Chapter 5
Exultation upon the Lord's presence - (வீற்றிருந்து ஏழ்)
எம்பெருமானது இருப்பைக் கண்டு மகிழ்தல்
On obtaining Bhagavān’s divine blessings, the joy overflows from Āzhvār’s heart like the floodgates have been opened. “Who is equal to me in attaining this bliss?” says Āzhvār. Who else deserves to receive this unparalleled utter bliss of an experience?
பகவானின் திருவருள் பெற்ற ஆழ்வாரின் ஆனந்தம் வெள்ளம்போல் புரண்டோடுகிறது இப்படிப்பட்ட எனக்கு நிகராவார் யார்? என்று ஆழ்வார் இத்திருவாய்மொழியில் கூறுகிறார். நிகரற்ற ஆனந்தானுபவம் இவருக்கின்றி யாருக்குக் கிடைக்கும்?
நான்காம் பத்து -ஐந்தாந்திருவாய்மொழி – ‘வீற்றிருந்து’-பிரவேசம்
கீழில் + Read more
Verses: 3167 to 3177
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: இந்தளம்
Timing: 9.37-10.48 AM
Recital benefits: their karma will go away
- TVM 4.5.1
3167 ## வீற்றிருந்து ஏழ் உலகும் * தனிக்கோல் செல்ல வீவு இல் சீர் *
ஆற்றல் மிக்கு ஆளும் அம்மானை * வெம் மா பிளந்தான் தன்னை **
போற்றி என்றே கைகள் ஆரத் * தொழுது சொல் மாலைகள் *
ஏற்ற நோற்றேற்கு * இனி என்ன குறை எழுமையுமே? (1) - TVM 4.5.2
3168 மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் * உறை மார்பினன் *
செய்ய கோலத் தடங் கண்ணன் * விண்ணோர் பெருமான் தன்னை **
மொய்ய சொல்லால் இசை மாலைகள் ஏத்தி * உள்ளப் பெற்றேன் *
வெய்ய நோய்கள் முழுதும் * வியன் ஞாலத்து வீயவே (2) - TVM 4.5.3
3169 வீவு இல் இன்பம் மிக * எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன் *
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் * விண்ணோர் பெருமான் தன்னை **
வீவு இல் காலம் இசைமாலைகள் ஏத்தி * மேவப் பெற்றேன் *
வீவு இல் இன்பம் மிக * எல்லை நிகழ்ந்தனன் மேவியே (3) - TVM 4.5.4
3170 மேவி நின்று தொழுவார் * வினை போக மேவும் பிரான் *
தூவி அம் புள் உடையான் * அடல் ஆழி அம்மான் தன்னை **
நா இயலால் இசைமாலைகள் ஏத்தி * நண்ணப் பெற்றேன் *
ஆவி என் ஆவியை * யான் அறியேன் செய்த ஆற்றையே (4) - TVM 4.5.5
3171 ஆற்ற நல்ல வகை காட்டும் அம்மானை * அமரர் தம்
ஏற்றை * எல்லாப் பொருளும் விரித்தானை எம்மான் தன்னை **
மாற்ற மாலைப் புனைந்து ஏத்தி * நாளும் மகிழ்வு எய்தினேன் *
காற்றின் முன்னம் கடுகி * வினை நோய்கள் கரியவே (5) - TVM 4.5.6
3172 கரிய மேனிமிசை * வெளிய நீறு சிறிதே இடும் *
பெரிய கோலத் தடங்கண்ணன் * விண்ணோர் பெருமான் தன்னை **
உரிய சொல்லால் இசைமாலைகள் ஏத்தி * உள்ளப் பெற்றேற்கு *
அரியது உண்டோ எனக்கு * இன்று தொட்டும் இனி என்றுமே (6) - TVM 4.5.7
3173 என்றும் ஒன்று ஆகி * ஒத்தாரும் மிக்கார்களும் * தன் தனக்கு
இன்றி நின்றானை * எல்லா உலகும் உடையான் தன்னை **
குன்றம் ஒன்றால் மழை காத்த பிரானைச் * சொல் மாலைகள் *
நன்று சூட்டும் விதி எய்தினம் * என்ன குறை நமக்கே? (7) - TVM 4.5.8
3174 நமக்கும் பூவின்மிசை நங்கைக்கும் * இன்பனை * ஞாலத்தார்
தமக்கும் * வானத்தவர்க்கும் பெருமானை * தண் தாமரை
சுமக்கும் * பாதப் பெருமானைச் * சொல்மாலைகள் * சொல்லுமாறு
அமைக்க வல்லேற்கு * இனி யாவர் நிகர் அகல் வானத்தே? (8) - TVM 4.5.9
3175 வானத்தும் வானத்துள் உம்பரும் * மண்ணுள்ளும் மண்ணின் கீழ்த்
தானத்தும் * எண் திசையும் தவிராது * நின்றான் தன்னை *
கூனல் சங்கத் தடக்கையவனைக் * குடம் ஆடியை வானக்
கோனை * கவி சொல்ல வல்லேற்கு * இனி மாறு உண்டே? (9) - TVM 4.5.10
3176 உண்டும் உமிழ்ந்தும் கடந்தும் இடந்தும் * கிடந்தும் நின்றும் *
கொண்ட கோலத்தொடு வீற்றிருந்தும் * மணம் கூடியும் **
கண்ட ஆற்றால் தனதே * உலகு என நின்றான் தன்னை *
வண் தமிழ் நூற்க நோற்றேன் * அடியார்க்கு இன்ப மாரியே (10) - TVM 4.5.11
3177 ## மாரி மாறாத தண் அம் மலை * வேங்கடத்து அண்ணலை *
வாரி மாறாத பைம் பூம் பொழில் சூழ் * குருகூர் நகர் **
காரி மாறன் சடகோபன் * சொல் ஆயிரத்து இப் பத்தால் *
வேரி மாறாத பூமேல் இருப்பாள் * வினை தீர்க்குமே 11