Chapter 6

Removal of frenzy - (தீர்ப்பாரை யாம்)

வெறி விலக்கு
parAnkusa nAyaki’s friend (female pronoun) realizes the mental anguish and heartbreak experienced by parAnkusa nAyaki and elaborates on all the ways this could be resolved, saying “Other remedies (parihāranGgaL) will never resolve her condition.”
பராங்குச நாயகியின் மனநோயை அறிந்து, அவளது நோயைத் தீர்க்கும் வழி முறைகளை கூறி, வேறு பரிஹாரங்கள் அவளது நோயைத் தீர்க்கமாட்டா என்று தோழி கூறுதல் போல் இப்பகுதி அமைந்துள்ளது.
Verses: 3178 to 3188
Grammar: Kaliththuṟai / கலித்துறை
Pan: பழந்தக்கராகம்
Timing: 7.30 - 9.00 PM
Recital benefits: will have no trouble in their lives
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 4.6.1

3178 தீர்ப்பாரையாமினி எங்ஙனம்நாடுதும்? அன்னைமீர்! *
ஓர்ப்பாலிவ்வொண்ணுதல் உற்றநல்நோயிதுதேறினோம் *
போர்ப்பாகுதான்செய்து அன்றைவரைவெல்வித்த * மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்குஇவள் சிந்தை துழாய்த்திசைக்கின்றதே. (2)
3178 ## தீர்ப்பாரை யாம் இனி * எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்! *
ஓர்ப்பால் இவ் ஒள் நுதல் * உற்ற நல் நோய் இது தேறினோம் **
போர்ப்பாகு தான் செய்து * அன்று ஐவரை வெல்வித்த * மாயப்போர்த்
தேர்ப்பாகனார்க்கு * இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே? (1)
3178 ## tīrppārai yām iṉi * ĕṅṅaṉam nāṭutum aṉṉaimīr! *
orppāl iv ŏl̤ nutal * uṟṟa nal noy itu teṟiṉom **
porppāku tāṉ cĕytu * aṉṟu aivarai vĕlvitta * māyapport
terppākaṉārkku * ival̤ cintai tuzhāyt ticaikkiṉṟate? (1)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Elders, where shall we seek the one who can cure the malady of this young one with the bright forehead? It's a delightful sickness of the spirit, I am sure. She has lost her mind in Him who drove the chariot in the wondrous battle and secured victory for the five Pāṇḍavas.

Explanatory Notes

Face is the index of the mind. The agony of those killed by arrows or drowned in water is writ large on their faces. The unique sickness of spiritual character, the Nāyakī is suffering from, is reflected on her forehead The glow on her forehead helps to diagnose her malady as one that can be cured only by the Lord who inducted it, by stealing away her heart. Far from finding + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னைமீர்! தாய்மார்களே!; இனி இப்படிப்பட்ட நிலைமையான பின்பு; தீர்ப்பாரை இந்த நோயைத் தீர்க்க வல்லவர்களை; யாம் எங்ஙனம் நாம் எங்கு எப்படி ஆராய்ந்து; நாடுதும் தேடுவோம்; ஓர்ப்பால் இப்பொழுது நிரூபிப்பதால்; இவ் ஒள் நுதல் அழகிய நெற்றியையுடைய இப்பெண்; உற்ற நல் நோய் அடைந்திருக்கின்ற இந்த நோயின்; இது தேறினோம் தன்மை இது என்று அறிந்தோம்; அன்று முன்பு; போர் பாரதப் போரில்; பாகு தேர்பாகனாக எல்லாக் காரியங்களையும்; தான் செய்து தானே செய்து; ஐவரை பஞ்சபாண்டவர்களை; வெல்வித்த வெற்றியடையச் செய்த; மாயன் ஆச்சர்ய சக்தியுடையவரும்; போர் போரில்; தேர்ப்பாகனார்க்கு தேர்ப்பாகனுமான பெருமானிடம்; இவள் சிந்தை இந்தப் பெண்ணின் மனம்; துழாய் கலங்கி; திசைக்கின்றதே மயங்குகின்றது
ini after the disease is not being cured; thīrppārai those who can cure (this disease); yām we (you all and ī, who cannot understand the nature of the disease); enganam how; nādudhum to find?; ŏrppāl by checking now; i ol̤ nudhal this girl with beautiful forehead; uṝa affected with; nal laudable; idhu this; nŏy disease; thĕṛinŏm clearly understood (by seeing her nature and bodily beauty and as it appears to have internally affected her, this is not a bodily disease, but a distinguished disease of attachment towards bhagavān himself);; pŏr for the warfare; pāgu having abilities; thān himself (as said in -yasya manthrī chagŏpthā cha suhruchchaiva janārdhana:-); seydhu engaged; anṛu that day (when dhuryŏdhana and his brothers dominated pāṇdavars); aivarai those five; velviththa to be victorious; māyam having amaśing activities in the form of deceit (such as vowing not to take up weapons and took up the same, changing day into night); pŏr in the battle; thĕr in arjuna-s chariot; pāganārkku for the one who stood as the charioteer (in front [of arjuna], as said in -pārtham sanchādhya-, to accept the enemies arrows- on himself); ival̤ her; sindhai heart; thuzhāy bewildered; thisaikkinṛadhu losing her mind; thisaikkinṛadhu (both she and you) are losing your mind;

TVM 4.6.2

3179 திசைக்கின்றதேயிவள்நோய் இதுமிக்கபெருந்தெய்வம் *
இசைப்பின்றி நீரணங்காடும்இளந்தெய்வமன்றிது *
திசைப்பின்றியே சங்குசக்கரமென்றிவள்கேட்க * நீர்
இசைக்கிற்றிராகில் நன்றேயில்பெறுமிதுகாண்மினே.
3179 திசைக்கின்றதே இவள் நோய் * இது மிக்க பெருந் தெய்வம் *
இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் * இளந் தெய்வம் அன்று இது **
திசைப்பு இன்றியே * சங்கு சக்கரம் என்று இவள் கேட்க * நீர்
இசைக்கிற்றிராகில் * நன்றே இல் பெறும் இது காண்மினே (2)
3179 ticaikkiṉṟate ival̤ noy * itu mikka pĕrun tĕyvam *
icaippu iṉṟi nīr aṇaṅku āṭum * il̤an tĕyvam aṉṟu itu **
ticaippu iṉṟiye * caṅku cakkaram ĕṉṟu ival̤ keṭka * nīr
icaikkiṟṟirākil * naṉṟe il pĕṟum itu kāṇmiṉe (2)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Mothers, don't be confused; don't worship the minor deity, as it's inappropriate. This young lady's sickness is induced by the Supreme Lord. It's better to utter the words 'conch' and 'discus' to be heard by her, and you'll see it does her real good.

Explanatory Notes

(i) The mate clarifies to the bewildered womenfolk, going the wrong way by propitiating the inferior deity, that the Nāyakī is not under the spell of any but the Supreme Lord and the cure for her malady, therefore, lies in their singing His glory, in a chorus, within her hearing. In fact, nothing but this will enter the Nāyakī’s ears.

(ii) Here is an anecdote. One + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திசைக்கின்றதே அறிவு கெட்டு மயங்குகிறது; இவள் நோய் இவள் நோய்; இது மிக்க பெரும் மிகப் பெரிய; தெய்வம் தெய்வம் காரணமாக வந்தது; இசைப்பு இன்றி அதனால் பொருத்தமில்லாமல்; நீர் நீங்கள் கட்டுவிச்சியைக் கொண்டு; அணங்கு ஆடும் ஆடும் வெறியாட்டாம் வேண்டாம்; இளம் தெய்வம் சிறிய தெய்வத்தால்; அன்று இது வந்த நோய் அன்று இது; திசைப்பு இன்றியே மனம் குழம்பாமல்; இவள் இப்பெண்ணின்; கேட்க காதில் விழும்படியாக; சங்கு சக்கரம் என்று சங்கு சக்கரம் என்று; நீர் நீங்கள்; இசைக்கிற்றிராகில் சொன்னீர்களானால்; நன்றே நலமாகவே; இல் பெறும் இருப்புப் பெறுவாள்; இது காண்மினே இங்ஙனே நடத்திப் பாருங்கள்
ival̤ nŏy caused by her disease; idhu this situation; mikka perum dheyvam caused by sarvĕṣvara who is greater than all, with incomprehensible greatness;; idhu this [activity]; isaippu inṛi not fitting (to the nature of yours, hers and the disease); nīr you all; aṇangādum being engaged for the; il̤am dhĕvathā petty dhĕvathā (deity); anṛu is not [caused by];; thisaippu inṛiyĕ without getting confused (by the words of the others who advice you otherwise); sangu chakkaram ṣanka and chakra (which are distinguished symbols of that supreme lord); enṛu as; ival̤ she (parānkuṣa nāyaki, who is bewildered); kĕtka to hear; nīr you all; isaikkiṝir āgil if you can say; nanṛĕ well; il pĕrum be sustained; ithu this state; kāṇmin (imagine and) see; annaimīr ŏh mother!

TVM 4.6.3

3180 இதுகாண்மின்அன்னைமீர்! இக்கட்டுவிச்சிசொற்கொண்டு * நீர்
எதுவானுஞ்செய்து அங்கோர்கள்ளுமிறைச்சியும் தூவேன்மின் *
மதுவார்துழாய்முடி மாயப்பிரான்கழல்வாழ்த்தினால் *
அதுவே இவளுற்றநோய்க்கும் அருமருந்தாகுமே.
3180 இது காண்மின் அன்னைமீர் * இக் கட்டுவிச்சி சொல் கொண்டு * நீர்
எதுவானும் செய்து * அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன் மின் **
மது வார் துழாய் முடி * மாயப் பிரான் கழல் வாழ்த்தினால் *
அதுவே இவள் உற்ற நோய்க்கும் * அரு மருந்து ஆகுமே (3)
3180 itu kāṇmiṉ aṉṉaimīr * ik kaṭṭuvicci cŏl kŏṇṭu * nīr
ĕtuvāṉum cĕytu * aṅku or kal̤l̤um iṟaicciyum tūveṉ miṉ **
matu vār tuzhāy muṭi * māyap pirāṉ kazhal vāzhttiṉāl *
atuve ival̤ uṟṟa noykkum * aru maruntu ākume (3)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Listen, elders, try the recipe I suggest. Don't heed this gipsy; it's best to avoid offering meat and liquor. Instead, praise the wondrous Lord's feet with a tuḷaci garland. Studded with honey, it's a sure remedy for this young lady's unique malady.

Explanatory Notes

The mate appeals to the good sense of the elderly ladies, not to be led astray by the queer nostrums of the gipsy, the votary of a deity of a very low order, and defile the sacred precincts of Parāṅkuśa Nāyakī with such unsavoury things like meat and liquor, totally repugnant to her breeding. She also stresses the importance of singing the Lord’s praise, as a sure and certain remedy for curing the Nāyakī of her malady, induced by the Lord Himself.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னைமீர்! தாய்மார்களே!; இது காண்மின் நான் சொன்னதைச்செய்துபாருங்கள்; இக்கட்டுவிச்சி இக்கட்டுவிச்சியின்; சொல்கொண்டு பேச்சைக் கேட்டு; நீர் நீங்கள்; எதுவானும் செய்து எதையாவது செய்து; அங்கு அவ்விடத்திலே; ஓர் கள்ளும் ஒரு கள்ளையும்; இறைச்சியும் மாம்சஸத்தையும்; தூவேன்மின் இறைக்காதீர்கள்; மது வார் தேன் பெருகும்; துழாய் துளசி மாலையை; முடி மாயப் பிரான் அணிந்த மாயப்பிரானின்; கழல் வாழ்த்தினால் திருவடிகளைத் துதித்தால்; அதுவே இவள் அதுவே இவள் அடைந்திருக்கும்; உற்ற நோய்க்கும் நோய்க்கு உற்ற; அரு மருந்து ஆகுமே அருமையான மருந்தாகும்
idhu doing the remedy (ī suggested); kāṇmin see (the results for yourself);; i this lowly; kattuvichchi psychic reader-s; sol (inferior) words; koṇdu accepting them; nīr instead of seeing your own nature; edhuvānum any act (for the appeasement of the dhĕvathās who are to be rejected); seydhu engaging in; angu there; ŏr a (forbidden); kal̤l̤um alcohol; iṛaichchiyum meat; thūvĕnmin do not offer them;; madhuvār with flowing honey; thuzhāy decorated with thiruththuzhāy (thul̤asi); mudi having divine crown; māyam amaśing qualities and activities; pirān ṭhe great benefactor who lets those who desire for him, to enjoy him; kazhal for the divine feet; vāzhthināl if mangal̤āṣāsanams (well-wishing praises) are done; adhuvĕ not only such praising is befitting your true nature; ival̤ uṝa she is affected with; nŏykku for the disease; aru difficult to attain; marundhumāgum be the medicine as well as the enjoyable aspect, and be the relief for you who are suffering seeing her disease.; marundhāgum enṛu believing it to be the remedy

TVM 4.6.4

3181 மருந்தாகுமென்று அங்கோர்மாயவலவைசொற்கொண்டு * நீர்
கருஞ்சோறும்மற்றைச்செஞ்சோறும் களனிழைத்தென் பயன்? *
ஒருங்காகவேஉலகேழும்விழுங்கியுமிழ்ந்திட்ட *
பெருந்தேவன்பேர்சொல்லகிற்கில் இவளைப்பெறுதிரே.
3181 மருந்து ஆகும் என்று அங்கு ஓர் * மாய வலவை சொல் கொண்டு * நீர்
கருஞ் சோறும் மற்றைச் செஞ் சோறும் * களன் இழைத்து என் பயன்? **
ஒருங்காகவே உலகு ஏழும் * விழுங்கி உமிழ்ந்திட்ட *
பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில் * இவளைப் பெறுதிரே (4)
3181 maruntu ākum ĕṉṟu aṅku or * māya valavai cŏl kŏṇṭu * nīr
karuñ coṟum maṟṟaic cĕñ coṟum * kal̤aṉ izhaittu ĕṉ payaṉ? **
ŏruṅkākave ulaku ezhum * vizhuṅki umizhntiṭṭa *
pĕruntevaṉ per cŏllakiṟkil * ival̤aip pĕṟutire (4)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Ladies, what use is there in applying queer remedies, leaving lumps of cooked rice, black and red, at the junction of crossroads, misled by a quack? For this Nāyakī's revival, it's better to chant within her hearing the holy names of the Lord Supreme, who ate the worlds seven during the deluge and then spat them out.

Explanatory Notes

Once again, the importance of chanting the Lord’s holy names, proclaiming His glory, is emphasised by the mate besides repeating the warning, not to be led astray by the quacks.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மருந்து ஆகும் என்று மருந்து ஆகும் என்று எண்ணி; அங்கு ஓர் மாயவலவை ஒரு கட்டுவிச்சி; சொல் கொண்டு சொல்வதைக் கேட்டு; நீர் கருஞ் சோறும் நீங்கள் கருஞ்சோற்றையும்; மற்றை மற்றும்; செஞ் சோறும் செஞ்சோற்றையும்; களன் இழைத்து நாற்சந்தியிலே இடுவதால்; என் பயன்? என்ன பயன்?; உலகு ஏழும் ஏழு உலகங்களையும்; ஒருங்காகவே ஒரே சமயத்தில்; விழுங்கி பிரளயகாலத்தில் விழுங்கி; உமிழ்ந்திட்ட பின் வெளிப்படுத்திக் காத்த; பெருந்தேவன் பேர் பெருமானின் திருநாமங்களை; சொல்லகிற்கில் சொல்ல வல்லீர்களானால்; இவளைப் பெறுதிரே இவளை இழவாமே பெறுவீர்கள்
angu ŏr one who cannot be said to be -from this place, of this nature-; māyam deceitful; valavai one who keeps speaking in a flattering way, her; sol words; koṇdu believing; nīr you all (who are not qualified to be in contact with dhĕvathāntharams); karum sŏṛum black rice [thāmasa food]; maṝai different from that; sem sŏṛum with red rice [rājasa food]; kal̤an in front of the dhĕvathāntharams (other dhĕvathās); izhaiththu placing them (to please them); en payan what is the use?; ulagu ĕzhum all worlds (without differentiating between devotees and others); orungāgavĕ at once; vizhungi himself consumed to protect (to save them from being consumed by the deluge); umizhndhitta spat them out again (after the deluge completes); perum dhĕvan para dhĕvathā-s (supreme lord-s); pĕr divine name; sollagiṛkil if you can recite; ival̤ai (distinguished) parānkuṣa nāyaki; peṛudhir will have her alive.; ival̤ai she (who is having unsurpassed greatness), her

TVM 4.6.5

3182 இவளைப்பெறும்பரிசு இவ்வணங்காடுதலன்றந்தோ! *
குவளைத்தடங்கண்ணும் கோவைச்செவ்வாயும்பயந்தனள் *
கவளக்கடாக்களிறட்டபிரான் திருநாமத்தால் *
தவளப்பொடிக்கொண்டு நீரிட்டிடுமின்தணியுமே.
3182 இவளைப் பெறும் பரிசு * இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ *
குவளைத் தடங் கண்ணும் * கோவைச் செவ்வாயும் பயந்தனள் **
கவளக் கடாக் களிறு அட்ட பிரான் * திருநாமத்தால் *
தவளப் பொடிக் கொண்டு * நீர் இட்டிடுமின் தணியுமே (5)
3182 ival̤aip pĕṟum paricu * iv aṇaṅku āṭutal aṉṟu anto *
kuval̤ait taṭaṅ kaṇṇum * kovaic cĕvvāyum payantaṉal̤ **
kaval̤ak kaṭāk kal̤iṟu aṭṭa pirāṉ * tirunāmattāl *
taval̤ap pŏṭik kŏṇṭu * nīr iṭṭiṭumiṉ taṇiyume (5)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Folks, this Nāyakī is terribly unwell. Alas! The methods you adopt can't save her. Singing the names of the Lord who slew the tusker is a must. Let the dust from the feet of pure devotees be strewn on her. There's no remedy as sure as this.

Explanatory Notes

Finding that the methods, adopted by the elderly women around, worsen the condition of Parāṅkuśa Nāyakī, her mate lustily pleads with them to give up all their unwholesome activities and follow the certain remedy suggested by her. All that needs to be done is to scatter on the Nāyakī’s person, the dust collected from the feet of the devotees, pious and pure, to the accompaniment + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இவளை இப்பெண்ணை; பெறும் பரிசு பெறுதற்குரிய மார்க்கம்; இ அணங்கு ஆடுதல் அன்று இவ்வாறு வெறியாடுதலன்று; அந்தோ! அந்தோ!; குவளை குவளை மலர்போன்ற; தடங் கண்ணும் விசாலமான கண்களும்; கோவை கோவைப்பழம் போன்ற; செவ்வாயும் சிவந்த அதரமும் உடைய இவள்; பயந்தனள் பசலை படரப்பெற்றாள்; கவளக் கடா மருந்துகளைக் கவளங்கொண்டதாய்; களிறு அட்ட குவலயாபீட யானையை கொன்ற; பிரான் பெருமானின்; திருநாமத்தால் திருநாமங்களை உச்சரித்தபடி; தவளப் பொடி பரம பாகவதர்களின் பாத தூளிகளை; கொண்டு நீர் கொண்டு வந்து நீங்கள்; இட்டிடுமின் இவளுக்கு இட்டீர்களானால்; தணியுமே உடனே இவளதுநோய் தீரும்
peṛum to redeem; parisu method; i aṇangādudhal anṛu it is not this activity for this dhĕvathā;; andhŏ alas! (how her disease has worsened!); kuval̤ai thada kaṇṇum eyes which are dark/large like kuval̤ai (blue-lotus) flower; kŏvai sem vāyum kŏvaikkāy (ivy gourd) like reddish lips/mouth; payandhanal̤ lost complexion and have become pale;; kaval̤am (consuming) handful of [intoxicating] food; kadām with water coming out of it-s trunk etc; kal̤iṛu elephant (named kuvalayāpīdam); atta killed; pirān great benefactor-s; thirunāmaththāl by reciting the divine names (to be rid of the hurdles); thaval̤am pristine; podi dust of the divine feet; koṇdu taking; nīr you all (who are seeking out even unsuitable ways to cure her disease, due to attachment towards her); ittidumin offer it quickly (so she can come in contact with it); thaṇiyum (the paleness in her body) will be reduced [by doing that]; annaimīr ŏh mothers!

TVM 4.6.6

3183 தணியும் பொழுதில்லை நீரணங்காடுதிர்அன்னைமீர்! *
பிணியுமொழிகின்றதில்லை பெருகுமிதுவல்லால் *
மணியினணிநிறமாயன் தமரடிநீறுகொண்டு *
அணியமுயலின் மற்றில்லைகண்டீர்இவ்வணங்குக்கே.
3183 தணியும் பொழுது இல்லை * நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர் *
பிணியும் ஒழிகின்றது இல்லை * பெருகும் இது அல்லால் **
மணியின் அணி நிற மாயன் * தமர் அடி நீறு கொண்டு *
அணிய முயலின் * மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே (6)
3183 taṇiyum pŏzhutu illai * nīr aṇaṅku āṭutir aṉṉaimīr *
piṇiyum ŏzhikiṉṟatu illai * pĕrukum itu allāl **
maṇiyiṉ aṇi niṟa māyaṉ * tamar aṭi nīṟu kŏṇṭu *
aṇiya muyaliṉ * maṟṟu illai kaṇṭīr iv aṇaṅkukke (6)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Mothers, it's a pity you persist in wrong methods; it only aggravates the malady. I insist that you smear the dust off the feet of devotees of the Lord who excels the rare blue gem. No other remedy can work so well.

Explanatory Notes

(i) The elders pay no heed to the advice of the mate and persist in propitiating the inferior deity, which only aggravates the malady of the Nāyakī. An exasperated mate now asks them to stop their activities forthwith and smear the Nāyakī with the dust from the feet of Śrī Vaiṣṇavas. When the women plead that it is beyond them to collect the dust in question, the mate + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னைமீர்! தாய்மார்களே!; தணியும் பொழுது சிறிதும் ஓய்வு; இல்லை நீர் இல்லாமல் நீங்கள்; அணங்கு ஆடுதிர் அணங்கு ஆடாதீர்கள்; பிணியும் இந்த வெறியாட்டத்தினால் நோய்; பெருகும் இது அல்லால் பெருகுமே தவிர; ஒழிகின்றது இல்லை ஒழியப்போவதில்லை; இ அணங்குக்கே இப்பெண்பிள்ளைக்கு; மணியின் நீலமணியியைக் காட்டிலும்; அணி நிற அழகிய நிறம் படைத்த; மாயன் தமர் மாயப் பெருமானின்; அடி நீறு அடியார்களுடைய பாத தூளிகளை; கொண்டு கொண்டு வந்து; அணிய முயலின் இடுவதற்கு முயற்சி செய்தால்; மற்று இதற்கு சமமான பரிஹாரம்; இல்லை கண்டீர் வேறில்லை பாருங்கள்
thaṇiyum pozhudhu break; inṛi without; nīr you all; aṇangādudhir engaging in worshipping this [petty] dhĕvathā;; idhu having this as the reason; piṇiyum her disease; perugum allāl is only worsening; ozhiginṛadhu illai not getting cured;; maṇiyin more than a blue jewel; aṇi unsurpassed, distinguished; niṛam having complexion; māyan in the matters of krishṇa who is an amaśing personality; thamar bhāgavathas who are well aware of their subordinate relationship with krishṇa; adi nīṛu dust from the divine feet (which was explained as -thaval̤ap podi #); koṇdu aṇiya to apply on her; muyalin if you try; i aṇangukku for this divine natured girl (parānkuṣa nāyaki); maṝu another remedy matching this one; illai kaṇdīr you would see that it does not exist; annaimīr ŏh mothers!

TVM 4.6.7

3184 அணங்குக்கருமருந்தென்று அங்கோராடும்கள்ளும்பராய் *
துணங்கையெறிந்து நும்தோள்குலைக்கப்படுமன்னைமீர்! *
உணங்கல்கெடக் கழுதையுதடாட்டம்கண்டுஎன்பயன்? *
வணங்கீர்கள் மாயப்பிரான்தமர்வேதம்வல்லாரையே.
3184 அணங்குக்கு அரு மருந்து என்று * அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய் *
சு(து)ணங்கை எறிந்து * நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் **
உணங்கல் கெடக் * கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்? *
வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் * வேதம் வல்லாரையே (7)
3184 aṇaṅkukku aru maruntu ĕṉṟu * aṅku or āṭum kal̤l̤um parāy *
cu(tu)ṇaṅkai ĕṟintu * num tol̤ kulaikkappaṭum aṉṉaimīr **
uṇaṅkal kĕṭak * kazhutai utaṭu āṭṭam kaṇṭu ĕṉ payaṉ? *
vaṇaṅkīrkal̤ māyap pirāṉ tamar * vetam vallāraiye (7)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Elders, you think it's a rare and precious cure for this young lady's sickness when you offer sheep and liquor to the inferior deity. In distress, you witness men with trembling shoulders in awkward dance. Could you keep admiring the moving lips of a donkey as it eats up the paddy spread out for drying? It's better to worship Vedic scholars, the holy men of the wondrous Lord.

Explanatory Notes

(i) The mate disconcertingly asks the elders what exactly they mean by persisting in all that tom-foolery, at the expense of Parāṅkuśa Nāyakī. What they do is like admiring the movement of the lips of a donkey noted for its ugliness, as it eats up the boiled paddy spread out in the open for sun-drying, unmindful of the loss of paddy. She advises them to worship the holy + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அன்னைமீர்! தாய்மார்களே!; அணங்குக்கு இப்பெண்பிள்ளைக்கு; அருமருந்து என்று பெறுதற்கரிய மருந்தென்று; அங்கு அந்த தேவதைகளுக்கு; ஓர் ஆடும் ஆடு அறுக்கவும்; கள்ளும் பராய் கள் நிவேதனம் செய்யவும் பாரித்து; துணங்கை எறிந்து துணங்குக் கூத்தாடுவதால்; நுன் தோள் உங்கள் தோள்கள் தான்; குலைக்கப்படும் வேதனைப்படும் பயன் ஒன்றுமில்லை; உணங்கல் காய்வதற்கு உலர்த்திய; கெட நெல்லை தின்னும்; கழுதை உதடு கழுதையின் உதடு; ஆட்டம் கண் அசைகின்ற அழகைக் காண்பதால்; என் பயன்? ஏதாவது பயன் உண்டோ?; மாயப் பிரான் தமர் மாயப் பிரானின் அடியார்களை; வேதம் வல்லாரையே வேதம் அறிந்தவர்களை; வணங்கீர்கள் வணங்குவீர்களாக
aṇangukku for this divine daughter of yours; aru marundhu enṛu considering to be a rare medicine; angu for the other dhĕvathā; ŏr ādum to cut a goat, the act of which is prohibited; kal̤l̤um to offer alcohol; parāy praying; suṇangai eṛindhu having goose bumps; num thŏl̤ your shoulders; kulaikka swaying; padum occurred;; uṇangal paddy which is being dried; keda to be wasted; kazhudhai donkey-s (which is eating that paddy); udhadu āttam the lips that are chewing; kaṇdu watching; en payan what is the benefit?; māyam amaśing qualities and activities; pirān the benefactor who manifested them to her and let her enjoy them; thamar devotees; vĕdham vallārai bhāgavathas who are best among vaidhikas (knowledgeable in vĕdham and practicing the principles); vaṇangīrgal̤ start worshipping them.; vĕdham vallārgal̤ai bhāgavathas who are experts in the essence of all vĕdhams

TVM 4.6.8

3185 வேதம்வல்லார்களைக்கொண்டு விண்ணோர்பெருமான்திருப்
பாதம்பணிந்து * இவள்நோயிதுதீர்த்துக்கொள்ளாதுபோய் *
ஏதம்பறைந்துஅல்லசெய்து கள்ளூடுகலாய்த்தூய் *
கீதமுழவிட்டு நீரணங்காடுதல்கீழ்மையே.
3185 வேதம் வல்லார்களைக் கொண்டு * விண்ணோர் பெருமான் திருப்
பாதம் பணிந்து * இவள் நோய் இது * தீர்த்துக் கொள்ளாது போய் **
ஏதம் பறைந்து அல்ல செய்து * கள் ஊடு கலாய்த் தூய் *
கீதம் முழவு இட்டு * நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே (8)
3185 vetam vallārkal̤aik kŏṇṭu * viṇṇor pĕrumāṉ tirup
pātam paṇintu * ival̤ noy itu * tīrttuk kŏl̤l̤ātu poy **
etam paṟaintu alla cĕytu * kal̤ ūṭu kalāyt tūy *
kītam muzhavu iṭṭu * nīr aṇaṅku āṭutal kīzhmaiye (8)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

What you do, mothers, is indeed derogatory. Speaking unseemly words with a liberal use of liquor amidst drumbeats to propitiate the inferior deity, instead of worshipping the feet of the Supreme Lord, Chief of Nithyasuris, through the good offices of Vedic Scholars, to cure the sickness of this young lady.

Explanatory Notes

(i) The mate advises the womenfolk to desist from the propitiation of minor deities and adore instead the feet of the Supreme Lord through the good offices of the Vedic Scholars, the Lord’s devotees, and get Parāṅkuśa Nāyakī cured of her God-sickness.

The direct approach to the Lord is hazardous like mounting an elephant in the absence of its keeper. That is why it + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வேதம் வல்லார்களை வேதம் அறிந்த; கொண்டு பாகவதர்களைக் கொண்டு; விண்ணோர் நித்யஸூரிகளின் தலைவனான; பெருமான் பெருமானின்; திருப்பாதம் பணிந்து திருப்பாதங்களைப் பணிந்து; இவள் நோய் இது இவளுடைய இந்த நோயை; தீர்த்து கொள்ளாது போய் போக்கிக்கொள்ளாமல்; ஏதம் பறைந்து இழிவான பேச்சுகளைப் பேசி; அல்ல செய்து தகாத காரியங்களைச் செய்து; கள் ஊடு கலாய்த் தூய் கள்ளைக் கலந்து தூவி; கீதம் முழவு இட்டு தார தம்பட்டம் ஒலித்துப் பாடி; நீர் நீங்கள்; அணங்கு ஆடுதல் வெறியாட்டம் ஆடுதல்; கீழ்மையே உங்கள் குல கௌரவத்துக்கு இழுக்காகும்
koṇdu having them (as purushakāram (recommendation)); viṇṇŏr perumān sarvĕṣvaran who is worshipped by nithyasūris, his; thiru pādham divine feet which are most enjoyable; paṇindhu surrendering; ival̤ (greatly distinguished) parānkuṣa nāyaki #s; idhu nŏy this disease which is different [from other diseases] in this world; thīrththuk kol̤l̤ādhu instead of curing it; pŏy going (towards other dhĕvathās as their devotees); ĕdham the words indicating other dhĕvathās (which hurt the true nature of self); paṛaindhu speaking; alla seydhu engaging in forbidden activities towards them; ūdu in between; kal̤ surā (alcohol); kalāy mix; thūy throwing/offering; gīdham matching the songs (glorifying them); muzhavu ittu making noises with musical instruments; nīr you (who are related to her); aṇangu ādudhal dancing, being possessed by those dhĕvathās; kīzhmaiyĕ is an insult (for your family heritage); kīzhmaiyināl lowliness (due to non-definability)

TVM 4.6.9

3186 கீழ்மையினாலங்கு ஓர்கீழ்மகனிட்டமுழவின்கீழ் *
நாழ்மைபலசொல்லி நீரணங்காடும்பொய்காண்கிலேன் *
ஏழ்மைப்பிறப்புக்கும்சேமம் இந்நோய்க்கும்ஈதேமருந்து *
ஊழ்மையில்கண்ணபிரான் கழல்வாழ்த்துமினுன்னித்தே.
3186 கீழ்மையினால் அங்கு ஓர் * கீழ்மகன் இட்ட முழவின் கீழ் *
நாழ்மை பல சொல்லி * நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன் **
ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் * இந் நோய்க்கும் ஈதே மருந்து *
ஊழ்மையில் கண்ண பிரான் * கழல் வாழ்த்துமின் உன்னித்தே (9)
3186 kīzhmaiyiṉāl aṅku or * kīzhmakaṉ iṭṭa muzhaviṉ kīzh *
nāzhmai pala cŏlli * nīr aṇaṅku āṭum pŏy kāṇkileṉ **
ezhmaip piṟappukkum cemam * in noykkum īte maruntu *
ūzhmaiyil kaṇṇa pirāṉ * kazhal vāzhttumiṉ uṉṉitte (9)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Womenfolk, I can't condone your base activities, the dirty concert of a mean fellow, and the rotten words uttered by him. Meditate on Kaṇṇaṉ's feet and praise His glory; it will do you good for generations and also cure this lady's sickness.

Explanatory Notes

While condemning the base activities indulged by the womenfolk, the mate advises them to meditate on Lord Kṛṣṇa’s feet and sing His glory, as this will operate both ways, that is, it will stand them in good stead for generations to come besides curing Parāṅkuśa Nāyakī of her God-sickness. This is like those harvesting jute making bundles of it with jute itself, unlike the paddy stalks, for tying which one has to look for some other material, a string or rope.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கீழ்மையினால் உங்கள் நீசத்தனத்தினால்; அங்கு ஓர் கீழ் மகன் நீசனான சண்டாளனொருவன்; இட்ட நடத்தும்; முழவின் கீழ் வாத்ய கோஷத்தின் சார்பாக; நாழ்மை பல சொல்லி தகாத வார்த்தைகள் சொல்லி; நீர் அணங்கு ஆடும் பொய் நீங்கள் வெறியாடுவதை; காண்கிலேன் நான் காணமாட்டேன்; ஊழ்மையில் முறைப்படி; கண்ண பிரான் கண்ணனின்; கழல் உன்னித்தே திருவடிகளைச் சிந்தித்து; வாழ்த்துமின் வாழ்த்தி வணங்குங்கள்; ஏழ்மைப் பிறப்புக்கும் ஏழேழ் பிறவிக்கும்; சேமம் இது தான் உகந்தது; இந் நோய்க்கும் இந் நோய்க்கும்; ஈதே மருந்து இதுவே மருந்தாகும்
angu ŏr one who cannot be explained as -ḥe is from this place, of this nature-; kīzhmagan lowly person; itta promoted by; muzhavin kīzh playing the musical instruments; nāzhmai pala praising the greatness of other dhĕvathās in many ways; solli speaking; nīr you all; aṇangu ādum engaged in worshipping those dhĕvathās being engrossed in them; poy useless activity; kāṇgilĕn ī cannot witness;; ĕzhmaip piṛappukkum (as said in “sapthasapthachasapthacha” (twenty one births)), all births which can be one among the seven types; sĕmam comforting; īdhĕ this; innŏykkum marundhu the medicine for this disease;; ūzhmaiyil befitting the true nature of self and following the ancient practice; kaṇṇapirān krishṇa who is a benefactor through his saulabhyam (simplicity); kazhal divine feet; unniththu meditating upon; vāzhththumin perform mangal̤āṣāsanam (wishing well); avanai allāl other than him (krishṇa)

TVM 4.6.10

3187 உன்னித்துமற்றொருதெய்வம்தொழாள் அவனை யல்லால் *
நும்மிச்சைசொல்லி நும்தோள்குலைக்கப்படும் அன்னைமீர்! *
மன்னப்படும்மறைவாணனை வண்துவராபதி
மன்னனை * ஏத்துமின் ஏத்துதலும்தொழுதாடுமே. (2)
3187 உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் * அவனை அல்லால் *
நும் இச்சை சொல்லி * நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் **
மன்னப்படும் மறைவாணனை * வண் துவராபதி
மன்னனை * ஏத்துமின் ஏத்துதலும் * தொழுது ஆடுமே (10)
3187 uṉṉittu maṟṟu ŏru tĕyvam tŏzhāl̤ * avaṉai allāl *
num iccai cŏlli * num tol̤ kulaikkappaṭum aṉṉaimīr **
maṉṉappaṭum maṟaivāṇaṉai * vaṇ tuvarāpati
maṉṉaṉai * ettumiṉ ettutalum * tŏzhutu āṭume (10)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Mother, you speak base words at will and your shoulders tremble in awkward dance. Only the Lord Supreme is worthy of worship for this lady. Therefore, sing praises of the lovely Prince of Tuvarāpati to revive her and make her dance joyfully.

Explanatory Notes

(i) The mate insists that the womenfolk should take due note of the Nāyakī’s unbounded love for Lord Kṛṣṇa, the Prince of Dvārakā and remould their activities suitably. “What fun is it, tending the nose for an injury in the knee?”

(ii) Parāṅkuśa Nāyakī has never worshipped any one but the Supreme Lord, not even as a tender child. The crescent moon is usually worshipped + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அவனை அல்லால் (அந்தப் பெண்) எம்பெருமானைத் தவிர்த்து; மற்றொரு தெய்வம் வேறொரு தெய்வத்தை; உன்னித்து தொழாள் நினைத்து தொழமாட்டாள்; நும் தோள் உங்கள் தோள்களை; குலைக்கப்படும் அசைத்தபடி; நும் இச்சை உங்கள் மனம் போனபடி; சொல்லி தகாத பேச்சைப் பேசுகிறதைத் தவிர்த்து; அன்னைமீர்! தாய்மார்களே!; மன்னப்படும் நித்யமாக மனதில் தோன்றும்; மறை வாணனை வேதங்களால் போற்றபடும்; வண் துவராபதி அழகிய துவாரகாபுரிக்கு; மன்னனை மன்னனான பெருமானை; ஏத்துமின்! வாழ்த்தி வணங்குங்கள்; ஏத்துதலும் அப்படித் துதித்தவுடனே; தொழுது அவளும் தொழுது; ஆடுமே களித்து ஆடுவாள்
maṝu oru dheyvam any other dhĕvathā; unniththu meditate upon; thozhāl̤ will not worship;; annaimīr ŏh mothers you have given birth to her (being bewildered due to having attachment towards her)!; num ichchai your desires; solli explained; num thŏl̤ your shoulders (which are to be engaged in service to bhagavān); kulaikka to be engaged in (worship of other dhĕvathās); padum occurred;; manna eternally; padum thought about (in heart); maṛai vāṇanai who is exclusively explained in vĕdham; vaṇ thuvarāpathi mannanai krishṇa who is the emperor of ṣrīmadh dhvārakā; ĕththumin praise;; ĕththudhalum being awakened at the time of such praising; thozhudhu pray (unto him); ādum will dance with excitement.; thozhudhu performing anjali (joined palms- which befits the ṣĕshathva (servitude))

TVM 4.6.11

3188 தொழுதாடித்தூமணிவண்ணனுக்கு ஆட்செய்துநோய்தீர்ந்த *
வழுவாததொல்புகழ் வண்குருகூர்ச்சடகோபன் * சொல்
வழுவாதவாயிரத்துள் இவைபத்துவெறிகளும் *
தொழுதாடிப்பாடவல்லார் துக்கசீலமிலர்களே. (2)
3188 ## தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு * ஆட்செய்து நோய் தீர்ந்த *
வழுவாத தொல் புகழ் * வண் குருகூர்ச் சடகோபன் ** சொல்
வழுவாத ஆயிரத்துள் * இவை பத்து வெறிகளும் *
தொழுது ஆடிப் பாட வல்லார் * துக்க சீலம் இலர்களே (11)
3188 ## tŏzhutu āṭi tū maṇi vaṇṇaṉukku * āṭcĕytu noy tīrnta *
vazhuvāta tŏl pukazh * vaṇ kurukūrc caṭakopaṉ ** cŏl
vazhuvāta āyirattul̤ * ivai pattu vĕṟikal̤um *
tŏzhutu āṭip pāṭa vallār * tukka cīlam ilarkal̤e (11)

Ragam

Pantuvaraḷi / பந்துவராளி

Thalam

Aḍa / அட

Bhavam

Thozhi (Friend)

Simple Translation

Those who recite, adore, and dance will be rid of miseries. These ten songs, deprecating those who appease minor deities, are from the flawless thousand of Caṭakōpaṉ, Chief of lovely Kurukūr, born with flawless fame. He danced in adoration of the lovely Lord, gem-hued, and serving Him with great devotion got his sickness cured.

Explanatory Notes

(i) This decad has clearly brought out the Āzhvār’s unflinching and exclusive devotion to Lord Viṣṇu (Śrīman Nārāyaṇa), of sapphire hue and his intolerance of those who stray into the domain of worship of the minor deities The elderly women listened to the mate’s advice, at long last, and by adoring the Supreme Lord and dancing, in a body, singing His praise, they did + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தொழுது ஆடி வணங்கியும் ஆடியும்; தூமணி தூய நீலமணி போன்ற; வண்ணனுக்கு எம்பெருமானுக்கு; ஆட்செய்து கைங்கர்யம் செய்தும்; நோய் தீர்ந்த நோய் தீரப்பெற்றவரும்; வழுவாத மாசில்லா; தொல் புகழ் புகழையுடையவருமான; வண் குருகூர் அழகிய திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் சொல் நம்மாழ்வார் அருளிச்செய்த; வழுவாத குறைவற்ற; ஆயிரத்துள் ஆயிரம் பாசுரங்களுள்; வெறிகளும் வெறியாட்டு விஷயங்களை விலக்கி உரைத்த; இவை பத்து இந்தப் பத்துப் பாசுரங்களையும்; தொழுது ஆடிப்பாட தொழுது ஆடிப்பாட; வல்லார் வல்லார்கள்; துக்க சீலம் துக்கப்படுந்தன்மை; இலர்களே இல்லாதவராவர்
ādi (out of that joy) dancing up and down,; thū maṇi resembling a radiant blue jewel; vaṇṇanukku krishṇa who is having such complexion; āl̤ seydhu doing this as kainkaryam (service); nŏy thīrndha to cure the disease of sorrow of separation from emperumān; vazhuvādha without faults (of any contact with other dhĕvathās in any manner); thol pugazh one who is having the greatness of natural servitude( towards bhagavān; vaṇ kurugūr the leader of distinguished āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; sol mercifully spoken by; vazhuvādha revealing without missing any aspect of bhagavath svarūrpam etc; āyiraththul̤ among thousand pāsurams; veṛigal̤ sang to eliminate the worship of dhĕvathās; ivai paththum this decad; thozhudhu worshipping (being engrossed in the meanings and becoming blissful); ādi dance; pāda sing (out of overwhelming love); vallār experts; dhukkam sorrow born out of separation from bhagavān and the sorrow caused by worshipping dhĕvathās as a remedy to cure such suffering; seelam character; ilargal̤ will be devoid of.; gyālam all entities [of the world]