Chapter 1

Lamenting on the separation - (வாயும் திரை)

பிரிவாற்றாமைக்கு வருந்தல்
Nammāzhvār, as parānkusa nāyaki (female persona), thinks that all living creatures in this world suffer from being separated from Bhagavān similar to her state of mind. Āzhvār looks at the Crane/stork, the andril bird, the sea, the wind and the moon and interprets some of their natural traits/tendencies as their expression of separation anxiety and despair from Bhagavān and grieves for their plight.
உலகிலுள்ள எல்லா உயிரினங்களும் தம்மைப் போலவே பகவானை விட்டுப் பிரிந்து வருந்துகின்றன என்று நினைத்தார் நம்மாழ்வார், நாரை, அன்றில், கடல், காற்று, சந்திரன் ஆகியவற்றைக் கண்டார்; அவற்றிற்கு உண்டான சில தன்மைகளை இயற்கையாக எண்ணாமல், அவை பகவானைவிட்டுப் பிரிந்ததால் வருந்துகின்றன என்று நினைத்து, + Read more
Verses: 2901 to 2911
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: புறநீர்மை
Timing: 6.00- 7.12. AM
Recital benefits: will surely reach Vaikuntam
  • TVM 2.1.1
    2901 ## வாயும் திரை * உகளும் கானல் மட நாராய் *
    ஆயும் அமர் உலகும் * துஞ்சிலும் நீ துஞ்சாயால் **
    நோயும் பயலைமையும் * மீது ஊர எம்மேபோல் *
    நீயும் திருமாலால் * நெஞ்சம் கோள் பட்டாயே? (1)
  • TVM 2.1.2
    2902 கோள் பட்ட சிந்தையாய்க் * கூர்வாய அன்றிலே *
    சேண் பட்ட யாமங்கள் * சேராது இரங்குதியால் **
    ஆள் பட்ட எம்மேபோல் * நீயும் அரவு அணையான் *
    தாள் பட்ட தண் துழாய்த் * தாமம் காமுற்றாயே? (2)
  • TVM 2.1.3
    2903 காமுற்ற கையறவோடு * எல்லே ! இராப்பகல் *
    நீ முற்றக் கண்துயிலாய் * நெஞ்சு உருகி ஏங்குதியால் **
    தீ முற்றத் தென் இலங்கை * ஊட்டினான் தாள் நயந்த *
    யாம் உற்றது உற்றாயோ? வாழி கனை கடலே (3)
  • TVM 2.1.4
    2904 கடலும் மலையும் விசும்பும் துழாய் எம்போல் *
    சுடர் கொள் இராப்பகல் * துஞ்சாயால் தண் வாடாய் **
    அடல் கொள் படை ஆழி * அம்மானைக் காண்பான் நீ *
    உடலம் நோய் உற்றாயோ? * ஊழிதோறு ஊழியே? (4)
  • TVM 2.1.5
    2905 ஊழிதோறு ஊழி * உலகுக்கு நீர்கொண்டு *
    தோழியரும் யாமும் போல் * நீராய் நெகிழ்கின்ற **
    வாழிய வானமே ! * நீயும் மதுசூதன் *
    பாழிமையில் பட்டு * அவன்கண் பாசத்தால் நைவாயே? (5)
  • TVM 2.1.6
    2906 நைவாய எம்மேபோல் * நாள் மதியே !நீ இந் நாள் *
    மை வான் இருள் அகற்றாய் * மாழாந்து தேம்புதியால் **
    ஐ வாய் அரவு அணைமேல் * ஆழிப் பெருமானார் *
    மெய் வாசகம் கேட்டு * உன் மெய்ந்நீர்மை தோற்றாயே? (6)
  • TVM 2.1.7
    2907 தோற்றோம் மட நெஞ்சம் * எம் பெருமான் நாரணற்கு * எம்
    ஆற்றாமை சொல்லி * அழுவோமை நீ நடுவே **
    வேற்றோர் வகையில் * கொடிதாய் எனை ஊழி *
    மாற்றாண்மை நிற்றியோ? வாழி கனை இருளே (7)
  • TVM 2.1.8
    2908 இருளின் திணி வண்ணம் * மா நீர்க் கழியே ! போய் *
    மருளுற்று இராப்பகல் * துஞ்சிலும் நீ துஞ்சாயால் **
    உருளும் சகடம் * உதைத்த பெருமானார் *
    அருளின் பெரு நசையால் * ஆழாந்து நொந்தாயே? (8)
  • TVM 2.1.9
    2909 நொந்து ஆராக் காதல் நோய் * மெல் ஆவி உள் உலர்த்த *
    நந்தா விளக்கமே * நீயும் அளியத்தாய் **
    செந்தாமரைத் தடங்கண் * செங்கனி வாய் எம் பெருமான் *
    அம் தாமம் தண் துழாய் * ஆசையால் வேவாயே? (9)
  • TVM 2.1.10
    2910 வேவு ஆரா வேட்கை நோய் * மெல் ஆவி உள் உலர்த்த *
    ஓவாது இராப்பகல் * உன்பாலே வீழ்த்து ஒழிந்தாய் **
    மா வாய் பிளந்து * மருதிடை போய் மண் அளந்த *
    மூவா முதல்வா * இனி எம்மைச் சோரேலே (10)
  • TVM 2.1.11
    2911 ## சோராத எப் பொருட்கும் * ஆதியாம் சோதிக்கே *
    ஆராத காதல் * குருகூர்ச் சடகோபன் **
    ஓராயிரம் சொன்ன * அவற்றுள் இவை பத்தும் *
    சோரார் விடார் கண்டீர் * வைகுந்தம் திண்ணெனவே (11)