Chapter 7

Pleading the Lord to come and bless - (சீலம் இல்லா)

திருமாலை வந்தருளுமாறு தம் குறைகூறி வருந்தி அழைத்தல்
In this world, when a patient faints and loses consciousness, he/she does not feel the pain associated with the illness. Once the patient regains consciousness, he/she experiences all the terrible ill-effects associated with the illness. Unfortunately, Āzhvār is in the same state as the patient and laments his state in these divine hymns.
உலகில் மயக்கமடைந்திருக்கும்போது நோயாளிக்கு நோயின் வலி தெரிவதில்லை. மயக்கம் நீங்கியபிறகு அவன் படாத பாடு படுவதுபோல் ஆயிற்று ஆழ்வாரின் நிலையும். அந்நிலையை ஈண்டு அவர் பாடுகிறார்.

நான்காம் பத்து -ஏழாந்திருவாய்மொழி – ‘சீலமில்லா’-பிரவேசம் –

வர்ஷேண பீஜம் பிரதி சஞ்ஜ ஹர்ஷ -காற்றாலும் + Read more
Verses: 3189 to 3199
Grammar: Aṟuchīrk Kaḻinediladi Āsiriya Viruththam / அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
Pan: பழந்தக்கராகம்
Timing: 7.30 - 9.00 PM
Recital benefits: will go to Vaikuntam
  • TVM 4.7.1
    3189 ## சீலம் இல்லாச் சிறியனேலும் * செய்வினையோ பெரிதால் *
    ஞாலம் உண்டாய் ஞான மூர்த்தி * நாராயணா என்று என்று **
    காலந்தோறும் யான் இருந்து * கைதலைபூசல் இட்டால் *
    கோல மேனி காண வாராய் * கூவியும் கொள்ளாயே (1)
  • TVM 4.7.2
    3190 கொள்ள மாளா இன்ப வெள்ளம் * கோது இல தந்திடும் * என்
    வள்ளலேயோ வையம் கொண்ட * வாமனாவோ என்று என்று **
    நள் இராவும் நன் பகலும் * நான் இருந்து ஓலம் இட்டால் *
    கள்ள மாயா உன்னை * என் கண் காண வந்து ஈயாயே (2)
  • TVM 4.7.3
    3191 ஈவு இலாத தீவினைகள் * எத்தனை செய்தனன்கொல்? *
    தாவி வையம் கொண்ட எந்தாய் * தாமோதரா என்று என்று **
    கூவிக் கூவி நெஞ்சு உருகி * கண்பனி சோர நின்றால் *
    பாவி நீ என்று ஒன்று சொல்லாய் * பாவியேன் காண வந்தே (3)
  • TVM 4.7.4
    3192 காண வந்து என் கண்முகப்பே * தாமரைக்கண் பிறழ *
    ஆணி செம்பொன் மேனி எந்தாய் * நின்று அருளாய் என்று என்று **
    நாணம் இல்லாச் சிறு தகையேன் * நான் இங்கு அலற்றுவது என் *
    பேணி வானோர் காணமாட்டாப் * பீடு உடை அப்பனையே? (4)
  • TVM 4.7.5
    3193 அப்பனே அடல் ஆழியானே * ஆழ் கடலைக் கடைந்த
    துப்பனே * உன் தோள்கள் நான்கும் * கண்டிடக் கூடுங்கொல்? என்று **
    எப்பொழுதும் கண்ண நீர் கொண்டு * ஆவி துவர்ந்து துவர்ந்து *
    இப்பொழுதே வந்திடாய் என்று * ஏழையேன் நோக்குவனே (5)
  • TVM 4.7.6
    3194 நோக்கி நோக்கி உன்னைக் காண்பான் * யான் எனது ஆவியுள்ளே *
    நாக்கு நீள்வன் ஞானம் இல்லை * நாள்தோறும் என்னுடைய **
    ஆக்கையுள்ளும் ஆவியுள்ளும் * அல்ல புறத்தினுள்ளும் *
    நீக்கம் இன்றி எங்கும் நின்றாய்! * நின்னை அறிந்து அறிந்தே (6)
  • TVM 4.7.7
    3195 அறிந்து அறிந்து தேறித் தேறி * யான் எனது ஆவியுள்ளே *
    நிறைந்த ஞான மூர்த்தியாயை * நின்மலமாக வைத்து **
    பிறந்தும் செத்தும் நின்று இடறும் * பேதைமை தீர்ந்தொழிந்தேன் *
    நறுந் துழாயின் கண்ணி அம்மா * நான் உன்னைக் கண்டுகொண்டே (7)
  • TVM 4.7.8
    3196 கண்டு கொண்டு என் கைகள் ஆர * நின் திருப்பாதங்கள் மேல் *
    எண் திசையும் உள்ள பூக் கொண்டு * ஏத்தி உகந்து உகந்து **
    தொண்டரோங்கள் பாடி ஆடச் * சூழ் கடல் ஞாலத்துள்ளே *
    வண் துழாயின் கண்ணி வேந்தே * வந்திடகில்லாயே (8)
  • TVM 4.7.9
    3197 இடகிலேன் ஒன்று அட்ட கில்லேன் * ஐம்புலன் வெல்ல கில்லேன் *
    கடவன் ஆகி காலந்தோறும் * பூப் பறித்து ஏத்த கில்லேன் **
    மட வன் நெஞ்சம் காதல் கூர * வல்வினையேன் அயர்ப்பாய் *
    தடவுகின்றேன் எங்குக் காண்பன் * சக்கரத்து அண்ணலையே? (9)
  • TVM 4.7.10
    3198 சக்கரத்து அண்ணலே என்று * தாழ்ந்து கண்ணீர் ததும்ப *
    பக்கம் நோக்கி நின்று அலந்தேன் * பாவியேன் காண்கின்றிலேன் **
    மிக்க ஞான மூர்த்தி ஆய * வேத விளக்கினை * என்
    தக்க ஞானக் கண்களாலே * கண்டு தழுவுவனே (10)
  • TVM 4.7.11
    3199 ## தழுவி நின்ற காதல் தன்னால் * தாமரைக் கண்ணன் தன்னை *
    குழுவு மாடத் தென் குருகூர் * மாறன் சடகோபன் ** சொல்
    வழுவு இலாத ஒண் தமிழ்கள் * ஆயிரத்துள் இப் பத்தும் *
    தழுவப் பாடி ஆட வல்லார் * வைகுந்தம் ஏறுவரே (11)