Chapter 3

Parānkusanāyaki dares to write a love letter to the Lord, unable to bear His separation - (மாசு அறு)

பிரிவாற்றாமை மேலீட்டால் தலைமகள் காதல் கைமிக்கு மடலூரத் துணிதல்

By saying ‘madaloorvEn’, Āzhvār wants to make all his thoughts into reality. These hymns are sung by Āzhvār as parAnkusa nAyaki.


Highlights from the Avatārikā of Tirukkurukaippirān Piḷḷān

After intensely yearning for union with Emperumān, who is the embodiment of limitless auspicious qualities (ananta kalyāṇa guṇas) such as āśrita vātsalyam—His

+ Read more

இத்திருவாய்மொழியில் மடலூர்வேன் என்று கூறி தாம் நினைப்பதை நடத்திக்கொள்ளப் பார்க்கிறார் ஆழ்வார். இப்பகுதி நாயகி நிலையில் அருளிச்செய்யப்பட்டது.

ஐந்தாம் பத்து -மூன்றாம் திருவாய்மொழி – “மாசறு சோதி”-பிரவேசம் –

மலியும் சுடரொளி மூர்த்தி மாயப்பிரான் கண்ணன் தன்னை” என்று, வடிவழகையும் குணங்களையும்

+ Read more
Verses: 3255 to 3265
Grammar: Kaliviruththam / கலிவிருத்தம்
Pan: நட்டபாடை
Timing: 1.13-2.24 PM
Recital benefits: will truly reach divine Vaikuntam
  • TVM 5.3.1
    3255 ## மாசு அறு சோதி * என் செய்ய வாய் மணிக்குன்றத்தை *
    ஆசு அறு சீலனை * ஆதி மூர்த்தியை நாடியே **
    பாசறவு எய்தி * அறிவு இழந்து எனை நாளையம்? *
    ஏசு அறும் ஊரவர் கவ்வை * தோழீ என் செய்யுமே? (1)
  • TVM 5.3.2
    3256 என் செய்யும் ஊரவர் கவ்வை * தோழீ இனி நம்மை? *
    என் செய்ய தாமரைக் கண்ணன் * என்னை நிறை கொண்டான் **
    முன் செய்ய மாமை இழந்து * மேனி மெலிவு எய்தி *
    என் செய்ய வாயும் கருங் கண்ணும் * பயப்பு ஊர்ந்தவே (2)
  • TVM 5.3.3
    3257 ஊர்ந்த சகடம் * உதைத்த பாதத்தன் * பேய்முலை
    சார்ந்து சுவைத்த * செவ்வாயன் என்னை நிறை கொண்டான் **
    பேர்ந்தும் பெயர்ந்தும் * அவனோடு அன்றி ஓர் சொல் இலேன் *
    தீர்ந்த என் தோழீ! * என் செய்யும் ஊரவர் கவ்வையே? (3)
  • TVM 5.3.4
    3258 ஊரவர் கவ்வை எரு இட்டு * அன்னை சொல் நீர் படுத்து *
    ஈர நெல் வித்தி முளைத்த * நெஞ்சப் பெருஞ் செய்யுள் **
    பேர் அமர் காதல் * கடல் புரைய விளைவித்த *
    கார் அமர் மேனி * நம் கண்ணன் தோழீ! கடியனே (4)
  • TVM 5.3.5
    3259 கடியன் கொடியன் நெடிய மால் * உலகம் கொண்ட
    அடியன் * அறிவு அரு மேனி மாயத்தன் ** ஆகிலும்
    கொடிய என் நெஞ்சம் * அவன் என்றே கிடக்கும் எல்லே *
    துடி கொள் இடை மடத் தோழீ! * அன்னை என் செய்யுமே? (5)
  • TVM 5.3.6
    3260 அன்னை என் செய்யில் என்? * ஊர் என் சொல்லில் என்? தோழிமீர் *
    என்னை இனி உமக்கு * ஆசை இல்லை அகப்பட்டேன் **
    முன்னை அமரர் முதல்வன் * வண் துவராபதி
    மன்னன் * மணிவண்ணன் வாசுதேவன் வலையுளே (6)
  • TVM 5.3.7
    3261 வலையுள் அகப்படுத்து * என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு *
    அலை கடல் பள்ளி அம்மானை * ஆழிப்பிரான் தன்னை **
    கலை கொள் அகல் அல்குல் தோழீ * நம் கண்களால் கண்டு *
    தலையில் வணங்கவும் ஆம் கொலோ * தையலார் முன்பே? (7)
  • TVM 5.3.8
    3262 பேய் முலை உண்டு சகடம் பாய்ந்து * மருது இடைப்
    போய் முதல் சாய்த்து * புள் வாய் பிளந்து களிறு அட்ட **
    தூ முறுவல் தொண்டைவாய்ப் பிரானை * எந் நாள்கொலோ *
    யாம் உறுகின்றது தோழீ ** அன்னையர் நாணவே? (8)
  • TVM 5.3.9
    3263 நாணும் நிறையும் கவர்ந்து * என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு *
    சேண் உயர் வானத்து இருக்கும் * தேவ பிரான் தன்னை **
    ஆணை என் தோழீ! * உலகுதோறு அலர் தூற்றி! * ஆம்
    கோணைகள் செய்து * குதிரியாய் மடல் ஊர்துமே (9)
  • TVM 5.3.10
    3264 யாம் மடல் ஊர்ந்தும் * எம் ஆழி அங்கைப் பிரான் உடை *
    தூ மடல் தண் அம் துழாய் * மலர் கொண்டு சூடுவோம் **
    யாம் மடம் இன்றித் தெருவுதோறு * அயல் தையலார் *
    நா மடங்காப் பழி தூற்றி * நாடும் இரைக்கவே (10)
  • TVM 5.3.11
    3265 ## இரைக்கும் கருங் கடல் வண்ணன் * கண்ண பிரான் தன்னை *
    விரைக் கொள் பொழில் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
    நிரைக் கொள் அந்தாதி * ஓர் ஆயிரத்துள் இப் பத்தும் *
    உரைக்க வல்லார்க்கு * வைகுந்தம் ஆகும் தம் ஊர் எல்லாம் (11)