Chapter 1

Lamenting on the separation - (வாயும் திரை)

பிரிவாற்றாமைக்கு வருந்தல்
Nammāzhvār, as parānkusa nāyaki (female persona), thinks that all living creatures in this world suffer from being separated from Bhagavān similar to her state of mind. Āzhvār looks at the Crane/stork, the andril bird, the sea, the wind and the moon and interprets some of their natural traits/tendencies as their expression of separation anxiety and despair from Bhagavān and grieves for their plight.
உலகிலுள்ள எல்லா உயிரினங்களும் தம்மைப் போலவே பகவானை விட்டுப் பிரிந்து வருந்துகின்றன என்று நினைத்தார் நம்மாழ்வார், நாரை, அன்றில், கடல், காற்று, சந்திரன் ஆகியவற்றைக் கண்டார்; அவற்றிற்கு உண்டான சில தன்மைகளை இயற்கையாக எண்ணாமல், அவை பகவானைவிட்டுப் பிரிந்ததால் வருந்துகின்றன என்று நினைத்து, அவற்றிற்காக இரங்குகிறார்.
Verses: 2901 to 2911
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: புறநீர்மை
Timing: 6.00- 7.12. AM
Recital benefits: will surely reach Vaikuntam
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 2.1.1

2901 வாயுந்திரையுகளும் கானல்மடநாராய்! *
ஆயுமமருலகும் துஞ்சிலும் நீதுஞ்சாயால் *
நோயும்பயலைமையும் மீதூரஎம்மேபோல் *
நீயும்திருமாலால் நெஞ்சம்கோட்பட்டாயே? (2)
2901 ## வாயும் திரை * உகளும் கானல் மட நாராய் *
ஆயும் அமர் உலகும் * துஞ்சிலும் நீ துஞ்சாயால் **
நோயும் பயலைமையும் * மீது ஊர எம்மேபோல் *
நீயும் திருமாலால் * நெஞ்சம் கோள் பட்டாயே? (1)
2901 ## vāyum tirai * ukal̤um kāṉal maṭa nārāy *
āyum amar ulakum * tuñcilum nī tuñcāyāl **
noyum payalaimaiyum * mītu ūra ĕmmepol *
nīyum tirumālāl * nĕñcam kol̤ paṭṭāye? (1)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Young stork in the seaside garden, you don't sleep, even though my mother and the entire SriVaikuntam have gone to rest. Your whole body seems white with great grief; like me, have you lost your heart to Tirumāl?

Explanatory Notes

(i) Not falling within the mischief of ‘tamas’ (inertia), there is no question of SriVaikuntam going into slumber. The wonder of it is that even SriVaikuntam, never known to sleep, have gone to sleep, but the poor stork doesn’t sleep! The (gnostic) mother would not sleep because there was a time when she was agitating her mind about finding a suitable match for her highly + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வாயும் திரை மேன் மேலும் அலைகள்; உகளும் தாவுமிடமான; கானல் கடற்கரை சோலையிலுள்ள; மட நாராய்! இளம் நாரையே!; ஆயும் அமர் உலகும் என் தாயும் தேவலோகமும்; துஞ்சிலும் உறங்கினாலும்; நீ துஞ்சாயால் நீ உறங்கவில்லை; நோயும் பயலைமையும் மனவருத்தமும் பசலை நிறமும்; மீது ஊர சரீரமெங்கும் பரவும்படி; எம்மேபோல் என்னைப்போல்; நீயும் திருமாலால் நீயும் எம்பெருமானாலே; நெஞ்சம் நெஞ்சு; கோட் பட்டாயே பறித்துக் கொள்ளப் பட்டாயோ
vāyum approaching closely; thirai in the tide; ugal̤um carefully walking; kānal in the seashore; madam majestic; nārāy ŏh crane!; āyum (sleepless) mother; amar ulagum dhĕva lŏkam- celestial world (where sleep is nonexistent); thunjilum even if they sleep; you; thunjāy are not sleeping; āl thus; nŏyum the pain/disease inside; payalaimaiyum (which causes) the pale complexion due to love-sickness; mīdhūra raising; emmĕ pŏl (being caught in dear one) like us; nīyum you too; thirumālāl by ṣrīman nārāyaṇan who is the consort of ṣrī mahālakshmi; nenjam heart; kŏtpattāyĕ have been stolen?

TVM 2.1.2

2902 கோட்பட்டசிந்தையாய்க் கூர்வாயவன்றிலே! *
சேட்பட்டயாமங்கள் சேராதிரங்குதியால் *
ஆட்பட்டஎம்மேபோல் நீயும்அரவணையான் *
தாட்பட்டதண்துழாய்த்தாமம் காமுற்றாயே?
2902 கோள் பட்ட சிந்தையாய்க் * கூர்வாய அன்றிலே *
சேண் பட்ட யாமங்கள் * சேராது இரங்குதியால் **
ஆள் பட்ட எம்மேபோல் * நீயும் அரவு அணையான் *
தாள் பட்ட தண் துழாய்த் * தாமம் காமுற்றாயே? (2)
2902 kol̤ paṭṭa cintaiyāyk * kūrvāya aṉṟile *
ceṇ paṭṭa yāmaṅkal̤ * cerātu iraṅkutiyāl **
āl̤ paṭṭa ĕmmepol * nīyum aravu aṇaiyāṉ *
tāl̤ paṭṭa taṇ tuzhāyt * tāmam kāmuṟṟāye? (2)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Ye Aṉṟil with sharp beak, you seem downhearted, your voice weak, and you suffer from lack of sleep during the long nights. Do you, like me, yearn for the cool tulacī garland at the feet of the Lord who reclines on His serpent couch?

Explanatory Notes

Just as he was addressing the stork, the Āzhvār heard the Aṉṟil birds in the neighbouring palmyra tree, crying out their agony of separation, as and when their bills got unlocked during sleep, vide also the preamble to this decad. The Āzhvār extends his sympathy to these birds, looking upon them as comrades-in-distress.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோட் பட்ட அபகரிக்கப்பட்ட; சிந்தையையாய் மனதையுடைய; கூர்வாய் கூர்மையான அலகையுடைய; அன்றிலே! அன்றில் பறவையே!; சேண் பட்ட நீண்ட; யாமங்கள் சேராது நள்ளிரவிலும் படுக்கையில் சேராது; இரங்குதியால் வருந்துகின்றாய் ஆதலால்; ஆள் பட்ட அடிமைப்பட்ட; எம்மேபோல் நீயும் என்னைப்போலவே நீயும்; அரவு அணையான் ஆதிசேஷ சயனத்தையுடைய; தாள் பட்ட பெருமானின் திருவடிகளிலே இருக்கும்; தண் துழாய் குளிர்ந்த துளசி மாலையை; தாமம் காமுற்றாயே விரும்பினாயோ?
kŏtpatta stolen; sinthaiyaiyāy having (been stolen of) heart; kūrvāya (reflecting such sorrow in a stammering way) with loud voice; anṛilĕ oh ibis!; sĕtpatta lengthy; yāmangal̤ night time; sĕrādhu not having associated; irangudhi being sorrowful; āl thus; ātpatta being servitors; emmĕ pŏl like us; nīyum you too (whose suffering in separation is physically visible); aravaṇaiyān one who has ādhi sĕsha bed as his identity; thāl̤ in his lotus feet; patta having been stepped on (while enjoying); thaṇ having freshnesss; thuzhāyth thāmam thul̤asi garland; kāmuṝāyĕ did you desire for that?

TVM 2.1.3

2903 காமுற்றகையறவோடு எல்லே! இராப்பகல் *
நீமுற்றக்கண்துயிலாய் நெஞ்சுருகியேங்குதியால் *
தீமுற்றத்தென்னிலங்கை ஊட்டினான்தாள்நயந்த *
யாமுற்றதுற்றாயோ? வாழிகனைகடலே!
2903 காமுற்ற கையறவோடு * எல்லே ! இராப்பகல் *
நீ முற்றக் கண்துயிலாய் * நெஞ்சு உருகி ஏங்குதியால் **
தீ முற்றத் தென் இலங்கை * ஊட்டினான் தாள் நயந்த *
யாம் உற்றது உற்றாயோ? வாழி கனை கடலே (3)
2903 kāmuṟṟa kaiyaṟavoṭu * ĕlle ! irāppakal *
nī muṟṟak kaṇtuyilāy * nĕñcu uruki eṅkutiyāl **
tī muṟṟat tĕṉ ilaṅkai * ūṭṭiṉāṉ tāl̤ nayanta *
yām uṟṟatu uṟṟāyo? vāzhi kaṉai kaṭale (3)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Roaring Sea, you languish without sleep day and night, and I see your heart is full of water. Are you afflicted with grief like us, unable to reach the feet of our Lord who destroyed Laṅkā with fire? May you be free from grief and prosper!

Explanatory Notes

(i) The Sea can be said to sleep when it is silent without throwing the waves up. But the waves are surging up and down all the time, be it day or night; this sleeplessness is attributed by the Āzhvār to its separation from the Lord.

(ii) The sea roars and it is mere sound with no meaning, just like the indistinct sound coming from a throat, choked with grief. The Āzhvār + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
எல்லே கனை கடலே ஒலிக்கின்ற கடலே; காமுற்ற நீ விரும்பிய பொருள்; கையறவோடு கிடைக்காத காரணத்தால்; இராப்பகல் இரவும் பகலும்; நீ முற்றக் கண் துயிலாய் ஒருபோதும் நீ தூங்கவில்லை; நெஞ்சு உருகி அதோடு மனம் உருகி; ஏங்குதியால் ஏங்குகிறாய்; தென் இலங்கை தென் இலங்கை முழுவதையும்; தீ முற்ற நெருப்புக்கு; ஊட்டினான் இறையாக்கின பெருமானின்; தாள் நயந்த திருவடிகளை விரும்பிய; யாம் உற்றது நான் அடைந்த துன்பத்தை; உற்றாயோ? நீயும் அடைந்தாயோ?; வாழி! நீ மனத்துன்பம் நீங்கி வாழ்வாயாக
kāmuṝa enjoyment that was desired for; kaiyaṛavŏdu being sad for not accomplishing them; you; irāp pagal night and day; muṝa fully; kaṇ thuyilāy not sleeping; nenju even inside your heart; urugi melted; ĕngudhi calling out; āl thus; thennilangai lankā; muṝa fully; thī ūttinān one who set fire; thāl̤ divine feet; nayandha desired; yām us; uṝadhu whatever happened; uṝāyŏ did you also experience?; kanai making noise; kadalĕ ŏh sea!; vāzhi may you live long (after having your sorrow eliminated)

TVM 2.1.4

2904 கடலும்மலையும் விசும்பும்துழாய்எம்போல் *
சுடர்கொளிராப்பகல் துஞ்சாயால்தண்வாடாய்! *
அடல்கொள்படையாழி அம்மானைக்காண்பான்நீ *
உடலம்நோயுற்றாயோ? ஊழிதோறூழியே.
2904 கடலும் மலையும் விசும்பும் துழாய் எம்போல் *
சுடர் கொள் இராப்பகல் * துஞ்சாயால் தண் வாடாய் **
அடல் கொள் படை ஆழி * அம்மானைக் காண்பான் நீ *
உடலம் நோய் உற்றாயோ? * ஊழிதோறு ஊழியே? (4)
2904 kaṭalum malaiyum vicumpum tuzhāy ĕmpol *
cuṭar kŏl̤ irāppakal * tuñcāyāl taṇ vāṭāy **
aṭal kŏl̤ paṭai āzhi * ammāṉaik kāṇpāṉ nī *
uṭalam noy uṟṟāyo? * ūzhitoṟu ūzhiye? (4)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Chill wind, do you suffer from chronic illness like me? You seem to search day and night without rest, exploring space, hills, and valleys, trying to find our mighty Lord who wields the conch and discus.

Explanatory Notes

(i) If the wind is chill, the Āzhvār thinks it is due to delirium; if the wind moves about, all over, all the time, gathering all the dust in the process, as is its want, the Āzhvār thinks that it goes in search of the Lord with the frantic fervour of an importunate lover who dashes off, breaking all norms of feminine conduct, disfigures herself and musters public opinion + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தண் வாடாய்! குளிர்ந்த வாடைக் காற்றே!; கடலும் மலையும் கடலையும் மலையையும்; விசும்பும் ஆகாயத்தையும்; சுடர் கொள் சந்திர ஸுரியர்களாகிற இரு சுடர்களையும்; துழாய் தடவிக்கொண்டு என்னைப்போல; இராப்பகல் இரவிலும் பகலிலும்; துஞ்சாயால் நீயும் தூங்குவதில்லை; அடல் கொள் பகைவர்களின் மிடுக்கை அழிக்கும்; படை ஆழி சக்கரப்படையையுடைய; அம்மானை பெருமானை; காண்பான் நீ காணுதற்பொருட்டு நீ; ஊழி தோறு ஊழியே காலமுள்ள வரையிலும்; எம்போல் என்னைப்போல்; உடலம் நோய் உற்றாயோ உடலில் நோய் கொண்டாயோ?
thaṇ cool (like a body cured of fever); vādāy ŏh northerly wind!; kadalum sea; malaiyum and mountain; visumbum and sky; thuzhāy touching; em pŏl l̤ike us who seek out for him in milk ocean, thirumalā and paramapadham (paramākāsam- the ultimate sky) as stated in thaiththiriya upanishath -ambasyapārĕ bhuvanasya madhyĕ nāgasya prushtĕ-; sudar radiance of moon, sun, etc; kol̤ as identity; irā in the night; pagalum in the day; thunjāy not sleeping (being stationed in a single place); āl thus; adal in the mahābhāratha war; kol̤ took up (after saying -ī won-t pick up any weapons-); padai āzhi having the divine sudharṣana chakram; ammānai sarvĕṣvaran; kāṇbān desiring to see (like how bhīshma wanted to see krishṇa); you (who are helping all); ūzhidhŏṛūzhi time after time (even if the yuga cycles change), forever (thinking about him); udalam pervaded all through the body, until the body exists; nŏy disease; uṝāyŏ did you have?

TVM 2.1.5

2905 ஊழிதோறூழி உலகுக்குநீர்கொண்டு *
தோழியரும்யாமும்போல் நீராய்நெகிழ்கின்ற *
வாழியவானமே! நீயும்மதுசூதன் *
பாழிமையில்பட்டு அவன்கண் பாசத்தால்நைவாயே?
2905 ஊழிதோறு ஊழி * உலகுக்கு நீர்கொண்டு *
தோழியரும் யாமும் போல் * நீராய் நெகிழ்கின்ற **
வாழிய வானமே ! * நீயும் மதுசூதன் *
பாழிமையில் பட்டு * அவன்கண் பாசத்தால் நைவாயே? (5)
2905 ūzhitoṟu ūzhi * ulakukku nīrkŏṇṭu *
tozhiyarum yāmum pol * nīrāy nĕkizhkiṉṟa **
vāzhiya vāṉame ! * nīyum matucūtaṉ *
pāzhimaiyil paṭṭu * avaṉkaṇ pācattāl naivāye? (5)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

O clouds, always breaking into tears and flooding the worlds, do you suffer like me and my comrades, irresistibly drawn to Matucūtaṉ, desiring Him with heart and soul? May you be free from misery and prosper!

Explanatory Notes

(i) It is clear from this, that Parāṅkuśa Nāyakī and comrades of her ilk are grief-stricken to such an extent that their profuse tears flood the worlds like the rain-water unleashed by the clouds.

(ii) Matucūtaṉ (Madhusūdha)–Lord Mahā Viṣṇu, Who slew Madhu, the demon. The Āzhvār queries whether the clouds did also come under the spell of the Lord, attracted by His glorious trait of vanquishing the evil forces, in the same way as he and others of his ilk did.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகுக்கு உலகுக்கெல்லாம் ஆகும்படி; நீர்கொண்டு நீரை முகந்து கொண்டு; ஊழிதோறு ஊழி காலமுள்ள அளவும்; நீராய் தண்ணீர் மயமாய்; நெகிழ்கின்ற விழுகின்ற மேகமே; வானமே! வானமே!; நீயும் நீயும்; தோழியரும் தோழிமார்களையும்; யாமும் போல் எங்களையும் போல்; மதுசூதன் மதுசூதனன் என்ற அரக்கனைக் கொன்ற; பாழிமையில் இறைவனின் தோள் வலிமையில்; பட்டு அகப்பட்டு; அவன் கண் அவனிடம் ஏற்பட்ட; பாசத்தால் நைவாயே? பாசத்தால் வருந்துகின்றாயோ?; வாழிய இந்தத் துன்பம் நீங்கி வாழ்வாயாக
thŏzhiyarum girl-friends (who are equally pained as ī am); yāmum pŏl like us (who are in pain); ulagukku to fill the world; nīr koṇdu with the water; ūzhidhŏṛūzhi forever; nīrāy in the form of water; negizhginṛa falling down; vānamĕ ŏh cloud!; nīyum you who are most generous; madhusūdhan one who killed madhu; pāzhimaiyil great valour; pattu being captivated; avankaṇ towards him; pāsaththāl out of affection; naivāyĕ become weak; vāzhiya may you live long after being relieved from this pain

TVM 2.1.6

2906 நைவாயவெம்மேபோல் நாள்மதியே! நீஇந்நாள் *
மைவானிருளகற்றாய் மாழாந்துதேம்புதியால் *
ஐவாயரவணைமேல் ஆழிப்பெருமானார் *
மெய்வாசகம்கேட்டு உன்மெய்ந்நீர்மைதோற்றாயே?
2906 நைவாய எம்மேபோல் * நாள் மதியே !நீ இந் நாள் *
மை வான் இருள் அகற்றாய் * மாழாந்து தேம்புதியால் **
ஐ வாய் அரவு அணைமேல் * ஆழிப் பெருமானார் *
மெய் வாசகம் கேட்டு * உன் மெய்ந்நீர்மை தோற்றாயே? (6)
2906 naivāya ĕmmepol * nāl̤ matiye !nī in nāl̤ *
mai vāṉ irul̤ akaṟṟāy * māzhāntu temputiyāl **
ai vāy aravu aṇaimel * āzhip pĕrumāṉār *
mĕy vācakam keṭṭu * uṉ mĕynnīrmai toṟṟāye? (6)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Withering Moon, you seem worn out like us and no longer light up the dark sky as you once did. It appears you've lost your former glow, possibly misled by the words of the Lord who holds the discus and reclines on the serpent with its five hoods.

Explanatory Notes

(i) The Moon waxes and wanes because of its different phases, but Parāṅkuśa Nāyakī attributes the waning of the Moon and the resultant diminution of its brightness to a mental malady, on a par with her own.

(ii) In her present state of mental depression, the Nāyakī is so sore with the Lord that she says that the Lord’s utterances should not be taken at their face value. + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நாள் மதியே! பிறைச் சந்திரனே!; நைவாய நைந்து போவதையே இயற்கையாகவுடைய; எம்மேபோல் எங்களைப்போல; நீ இந் நாள் நீயும் இக்காலத்தில்; மை வான் கரிய ஆகாயத்திலுள்ள; இருள் அகற்றாய் இருளைப் போக்குவதில்லை; மாழாந்து ஒளியெல்லாம் மழுங்கி; தேம்புதியால் குறைபடுகின்றாய் ஆதலால்; ஐ வாய் ஐந்து முகங்களையுடைய; அரவு அணைமேல் ஆதிசேஷன் மீதுள்ள; ஆழிப் பெருமானார் சக்கரபாணியான எம்பெருமானது; மெய் வாசகம் மெய் போன்ற பொய் வார்த்தையை; கேட்டு கேட்டு; உன் மெய்ந்நீர்மை உனது வடிவின் குணமாகிய ஒளியை; தோற்றாயே? இழந்தாய் போலும்!
naivu becoming weak only; āya having it as nature; emmĕ pŏl like us; nāl̤ crescent shaped (1/16th of the siśe of full moon); madhiyĕ oh chandra!; you (who are radiant); innāl̤ on this day (right now); mai like very dark color paste; vān in the sky; irul̤ darkness; agaṝāy unable to eradicate it;; māzhāndhu losing the shine; thĕmbudhi you have waned; āl thus; aivāy having many faces and two tongues (to lie); aravaṇai mĕl on the serpent bed; āzhi one how has the divine sudharṣana chakram; perumnānār having great glories (who teaches them to lie); mey big lie; vāsagam words; kĕttu after hearing; un your; mey in the form; nīrmai the ability to uplift; thŏṝāyĕ have you lost?

TVM 2.1.7

2907 தோற்றோம்மடநெஞ்சம் எம்பெருமான்நாரணற்கு * எம்
ஆற்றாமைசொல்லி அழுவோமைநீநடுவே *
வேற்றோர்வகையில்கொடிதாய் எனையூழி *
மாற்றாண்மைநிற்றியோ? வாழிகனையிருளே!
2907 தோற்றோம் மட நெஞ்சம் * எம் பெருமான் நாரணற்கு * எம்
ஆற்றாமை சொல்லி * அழுவோமை நீ நடுவே **
வேற்றோர் வகையில் * கொடிதாய் எனை ஊழி *
மாற்றாண்மை நிற்றியோ? வாழி கனை இருளே (7)
2907 toṟṟom maṭa nĕñcam * ĕm pĕrumāṉ nāraṇaṟku * ĕm
āṟṟāmai cŏlli * azhuvomai nī naṭuve **
veṟṟor vakaiyil * kŏṭitāy ĕṉai ūzhi *
māṟṟāṇmai niṟṟiyo? vāzhi kaṉai irul̤e (7)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

We have lost our hearts to Nāraṇaṉ, our Lord, and have shared our sorrows with each other. But then you, dark night, stepped in, worse than our enemies. May you find prosperity and be freed from this state.

Explanatory Notes

(i) This stanza, as worded above, does not accord with the pattern of the preceding and succeeding stanzas in this decad. Based, however, oṇ the diction as such, Emperumāṉar (Rāmānuja) and other Ācāryas were inclined to interpret this soṇg, as follows: The dark night, instead of weeping along with Parāṅkuśa Nāyakī and her comrades, is worse than a foe, in so far as it + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கனை இருளே! கனத்திருக்கின்ற இருளே!; எம் பெருமான் எமக்கு ஸ்வாமியான; நாரணற்கு நாராயணனுக்கு; மட நெஞ்சம் எங்கள் மட நெஞத்தை; தோற்றோம் இழந்தோம்; எம் ஆற்றாமை எங்கள் ஆற்றாமையை வாய்விட்டு; சொல்லி அழுவோமை சொல்லி அழுகின்ற எங்களை; நீ நடுவே நீ நடுவில் நுழைந்து; வேற்றோர் பகைவர்கள் நலிகிற; வகையில் வகையைக் காட்டிலும்; கொடிதாய் கொடுமையாக வருத்துகின்றாய்; எனை ஊழி காலமுள்ளவளவும்; மாற்றாண்மை இக்கொடும் தன்மையிலேயே; நிற்றியோ நிற்பாயோ; வாழி! இந்நிலைமை நீங்கி வாழ்வாயாக
em our; perumān master; nāraṇan to srīman nārāyaṇan; madam that which is humble towards us; nenjam heart; thŏṝŏm having lost it; em āṝāmai (due to that) our sorrow; solli spoke out loudly; azhuvŏmai with respect to us who are crying; you; naduvĕ having entered in-between; vĕṝŏr vagaiyil than the nature of enemies; kodiyadhāy more cruel; enai ūzhi until eternity (forever); māṝāṇmai being the one who can remove our suffering; niṝiyŏ are you standing firm?; kanai dense; irul̤ĕ ŏh darkness!; vāzhi instead of manifesting your presence and torturing us, let the sufferings vanish and live long.

TVM 2.1.8

2908 இருளின்திணிவண்ணம் மாநீர்க்கழியேபோய் *
மருளுற்றிராப்பகல் துஞ்சிலும்நீதுஞ்சாயால் *
உருளும்சகடம் உதைத்தபெருமானார் *
அருளின்பெருநசையால் ஆழாந்துநொந்தாயே?
2908 இருளின் திணி வண்ணம் * மா நீர்க் கழியே ! போய் *
மருளுற்று இராப்பகல் * துஞ்சிலும் நீ துஞ்சாயால் **
உருளும் சகடம் * உதைத்த பெருமானார் *
அருளின் பெரு நசையால் * ஆழாந்து நொந்தாயே? (8)
2908 irul̤iṉ tiṇi vaṇṇam * mā nīrk kazhiye ! poy *
marul̤uṟṟu irāppakal * tuñcilum nī tuñcāyāl **
urul̤um cakaṭam * utaitta pĕrumāṉār *
arul̤iṉ pĕru nacaiyāl * āzhāntu nŏntāye? (8)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

O Channel, you release dark waters in abundance day and night, seemingly bewildered. Do you also yearn intensely for the grace of the Lord who shattered the demon in the rolling wheel?

Explanatory Notes

Parāṅkuśa Nāyakī gropes her way through, in darkness, and not being able to distinguish land from water, comes to a channel discharging lots of water and making plenty of noise in the process. She thinks that the channel is also lamenting its separation from Lord Kṛṣṇa, who destroyed Śakaṭāsura and whose grace it pines for.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இருளின் திணி இருட்டினுடைய செறிந்த; வண்ணம் நிறத்தையுடைய; மா நீர்க் கழியே! பெரிய நீருள்ள உப்பு கலந்த ஏரிகளே!; போய் மருளுற்று மிகவும் அறிவு கெட்டு; இராப்பகல் இரவும் பகலும்; துஞ்சிலும் முடிந்தாலும்; நீ துஞ்சாயால் நீ ஓய்வதில்லை உறங்குவதில்லை; உருளும் சகடம் உருண்டு வரும் சகடமாக வந்த அசுரனை; உதைத்த பெருமானார் உதைத்து ஒழித்த பெருமான்; அருளின் பெரு அருள் புரிவான் என்னும் பெரும்; நசையால் பேராசையால்; ஆழாந்து நொந்தாயே ஈடுபட்டு வருந்தினாயோ?
irul̤in of the darkness; thiṇi dense; vaṇṇam having the color; big; nīr having water; kazhiyĕ ŏh salt-pan!; pŏy very; marul̤ uṝu bewildered; irāp pagal during night and day; thunjilum even if [they] end; you; thunjāy not sleeping; āl thus; urul̤um rolling; sagadam wheel; udhaiththa kicked (with his lotus feet); perumānār great person-s; arul̤in quality of compassion; peru big; nasaiyāl attachment/desire; āzhāndhu immersed; nondhāyĕ feeling pain?

TVM 2.1.9

2909 நொந்தாராக்காதல்நோய் மெல்லாவியுள்ளுலர்த்த *
நந்தாவிளக்கமே! நீயுமளியத்தாய் *
செந்தாமரைத்தடங்கண் செங்கனிவாயெம்பெருமான் *
அந்தாமத்தண் துழாய் ஆசையால்வேவாயே?
2909 நொந்து ஆராக் காதல் நோய் * மெல் ஆவி உள் உலர்த்த *
நந்தா விளக்கமே * நீயும் அளியத்தாய் **
செந்தாமரைத் தடங்கண் * செங்கனி வாய் எம் பெருமான் *
அம் தாமம் தண் துழாய் * ஆசையால் வேவாயே? (9)
2909 nŏntu ārāk kātal noy * mĕl āvi ul̤ ulartta *
nantā vil̤akkame * nīyum al̤iyattāy **
cĕntāmarait taṭaṅkaṇ * cĕṅkaṉi vāy ĕm pĕrumāṉ *
am tāmam taṇ tuzhāy * ācaiyāl vevāye? (9)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Undying flame, your plight is truly sad. Your gentle soul is withered, burnt by the desire for the cool and bright tulacī garland worn by our Lord, who has large lotus eyes and red lips.

Explanatory Notes

(i) Parāṅkuśa Nāyakī returns home in a state of mental exhaustion, and sees the burning lamp. The heat of the flame, she thinks, is the one generated by its separation from the Lord, an experience identical with hers.

(ii) The flame of the lamp is not homogeneous, being of different intensity of heat at different places or zones, as they are called; the flame itself + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நந்தா விளக்கமே! அழிவில்லாத விளக்கே!; அளியத்தாய்! இரங்கத்தகுதியுடைய; நீயும் நொந்து நீயும் நோவுபட்டு; ஆராக் காதல் நோய் மாளாத காதலாகிற நோயானது; மெல் ஆவி மெல்லிய பிராணனையும்; உள் உலர்த்த உள்ளே உலர்த்த; செந்தாமரை சிவந்த தாமரை மலர் போன்ற; தடங் கண் பெரிய கண்களையும்; செங்கனி வாய் சிவந்த கனி போன்ற வாயையுமுடைய; எம் பெருமான் எம்பெருமானின்; அம் தாமம் தண் அழகிய குளிர்ந்த; துழாய் துளசி மாலையின் மீதுள்ள; ஆசையால் ஆசையினால்; வேவாயே? வேகின்றாயோ?
nandhā continuous, without any break; vil̤akkamĕ ŏh lamp!; al̤iyaththāy (such) distinct; nīyum you too; nondhu ārā not being satisfied though being already engaged; kādhal love; nŏy sickness; mel tender (like your body); āvi prāṇa (vital air); ul̤ inside; ularththa to dry it up; sem reddish; thāmarai like a lotus; thadam huge; kaṇ eyes; sem reddish; kani like a fruit; vāy having the mouth; emperumān my master; am beautiful; thaṇ thuzhāyth thāmam cool thul̤asi garland-s; āsaiyāl attachment/desire; vĕvāyĕ are you suffering in anguish?

TVM 2.1.10

2910 வேவாராவேட்கைநோய் மெல்லாவியுள்ளுலர்த்த *
ஓவாதிராப்பகல் உன்பாலேவீழ்த்தொழிந்தாய் *
மாவாய்பிளந்து மருதிடைபோய்மண்ணளந்த *
மூவாமுதல்வா! இனியெம்மைச்சோரேலே.
2910 வேவு ஆரா வேட்கை நோய் * மெல் ஆவி உள் உலர்த்த *
ஓவாது இராப்பகல் * உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய் **
மா வாய் பிளந்து * மருதிடை போய் மண் அளந்த *
மூவா முதல்வா * இனி எம்மைச் சோரேலே (10)
2910 vevu ārā veṭkai noy * mĕl āvi ul̤ ulartta *
ovātu irāppakal * uṉpāle vīzhttu ŏzhintāy **
mā vāy pil̤antu * marutiṭai poy maṇ al̤anta *
mūvā mutalvā * iṉi ĕmmaic corele (10)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Simple Translation

Primate of eternal youth, you split open the big mouth of the horse demon Kēci, crawled between the twin trees and broke them down, and measured the worlds. Absorbed in you day and night, our delicate souls, struck down by the burning malady of love, have withered greatly. Please, don't leave us from now on.

Explanatory Notes

Seeing the Āzhvār’s pangs of separation from Him, the Lord approaches the Āzhvār, shedding His cool grace. Thereupon, the Lord is told by the Āzhvār that his tender soul, already worn out and emaciated due to its separation from the Lord, thaws down still further in contemplation of His wondrous deeds and glorious traits. The Āzhvār also fervently prays to the Lord, not to forsake him any more.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மா வாய் கேசி என்னும் அசுரனின் வாயை; பிளந்து பிளந்தவனும்; மருதிடை போய் மருத மரங்களின் நடுவே தவழ்ந்தவனும்; மண் திருவிக்கிரமனாய் பூமியை; அளந்த அளந்தவனுமான; மூவா முதல்வா! சோம்பல் இல்லாத முதல்வனே!; வேவு ஆரா சில நாள் வருத்தமுற்றும் அடங்காத; வேட்கை நோய் ஆசை நோயானது; மெல் ஆவி மென்மையான ஆத்மாவை; உள் உலர்த்த உள்ளே உலர்த்த; ஓவாது இராப்பகல் இரவும் பகலும் இடைவிடாமல்; உன்பாலே வீழ்த்து உன்னிடத்திலேயே ஈடுபடுத்தி; ஒழிந்தாய் என்னை உதாஸீனப்படுத்தினாய்; இனி எம்மை இனிமேலாவது நான் வருந்தும்படி பண்ணாமல்; சோரேலே என்னை கைவிடாமல் இருக்க வேண்டுகிறேன்
vĕvārā not satisfied with torturing; nŏy disease (love-sickness); mel weak (due to separation); āvi āthmā; ul̤ like dried leaf; ularththa to dry it completely; irāp pagal night and day; ŏvādhu incessantly; un pālĕ in your qualities; vīzhthu ozhindhāy one who captivated me; the horse-s (that was the enemy of those who approach you); vāy mouth; pil̤andhu tore; marudhu (twin) arjuna tree; idai in between; pŏy entered; maṇ the earth (to make it fully subservient); al̤andhu measured; mūvā being every youthful; mudhalvā ŏh the cause of all!; ini going forward; emmai us; chŏrĕl never leave us

TVM 2.1.11

2911 சோராதஎப்பொருட்கும் ஆதியாம்சோதிக்கே *
ஆராதகாதல் குருகூர்ச்சடகோபன் *
ஓராயிரஞ்சொன்ன அவற்றுளிவைப்பத்தும் *
சோரார்விடார்கண்டீர் வைகுந்தம்திண்ணெனவே. (2)
2911 ## சோராத எப் பொருட்கும் * ஆதியாம் சோதிக்கே *
ஆராத காதல் * குருகூர்ச் சடகோபன் **
ஓராயிரம் சொன்ன * அவற்றுள் இவை பத்தும் *
சோரார் விடார் கண்டீர் * வைகுந்தம் திண்ணெனவே (11)
2911 ## corāta ĕp pŏruṭkum * ātiyām cotikke *
ārāta kātal * kurukūrc caṭakopaṉ **
orāyiram cŏṉṉa * avaṟṟul̤ ivai pattum *
corār viṭār kaṇṭīr * vaikuntam tiṇṇĕṉave (11)

Ragam

Yadukulakāmbhoji / யதுகுலகாம்போதி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Those who regularly recite these ten stanzas from the thousand composed by Kurukūr Caṭakōpaṉ, who has an insatiable love for the resplendent Lord (the source of everything), will surely enjoy the eternal bliss of SriVaikuntam.

Explanatory Notes

(i) It is only after the Lord came and joined the Āzhvār that He became God indeed, the Protector of oṇe and all, without any exception; again, the Lord became resplendent, only after His union with the Āzhvār.

(ii) It is also noteworthy that, In this decad, the Āzhvār has come to be identified through his boundless love for the Lord; that is why he is referred to not as mere Kurukūr Caṭakōpaṉ but as Caṭakōpaṉ of insatiable God-love.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சோராத எப் பொருட்கும் அனைத்துப் பொருள்களுக்கும்; ஆதியாம் காரணபூதனான; சோதிக்கே ஒளிமயமான பெருமானிடத்திலேயே; ஆராத காதல் அடங்காத காதலையுடைய; குருகூர் திருக்குருகூரில்; சடகோபன் அவதரித்த நம்மாழ்வார்; ஓராயிரம் சொன்ன அருளிச்செய்த ஆயிரம்; அவற்றுள் பாசுரங்களுள்; இவை பத்தும் இந்தப் பத்துப் பாசுரங்களை; சோரார் மறவாதவர்கள்; வைகுந்தம் திண்ணனவே பரமபதத்தை அடைவது உறுதி; விடார் கண்டீர் ஒரு நாளும் எம்பெருமானைப் பிரியார்
sŏrādha without leaving out even a single entity; epporutkum for all entities; ādhiyām being the cause; sŏdhikkĕ one who is known by the term -paramjyŏthi #[supreme effulgence]; ārādha insatiable; kādhal having affection; kurukūrch chatakŏpan nammāzhvār; ŏr unique; āyiram in thousand pāsurams,; sonna avaṝul̤ among those which are spoken; ivai paththum these 10 pāsurams (which are filled with great love); sŏrār ones who stick to (these pāsurams); vaikundham that paramapadham; thiṇṇana certainly; vidār kaṇdīr those who will never miss it