Chapter 2

Living by association with devotees - (பொலிக பொலிக)

அடியார் திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்
This segment is filled with mangalasāsanams (blessings) for all the SriVaishnava bhaktas wishing them long lives and prosperity. Through hymns such as ‘ondrum thEvum’, Āzhvār instructed this world and made this mortal realm into paramapadam (the abode of Bhagavān). Āzhvār, through his divine hymns, completely annihilated the differences between this samsāram (materialistic realm) and paramapadam that those residing in the latter can easily come over whenever desired.
இப்பகுதி ஸ்ரீவைஷ்ணவ பக்தகோடிகளுக்கு மங்களா சாஸனம் செய்கிறது; பல்லாண்டு பாடுகிறது. ‘ஒன்றும் தேவும்’ முதலான பாடல்களால் ஆழ்வார் உலகுக்கு உபதேசம் செய்து இவ்வுலகையே பரமபதமாக்கிவிட்டார். அங்குள்ளாரும் இங்கு வரலாம் என்று சொல்லும்படி ஸம்ஸாரத்திற்கும் பரமபதத்திற்குமுள்ள வேற்றுமை நீங்கியதாகக் காணப்பட்டது.
Verses: 3244 to 3254
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: சீகாமரம்
Timing: 9.00-10.30 PM
Recital benefits: the faults in their minds will go away
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 5.2.1

3244 பொலிகபொலிகபொலிக போயிற்றுவல்லுயிர்ச்சாபம் *
நலியும்நரகமும்நைந்த நமனுக்கிங்கியாதொன்றுமில்லை *
கலியும்கெடும்கண்டுகொண்மின் கடல்வண்ணன்பூதங்கள் மண்மேல் *
மலியப்புகுந்திசைபாடி ஆடியுழிதரக்கண்டோ ம். (2)
3244 ## பொலிக பொலிக பொலிக *
போயிற்று வல் உயிர்ச் சாபம் *
நலியும் நரகமும் நைந்த *
நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை **
கலியும் கெடும் கண்டுகொண்மின் *
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல் *
மலியப் புகுந்து இசை பாடி *
ஆடி உழிதரக் கண்டோம் (1)
3244 ## pŏlika pŏlika pŏlika *
poyiṟṟu val uyirc cāpam *
naliyum narakamum nainta *
namaṉukku iṅku yātu ŏṉṟum illai **
kaliyum kĕṭum kaṇṭukŏṇmiṉ *
kaṭalvaṇṇaṉ pūtaṅkal̤ maṇmel *
maliyap pukuntu icai pāṭi *
āṭi uzhitarak kaṇṭom (1)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Simple Translation

Hail! Hail! Hail! The new era has arrived! Heavy sins are gone, hells filled with misery are destroyed. Yama's hordes have no work here, and Kali will soon be gone. Everywhere, devotees of the sea-hued Lord are singing sweet songs in His praise.

Explanatory Notes

(i) The Āzhvār says, “May this state of affairs flourish!” thrice over, after the Vedic pattern of “Śāntiḥ, Śāntiḥ, Śāntiḥ”.

(ii) All sins, however, deadly, having been destroyed, there is no question of the Subjects going to hell and hence, there is no work for Yama, so far as the denizens of this abode are concerned.

(iii) Even Kali Puruṣa will soon become defunct-this + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடல் கடல் போன்ற; வண்ணன் வடிவழகையுடையவனாலே; பூதங்கள் பக்தர்களும் பாகவதர்களும்; மண்மேல் இந்த பூமியில்; மலியப் புகுந்து நிறைந்து வந்து புகுந்து; இசை பெருமானின் குணங்களை இசையாக; பாடி ஆடி பாடியும் ஆடியும்; உழி தர எங்கும் வியாபித்திருக்க; கண்டோம் கண்டோம் ஆதலால்; வல் உயிர் அஞ்ஞானம் அவித்யை ஆகிய; சாபம் போயிற்று சாபங்கள் நீங்கின; நலியும் நரகமும் நலிந்த நரகமும்; நைந்த சிதிலமாகப் போயின; நமனுக்கு இங்கு யமனுக்கு இங்கு; யாது ஒன்றும் இல்லை ஒரு வேலையும் இல்லை; கலியும் கெடும் கலியும் விரைவில் அழிவதை; கண்டு கொண்மின் கண்முன்னே காண்பீர்கள்; பொலிக! பொலிக! பொலிக! வாழ்க வாழ்க வாழ்க
būdhangal̤ those who were reformed to become bhāgavathas (who are sustained by bhagavān); maṇ mĕl in this earth (which is contrary to enjoying bhagavān-s qualities); maliya to be present in abundance; pugundhu entered; isai with music; pādi sing; ādi (out of great joy) dance, with their heads heading the ground; uzhi thara to engage everywhere; kaṇdŏm we have seen;; val uyirch chābam very strong curses in the form of ignorance etc, which are unnatural for the āthmā, and which can be exhausted by experiencing the results; pŏyiṝu have been destroyed;; naliyum that which tortures due to such avidhyā, karma etc; naragamum narakams (hellish regions); naindha are broken;; namanukku for yama, who controls such hellish regions; ingu in this material realm; yādhu to be controlled; onṛum anything; illai not present;; kaliyum the defect of the times [kaliyuga], which is the cause for all these aforementioned; kedum will be destroyed;; kaṇdu koṇmin as said in -kalau krutha yuganthasya-, see for yourself that this occurred by the presence of bhāgavathas who engage in virtuous activities from the times of krutha yuga;; poliga poliga poliga let this become more abundant!; vaṇdu by beetles; ār fully

TVM 5.2.2

3245 கண்டோம்கண்டோம்கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் *
தொண்டீர்! எல்லீரும்வாரீர் தொழுதுதொழுது நின்றார்த்தும் *
வண்டார்தண்ணந்துழாயான் மாதவன்பூதங்கள்மண்மேல் *
பண்தான்பாடிநின்றாடிப் பரந்துதிரிகின்றனவே.
3245 கண்டோம் கண்டோம் கண்டோம் *
கண்ணுக்கு இனியன கண்டோம் *
தொண்டீர் எல்லீரும் வாரீர் *
தொழுது தொழுது நின்று ஆர்த்தும் **
வண்டு ஆர் தண் அம் துழாயான் *
மாதவன் பூதங்கள் மண்மேல் *
பண் தான் பாடி நின்று ஆடிப் *
பரந்து திரிகின்றனவே (2)
3245 kaṇṭom kaṇṭom kaṇṭom *
kaṇṇukku iṉiyaṉa kaṇṭom *
tŏṇṭīr ĕllīrum vārīr *
tŏzhutu tŏzhutu niṉṟu ārttum **
vaṇṭu ār taṇ am tuzhāyāṉ *
mātavaṉ pūtaṅkal̤ maṇmel *
paṇ tāṉ pāṭi niṉṟu āṭip *
parantu tirikiṉṟaṉave (2)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Simple Translation

We have seen, seen, seen delightful sights! Devotees of Mātavaṉ, wearing cool tuḻaci garlands with honey, are everywhere. They are singing tuneful songs and dancing merrily. Come, pious men, let's revere them and revel to our hearts' content.

Explanatory Notes

In the exuberance of his joy, the Āzhvār beckons like-minded devotees to come and enjoy this grand gathering of Śrī Vaiṣṇavas. This is in dire contrast to the unsightly world from which he wanted to be removed earlier (4-9). The eyes prove their real worth, only when they behold such pious gatherings.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு ஆர் வண்டுகள் படிந்த; தண் அம் குளிர்ந்த அழகிய; துழாயான் துளசி மாலை அணிந்த; மாதவன் மாதவனான பெருமானின்; பூதங்கள் பக்தர்கள்; மண்மேல் இந்த பூமியில்; பண் தான் பண்ணோடு இசையோடு; பாடி நின்று ஆடி பாடியும் ஆடியும்; பரந்து வியாபித்து; திரிகின்றனவே திரிகின்றனர்; கண்ணுக்கு கண்களுக்கு; இனியன இனிமையான காட்சிகளை; கண்டோம் கண்டோம்; கண்டோம் கண்டோம்; தொண்டீர்! அடியார்களே! பாகவதர்களே!; எல்லீரும் வாரீர் அனைவரும் வாருங்கள்; தொழுது தொழுது நன்றாக வாழ்த்தி வணங்கி; நின்று ஆர்த்தும் ஆரவாரிப்போம்
thaṇ am having freshness; thuzhāyān wearing thiruththuzhāy (thul̤asi) garland; for lakshmi who enjoys such beauty; dhavan for sarvĕṣvara who is the beloved lord; būdhangal̤ servitors; maṇ mĕl on this earth (which does not have anyone qualified to enjoy such aspect); paṇ thān to have abundance of tune; ninṛu stood; pādi sang; ādi danced (out of overwhelming love); parandhu spreading out everywhere; thiriginṛana engaged.; kaṇṇukku for our eyes; iniyana pleasing prosperity [of ṣrīvaishṇavas and their activities]; kaṇdŏm we have seen;; kaṇdŏm kaṇdŏm kaṇdŏm ṇot just seeing once but got to enjoy repeatedly as said thrice in -aham annādha:-[jīvāthmā imploring emperumān in ṣrīvaikuṇtam to enjoy him repeatedly],; thozhudhu thozhudhu being overwhelmed with love, engaging in continuous worship; ninṛu stood; ārththum engaged in joyful celebrations;; thoṇdīr ŏh those who are favourable towards bhagavān and bhāgavathas!; elleerum all of you; vārīr please come; thiriyum which changes the qualities of chĕthanas upside down; kali yugam kali yugam

TVM 5.2.3

3246 திரியுங்கலியுகம்நீங்கித் தேவர்கள்தாமும்புகுந்து *
பெரியகிதயுகம்பற்றிப் பேரின்பவெள்ளம்பெருக *
கரியமுகில்வண்ணனெம்மான் கடல்வண்ணன்பூதங்கள் மண்மேல் *
இரியப்புகுந்திசைபாடி எங்குமிடங்கொண்டனவே.
3246 திரியும் கலியுகம் நீங்கித் *
தேவர்கள் தாமும் புகுந்து *
பெரிய கிதயுகம் பற்றிப் *
பேரின்ப வெள்ளம் பெருக **
கரிய முகில்வண்ணன் எம்மான் *
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல் *
இரியப் புகுந்து இசை பாடி *
எங்கும் இடம் கொண்டனவே (3)
3246 tiriyum kaliyukam nīṅkit *
tevarkal̤ tāmum pukuntu *
pĕriya kitayukam paṟṟip *
periṉpa vĕl̤l̤am pĕruka **
kariya mukilvaṇṇaṉ ĕmmāṉ *
kaṭalvaṇṇaṉ pūtaṅkal̤ maṇmel *
iriyap pukuntu icai pāṭi *
ĕṅkum iṭam kŏṇṭaṉave (3)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Simple Translation

Kaliyukam, with its topsy-turvy morals, is gone, and the golden Kritayukam, with sound morals, is back again. The Devas too have come close to devotees, bound in ecstasy, singing with great eclat, filling the space all around with the glory of the Lord of oceanic hue, like unto a water-laden cloud.

Explanatory Notes

(i) Packed with Śrī Vaiṣṇavas Lord Viṣṇu’s devotees all over, this land now easily attracts even the exalted Nitya Sūrīs from the High spiritual worlds. Earlier, as we saw in IV-9, this was a forbidden land of dirt and delivery.

(ii) The trend of Kali yuga, that is, toppling down all moral values, has been forecast in ‘Mokṣa Dharma’ of Mahā-Bhārata. And yet, Saint + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திரியும் கலியுகம் அதர்மமான கலியுகம்; நீங்கி நீங்கப் பெற்று; பெரிய கிதயுகம் பெரிய கிருதயுகம்; பற்றி வந்து புகுந்து; பேரின்ப வெள்ளம் ஆனந்த வெள்ளம்; பெருக பெருகும்படியாக; தேவர்கள் தேவர்களும்; பூதங்கள் மண்மேல் பூமியிலுள்ள பக்தர்களும்; தாமும் புகுந்து தாமாகவே வந்து; கரிய முகில் கருத்த மேகம் போன்ற; வண்ணன் எம்மான் வடிவழகையுடைய பெருமானும்; கடல் வண்ணன் கடல் வண்ணனுமானவனின்; இரியப் புகுந்து மிக்க கோலாஹலங்களுடன் வந்து; இசை பாடி கீதங்களைப் பாடிக் கொண்டு; எங்கும் இடம் எல்லா இடங்களிலும்; கொண்டனவே வியாபித்துவிட்டார்கள்
nīngi to pass; dhĕvargal̤ sūris (great personalities who have unfailing knowledge etc); thāmum themselves; pugundhu enter; periya growing/appearing to be a single yugam (so that the yuga sandhi (break) between different yugams is not observable); kidha yugam krutha yugam; paṝi arrive; pĕrinba vel̤l̤am unlimited ocean of joy which is caused by experiencing bhagavān; peruga to increase more and more; kariya blackish; mugil enjoyable like a cloud; vaṇṇan having a form; emmān being my lord; kadal vaṇṇan in the ocean of infinite qualities of sarvĕsvaran-s; būdhangal̤ bhāgavathas who are immersed in qualities of such bhagavān; maṇ mĕl in this earth; iriya to initiate the joyful celebrations; pugundhu enter; isai songs; pādi singing; engum all regions; idam koṇdana took over as their residences.; idam kol̤ spreading everywhere (to bring down the presence of vaidhika aspects); samayaththai bāhya [not believing in vĕdhas] philosophies such as baudhdha etc

TVM 5.2.4

3247 இடங்கொள்சமயத்தையெல்லாம் எடுத்துக்களைவன போல *
தடங்கடற்பள்ளிப்பெருமான்தன்னுடைப்பூதங்களேயாய் *
கிடந்துமிருந்துமெழுந்தும் கீதம்பலபலபாடி *
நடந்தும்பறந்தும்குனித்தும் நாடகம்செய்கின்றனவே.
3247 இடம் கொள் சமயத்தை எல்லாம் *
எடுத்துக் களைவன போலே *
தடம் கடல் பள்ளிப் பெருமான் *
தன்னுடைப் பூதங்களே ஆய் **
கிடந்தும் இருந்தும் எழுந்தும் *
கீதம் பலபல பாடி *
நடந்தும் பறந்தும் குனித்தும் *
நாடகம் செய்கின்றனவே (4)
3247 iṭam kŏl̤ camayattai ĕllām *
ĕṭuttuk kal̤aivaṉa pole *
taṭam kaṭal pal̤l̤ip pĕrumāṉ *
taṉṉuṭaip pūtaṅkal̤e āy **
kiṭantum iruntum ĕzhuntum *
kītam palapala pāṭi *
naṭantum paṟantum kuṉittum *
nāṭakam cĕykiṉṟaṉave (4)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Simple Translation

This land is full of ardent devotees of the Lord, reposing on the milk-ocean, lying, sitting, and standing. Walking along, singing many a song and dancing, flying about with heels above the ground, they are revelling like those out to uproot the heretical religions rampant in the world.

Explanatory Notes

(i) It is a matter of common knowledge that unwanted things easily multiply themselves at random and can be had in plenty dirt-cheap while life-saving herbs are very rare, needing such herculean effort to get at them, as Hanu-mān undertook to secure the life-giver, in the story of Rāmāyaṇa, uprooting the mount as a whole. Even so, the heretical religions grow up like mushrooms + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இடம் கொள் எங்கும் நிறைந்த; சமயத்தை எல்லாம் மற்ற மதங்களை எல்லாம்; எடுத்துக் வேருடன்; களைவன போலே பறிப்பவர்களைப் போல்; தடம் கடல் பாற்கடலில்; பள்ளிப் பெருமான் தன்னுடை பள்ளிகொண்டவனின்; பூதங்களே ஆய் பக்தர்களே மலிந்து; கிடந்தும் படுத்துக்கொண்டும்; இருந்தும் உட்கார்ந்து கொண்டும்; எழுந்தும் நின்று கொண்டும்; கீதம் பலபல பாடி பல பாட்டுக்கள் பாடி; நடந்தும் நடந்துகொண்டும்; பறந்தும் தரையில் கால் பாவாதபடி; குனித்தும் நாடகம் நடித்தும் நாடகம் ஆடியும்; செய்கின்றனவே களித்தும் திரிகிறார்கள்
ellām all; eduththu banishing; kal̤aivana pŏlĕ appearing to be; thadam vast; kadal in the ocean; pal̤l̤i resting (for the sake of his devotees); perumān thannudai those who are immersed in the qualities of the one who is greater than all; būdhangal̤ĕ bhāgavathas themselves; āy filled throughout the world; kidandhum lying down; irundhum sitting; ezhundhum standing; pala pala many; gītham songs; pādi singing; nadandhum attractively roaming around; paṛandhum jumping/flying out of joy; kuniththum dancing, in this manner; nādagam dramatic actions; seyginṛana they are engaged.; seyginṛadhu their activities; en kaṇṇukku for my eyes

TVM 5.2.5

3248 செய்கின்றதென்கண்ணுக்கொன்றே ஒக்கின்ற திவ்வுலகத்து *
வைகுந்தன்பூதங்களேயாய் மாயத்தினாலெங்கும்மன்னி *
ஐயமொன்றில்லை அரக்கர்அசுரர்பிறந்தீருள்ளீரேல் *
உய்யும்வகையில்லைதொண்டீர்! ஊழிபெயர்த்திடும் கொன்றே.
3248 செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே *
ஒக்கின்றது இவ் உலகத்து *
வைகுந்தன் பூதங்களே ஆய் *
மாயத்தினால் எங்கும் மன்னி **
ஐயம் ஒன்று இல்லை அரக்கர் *
அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் *
உய்யும் வகை இல்லை தொண்டீர் *
ஊழி பெயர்த்திடும் கொன்றே (5)
3248 cĕykiṉṟatu ĕṉ kaṇṇukku ŏṉṟe *
ŏkkiṉṟatu iv ulakattu *
vaikuntaṉ pūtaṅkal̤e āy *
māyattiṉāl ĕṅkum maṉṉi **
aiyam ŏṉṟu illai arakkar *
acurar piṟantīr ul̤l̤īrel *
uyyum vakai illai tŏṇṭīr *
ūzhi pĕyarttiṭum kŏṉṟe (5)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Simple Translation

I see this land full of the Lord’s devotees, who act in many ways. Ungodly and devilish people among you, worldlings, have no means of survival. The devotees will get rid of them and bring about the golden age. There is hardly any doubt about this.

Explanatory Notes

To the Āzhvār’s eyes, it is all one vast concourse of Śrī Vaiṣṇavas, including the ‘Nityas’ and ‘Muktas’ from spiritual world, gathered/ here, there and everywhere. No doubt, spiritual world is the Eternal Land whence there is no returning to this abode. There is, however, no bar for the denizens of spiritual world moving out, at their volition, as distinguished from forcible + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
செய்கின்றது இவர்கள் செய்கிற காரியம்; என் கண்ணுக்கு என் கண்ணுக்கு; ஒன்றே ஒக்கின்றது ஒன்றுபோலவே தெரிகிறது; இவ்வுலகத்து இந்த உலகத்தில்; வைகுந்தன் பூதங்களே ஆய் பாகவதர்களே; மாயத்தினால் மாயத்தினால்; எங்கும் எல்லாவிடங்களிலும்; மன்னி நிறைந்து இருக்கிறார்கள்; அரக்கர் அசுரர் அரக்கர்களாக அசுரர்களாக; பிறந்தீர் பிறந்தவர்களாக; உள்ளீரேல் இருப்பீர்களாகில் உங்களுக்கு; உய்யும் வகை இல்லை உய்யும் வகை இல்லை; தொண்டீர்! விஷயாந்தரங்களில் சபலமுள்ளவர்களே!; கொன்றே உங்களைக் கொன்று; ஊழி காலத்தை கலியுகத்தை; பெயர்த்திடும் கிருதயுகமாகவே மாற்றி விடுவார்கள்; ஐயம் ஒன்று இல்லை இதில் சிறிதும் ஸந்தேஹமில்லை
onṛĕ okkinṛadhu it appears to be an astonishing one; ivvulagaththu in this world (where there are lots of unfavourable aspects); vaikundhan paramapadhanāthan-s; būdhangal̤ĕ devotees who are enjoyers of [paramapadhanāthan-s] qualities, themselves; āy became; māyaththināl by their amaśing activities; engum everywhere; manni residing permanently; arakkar asurar with demoniac and evil qualities; piṛandhīr those who are born; ul̤l̤īrĕl if present; thoṇdīr ŏh those who are interested in worldly pleasures!; konṛu killing you; ūzhi time period; peyarththidum was changed;; uyyum redemption; vagai way; illai not there;; aiyam doubt; onṛum any; illai not there.; konṛu finishing the body; uyir prāṇa (vital air)

TVM 5.2.6

3249 கொன்றுயிருண்ணும்விசாதி பகைபசிதீயனவெல்லாம் *
நின்றிவ்வுலகிற்கடிவான் நேமிப்பிரான்தமர்போந்தார் *
நன்றிசைபாடியும்துள்ளியாடியும் ஞாலம்பரந்தார் *
சென்றுதொழுதுய்ம்மின்தொண்டீர்! சிந்தையைச் செந்நிறுத்தியே.
3249 கொன்று உயிர் உண்ணும் விசாதி *
பகை பசி தீயன எல்லாம் *
நின்று இவ் உலகில் கடிவான் *
நேமிப் பிரான் தமர் போந்தார் **
நன்று இசை பாடியும் துள்ளி *
ஆடியும் ஞாலம் பரந்தார் *
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர்! *
சிந்தையைச் செந்நிறுத்தியே (6)
3249 kŏṉṟu uyir uṇṇum vicāti *
pakai paci tīyaṉa ĕllām *
niṉṟu iv ulakil kaṭivāṉ *
nemip pirāṉ tamar pontār **
naṉṟu icai pāṭiyum tul̤l̤i *
āṭiyum ñālam parantār *
cĕṉṟu tŏzhutu uymmiṉ tŏṇṭīr! *
cintaiyaic cĕnniṟuttiye (6)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Simple Translation

Devotees of the Lord wielding the discus have come here and spread themselves out, singing and strutting about, to banish from this abode pestilence, hunger, and hate, evils, one and all. O worldlings! Let not your minds wander, better fix them on sound morals and revere these devotees with a pure mind, securing salvation at their feet.

Explanatory Notes

The Lord’s devotees are here in this abode to quell all evils, just as His discus does. The Āzhvār exhorts the worldlings to get themselves salved through this holy band. A precondition for worship is concentration of the mind and this is being stressed here. Again, purity of worship consists in seeking nothing in return, worship being an end in itself.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கொன்று உயிர் உயிரை மாய்த்து; உண்ணும் விசாதி பிராணனை முடிக்கும் வியாதி; பகை பசி பகை பசி முதலான; தீயன எல்லாம் கொடியவை எல்லாவற்றையும்; இவ் உலகில் நின்று இந்த உலகத்திலிருந்து; கடிவான் தொலைக்க; நேமி சக்கரக்கையனான; பிரான் தமர் எம்பெருமானின் பக்தர்கள்; போந்தார் வந்துள்ளார்கள்; நன்று இசை பாட்டுக்களை நன்றாக; பாடியும் பாடியும்; துள்ளி ஆடியும் துள்ளி குதித்து ஆடியும்; ஞாலம் பரந்தார் பூமி எங்கும் வியாபித்துள்ளார்கள்; தொண்டீர்! உலக விஷயங்களில் ஈடுபட்டவர்களே!; சிந்தையை உங்கள் மனதை; செந்நறுத்தியே சீர் திருத்தி நல்ல விஷயங்களில்; சென்று ஈடுபடுத்தி; தொழுது பக்த பாகவதர்களை வணங்கி; உய்ம்மின் உய்வடையுங்கள்
uṇṇum consume; visādhi disease; pagai enmity; pasi hunger etc; thīyana cruel nature; ellām all; i this; ulagil in world; ninṛu standing; kadivān to destroy; nĕmi having the weapon, chakra (disc); pirān sarvĕṣvaran-s; thamar servitors; pŏndhār being; nanṛu distinguished; isai songs; pādiyum sing; thul̤l̤i joyfully jump; ādiyum dance; gyālam all over the world; parandhār spread out;; thoṇdīr ŏh fickle minded ones (who consider dhĕvathāntharam (other dhĕvathās) and vishayāntharam (worldly matters) as the goal and enjoyable aspect)!; sindhaiyai your heart which is focussed on external matters; sem perfectly; niṛuththi placing it; senṛu approaching (them); thozhudhu engaging in activities which match the quality of servitude; uymmin see that you are saved.; num your; ul̤l̤aththu in your heart

TVM 5.2.7

3250 நிறுத்திநும்முள்ளத்துக்கொள்ளும் தெய்வங்களும்மை யுய்யக்கொள் *
மறுத்துமவனோடேகண்டீர் மார்க்கண்டேயனும்கரியே *
கறுத்தமனமொன்றும்வேண்டா கண்ணனல்லால் தெய்வமில்லை *
இறுப்பதெல்லாம் அவன்மூர்த்தியாயவர்க்கேயிறுமினே.
3250 நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் *
தெய்வங்கள் உம்மை உய்யக்கொள் *
மறுத்தும் அவனோடே கண்டீர் *
மார்க்கண்டேயனும் கரியே **
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா *
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை *
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தியாய் *
அவர்க்கே இறுமினே (7)
3250 niṟutti num ul̤l̤attuk kŏl̤l̤um *
tĕyvaṅkal̤ ummai uyyakkŏl̤ *
maṟuttum avaṉoṭe kaṇṭīr *
mārkkaṇṭeyaṉum kariye **
kaṟutta maṉam ŏṉṟum veṇṭā *
kaṇṇaṉ allāl tĕyvam illai *
iṟuppatu ĕllām avaṉ mūrttiyāy *
avarkke iṟumiṉe (7)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Simple Translation

The deities you worship only help you through the Supreme Lord, whom they also revere. Don't feel upset when I say there is no God but Kaṇṇaṉ. All homage you pay to other deities goes to Him, as they are part of Him. Mārkkaṇṭēyaṉ can bear witness to this truth.

Explanatory Notes

(i) The Āzhvār was mighty glad that this land was full of Śrī Vaiṣṇavas but suddenly, he happened to notice a lew non-vaiṣṇavas too, here and there. These were not only not attached to the Śrī Vaiṣṇavas but were immersed in the propitiation of the Godlings (minor deities). And so, the Āzhvār wished to bring them also round through advice. He tells them: “If you think you + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நும் உள்ளத்து உங்கள் மனதை; நிறுத்தி வலியப்பிடித்து நிறுத்தி; கொள்ளும் கொள்ளும்; தெய்வங்கள் தெய்வங்களும்; உம்மை உங்களை; உய்யக்கொள் உய்யக்கொள்வதும்; அவனோடே அந்த கண்ணன் அருளாலே ஆகும்; மறுத்தும் மீண்டும் உங்களை கண்ணனிடமே; கண்டீர் சேர்க்கிறார்கள் அந்த தேவதைகள்; மார்க்கண்டேயனும் மார்க்கண்டேயனே; கரியே இதற்கு சாக்ஷி; கறுத்த மனம் வேறு விஷயங்களில் மனதை; ஒன்றும் வேண்டா செலுத்தாமல்; கண்ணன் அல்லால் கண்ணனைத் தவிர; தெய்வம் இல்லை வேறு தெய்வம் இல்லை என்பதை; இறுப்பது உணர்ந்து உங்கள்; எல்லாம் கடமைகளை எல்லாம்; அவன் கண்ணனின் சரீரமான; மூர்த்தியாய் அந்த தெய்வங்களுக்கு; அவர்க்கே செலுத்துகிறோம் என்று; இறுமினே அந்த கண்ணனுக்கே சமர்ப்பியுங்கள்
niṛuththi since they are not subāṣrayam (auspicious object of meditation), forcefully holding them [instead of naturally being present]; kol̤l̤um placing; dheyvangal̤ dhĕvathās; ummai you all; uyyak kol̤l̤um uplifting; avanŏdĕ to the one who gave them the ability to bestow benedictions; maṛuththu by approaching him only; mārkkaṇdĕyanum mārkaṇdĕya rishi; kari as witness; kaṇdīr see; kaṛuththa contamination (to have faith in other dhĕvathās); manam heart; onṛum in any manner; vĕṇdā unnecessary;; kaṇṇan allāl except for krishṇa (who is the ṣarīrī (āthmā) of all other dhĕvathās); dheyvam para dhĕvathā (supreme dhĕvathā); illai not there; iṛuppadhu those nithya and naimiththika karmas which are ordained in ṣāsthram; ellām all of them; avan for such krishṇa; mūrththiyāy avarkkĕ pursuing those dhĕvathās as his body; iṛumin offer them considering krishṇa, who is the enjoyer of all yagyas (sacrifices), as the end goal.; iṛukkum to be performed certainly; iṛai nithya and naimiththika karams which are duties [and thus cannot be given up]

TVM 5.2.8

3251 இறுக்குமிறையிறுத்துண்ண எவ்வுலகுக்கும்தன்மூர்த்தி *
நிறுத்தினான்தெய்வங்களாக அத்தெய்வநாயகன்தானே *
மறுத்திருமார்வனவன்தன் பூதங்கள்கீதங்கள்பாடி *
வெறுப்பின்றிஞாலத்துமிக்கார் மேவித்தொழுதுய்ம்மின் நீரே.
3251 இறுக்கும் இறை இறுத்து உண்ண *
எவ் உலகுக்கும் தன் மூர்த்தி *
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக *
அத் தெய்வ நாயகன் தானே **
மறுத் திரு மார்வன் அவன் தன் *
பூதங்கள் கீதங்கள் பாடி *
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார் *
மேவித் தொழுது உய்ம்மின் நீரே (8)
3251 iṟukkum iṟai iṟuttu uṇṇa *
ĕv ulakukkum taṉ mūrtti *
niṟuttiṉāṉ tĕyvaṅkal̤ āka *
at tĕyva nāyakaṉ tāṉe **
maṟut tiru mārvaṉ avaṉ taṉ *
pūtaṅkal̤ kītaṅkal̤ pāṭi *
vĕṟuppu iṉṟi ñālattu mikkār *
mevit tŏzhutu uymmiṉ nīre (8)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Simple Translation

The Supreme Lord has placed minor deities in different places to receive homage and grant blessings. Devotees of the Lord, the One with a mole in His winsome chest, singing His glory, thrive well in this place. Better revere them and follow in their footsteps.

Explanatory Notes

The Emperors of yore used to receive the tributes payable to them through the subordinate officials and, in the present day, Government dues are collected through a vast network of agencies. The Scriptures likewise prescribe the rites and rituals to be offered to the various deities who are but the agents of the Supreme Lord, rather, His bodies through which He carries + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இறுக்கும் அவரவர்கள் செலுத்த வேண்டிய; இறை இறுத்து கடமைகளை செலுத்தி; உண்ண அவரவர்கள் வாழ; தன் மூர்த்தி தன்னுடைய சரீரங்களை; எவ் உலகுக்கும் உலகமெங்கும் பலவகை ருசியோடு; தெய்வங்கள் ஆக ஆராதிக்க உரிய; நிறுத்தினான் தெய்வங்களாக நிறுத்தினான்; அத் தெய்வ நாயகன்தானே அந்த நாராயணன் தானே; மறு ஸ்ரீவத்ஸமென்னும் மறுவை; திருமார்வன் மார்பிலுடையவன்; அவன் தன் பூதங்கள் அடியவர்களான பாகவதர்கள்; கீதங்கள் பாடி பலவகைப் பாட்டுக்களைப் பாடி ஆடி; ஞாலத்து உலக விஷயங்களில் உண்டாகும்; வெறுப்பு இன்றி வெறுப்பு இன்றி; மிக்கார் சிறப்பாக வாழ்கின்றார்கள்; நீரே நீங்கள்; மேவி தொழுது அவர்களை அணுகித் தொழுது; உய்ம்மின் உய்வடையுங்கள்
iṛuththu offering; uṇṇa to be uplifted; evvulagukkum all words which have variegated interests; than his; mūrththi different types of forms/bodies; dheyvangal̤āga as the dhĕvathās who are worshippable in those karmas; niṛuththinān established; ath theyva nāyagan thānĕ krishṇa, who is the lord of all lords; maṛu the ṣrīvathsa mole which highlights his supremacy; thirumārvan one who is having on his divine chest; avan than for him; būdhangal̤ bhāgavathas who are servitors; gīdhangal̤ many songs; pādi sing; gyālaththu of the worldly defects; veṛuppu inṛi not having hatred; mikkār lived as great personalities;; nīr you; mĕvi approaching them; thozhudhu worship; uymmin be uplifted; vĕdham in vĕdham; punidham very purifying, due to revealing bhagavān-s svarūpa (true nature), guṇa (qualities) etc

TVM 5.2.9

3252 மேவித்தொழுதுய்ம்மினீர்கள் வேதப்புனிதவிருக்கை *
நாவிற்கொண்டச்சுதன்தன்னை ஞானவிதிபிழையாமே *
பூவிற்புகையும்விளக்கும் சாந்தமும்நீரும்மலிந்து *
மேவித்தொழுமடியாரும் பகவருமிக்கதுலகே.
3252 மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள் *
வேதப் புனித இருக்கை *
நாவில் கொண்டு அச்சுதன் தன்னை *
ஞானவிதி பிழையாமே **
பூவில் புகையும் விளக்கும் *
சாந்தமும் நீரும் மலிந்து *
மேவித் தொழும் அடியாரும் *
பகவரும் மிக்கது உலகே (9)
3252 mevit tŏzhutu uymmiṉ nīrkal̤ *
vetap puṉita irukkai *
nāvil kŏṇṭu accutaṉ taṉṉai *
ñāṉaviti pizhaiyāme **
pūvil pukaiyum vil̤akkum *
cāntamum nīrum malintu *
mevit tŏzhum aṭiyārum *
pakavarum mikkatu ulake (9)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Simple Translation

Here we have those who serve the Lord with great devotion, offering flowers and incense, chanting sacred Vedic mantras, and deeply contemplating His auspicious traits. Revere them all lovingly, worldlings, and redeem yourselves.

Explanatory Notes

(i) The two types of devotees, referred to here, correspond to Lakṣmaṇa who followed Śrī Rāma into exile and served Him in all ways, and Bharata who was stationed at Nandigrām, in devout contemplation of Śrī Rāma.

(ii) ‘Devotion great’: This refers to the discipline of Bhakti mārga taught by Lord Kṛṣṇa.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேதப் புனித வேதத்தினுள் புனிதமான; இருக்கை புருஷஸூக்தம் முதலியவற்றை; நாவில் கொண்டு நாவினால் உச்சரித்துக்கொண்டு; ஞானவிதி பிழையாமே பக்திமார்க்கம் தவறாதபடி; பூவில் புகையும் மலரோடு கூடின தூபமும்; விளக்கும் சாந்தமும் தீபமும் சந்தனமும்; நீரும் திருமஞ்சனமும்; மலிந்து பூர்ணமாகக்கொண்டு; அச்சுதன் தன்னை எம்பெருமானை; மேவித் தொழும் அடைந்து கைங்கர்யம் செய்யும்; மிக்கது உலகே உலகத்தில் அதிகமாக உள்ள; அடியாரும் அடியார்களையும்; பகவரும் முனிவர்களையும்; மேவித் தொழுது விரும்பி வணங்கி; உய்ம்மின் நீர்கள் நீங்கள் உய்வீர்களாக
irukkai special hymns such as ṣrī purusha sūktha, ṣrī nārāyaṇa anuvāka; nāvil in the tongue; koṇdu reciting; gyāna vidhi boundaries of the ṣāsthram which reveal gyānam in the form of bhakthi; pizhaiyāmĕ preserving; pūvil with flowers; pugaiyum fragrance/incense smoke; vil̤akkum lamp; sāndhamum sandalwood paste; nīrum water; malindhu those who are having them completely [as much as required]; achchudhan thannai sarvĕṣvaran who never abandons [his devotees]; mĕvi being ananyaprayŏjana; thozhum approaching through servitude; adiyārum servitors; pagavarum sages who are immersed in meditating upon bhagavān-s qualities such as gyānam (knowledge), ṣakthi (strength) etc; mikkadhu became filled with; ulagu this world; mĕvi approaching them; thozhudhu worshipping them; nīr you all; uymmingal̤ be uplifted.; nakkan pirānŏdu With īṣvara (rudhra) who is nagna (naked); ayanum brahmā

TVM 5.2.10

3253 மிக்கவுலகுகள்தோறும் மேவிக்கண்ணன்திருமூர்த்தி *
நக்கபிரானோடு அயனுமிந்திரனும்முதலாக *
தொக்கவமரர்குழாங்கள்எங்கும்பரந்தனதொண்டீர்! *
ஒக்கத்தொழுகிற்றிராகில் கலியுகமொன்றுமில்லையே.
3253 மிக்க உலகுகள் தோறும் *
மேவிக் கண்ணன் திருமூர்த்தி *
நக்க பிரானோடு அயனும் *
இந்திரனும் முதலாக **
தொக்க அமரர் குழாங்கள் *
எங்கும் பரந்தன தொண்டீர் *
ஒக்கத் தொழு கிற்றிராகில் *
கலியுகம் ஒன்றும் இல்லையே (10)
3253 mikka ulakukal̤ toṟum *
mevik kaṇṇaṉ tirumūrtti *
nakka pirāṉoṭu ayaṉum *
intiraṉum mutalāka **
tŏkka amarar kuzhāṅkal̤ *
ĕṅkum parantaṉa tŏṇṭīr *
ŏkkat tŏzhu kiṟṟirākil *
kaliyukam ŏṉṟum illaiye (10)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Simple Translation

O worldlings, the deities whom you adore, Nakkapirāṉ (Śiva), Ayaṉ (Brahmā), Intiraṉ, and all others, worship the Lord Supreme of exquisite form and thrive well in their sprawling worlds. Like these celestials, you will also do well to worship Him and thus quell Kali's mischief.

Explanatory Notes

Here is the certain recipe for counteracting the trend of Kaliyuga, which detracts men into worshipping the minor deities, instead of adoring the supreme Lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நக்க பிரானோடு அயனும் சிவபிரானும் பிரமனும்; இந்திரனும் முதலாக இந்திரனும் முதலியவர்கள்; தொக்க திரண்ட; அமரர் குழாங்கள் தேவதை குழாங்கள்; கண்ணன் கண்ணனின்; திருமூர்த்தி மேவி திரு உருவத்தை வணங்கி; மிக்க போக்ய போகங்களோடு; உலகுகள் தோறும் பரந்த உலகம் தோறும்; எங்கும் எல்லா இடங்களிலும்; பரந்தன தம் தம் பதவிகளைப் பெற்று வாழ்ந்தனர்; தொண்டீர்! உலக விஷயங்களில் ஈடுபட்டவர்களே!; ஒக்க நீங்களும் அவர்களைப்போல் எம்பெருமானை; தொழு கிற்றிராகில் தொழவல்லீர்களாகில்; கலியுகம் ஒன்றும் கலியுக தோஷம் சிறிதும்; இல்லையே உங்களுக்கு இல்லாதபடியாகும்
indhiranum indhra; mudhalāga et al; thokka together; amarar kuzhāngal̤ groups of dhĕvathās; kaṇṇan krishṇa who is the shelter for all, his; thiru divine; mūrththi form; mĕvi taking shelter; mikka having abundance of tools for enjoyment; ulagugal̤ thŏṛum in all worlds; engum everywhere; parandhana became possessed with great wealth;; thoṇdīr ŏh ones who are desirous of worldly goals!; okka if you too like them; thozha worship; kiṝirāgil are able to; kali yugam the defect of kali yugam (which is the cause for such lowliness of attachment towards other dhĕvathās); onṛum anything; illai not present.; than his; adiyārkku for distinguished servitors

TVM 5.2.11

3254 கலியுகமொன்றுமின்றிக்கே தன்னடியார்க்கருள் செய்யும் *
மலியுஞ்சுடரொளிமூர்த்தி மாயப்பிரான்கண்ணன்தன்னை *
கலிவயல்தென்னன்குருகூர்க் காரிமாறன்சடகோபன் *
ஒலிபுகழாயிரத்திப்பத்து உள்ளத்தைமாசறுக்கும்மே. (2)
3254 ## கலியுகம் ஒன்றும் இன்றிக்கே *
தன் அடியார்க்கு அருள்செய்யும் *
மலியும் சுடர் ஒளி மூர்த்தி *
மாயப் பிரான் கண்ணன் தன்னை **
கலி வயல் தென் நன் குருகூர்க் *
காரிமாறன் சடகோபன் *
ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்து *
உள்ளத்தை மாசு அறுக்குமே (11)
3254 ## kaliyukam ŏṉṟum iṉṟikke *
taṉ aṭiyārkku arul̤cĕyyum *
maliyum cuṭar ŏl̤i mūrtti *
māyap pirāṉ kaṇṇaṉ taṉṉai **
kali vayal tĕṉ naṉ kurukūrk *
kārimāṟaṉ caṭakopaṉ *
ŏli pukazh āyirattu ip pattu *
ul̤l̤attai mācu aṟukkume (11)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Tiripuṭai / திரிபுடை

Bhavam

Self

Upadesam

Simple Translation

The hearts of those who recite these ten songs, taken from the glorious thousand composed by Caṭakōpaṉ of beautiful Kurukūr in the south with its fertile fields, adoring the wondrous Kaṇṇaṉ whose resplendent form dispels the harmful influence of Kali, will be rid of all blemishes.

Explanatory Notes

This Tiruvāymoḻi will cleanse the minds of its chanters thoroughly and fix them, firm and fast, on to the Supreme Lord, to the exclusion of everything else, such as the adoration of other deities and selfish desires, the blemishes referred to in this end-song. Constant meditation on the Supreme Lord is characteristic of Kṛta yuga while such a thing is conspicuous by its + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தன் அடியார்க்கு தன் அடியவர்களுக்கு; கலியுகம் ஒன்றும் கலியுக தோஷம் ஒன்றும்; இன்றிக்கே இல்லாத படி; அருள் செய்யும் அருள் செய்யும்; மலியும் சுடர் ஒளி ஒளி மிகுந்த அழகையுடைய; மூர்த்தி மாயப்பிரான் மூர்த்தியான பெருமான்; கண்ணன் தன்னை கண்ணனைக் குறித்து; கலி வயல் நிறைந்த வயல்களையுடைய; தென் நன் தென்திசையிலுள்ள; குருகூர் திருக்குருகூரில் அவதரித்த; காரிமாறன் சடகோபன் காரிமாறன் நம்மாழ்வார்; ஒலி புகழ் இசையோடு கூடின புகழ் பெற்ற; ஆயிரத்து ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்து இந்தப் பத்துப் பாசுரங்களை ஓதுபவர்களின்; உள்ளத்தை உள்ளத்தில் உள்ள; மாசு அறுக்குமே குற்றங்கள் அகலுமே
kali yugam the defects of kali yugam; onṛum anything; inṛikkĕ to be affected; arul̤ out of his grace; seyyum due to bestowing; maliyum abundant; sudar having radiance; ol̤i mūrththi having splendorous form; māyam having amaśing qualities and activities; pirān one who lets them [those servitors] enjoy him; kaṇṇan thannai on krishṇa; kali abundant; vayal having fertile farm lands; then for south direction; nan worthy; kurugūr leader of āzhvārthirunagari; kāri distinguished birth; māṛan having distinguished family heritage; satakŏpan nammāzhvār-s; oli very famous; pugazh speaking about bhagavān-s qualities; āyiraththu among the thousand pāsurams; ippaththu this decad; ul̤l̤aththai the heart of those who meditate upon; māsu dirt (considering bhāgavathas to be equal to oneself, doubt in greatness of bhagavān, considering dhĕvathāntharams to be supreme and attachment towards worldly pleasures); aṛukkum will eliminate.; māsu blemish; aṛu without