Chapter 1
Lord's mercy even when there's no true devotion - (கை ஆர்)
உண்மையான பக்தி இல்லாத நிலையிலும் சிறந்த பேற்றை அருளும்
When Āzhvār saw the evidence of change in this world due to his counsel, he became so excited and cried out his well wishes (mangalasāsanams) with these words, “poliga! poliga!”, meaning ‘Let the world flourish!’. “To be born as a mortal and to counsel all other mortals in this world transpired only because of His desire! All I did was spread the word + Read more
ஆழ்வார் தாம் செய்த உபதேசத்தினால் உலகம் திருந்துவதைக் கண்டு “பொலிக பொலிக” என்று மங்களாசாஸனம் பண்ணுகிறார்; “எம்பெருமான் இவர்களைப் போலவே நம்மையும் இருக்கச் செய்து, இவர்களுக்கு உபதேசம் பண்ணும்படி வைத்துள்ளதும் அவனது திருவருளே! பகவத் விஷயத்தை வாயால் சொன்னேன். இவ்வாறு சொன்னதையே பற்றாகக் + Read more
Verses: 3233 to 3243
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: குறிஞ்சி
Timing: NIGHT
Recital benefits: will shine and reach the feet of the lord
- TVM 5.1.1
3233 ## கை ஆர் சக்கரத்து * என் கருமாணிக்கமே என்று என்று *
பொய்யே கைம்மை சொல்லிப் * புறமே புறமே ஆடி **
மெய்யே பெற்றொழிந்தேன் * விதி வாய்க்கின்று காப்பார் ஆர்? *
ஐயோ கண்ண பிரான் * அறையோ இனிப் போனாலே (1) - TVM 5.1.2
3234 போனாய் மா மருதின் நடுவே * என் பொல்லா மணியே *
தேனே ! இன் அமுதே ! * என்று என்றே சில கூத்துச் சொல்ல **
தானேல் எம் பெருமான் * அவன் என் ஆகி ஒழிந்தான் *
வானே மா நிலமே * மற்றும் முற்றும் என் உள்ளனவே (2) - TVM 5.1.3
3235 உள்ளன மற்று உளவாப் * புறமே சில மாயம் சொல்லி *
வள்ளல் மணிவண்ணனே * என்று என்றே உன்னையும் வஞ்சிக்கும் **
கள்ள மனம் தவிர்ந்தே * உன்னைக் கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேன் *
வெள்ளத்து அணைக்கிடந்தாய் * இனி உன்னை விட்டு என் கொள்வனே? (3) - TVM 5.1.4
3236 என் கொள்வன் உன்னை விட்டு? என்னும் * வாசகங்கள் சொல்லியும் *
வன் கள்வனேன் மனத்தை * வலித்துக் கண்ண நீர் கரந்து **
நின்கண் நெருங்கவைத்தே * எனது ஆவியை நீக்ககில்லேன் *
என்கண் மலினம் அறுத்து * என்னைக் கூவி அருளாய் கண்ணனே (4) - TVM 5.1.5
3237 கண்ண பிரானை * விண்ணோர் கருமாணிக்கத்தை அமுதை *
நண்ணியும் நண்ணகில்லேன் * நடுவே ஓர் உடம்பில் இட்டு **
திண்ணம் அழுந்தக் கட்டிப் * பல செய்வினை வன் கயிற்றால் *
புண்ணை மறைய வரிந்து * என்னைப் போர வைத்தாய் புறமே (5) - TVM 5.1.6
3238 புறம் அறக் கட்டிக்கொண்டு * இரு வல்வினையார் குமைக்கும் *
முறை முறை யாக்கை புகல் ஒழியக் * கண்டு கொண்டொழிந்தேன் **
நிறம் உடை நால் தடம் தோள் * செய்ய வாய் செய்ய தாமரைக்கண் *
அறம் முயல் ஆழி அங்கைக் * கருமேனி அம்மான் தன்னையே (6) - TVM 5.1.7
3239 அம்மான் ஆழிப்பிரான் * அவன் எவ் இடத்தான்? யான் ஆர்? *
எம் மா பாவியர்க்கும் * விதி வாய்க்கின்று வாய்க்கும் கண்டீர் **
கைம்மா துன்பு ஒழித்தாய் என்று * கைதலைபூசல் இட்டே *
மெய்ம் மால் ஆயொழிந்தேன் * எம்பிரானும் என் மேலானே (7) - TVM 5.1.8
3240 மேலாத் தேவர்களும் * நிலத் தேவரும் மேவித் தொழும் *
மாலார் வந்து இனநாள் * அடியேன் மனத்தே மன்னினார் **
சேல் ஏய் கண்ணியரும் * பெரும் செல்வமும் நன்மக்களும் *
மேலாத் தாய் தந்தையும் * அவரே இனி ஆவாரே (8) - TVM 5.1.9
3241 ஆவார் ஆர் துணை? என்று * அலை நீர்க் கடலுள் அழுந்தும் *
நாவாய் போல் * பிறவிக்கடலுள் நின்று நான் துளங்க **
தேவு ஆர் கோலத்தொடும் * திருச் சக்கரம் சங்கினொடும் *
ஆஆ என்று அருள்செய்து * அடியேனொடும் ஆனானே (9) - TVM 5.1.10
3242 ஆனான் ஆளுடையான் என்று * அஃதே கொண்டு உகந்து வந்து *
தானே இன் அருள் செய்து * என்னை முற்றவும் தான் ஆனான் **
மீன் ஆய் ஆமையும் ஆய் * நரசிங்கமும் ஆய்க் குறள் ஆய் *
கான் ஆர் ஏனமும் ஆய்க் * கற்கி ஆம் இன்னம் கார் வண்ணனே (10) - TVM 5.1.11
3243 ## கார் வண்ணன் கண்ண பிரான் * கமலத்தடங்கண்ணன் தன்னை *
ஏர் வள ஒண் கழனிக் * குருகூர்ச் சடகோபன் சொன்ன **
சீர் வண்ணம் ஒண் தமிழ்கள் * இவை ஆயிரத்துள் இப் பத்தும் *
ஆர்வண்ணத்தால் உரைப்பார் * அடிக்கீழ்ப் புகுவார் பொலிந்தே (11)