Chapter 2
Living by association with devotees - (பொலிக பொலிக)
அடியார் திருக்கூட்டத்தைக் கண்டு வாழ்த்தல்
This segment is filled with mangalasāsanams (blessings) for all the SriVaishnava bhaktas wishing them long lives and prosperity. Through hymns such as ‘ondrum thEvum’, Āzhvār instructed this world and made this mortal realm into paramapadam (the abode of Bhagavān). Āzhvār, through his divine hymns, completely annihilated the differences between this samsāram (materialistic realm) and paramapadam that those residing in the latter can easily come over whenever desired.
இப்பகுதி ஸ்ரீவைஷ்ணவ பக்தகோடிகளுக்கு மங்களா சாஸனம் செய்கிறது; பல்லாண்டு பாடுகிறது. ‘ஒன்றும் தேவும்’ முதலான பாடல்களால் ஆழ்வார் உலகுக்கு உபதேசம் செய்து இவ்வுலகையே பரமபதமாக்கிவிட்டார். அங்குள்ளாரும் இங்கு வரலாம் என்று சொல்லும்படி ஸம்ஸாரத்திற்கும் பரமபதத்திற்குமுள்ள வேற்றுமை நீங்கியதாகக் + Read more
Verses: 3244 to 3254
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: சீகாமரம்
Timing: 9.00-10.30 PM
Recital benefits: the faults in their minds will go away
- TVM 5.2.1
3244 ## பொலிக பொலிக பொலிக *
போயிற்று வல் உயிர்ச் சாபம் *
நலியும் நரகமும் நைந்த *
நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை **
கலியும் கெடும் கண்டுகொண்மின் *
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல் *
மலியப் புகுந்து இசை பாடி *
ஆடி உழிதரக் கண்டோம் (1) - TVM 5.2.2
3245 கண்டோம் கண்டோம் கண்டோம் *
கண்ணுக்கு இனியன கண்டோம் *
தொண்டீர் எல்லீரும் வாரீர் *
தொழுது தொழுது நின்று ஆர்த்தும் **
வண்டு ஆர் தண் அம் துழாயான் *
மாதவன் பூதங்கள் மண்மேல் *
பண் தான் பாடி நின்று ஆடிப் *
பரந்து திரிகின்றனவே (2) - TVM 5.2.3
3246 திரியும் கலியுகம் நீங்கித் *
தேவர்கள் தாமும் புகுந்து *
பெரிய கிதயுகம் பற்றிப் *
பேரின்ப வெள்ளம் பெருக **
கரிய முகில்வண்ணன் எம்மான் *
கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல் *
இரியப் புகுந்து இசை பாடி *
எங்கும் இடம் கொண்டனவே (3) - TVM 5.2.4
3247 இடம் கொள் சமயத்தை எல்லாம் *
எடுத்துக் களைவன போலே *
தடம் கடல் பள்ளிப் பெருமான் *
தன்னுடைப் பூதங்களே ஆய் **
கிடந்தும் இருந்தும் எழுந்தும் *
கீதம் பலபல பாடி *
நடந்தும் பறந்தும் குனித்தும் *
நாடகம் செய்கின்றனவே (4) - TVM 5.2.5
3248 செய்கின்றது என் கண்ணுக்கு ஒன்றே *
ஒக்கின்றது இவ் உலகத்து *
வைகுந்தன் பூதங்களே ஆய் *
மாயத்தினால் எங்கும் மன்னி **
ஐயம் ஒன்று இல்லை அரக்கர் *
அசுரர் பிறந்தீர் உள்ளீரேல் *
உய்யும் வகை இல்லை தொண்டீர் *
ஊழி பெயர்த்திடும் கொன்றே (5) - TVM 5.2.6
3249 கொன்று உயிர் உண்ணும் விசாதி *
பகை பசி தீயன எல்லாம் *
நின்று இவ் உலகில் கடிவான் *
நேமிப் பிரான் தமர் போந்தார் **
நன்று இசை பாடியும் துள்ளி *
ஆடியும் ஞாலம் பரந்தார் *
சென்று தொழுது உய்ம்மின் தொண்டீர்! *
சிந்தையைச் செந்நிறுத்தியே (6) - TVM 5.2.7
3250 நிறுத்தி நும் உள்ளத்துக் கொள்ளும் *
தெய்வங்கள் உம்மை உய்யக்கொள் *
மறுத்தும் அவனோடே கண்டீர் *
மார்க்கண்டேயனும் கரியே **
கறுத்த மனம் ஒன்றும் வேண்டா *
கண்ணன் அல்லால் தெய்வம் இல்லை *
இறுப்பது எல்லாம் அவன் மூர்த்தியாய் *
அவர்க்கே இறுமினே (7) - TVM 5.2.8
3251 இறுக்கும் இறை இறுத்து உண்ண *
எவ் உலகுக்கும் தன் மூர்த்தி *
நிறுத்தினான் தெய்வங்கள் ஆக *
அத் தெய்வ நாயகன் தானே **
மறுத் திரு மார்வன் அவன் தன் *
பூதங்கள் கீதங்கள் பாடி *
வெறுப்பு இன்றி ஞாலத்து மிக்கார் *
மேவித் தொழுது உய்ம்மின் நீரே (8) - TVM 5.2.9
3252 மேவித் தொழுது உய்ம்மின் நீர்கள் *
வேதப் புனித இருக்கை *
நாவில் கொண்டு அச்சுதன் தன்னை *
ஞானவிதி பிழையாமே **
பூவில் புகையும் விளக்கும் *
சாந்தமும் நீரும் மலிந்து *
மேவித் தொழும் அடியாரும் *
பகவரும் மிக்கது உலகே (9) - TVM 5.2.10
3253 மிக்க உலகுகள் தோறும் *
மேவிக் கண்ணன் திருமூர்த்தி *
நக்க பிரானோடு அயனும் *
இந்திரனும் முதலாக **
தொக்க அமரர் குழாங்கள் *
எங்கும் பரந்தன தொண்டீர் *
ஒக்கத் தொழு கிற்றிராகில் *
கலியுகம் ஒன்றும் இல்லையே (10) - TVM 5.2.11
3254 ## கலியுகம் ஒன்றும் இன்றிக்கே *
தன் அடியார்க்கு அருள்செய்யும் *
மலியும் சுடர் ஒளி மூர்த்தி *
மாயப் பிரான் கண்ணன் தன்னை **
கலி வயல் தென் நன் குருகூர்க் *
காரிமாறன் சடகோபன் *
ஒலி புகழ் ஆயிரத்து இப் பத்து *
உள்ளத்தை மாசு அறுக்குமே (11)