76

Thiru Vattāru

திருவாட்டாறு

Thiru Vattāru

ஸ்ரீ மரகதவல்லீ ஸமேத ஸ்ரீ ஆதிகேசவாய நமஹ

To abandon ordinary life spent eating and sleeping with common people, sing many songs of the Lord and cut off worldly attachments, I will worship the divine feet of Nārāyaṇa, who resides here under the name Kēsava, and be freed from rebirth in this world, said Nammāzhvār, who offered auspicious praise for this sacred site. This location is not only

+ Read more
உண்பதும் உறங்குவதுமான சாதாரண வாழ்க்கை வாழும் நாட்டாரோடு இருப்பதை ஒழித்து எம்பெருமானின் கீதங்களை பலவாய்ப்பாடி பழவினைகளின் பற்றறுத்து, கேசவன் என்ற திருநாமத்தோடு எழுந்தருளியுள்ள நாராயணன் திருவடிகளை இவ்வாற்றாட்டில் வணங்கி இப்பூவுலகில் பிறக்கும் பிறப்பையறுப்பேன் என்று நம்மாழ்வாரால் மங்களாசாசனம் + Read more
Thayar: Sri Maragatha Valli Nāchiyār
Moolavar: Ādhi Kesava Perumāl
Utsavar: Aadhi Kesava Perumāl
Vimaanam: Ashtānga, Astākshara
Pushkarani: Kadalvāi Theertham, Vattāru, Rāma Theertham
Thirukolam: Sayana (Reclining)
Direction: West
Mandalam: Malai Nādu
Area: Kerala
State: TamilNadu
Sampradayam: Common
Timings: 4:00 a.m. to 10:00 a.m. 4:00 p.m. to 8:30 p.m.
Search Keyword: Thiruvattaru
Mangalāsāsanam: Namm Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 10.6.1

3838 அருள்பெறுவாரடியார்தம் அடியனேற்கு * ஆழியான்
அருள்தருவானமைகின்றான் அதுநமதுவிதிவகையே *
இருள்தருமாஞாலத்துள் இனிப்பிறவியான்வேண்டேன் *
மருளொழிநீமடநெஞ்சே! வாட்டாற்றானடிவணங்கே. (2)
3838 ## அருள்பெறுவார் அடியார் தம் * அடியனேற்கு * ஆழியான்
அருள்தருவான் அமைகின்றான் * அது நமது விதிவகையே **
இருள் தரு மா ஞாலத்துள் * இனிப் பிறவி யான் வேண்டேன் *
மருள் ஒழி நீ மட நெஞ்சே * வாட்டாற்றான் அடி வணங்கே (1)
3838 ## arul̤pĕṟuvār aṭiyār tam * aṭiyaṉeṟku * āzhiyāṉ
arul̤taruvāṉ amaikiṉṟāṉ * atu namatu vitivakaiye **
irul̤ taru mā ñālattul̤ * iṉip piṟavi yāṉ veṇṭeṉ *
marul̤ ŏzhi nī maṭa nĕñce * vāṭṭāṟṟāṉ aṭi vaṇaṅke (1)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The Lord, wielding the divine discus, kindly wishes to uplift me, a humble servant of His devotees who depend solely on His grace. He humbly allows me to command Him! I no longer wish for rebirth in this land of deep ignorance. Instead, I adore the feet of the Lord at Tiruvāṭṭāṟu and steadfastly resist the allure of enjoying the Supreme Lord from this mundane existence.

Explanatory Notes

(i) The Āzhvār cajoles his mind to revel, along with him, in the enjoyment of the Lord’s glorious trait of loving condescension, in the following terms:

“Don’t you see that the Lord is all agog to confer on me the supreme bliss, and that too, at my dictation? Oh, what a trait and how glorious! There is none over here with whom I can share my jubilation over this wonderful + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அருள் பெறுவார் எம்பெருமான் அருளைப் பெறும்; அடியார் தம் அடியார்களுக்கு; அடியனேற்கு அடிமைப் பட்டிருக்கும் எனக்கு; ஆழியான் சக்கரத்தைக் கையிலுடையவன்; அருள் தருவான் தானே அருள் தருபவனாக; அமைகின்றான் அமைகின்றான்; அது நமது அது நமது; விதிவகையே விதிவகையே; இருள் தரு அஜ்ஞானத்தைத் தரும்; மா ஞாலத்துள் இந்த உலகத்தில் அவன் அருள்; இனிப் பிறவி கிடைத்த பின் இனிப் பிறவி; யான் வேண்டேன் யான் வேண்டேன்; மடநெஞ்சே! மடநெஞ்சே!; மருள் இங்கிருந்து அநுபவிக்க வேண்டும்; ஒழி நீ என்கிற அறிவு கேட்டை நீ தவிர்ப்பாய்; வாட்டாற்றான் திருவாட்டாற்றிலே இருப்பவனின்; அடி வணங்கே திருவடிகளை வணங்குவாயாக
adiyār tham for those who have knowledge about ṣĕshathvam which is the cause for that; adiyanĕṛku for me who is distinguished servitor; āzhiyān just as he never abandons thiruvāzhi āzhwān (chakkaraththāzhvār); arul̤ the great favour of previous experience on his aspects; tharuvān one who bestows; amaiginṛān being prepared for;; adhu that (instead of doing as per his independent desire); namadhu vidhi vagaiyĕ (since it is purushārtham- goal desired by individual) is happening as per our command;; irul̤ tharu giving ignorance; vast; gyālaththul̤ in this world; ini after receiving (his acceptance); piṛavi taking birth (even if it is taken for the pleasure of bhagavān and bhāgavathas as said in thiruvāimozhi 8.10.5 -izhipattŏdum udalinil piṛandhu than sīr yān kaṝu-); yān vĕṇdĕn ī who know his thoughts, am not desiring;; madam having desire to not give up attachment; nenjĕ ŏh heart!; marul̤ bewilderment (of desiring independently to enjoy archāvathāram here which is contrary to his desire); nī ozhi try to avoid;; vāttāṝān one who is standing in thiruvāttāṛu to fulfil our desires; adi divine feet; vaṇangu worship him, agreeing with my desire.; mā gyālam in the vast world; piṛappu connection with birth

TVM 10.6.2

3839 வாட்டாற்றானடிவணங்கி மாஞாலப்பிறப்பறுப்பான் *
கேட்டாயேமடநெஞ்சே! கேசவனெம்பெருமானை *
பாட்டாயபலபாடிப் பழவினைகள்பற்றறுத்து *
நாட்டாரோடியல்வொழிந்து நாரணனைநண்ணினமே.
3839 வாட்டாற்றான் அடி வணங்கி * மா ஞாலப் பிறப்பு அறுப்பான் *
கேட்டாயே மட நெஞ்சே! * கேசவன் எம் பெருமானை **
பாட்டு ஆய பல பாடிப் * பழவினைகள் பற்று அறுத்து *
நாட்டாரோடு இயல்வு ஒழிந்து * நாரணனை நண்ணினமே (2)
3839 vāṭṭāṟṟāṉ aṭi vaṇaṅki * mā ñālap piṟappu aṟuppāṉ *
keṭṭāye maṭa nĕñce! * kecavaṉ ĕm pĕrumāṉai **
pāṭṭu āya pala pāṭip * pazhaviṉaikal̤ paṟṟu aṟuttu *
nāṭṭāroṭu iyalvu ŏzhintu * nāraṇaṉai naṇṇiṉame (2)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Many favors have been bestowed upon us. Note well, my obedient mind, our ties with the worldly realm have been severed, and our long-standing sins have been absolved. Through numerous songs, we have praised Kēcavaṉ, our Lord, and revered the divine feet of our Father in Tiruvāṭṭāṟu. We have attained Nāraṇaṉ, our Sovereign Lord.

Explanatory Notes

This song is but a continuation of the Āzhvār’s dialogue with his mind, Questioned by the mind as to why the Āzhvār gloated over the grace of the Lord, as if it was something extra-ordinary, instead of looking upon it merely as the Lord’s response, rather belated, to the request made by him, right from the opening song of his very first hymnal, namely, Tiruviruttam, the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாட்டாற்றான் திருவாட்டாற்றிலே இருப்பவனின்; அடி வணங்கி திருவடிகளை வணங்கி; நாட்டாரோடு உலகத்தவர்களோடு; இயல்வு ஒழிந்து ஸம்பந்தம் தவிர்த்தோம்; மட நெஞ்சே! மட நெஞ்சே!; கேட்டாயே அதன் பலனை நீ கேட்டாயோ!; மா ஞாலப் பிறப்பு உலகத்தில் பிறக்கும் பிறவியை; அறுப்பான் அறுப்பதற்காக; கேசவன் கேசி என்னும் அசுரனை அழித்த; எம் பெருமானை நம்முடைய விரோதியையும் போக்கி நம்மை அடிமை கொண்ட பெருமானை; பாட்டு ஆய பல பல படியாக; பாடி பாடி ஆடி கைங்கர்யம் பண்ணி; பழ அவித்யை அஜ்ஞானம் முதலான; வினைகள் பாபங்களின் தொல்லைகளின்; பற்று அறுத்து பற்று அறுத்து; நாரணனை நாராயணனை; நண்ணினமே அடையப் பெற்றோம்
aṛuppān to eliminate; vāttāṝān being āṣritha sulabha (easily approachable for devotees) in thiruvāttāṛu; adi vaṇangi surrendering unto the divine feet; kĕsavan being the one who eliminated kĕṣi who was a hurdle for enjoyment; emperumānai similarly, one who eliminated our hurdles and engaged us in service; pala pāttu āya many different types of songs; pādi performing the kainkaryam (service) of singing; pazha vinaigal̤ avidhyā (ignorance), karma (virtues/vices) etc which are present since time immemorial; paṝu aṛuththu eliminating them with the impressions; nāttārŏdu with the worldly people who are filled with ahankāram (considering self to be body) etc; iyalvu co-existence; ozhindhu eliminating; nāraṇanai nārāyaṇa (who is unconditional relative and is ready to give us the result now); naṇṇinam we approached;; madam being obedient and agreeing with me; nenjĕ ŏh heart!; kĕttāyĕ ẏou have asked (about these chain of favours done by emperumān)!; en nenjĕ ŏh heart which is a tool for my enjoyment!; pala nāmangal̤ many divine names

TVM 10.6.3

3840 நண்ணினம்நாராயணனை நாமங்கள்பலசொல்லி *
மண்ணுலகில்வளம்மிக்க வாட்டாற்றான்வந்துஇன்று *
விண்ணுலகம்தருவானாய் விரைகின்றான்விதிவகையே *
எண்ணினவாறாகா இக்கருமங்கள்என்னெஞ்சே!
3840 நண்ணினம் நாராயணனை * நாமங்கள் பல சொல்லி *
மண் உலகில் வளம் மிக்க * வாட்டாற்றான் வந்து இன்று **
விண் உலகம் தருவானாய் * விரைகின்றான் விதிவகையே *
எண்ணினவாறு ஆகா * இக் கருமங்கள் என் நெஞ்சே (3)
3840 naṇṇiṉam nārāyaṇaṉai * nāmaṅkal̤ pala cŏlli *
maṇ ulakil val̤am mikka * vāṭṭāṟṟāṉ vantu iṉṟu **
viṇ ulakam taruvāṉāy * viraikiṉṟāṉ vitivakaiye *
ĕṇṇiṉavāṟu ākā * ik karumaṅkal̤ ĕṉ nĕñce (3)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

We have attained Nārāyaṇa, our great Benefactor, chanting His many holy names, my friendly mind. The benevolent qualities of my Lord shine forth in this land, and stationed in Tiruvāṭṭāṟu, He awaits my command to grant me SriVaikuntam, swiftly fulfilling my expectations beyond measure!

Explanatory Notes

(i) The Āzhvār’s joyous rapport with his mind continues. He is amazed at the Lord’s overwhelming grace, far exceeding all his earlier expectations.

(ii) As the Āzhvār contemplated on the manifestations of the Lord, in His worshippable Form at the various pilgrim centres, he was particularly impressed by a special auspicious attribute, graciously displayed by the Lord + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் நெஞ்சே! என் நெஞ்சே!; பல நாமங்கள் பல நாமங்களை; சொல்லி சொல்லி; நாராயணனை நாராயணனை; நண்ணினம் அடைந்தோம்; மண் உலகில் பூலோகத்தில்; வளம் மிக்க வளம் மிக்க குணங்களை உடைய; வாட்டாற்றான் திருவாட்டாற்றாறிலே நின்றவன்; வந்து இன்று வந்து இன்று; விண் உலகம் பரமபதத்தை; விதிவகையே நம் அனுமதி கொண்டு; தருவானாய் தருவதாக; விரைகின்றான் விரைகின்றான்; ஆகா இக் கருமங்கள் ஆகா இந்த செயல்கள் அவன்; எண்ணினவாறு அருளால் நாம் எண்ணாமலே வாய்த்ததே!
solli reciting; nārāyaṇanai the unconditional relative who has the divine name nārāyaṇa (which is the root of all his divine names); naṇṇinam got to surrender unto him;; maṇ ulagail on this earth; val̤am having the wealth of qualities such as ṣeelam (simplicity), saulabhyam (easy approachability) etc; mikka having abundance; vāttāṝān one who is standing in thiruvāttāṛu; vandhu arrived (without my prayer, on his own desire); inṛu today (without any reason on my side); viṇ ulagam paramapadham; vidhi vagaiyĕ with our permission; tharuvān āy to bestow; viraiginṛān he is rushing;; ikkarumangal̤ these activities; eṇṇina āṛu āgā instead of the ways we thought (our going towards him, our praying to him, our craving for it and our looking at his thoughts), it is happening in the way of his coming towards us, his desiring us, his craving for us and his looking at our thoughts.; nal nenjĕ ŏh heart which has attachment for bhagavath vishayam!; vannenjaththu hard-hearted (which not only lacks attachment, but also is filled with hatred)

TVM 10.6.4

3841 என்னெஞ்சத்துள்ளிருந்து இங்கிருந்தமிழ்நூலிவை மொழிந்து *
வன்னெஞ்சத்திரணியனை மார்விடந்தவாட்டாற்றான் *
மன்னஞ்சப்பாரதத்துப் பாண்டவர்க்காப்படை தொட்டான் *
நன்னெஞ்சே! நம்பெருமான் நமக்கருள்தான்செய்வானே.
3841 என் நெஞ்சத்து உள் இருந்து * இங்கு இரும் தமிழ் நூல் இவை மொழிந்து *
வல் நெஞ்சத்து இரணியனை * மார்வு இடந்த வாட்டாற்றான் **
மன் அஞ்ச பாரதத்துப் * பாண்டவர்க்காப் படைதொட்டான் *
நல் நெஞ்சே நம் பெருமான் * நமக்கு அருள் தான் செய்வானே (4)
3841 ĕṉ nĕñcattu ul̤ iruntu * iṅku irum tamizh nūl ivai mŏzhintu *
val nĕñcattu iraṇiyaṉai * mārvu iṭanta vāṭṭāṟṟāṉ **
maṉ añca pāratattup * pāṇṭavarkkāp paṭaitŏṭṭāṉ *
nal nĕñce nam pĕrumāṉ * namakku arul̤ tāṉ cĕyvāṉe (4)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Note, my dear mind, that the Lord enshrined in Tiruvāṭṭāṟu shattered the heart of Iraṇyaṉ, who was as hard as steel. In the great war of Mahābhārata, He wielded weapons to protect the Pāṇṭavas, striking fear into the hearts of opposing kings. These songs, sung by Him, are firmly imprinted in my mind, and He continues to shower me with abundant blessings, a true act of boundless grace!

Explanatory Notes

(i) The great Ordainer that the Supreme Lord is, He has been depicted in songs one and three of this decad, as the ordained, carrying out the dictates of the Āzhvār or at least wanting to do so. The present song dispels the doubt, possibly entertained by some persons as to whether the Sovereign Lord would ever descend to such depths and play a subservient role. Did not + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நல் நெஞ்சே! நல்ல நெஞ்சே!; வன் நெஞ்சத்து வலிய நெஞ்சத்தை உடைய; இரணியனை மார்வு இரணியனின் மார்பை; இடந்த பிளந்த; வாட்டாற்றான் திருவாட்டாற்றான்; மன் அஞ்ச அரசர்கள் எல்லோரும் அஞ்சும்படி; பாரதத்து பாரதப் போரில்; பாண்டவர்க்கா பண்டவர்களுக்காக; படை ஆயுதம் எடுக்கமாட்டேன் என்று கூறி; தொட்டான் ஆயுதம் எடுத்தவன்; என் நெஞ்சத்து என் நெஞ்சத்தை வசீகரித்து; உள் இருந்து உள்ளே இருந்து; இங்கு இரும் இவ்விருப்பிலே பெரிய; தமிழ்நூல் சாஸ்த்திர ரூபமான தமிழில்; இவை திருவாய்மொழியை; மொழிந்து அருளிச் செய்து; நம் பெருமான் நம் பெருமான்; நமக்கு அருள் நமக்கு அருள்; தான் செய்வானே தானே செய்தான்
iraṇiyanai hiraṇya; mārvu idandha plucked the heart where his mind is present; vāttāṝān being present in thiruvāttāṛu; man all the kings; anja to fear; bāradhaththu in mahābhāratha battle; pāṇdavarkku ā for pāṇdavas; padai thottān having the partiality to take up arms (after vowing not to do so); namperumān being our lord (by these acts); en nenjaththu attracting my heart (which was focussed elsewhere); ul̤ irundhu remaining fixed inside; ingu in this stay; irum huge (to be greatly distinguished); thamizh in dhrāvida (thamizh) language; nūl in the form of ṣāsthram; ivai this thiruvāimozhi which is having imperceivable enjoyability; mozhindhu mercifully speaking, as the propagator; namakku for us; arul̤ great favours; thān seyvānĕ was eager to do.; vān ĕṛa to go to paramapadham; vazhi thandha created the archirādhi mārgam [path] and presented it (as said in thiruvāimozhi 3.9.3 -pŏm vazhiyaith tharum-)

TVM 10.6.5

3842 வானேறவழிதந்த வாட்டாற்றான்பணிவகையே *
நானேறப்பெறுகின்றேன் நரகத்தைநகுநெஞ்சே! *
தேனேறுமலர்த்துளவம் திகழ்பாதன் * செழும்பறவை
தானேறித்திரிவானதாளிணை என்தலைமேலே.
3842 வான் ஏற வழி தந்த * வாட்டாற்றான் பணிவகையே *
நான் ஏறப் பெறுகின்றேன் * நரகத்தை நகு நெஞ்சே! **
தேன் ஏறு மலர்த் துளவம் * திகழ் பாதன் * செழும் பறவை
தான் ஏறித் திரிவான தாள் * இணை என் தலைமேலே (5)
3842 vāṉ eṟa vazhi tanta * vāṭṭāṟṟāṉ paṇivakaiye *
nāṉ eṟap pĕṟukiṉṟeṉ * narakattai naku nĕñce! **
teṉ eṟu malart tul̤avam * tikazh pātaṉ * cĕzhum paṟavai
tāṉ eṟit tirivāṉa tāl̤ * iṇai ĕṉ talaimele (5)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

I'm on my spiritual ascent, guided by the Lord enshrined in Tiruvāṭṭaṟu. Laugh at the world that once bound your mind; now, the feet of the Lord, adorned with honey-studded tuḻaci flowers, rest upon your head as He gracefully travels on His mount, Garuḍa.

Explanatory Notes

(i) The Āzhvār is indeed very jubilant over the immediate prospect of his ascent to spiritual world through that exalted and exhilarating route, known as ‘Arcirādi mārga He sees in the Lord at Tiruvāṭṭāṟu, his keen escort, on his spiritual world-bound journey. As a matter of fact, the Āzhvār has still not got off the ground and yet, so sanguine is he of his ascent to spiritual + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வான் ஏற நான் பரமபதம் போக; வழி தந்த அர்ச்சிராதி மார்க்க வழியைக் காட்டி; வாட்டாற்றான் திருவாட்டாற்றாறிலே; பணிவகையே அவன் விருப்பபடியே; நான் ஏற நான் மேலே செல்ல; பெறுகின்றேன் பெறுகின்றேன்; தேன் ஏறு தேன் மிகுந்த; மலர்த் துளவம் துளசி மலர் விளங்கும்; திகழ் பாதன் திருவடிகளை உடையவன்; செழும் பறவை அழகிய கருடன்; தான் ஏறி மீது தான் ஏறி; திரிவான திரிபவனான எம்பெருமானின்; தாள் இணை திருவடிகளை; என் தலைமேலே என் தலைமேலே பெற்றேன்; நெஞ்சே! நெஞ்சே!; நரகத்தை நீ நரகத்தைப் பார்த்து; நகு சிரிப்பாய்
vāttāṝān one who is residing in thiruvāttāṛu; paṇi vagaiyĕ as said in thiruvāimozhi 10.4.9 -paṇdĕ paraman paṇiththa paṇi vagaiyĕ-; nān ī (who follow his thought fully); ĕṛa to climb up; peṛuginṛĕn getting it;; thĕn honey; ĕṛu being in abundance; malarth thul̤avam thiruththuzhāy (thul̤asi) having flower; thigazh pādhan one with divine feet where such thul̤asi shines freshly; sezhum paṛavai periya thiruvadi (garudāzhvār) who has an attractive form; thān ĕṛith thirivān one who climbs and rides for the sake of his devotees, his; aththāl̤ iṇai both of those enjoyable divine feet; en thalai mĕlĕ have decorated my head;; nenjĕ ŏh heart!; naragaththai this samsāra; nagu see that you (disdainfully) laugh at.; thāl̤ iṇaigal̤ his divine feet; thalai mĕla are on my head;

TVM 10.6.6

3843 தலைமேலதாளிணைகள் தாமரைக்கணென்னம்மான் *
நிலைபேரான்என்னெஞ்சத்துஎப்பொழுதும்எம்பெருமான் *
மலைமாடத்தரவணைமேல் வாட்டாற்றான் * மதம்மிக்க
கொலையானைமருப்பொசித்தான் குரைகழல்கள் குறுகினமே.
3843 தலைமேல தாள் இணைகள் * தாமரைக்கண் என் அம்மான் *
நிலைபேரான் என் நெஞ்சத்து * எப்பொழுதும் எம் பெருமான் **
மலை மாடத்து அரவு அணைமேல் * வாட்டாற்றான் மதம் மிக்க *
கொலை யானை மருப்பு ஒசித்தான் * குரை கழல்கள் குறுகினமே (6)
3843 talaimela tāl̤ iṇaikal̤ * tāmaraikkaṇ ĕṉ ammāṉ *
nilaiperāṉ ĕṉ nĕñcattu * ĕppŏzhutum ĕm pĕrumāṉ **
malai māṭattu aravu aṇaimel * vāṭṭāṟṟāṉ matam mikka *
kŏlai yāṉai maruppu ŏcittāṉ * kurai kazhalkal̤ kuṟukiṉame (6)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

I wear the lovely pair of feet of my lotus-eyed Lord on my head, and He resides forever in my heart. My Lord, who revealed His glory to me, reclines on a serpent-couch amid lofty castles in Tiruvāṭṭāṟu. We attained the valorous feet of the Lord who slew the monstrous elephant.

Explanatory Notes

(i) Once again, the Āzhvār enumerates the favours heaped on him by the benign Lord. Having set His lovely pair of feet on the Āzhvār’s head, the Lord casts on him glances, cool and sweet, from His lotus eyes. And then, He stands firmly in the Āzhvār’s heart, rivetted, as it were. Questioned by his disciples, as to how the Lord could simultaneously stand on the Āzhvār’s + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தாள் இணைகள் திருவடிகள் இரண்டையும்; தலை மேல என் தலைமேலே பெற்றேன்; தாமரை தாமரை போன்ற; கண் கண்களை உடைய; என் அம்மான் எம்பெருமான்; என் நெஞ்சத்து என் நெஞ்சத்தில்; எப்பொழுதும் எப்பொழுதும்; நிலைபேரான் நிலைபெற்று நின்றான்; மலை மலை போன்ற; மாடத்து மாடங்களை உடைய; வாட்டாற்றான் திருவாட்டாற்றிலே; அரவு அணைமேல் ஆதிசேஷன் மீது; மதமிக்க மத மிகுதியினால்; கொலை கொலையிலே முயன்ற; யானை குவலயாபீட யானையின்; மருப்பு ஒசித்தான் கொம்பை முறித்த; எம் பெருமான் எம் பெருமானுடைய; குரை வீரக் கழலின் ஓசையுள்ள; கழல்கள் திருவடிகளை; குறுகினமே பெற்றோம்
thāmaraik kaṇ having lotus like reddish divine eyes; en ammān my swāmy (lord) who considers acquiring me as his great benefit; en nenjaththu in my heart; eppozhudhum always; nilai pĕṛān not moving from his position; emperumān being the greatest of all, due to remaining firm in me; malai like a mountain; mādam having mansions; vāttāṛu in thiruvāttāṛu; aravaṇai mĕlān mercifully resting on the divine serpent mattress; madham mikka heavily intoxicated; kolai intent of killing; yānai kuvalyāpīdam; maruppu osiththān just as he broke the tusks, he eliminated my hurdles too, his; kurai the sound (of his valorous anklet); kazhalgal̤ divine feet; kuṛuginam got to reach.; kurai distinguished; kazhalgal̤ divine feet

TVM 10.6.7

3844 குரைகழல்கள்குறுகினம் நம்கோவிந்தன் குடிகொண்டான் *
திரைகுழுவுகடல்புடைசூழ் தென்னாட்டுத்திலதமன்ன *
வரைகுழுவும்மணிமாட வாட்டாற்றான்மலரடிமேல் *
விரைகுழுவும்நறுந்துளவம் மெய்ந்நின்றுகமழுமே.
3844 குரை கழல்கள் குறுகினம் * நம் கோவிந்தன் குடிகொண்டான் *
திரை குழுவு கடல் புடை சூழ் * தென் நாட்டுத் திலதம் அன்ன **
வரை குழுவு மணி மாட * வாட்டாற்றான் மலர் அடிமேல் *
விரை குழுவு நறும் துளவம் * மெய்ந்நின்று கமழுமே (7)
3844 kurai kazhalkal̤ kuṟukiṉam * nam kovintaṉ kuṭikŏṇṭāṉ *
tirai kuzhuvu kaṭal puṭai cūzh * tĕṉ nāṭṭut tilatam aṉṉa **
varai kuzhuvu maṇi māṭa * vāṭṭāṟṟāṉ malar aṭimel *
virai kuzhuvu naṟum tul̤avam * mĕynniṉṟu kamazhume (7)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

I have attained the valorous feet of Kovintaṉ, Who resides within me. My body exudes the sweet aroma of the tuḷaci with its intense fragrance from the lotus feet of the Lord in Tiruvāṭṭāṟu, the crest jewel of the South, surrounded by the sea with its countless swelling waves and tall castles.

Explanatory Notes

In the preceding song, the Āzhvār said that he had attained the Lord’s valorous feet and now he repeats it authoritatively, adducing the evidence to prove his statement. The Āzhvār’s body smells sweet, exuding the fragrance of tuḻaci and this would be possible only if he came in close contact with the Lord at whose lotus feet there is the tuḻaci, with its profusion of + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
குரை கழல்கள் வீரக் கழல்களை; குறுகினம் நாம் அடையப் பெற்றோம்; கோவிந்தன் கோவிந்தன்; நம் குடி நம்மையே தனக்கு குடியிருப்பாக; கொண்டான் கொண்டான்; திரை குழுவு அலைகள் திரளத் திரண்ட; கடல் கடலாலே; புடை சூழ் புடை சூழந்த; தென் நாட்டு தென் நாட்டுக்கு; திலதம் அன்ன திலகம் போன்ற; வரை குழுவு மலைகள் திரளாக இருந்தது போன்ற; மணி மாட மணி மாடங்களை உடைய; வாட்டாற்றான் திருவாட்டாற்றிலே இருப்பவனின்; மலர் அடி மேல் திருவடிகள் மேல்; விரை குழுவு பரிமளம் திரண்டு; நறும் துளவம் கமழ்கிற துளசியை; மெய்ந்நின்று என் சரீரத்திலே அணியும்; கமழுமே பேற்றை நான் பெற்றேன்
kuṛuginam we got to reach;; nam obedient towards us; gŏvindhan krishṇa; kudi as his residence; koṇdān accepted;; thirai waves; kuzhuvu well gathered; kadal by ocean; pudai in close proximity; sūzh surrounded; thennādu for southern region; thiladham anna like thilakam (decoration on forehead); varai kuzhuvu resembling plenty of mountains; maṇi mādam having gem-studded mansions; vāttāṝān one who is mercifully residing in thiruvāttāṛu, his; malar adi mĕl on the divine feet which are ultimately enjoyable like blossomed lotus; virai flower buds; kuzhuvu well gathered; naṛum thul̤abam nicely smelling thiruththuzhāy (thul̤asi); mey ninṛu remaining firmly on my body; kamazhum fragrance is emanating.; mey ninṛu remaining fully on the divine form; kamazh thul̤avam thiruththuzhāy which is spreading the fragrance, its

TVM 10.6.8

3845 மெய்ந்நின்றுகமழ்துளவ விரையேறுதிருமுடியன் *
கைந்நின்றசக்கரத்தன் கருதுமிடம்பொருது * புனல்
மைந்நின்றவரைபோலும் திருவுருவவாட்டாற்றாற்கு *
எந்நன்றிசெய்தேனா என்னெஞ்சில்திகழவதுவே?
3845 மெய்ந்நின்று கமழ் துளவ * விரை ஏறு திருமுடியன் *
கைந்நின்ற சக்கரத்தன் * கருதும் இடம் பொருது புனல் **
மைந்நின்ற வரை போலும் * திரு உருவ வாட்டாற்றாற்கு *
எந் நன்றி செய்தேனா * என் நெஞ்சில் திகழ்வதுவே? (8)
3845 mĕynniṉṟu kamazh tul̤ava * virai eṟu tirumuṭiyaṉ *
kainniṉṟa cakkarattaṉ * karutum iṭam pŏrutu puṉal **
mainniṉṟa varai polum * tiru uruva vāṭṭāṟṟāṟku *
ĕn naṉṟi cĕyteṉā * ĕṉ nĕñcil tikazhvatuve? (8)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Oh, what merit do I possess that the Lord, who resides in Tiruvāṭṭāṟu like an emerald mountain, graces my heart? He adorns His crown with the fragrant tuḷaci flower, whose aroma lingers eternally. He wields the discus of war, striking precisely at His targets and returning victorious. His presence fills me with boundless joy and gratitude.

Explanatory Notes

(i) There was hardly any merit in him as far as the Āzhvār could scan and yet the Lord has chosen to shower on him a plethora of benefits. No wonder then, the Āzhvār is amazed at the overwhelming grace of the Lord, bestowed on him with sweet spontaniety.

(ii) The text, in this song, describing the pervasive fragrance of the tuḻaci garland worn by the Lord, lends itself + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மெய்ந்நின்று சரீரம் முழுதும் நிலை நின்று; கமழ் துளவ கமழும் துளசியின்; விரை ஏறு மணம் அதிகரித்து வரும்; திருமுடியன் திருமுடி உடையவன்; கருதும் இடம் நினைத்த இடத்திலே போய்; பொருது போர் செய்து உடனே; கைந்நின்ற கையிலே வந்து நின்ற; சக்கரத்தன் சக்கரத்தைக் கையிலுடையவன்; புனல் கடல் நீரைப் போல்; மைந்நின்ற ஸ்திரமான நிறமுடைய; வரை போலும் மலை போன்ற; திரு உருவ உருவமுடைய; வாட்டாற்றாற்கு திருவாட்டாற்றிலே இருப்பவருக்கு; எந் நன்றி நான் என்ன நன்மை; செய்தேனா செய்தேனா; என் நெஞ்சில் அவன் எனது நெஞ்சில் வந்து; திகழ்வதுவே இப்படி அருள் புரிவதற்கு
virai pleasing smell; ĕṛu rising; thirumudiyan having crown; karudhum idam going where his divine heart desires; porudhu attack; kai ninṛa (returning as said in -rāma pārṣvam jagāma-) and staying on the divine hand; chakkaraththan being the one with the divine chakra; punal like ocean water; ninṛa firm; mai having blackish complexion; varai pŏlum like mountain; thiru uruva being with beautiful divine form; vāttāṝāṛku one who is easily approachable in thiruvāttāṛu; en nanṛi what virtuous deed; seydhĕnŏ as ī did to him; en nenjil thigazhvadhu entering in my heart and shining there?; thigazhginṛa thirumārbil in the naturally shining divine chest; thirumangai thannŏdum with lakshmi who is naturally young forever

TVM 10.6.9

3846 திகழ்கின்றதிருமார்பில் திருமங்கைதன்னோடும் *
திகழ்கின்றதிருமாலார் சேர்விடம்தண்வாட்டாறு *
புகழ்கின்றபுள்ளூர்தி போரரக்கர்குலம்கெடுத்தான் *
இகழ்வின்றிஎன்னெஞ்சத்து எப்பொழுதும்பிரியானே.
3846 திகழ்கின்ற திருமார்பில் * திருமங்கை தன்னோடும் *
திகழ்கின்ற திருமாலார் * சேர்விடம் தண் வாட்டாறு **
புகழ்நின்ற புள் ஊர்தி * போர் அரக்கர் குலம் கெடுத்தான் *
இகழ்வு இன்றி என் நெஞ்சத்து * எப்பொழுதும் பிரியானே (9)
3846 tikazhkiṉṟa tirumārpil * tirumaṅkai taṉṉoṭum *
tikazhkiṉṟa tirumālār * cerviṭam taṇ vāṭṭāṟu **
pukazhniṉṟa pul̤ ūrti * por arakkar kulam kĕṭuttāṉ *
ikazhvu iṉṟi ĕṉ nĕñcattu * ĕppŏzhutum piriyāṉe (9)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Tirumāl, adorned by Tirumaṅkai on His resplendent chest, resides in serene Tiruvāṭṭāṟu, where He rides the illustrious Garuḍa, who stands as His vehicle. Despite His feats in vanquishing militant Asuras, He graciously dwells forever in my humble heart, without any disdain.

Explanatory Notes

(i) Surely, it is the farthest limit up to which the Lord’s love for His devotees could go; the Lord has chosen to stay firmly and, for ever, in the Āzhvār’s despicable heart, without the slightest disgust or uneasiness.

(ii) The Lord, Who has got lodged on His winsome chest Lakṣmī, the Goddess of affluence, stays in cool Tiru-vāṭṭāṟu, with Garuḍa, famed as the very + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திகழ்கின்ற இயற்கையாகத் திகழும்; திருமார்பில் திருமார்பில்; திருமங்கை தன்னோடும் திருமகளுடன் கூட; திகழ்கின்ற திகழ்கின்ற; திருமாலார் எம்பெருமான்; சேர்விடம் இருக்குமிடம்; தண் வாட்டாறு குளிர்ந்த திருவாட்டாறு; புகழ்கின்ற நிலைத்த புகழுடைய; புள் ஊர்தி கருடனை வாகனமாக உடையவன்; போர் போர் புரிய முயன்ற; அரக்கர் குலம் அரக்கர்கள் குலத்தை; கெடுத்தான் அழித்தான்; என் நெஞ்சத்து என் நெஞ்சத்திலே; இகழ்வு இன்றி வெறுப்பின்றியே; எப்பொழுதும் ஒரு போதும்; பிரியானே பிரியாமல் இருக்கிறான்
thigazhginṛa thirumālār ṣriya:pathi who is shining; sĕrvidam the eternal abode (of his); thaṇ rejuvenating; vāttāṛu thiruvāttāṛu;; pugazh ninṛa one who is the abode for the fame of servitude; pul̤ periya thiruvadi (garudāzhvār); ūrdhi one who rides; pŏr strong in warfare; arakkar rākshasas- (demons-); kulam group; keduththān one who destroyed; en nenjaththu in my lowly heart; igazhvinṛi without any detachment; eppozhudhum always; piriyān never separates.; piriyādhu without separating forever; ātchey perform kainkaryam

TVM 10.6.10

3847 பிரியாதாட்செய்யென்று பிறப்பறுத்தாளறக் கொண்டான் *
அரியாகிஇரணியனை ஆகங்கீண்டானன்று *
பெரியார்க்காட்பட்டக்கால் பெறாதபயன்பெறுமாறு *
வரிவாள்வாயரவணைமேல் வாட்டாற்றான் காட்டினனே.
3847 பிரியாது ஆட்செய் என்று * பிறப்பு அறுத்து ஆள் அறக்கொண்டான் *
அரி ஆகி இரணியனை * ஆகம் கீண்டான் அன்று **
பெரியார்க்கு ஆட்பட்டக்கால் * பெறாத பயன் பெறுமாறு *
வரி வாள் வாய் அரவு அணைமேல்! * வாட்டாற்றான் காட்டினனே (10)
3847 piriyātu āṭcĕy ĕṉṟu * piṟappu aṟuttu āl̤ aṟakkŏṇṭāṉ *
ari āki iraṇiyaṉai * ākam kīṇṭāṉ aṉṟu **
pĕriyārkku āṭpaṭṭakkāl * pĕṟāta payaṉ pĕṟumāṟu *
vari vāl̤ vāy aravu aṇaimel! * vāṭṭāṟṟāṉ kāṭṭiṉaṉe (10)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

I am blessed with ceaseless service to the Lord, freed from worldly bondage. My Father, who in ancient times tore apart Iraṇiyaṉ's body, now rests on a serpent-bed in Tiruvāṭṭāṟu. He has shown that through His sweet grace, unimaginable blessings accrue to those who remain as servants of the divine.

Explanatory Notes

(i) The Āzhvār’s great gains, far exceeding even the dreamiest of his expectations are: The Lord’s own utterance from His coral lips, inviting the Āzhvār to render unto Him unremitting service in close proximity and actually taking service from him; He has also halted the dreadful cycle of birth and death. Gains of this magnitude cannot be secured by one’s own efforts, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிரியாது ஒரு கணமும் பிரியாதே; ஆட் செய் என்று அடிமை செய் என்று; பிறப்பு அறுத்து பிறவி ஸம்பந்தத்தை அறுத்து; அற மிகவும் விரும்பி; ஆள் கொண்டான் அடிமை கொண்டான்; அன்று அரி ஆகி அன்று நரஸிம்மனாக அவதரித்து; இரணியனை ஆகம் இரணியனின் மார்பை; கீண்டான் பிளந்தான்; வரிவாள் வாய் வரிகளையும் ஒளியையும் உடைய; அரவு அணைமேல் ஆதிசேஷன் மீது கண்வளரும்; வாட்டாற்றான் திருவாட்டாற்றான்; பெரியார்க்கு பெரியவர்களுக்கு; ஆட்பட்டக்கால் அடிமைப்பட்டால்; பெறாத பயன் பெறுவதற்கு அரிய பயன்; பெறுமாறு பெறலாகும் என்பதை; காட்டினனே காட்டி விட்டான்
enṛu saying; piṛappu connection with birth, which is a hurdle for that (such kainkaryam); aṛuththu eliminate; aṛa fully; ātkoṇdān accepting my kainkaryam; anṛu long ago (when prahlādha was tormented by his own father); ariyāgi incarnated as narasimha; iraṇiyanai hiraṇya-s; āgam body; kīṇdān one who tore; vari stripes; vāl̤ having radiance; vāy having many faces; aravu aṇai mĕl on the divine serpent mattress; vāttāṝān one who mercifully rests in thiruvāttāṛu; periyārkku for great personalities; ātpattakkāl when became servant; peṛādha difficult to attain; payan results; peṛum āṛu the means to get; kāttinān showed.; than kanaikazhalgal̤ his divine feet (which are perfectly enjoyable due to having resounding anklets which reveal his valour); kātti showing

TVM 10.6.11

3848 காட்டித்தன்கனைகழல்கள் கடுநரகம்புகலொழித்த *
வாட்டாற்றெம்பெருமானை வளங்குருகூர்ச்சடகோபன் *
பாட்டாயதமிழ்மாலை ஆயிரத்துள்இப்பத்தும்
கேட்டு * ஆரார்வானவர்கள் செவிக்கினியசெஞ்சொல்லே. (2)
3848 ## காட்டித் தன் கனை கழல்கள் * கடு நரகம் புகல் ஒழித்த *
வாட்டாற்று எம் பெருமானை * வளங் குருகூர்ச் சடகோபன் **
பாட்டாய தமிழ் மாலை * ஆயிரத்துள் இப் பத்தும்
கேட்டு * ஆரார் வானவர்கள் * செவிக்கு இனிய செஞ்சொல்லே (11)
3848 ## kāṭṭit taṉ kaṉai kazhalkal̤ * kaṭu narakam pukal ŏzhitta *
vāṭṭāṟṟu ĕm pĕrumāṉai * val̤aṅ kurukūrc caṭakopaṉ **
pāṭṭāya tamizh mālai * āyirattul̤ ip pattum
keṭṭu * ārār vāṉavarkal̤ * cĕvikku iṉiya cĕñcŏlle (11)

Ragam

Nādhanāmakriya / நாதநாமக்ரியை

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

These ten songs, among the thousand composed by Caṭakōpaṉ in pure Tamil, form a garland of hymns adoring the Lord at Tiruvāṭṭāṟu. They praise the Lord who graciously revealed His beautiful feet, freeing him from the cruel cycle of existence. These verses will surely delight the ears of the Nithyasuris endlessly.

Explanatory Notes

(i) This end-song, which usually details the benefits accrued to the chanters of the songs, in this decad, says that these songs will feast the ears of the Celestials, in spiritual world sumptuously and that they will never feel satiated. On the face of it, this sounds like a departure from the general pattern of the end-songs of the other decads. But it is not so. What + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தன் கனை கழல்கள் தன் வீரக் கழல்களை; காட்டி காட்டி; கடு கடுமையான ஸம்ஸாரமாகிற; நரகம் புகல் நரகம் புகுவதை; ஒழித்த ஒழித்த; வாட்டாற்று திருவாட்டாற்று; எம் பெருமானை எம் பெருமானைக் குறித்து; வளம் குருகூர் அழகிய திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; பாட்டாய அருளிச் செய்த; தமிழ் மாலை தமிழ் மாலையான; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; செவிக்கு இனிய செவிக்கு இனிய; செஞ்சொல்லே செஞ்சொல்லாலான; இப் பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களையும்; கேட்டு கேட்கும்; வானவர்கள் நித்யஸூரிகள் மன நிறைவு பெறாமல்; ஆரார் மேலும் அநுபவிக்க ஆசைப்படுவார்கள்
kadu unbearable; naragam pugal entry in to this hellish samsāram (material realm); ozhiththa one who eliminated; vāttāṛu in thiruvāttāṛu; emperumānai on the lord; val̤am beautiful; kurugūr controller of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār-s; pāttāy song; thamizh mālai thamizh garland; āyiraththul̤ among the thousand pāsurams; sevikku iniya like a nectar to the ears; senjol being honest words (due to all the three faculties viś mind, speech and body being in harmony); ip paththum this decad; vānavargal̤ nithyasūris; kĕttu ārār will never become satiated, hearing this.; thirumālirunjŏlai (to bless his devotees) being in thirumalai; vanjak kal̤van one who steals without the knowledge of those from whom he steals