Chapter 6

Removal of frenzy - (தீர்ப்பாரை யாம்)

வெறி விலக்கு
parAnkusa nAyaki’s friend (female pronoun) realizes the mental anguish and heartbreak experienced by parAnkusa nAyaki and elaborates on all the ways this could be resolved, saying “Other remedies (parihāranGgaL) will never resolve her condition.”
பராங்குச நாயகியின் மனநோயை அறிந்து, அவளது நோயைத் தீர்க்கும் வழி முறைகளை கூறி, வேறு பரிஹாரங்கள் அவளது நோயைத் தீர்க்கமாட்டா என்று தோழி கூறுதல் போல் இப்பகுதி அமைந்துள்ளது.

நான்காம் பத்து -ஆறாம் திருவாய்மொழி – தீர்ப்பாரை யாம் இனி -பிரவேசம்-

கீழ் திருவாய்மொழி ‘வீற்றிருந்து ஏழுல’ காயிருக்க, + Read more
Verses: 3178 to 3188
Grammar: Kaliththuṟai / கலித்துறை
Pan: பழந்தக்கராகம்
Timing: 7.30 - 9.00 PM
Recital benefits: will have no trouble in their lives
  • TVM 4.6.1
    3178 ## தீர்ப்பாரை யாம் இனி * எங்ஙனம் நாடுதும் அன்னைமீர்! *
    ஓர்ப்பால் இவ் ஒள் நுதல் * உற்ற நல் நோய் இது தேறினோம் **
    போர்ப்பாகு தான் செய்து * அன்று ஐவரை வெல்வித்த * மாயப்போர்த்
    தேர்ப்பாகனார்க்கு * இவள் சிந்தை துழாய்த் திசைக்கின்றதே? (1)
  • TVM 4.6.2
    3179 திசைக்கின்றதே இவள் நோய் * இது மிக்க பெருந் தெய்வம் *
    இசைப்பு இன்றி நீர் அணங்கு ஆடும் * இளந் தெய்வம் அன்று இது **
    திசைப்பு இன்றியே * சங்கு சக்கரம் என்று இவள் கேட்க * நீர்
    இசைக்கிற்றிராகில் * நன்றே இல் பெறும் இது காண்மினே (2)
  • TVM 4.6.3
    3180 இது காண்மின் அன்னைமீர் * இக் கட்டுவிச்சி சொல் கொண்டு * நீர்
    எதுவானும் செய்து * அங்கு ஓர் கள்ளும் இறைச்சியும் தூவேன் மின் **
    மது வார் துழாய் முடி * மாயப் பிரான் கழல் வாழ்த்தினால் *
    அதுவே இவள் உற்ற நோய்க்கும் * அரு மருந்து ஆகுமே (3)
  • TVM 4.6.4
    3181 மருந்து ஆகும் என்று அங்கு ஓர் * மாய வலவை சொல் கொண்டு * நீர்
    கருஞ் சோறும் மற்றைச் செஞ் சோறும் * களன் இழைத்து என் பயன்? **
    ஒருங்காகவே உலகு ஏழும் * விழுங்கி உமிழ்ந்திட்ட *
    பெருந்தேவன் பேர் சொல்லகிற்கில் * இவளைப் பெறுதிரே (4)
  • TVM 4.6.5
    3182 இவளைப் பெறும் பரிசு * இவ் அணங்கு ஆடுதல் அன்று அந்தோ *
    குவளைத் தடங் கண்ணும் * கோவைச் செவ்வாயும் பயந்தனள் **
    கவளக் கடாக் களிறு அட்ட பிரான் * திருநாமத்தால் *
    தவளப் பொடிக் கொண்டு * நீர் இட்டிடுமின் தணியுமே (5)
  • TVM 4.6.6
    3183 தணியும் பொழுது இல்லை * நீர் அணங்கு ஆடுதிர் அன்னைமீர் *
    பிணியும் ஒழிகின்றது இல்லை * பெருகும் இது அல்லால் **
    மணியின் அணி நிற மாயன் * தமர் அடி நீறு கொண்டு *
    அணிய முயலின் * மற்று இல்லை கண்டீர் இவ் அணங்குக்கே (6)
  • TVM 4.6.7
    3184 அணங்குக்கு அரு மருந்து என்று * அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய் *
    சு(து)ணங்கை எறிந்து * நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் **
    உணங்கல் கெடக் * கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன்? *
    வணங்கீர்கள் மாயப் பிரான் தமர் * வேதம் வல்லாரையே (7)
  • TVM 4.6.8
    3185 வேதம் வல்லார்களைக் கொண்டு * விண்ணோர் பெருமான் திருப்
    பாதம் பணிந்து * இவள் நோய் இது * தீர்த்துக் கொள்ளாது போய் **
    ஏதம் பறைந்து அல்ல செய்து * கள் ஊடு கலாய்த் தூய் *
    கீதம் முழவு இட்டு * நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே (8)
  • TVM 4.6.9
    3186 கீழ்மையினால் அங்கு ஓர் * கீழ்மகன் இட்ட முழவின் கீழ் *
    நாழ்மை பல சொல்லி * நீர் அணங்கு ஆடும் பொய் காண்கிலேன் **
    ஏழ்மைப் பிறப்புக்கும் சேமம் * இந் நோய்க்கும் ஈதே மருந்து *
    ஊழ்மையில் கண்ண பிரான் * கழல் வாழ்த்துமின் உன்னித்தே (9)
  • TVM 4.6.10
    3187 உன்னித்து மற்று ஒரு தெய்வம் தொழாள் * அவனை அல்லால் *
    நும் இச்சை சொல்லி * நும் தோள் குலைக்கப்படும் அன்னைமீர் **
    மன்னப்படும் மறைவாணனை * வண் துவராபதி
    மன்னனை * ஏத்துமின் ஏத்துதலும் * தொழுது ஆடுமே (10)
  • TVM 4.6.11
    3188 ## தொழுது ஆடி தூ மணி வண்ணனுக்கு * ஆட்செய்து நோய் தீர்ந்த *
    வழுவாத தொல் புகழ் * வண் குருகூர்ச் சடகோபன் ** சொல்
    வழுவாத ஆயிரத்துள் * இவை பத்து வெறிகளும் *
    தொழுது ஆடிப் பாட வல்லார் * துக்க சீலம் இலர்களே (11)