALai krishNa who did not lose his youth (even after that); ida vagai as his abode; koNdadhu had; ezhil beauty; aNi having; ananthapuram thiruvananthapuram; enbar is said;; padam udai having hoods (which are expanded due to being in contact with emperumAn); aravil in the divine serpent mattress; paLLi in mercifully resting; payinRavan of the one who is very involved; pAdham divine feet; kANa to see and enjoy; namargaL uLLIr oh our people; nadaminO start walking;; nAm we (who know the greatness of emperumAn); umakku for you; aRiya to know; sonnOm have told.; nAm us; umakku for you

TVM 10.2.9

3802 நாமுமக்கறியச்சொன்ன நாள்களும்நணியவான *
சேமம்நன்குடைத்துக்கண்டீர் செறிபொழிலனந்தபுரம் *
தூமநல்விரைமலர்கள் துவளறஆய்ந்துகொண்டு *
வாமனனடிக்கென்றேத்த மாய்ந்தறும்வினைகள்தாமே.
3802 நாம் உமக்கு அறியச் சொன்ன * நாள்களும் நணிய ஆன *
சேமம் நன்கு உடைத்துக் கண்டீர் * செறி பொழில் அனந்தபுரம் **
தூமம் நல் விரை மலர்கள் * துவள் அற ஆய்ந்துகொண்டு *
வாமனன் அடிக்கு என்று ஏத்த * மாய்ந்து அறும் வினைகள் தாமே. (9)
3802
nām umakku aRiyachchonna * nāLkaLum naNiyavāna *
chEmam naNnkudaiththukkandeer * seRipozilanandhapuram *
thooma_nal viraimalargaL * thuvaLaRa āyndhukondu *
vāmanan adikkenRu eththa * māyndhaRum vinaikaLthāmE. 10.2.9

Ragam

கமாஸ்

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

The days I mentioned to you are approaching. Here is Ānantapuram, our secure sanctuary with its beautiful orchards. Go there with fresh flowers and pure incense to worship Lord Vāmana, and meditate deeply. Your sins will surely dissipate on their own, I am certain of it.

Explanatory Notes

The Āzhvār has already stated, vide IX-10-5, that he will reach the spiritual world, the destined Land, at the end of the current span of life, as vouchsafed to him by the Lord at Tirukkaṇṇapuram. He now reverts to that and says that the crucial day of his departure from this world is drawing near and invites the worldlings to listen to his advice and prosper. Once he + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாம் உமக்கு நாம் உங்களுக்கு; அறியச் சொன்ன தெரிவித்த; நாள்களும் இறுதி காலமும்; நணிய ஆன சீக்கிரம் வரலாம்; செறி பொழில் செறிந்த பொழில்களையுடைய; அனந்தபுரம் திருவனந்தபுரமானது; சேமம் நன்கு நமக்கு நன்றாக நன்மை; உடைத்துக் கண்டீர் செய்ய வல்லது ஆகவே; தூமம் பூஜிக்கத் தகுந்த தூபம்; நல் விரை மலர்கள் நல்ல மணம் கமழும் மலர்கள்; துவள் அற குற்றம் இல்லாமல் நன்கு; ஆய்ந்துகொண்டு ஆராய்ந்து எடுத்துக் கொண்டு; வாமனன் வாமனனாக உடைய; அடிக்கு என்று திருவடிகளுக்கென்று ஸங்கல்பித்து; ஏத்த வாழ்த்தி வணங்க உங்கள்; வினைகள் தாமே வினைகள் அனைத்தும் தாமே; மாய்ந்து அறும் நசிந்து போகும்
aRiyach chonna nALgaLum the days of the end of the body, which were informed; naNiya Ana are coming close; seRi pozhil having dense garden; ananthapuram thiruvananthapuram; nangu good; sEmam protection; udaiththuk kaNdIr is having!; thUmam fragrant smoke, which is an aide in the worship; nal good; virai having fragrance; malargaL flowers; thuvaL aRa to be without defect; Ayndhu koNdu preparing; vAmanan adikku enRu vowing them to be for the divine feet of SrI vAmana who is naturally inclined towards union with his devotees; Eththa (for such acceptance) praising his qualities such as Seelam (simplicity) etc; vinaigaL karmas which are hurdles for kainkarayam; thAnE on their own; mAyndhu aRum will be destroyed.; mAdhavA! enna the moment that emperumAn is referred to as Sriya:pathi (husband of SrI mahAlakshmi); vinaigaL hurdles

TVM 10.2.10

3803 மாய்ந்தறும்வினைகள்தாமே மாதவா! என்ன * நாளும்
ஏய்ந்தபொன்மதிள் அனந்தபுரநகரெந்தைக்கென்று *
சாந்தொடுவிளக்கம்தூபம் தாமரைமலர்கள்நல்ல *
ஆய்ந்துகொண்டேத்தவல்லார் அந்தமில்புகழினாரே.
3803 மாய்ந்து அறும் வினைகள் தாமே * மாதவா என்ன * நாளும்
ஏய்ந்த பொன் மதிள் * அனந்தபுரநகர் எந்தைக்கு என்று **
சாந்தொடு விளக்கம் தூபம் * தாமரை மலர்கள் நல்ல *
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் * அந்தம் இல் புகழினாரே (10)
3803
māyndhaRum vinaikaLthāmE * māthavā enna * nāLum-
Eyndhapon mathiL * anandhapura nagarendhaikkenRu *
chāndhotu viLakkamthoopam * thāmarai malargaL_nalla *
āyndhukoNtu Eththavallār * andhamil pukazinārE. 10.2.10.

Ragam

கமாஸ்

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

When you utter the name "Mātavaṉ," all your sins will naturally dissipate. Those who fervently offer sandal paste, lamps, incense, and gather lovely lotus flowers for the daily worship of the Lord at sacred Aṉantapuram, enclosed by walls of solid gold, will attain undying fame.

Explanatory Notes

(i) The name, ‘Mātavaṉ’, (Mādhava) denotes the Lord, in conjunction with Mahālakṣmī, the Divine Mother and it is but natural that all our miseries die off, when we ejaculate the Lord’s name, betokening this highly benevolent combination of our eternal Father and Mother.

(ii) Serving the Lord with due ceremonies and worshipping Him uninterruptedly, free from distractions, + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாதவா! என்ன மாதவா! என்று சொன்ன அளவிலே; வினைகள் தாமே வினைகள் தாமே; மாய்ந்து அறும் அறுந்து போகும்; நாளும் நிரந்தரமாக; ஏய்ந்த பொன் செறிந்த பொன்மயமான; மதிள் மதிள்களை உடைய; அனந்தபுரநகர் திருவனந்தபுர நகரத்தில்; எந்தைக்கு என்று எம்பெருமானுக்கு என்று; சாந்தொடு சந்தனம்; விளக்கம் தூபம் தீபம் தூபம்; தாமரை மலர்கள் நல்ல நல்ல தாமரை மலர்கள்; ஆய்ந்து கொண்டு ஆகியவற்றைக் கொண்டு; ஏத்த வல்லார் தினமும் வழிபடுபவர்கள்; அந்தம் இல் அழிவில்லாத; புகழினாரே புகழை அடைவர்கள்
thAmE on their own; mAyndhu aRum will be eliminated;; nALum forever; Eyndha rich; pon madhiL having golden fort; ananthapura nagar in the city of thiruvananthapuram; endhaikku for the lord; enRu vowing in this manner; nalla good; sAndhodu with sandalwood paste; viLakkam lamp; dhUbam fragrant smoke; thAmarai malargaL lotus flowers; Ayndhu koNdu preparing (to not being touched by attachment towards result, doership and ownership which are like dry leaves, hair and worms); Eththa vallAr those who can praise emperumAn, fulfilled with the feeling of having been acknowledged by him; andham il endless; pugazhinAr will have greatness in servitude.; andham il pugazh being with endless qualities; ananthapura nagar residing in thiruvananthapuram

TVM 10.2.11

3804 அந்தமில்புகழ் அனந்தபுரநகராதிதன்னை *
கொந்தலர்பொழில் குருகூர்மாறன்சொல்லாயிரத்துள் *
ஐந்தினோடைந்தும்வல்லார் அணைவர்போயமருலகில் *
பைந்தொடிமடந்தையர்தம் வேய்மருதோளிணையே. (2)
3804 ## அந்தம் இல் புகழ் * அனந்தபுரநகர் ஆதி தன்னை *
கொந்து அலர் பொழில் * குருகூர் மாறன் சொல் ஆயிரத்துள் **
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் * அணைவர் போய் அமர் உலகில் *
பைந்தொடி மடந்தையர் தம் * வேய் மரு தோள் இணையே (11)
3804. ##
andhamil pukaz * anandhapura nagar āthithannai *
kondhalar pozil * kurukoor māRan chollāyiraththuL *
aindhinOtu aindhumvallār * aNaivar_pOy amarulakil *
paindhodi madandhaiyar_tham * vEymaru thOLiNaiyE. (2) 10.2.11

Ragam

கமாஸ்

Thalam

ஆதி

Bhavam

Self

Simple Translation

Those who can recite these ten songs, from the thousand composed by Caṭakōpaṉ of Kurukūr, adorned with fine orchids, praising the Lord of everlasting fame who resides in the beautiful Aṉantapuram, shall attain SriVaikuntam at the end of their current life. There, they will be entertained by damsels with bamboo-like arms, bedecked with lovely jewels.

Explanatory Notes

(i) In the preceding song, the Āzhvār extolled those who worship the Lord at Aṉantapuram, as men of undying fame; now, he is referring to the Lord as of undying fame. Ever as the pious men of this world have surpassed the fame of the denizens of spiritual world, the Lord, in His worshippable Form in this abode, excels His own transcendent glory in the High spiritual world. + Read more

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அந்தமில் புகழ் அழிவில்லாத புகழை உடைய; அனந்தபுரநகர் திருவனந்தபுர நகரத்தில் இருக்கும்; ஆதி தன்னை முழுமுதற்கடவுளைக் குறித்து; கொந்து அலர் பூங்கொத்துக்களாக மலரும்; பொழில் சோலைகளை உடைய; குருகூர் குருகூருக்குத் தலைவரான; மாறன் நம்மாழ்வார்; சொல் அருளிச்செய்த; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; ஐந்தினோடு ஐந்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; வல்லார் போய் ஓத வல்லார் போய்; அமர் உலகில் பரமபதத்திலே; பைந்தொடி அழகிய வளையல்கள் அணிந்த; மடந்தையர் தம் அப்ஸரஸ்ஸுக்களின்; வேய் மரு மூங்கில் போன்ற; தோள் இணையே தோள்களாலே செய்யப்படும்; அணைவர் அலங்காரங்களை அடையப் பெறுவர்
Adhi thannai the cause of all; kondhu flower bunches; alar blossoming; pozhil surrounded by garden; kurugUr controller of AzhwArthirunagari; mARan nammAzhwAr; sol mercifully spoke; AyiraththuL among the thousand pAsurams; aindhinOdu along with the five pAsurams (which are advice for others); aindhum the five pAsurams where he adviced others as well as self; vallAr those who can practice; pOy going (in archirAdhi mArgam (path leading to paramapadham)); amar ulagil in the abode of paramapadham, which is the dwelling place of -ayarvaRum amarargaL- (nithyasUris, mukthAthmAs); paindhodi being decorated with ornaments in their arms; madandhaiyar tham divine apsaras (celestial damsels), their; vEy maru distinguished like bamboo; thOLiNai the brahmAlankAram (ultimate decoration) which is done by their shoulders (hands); aNivar will get to accept.; vEy maru Like bamboo; thOL iNai pair of shoulders