Chapter 4

Āsritha aparādha sahathvam (tolerating the defects of the ones who approach Him) - (அஞ் சிறைய)

தலைமகள் தூதுவிடல்
Nammāzhvār is also known as parānkusan, meaning the one who controls the mighty elephant. There are times when Āzhvār's hymns on Sriman Narayanan takes a female personification (bhavam); Āzhvār is then called parānkusa nāyaki. In these hymns, Āzhvār as parānkusa nāyaki, sends a stork/crane, bees and birds as messengers to emperumān. The birds and the + Read more
நம்மாழ்வாருக்குப் பராங்குசன் என்றும் பெயர். இவர் தலைவியாய் இருந்து பாடும்போது பராங்குச நாயகி என்று இவரைக் கூறுவார்கள். எம்பெருமானாகிற தலைவனைக் குறித்து, நாரை, வண்டு, பூவை முதலியவற்றைத் தூது விடுகிறார். ஞான அனுட்டானங்களைக் கொண்ட ஆசாரியர்களையே பறவைகளாகக் கொள்ள வேண்டும். எம்பெருமானை அடைவிக்குமாறு ஆசாரியர்களை வேண்டுவதாகப் பொருள் கொள்ளல் தக்கது.
Verses: 2824 to 2834
Grammar: **Taravu Kocchakakkalippā / தரவு கொச்சகக்கலிப்பா
Pan: நட்டபாடை
Timing: 1.13-2.24 PM
Recital benefits: will have the good fortune of going to heaven and joining the gods
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 1.4.1

2824 அஞ்சிறையமடநாராய்! அளியத்தாய் * நீயும்நின்
அஞ்சிறையசேவலுமாய் ஆவா! என்றெனக்கருளி *
வெஞ்சிறைப்புள்ளுயர்த்தார்க்கு என்விடுதூதாய்ச் சென்றக்கால் *
வன்சிறையிலவன்வைக்கில் வைப்புண்டாலென் செய்யுமோ? (2)
2824 ## அம்(ஞ்) சிறைய மட நாராய் * அளியத்தாய் * நீயும் நின்
அம்(ஞ்) சிறைய சேவலுமாய் * ஆஆ என்று எனக்கு அருளி **
வெம்(ஞ்) சிறைப் புள் உயர்த்தார்க்கு * என் விடு தூதாய்ச் சென்றக்கால் *
வன் சிறையில் அவன் வைக்கில் * வைப்புண்டால் என் செய்யுமோ? (1)
2824 ## am(ñ) ciṟaiya maṭa nārāy * al̤iyattāy * nīyum niṉ
am(ñ) ciṟaiya cevalumāy * āā ĕṉṟu ĕṉakku arul̤i **
vĕm(ñ) ciṟaip pul̤ uyarttārkku * ĕṉ viṭu tūtāyc cĕṉṟakkāl *
vaṉ ciṟaiyil avaṉ vaikkil * vaippuṇṭāl ĕṉ cĕyyumo? (1)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Young, kind stork with lovely feathers, take pity on me and go with your male partner to deliver my message to the Lord, whose banner bears Garuḍa with strong feathers. If by chance He imprisons you, what does it matter if you suffer on my behalf?

Explanatory Notes

Notes

(i) The white wading birds, stork, crane and heron employed by the Āzhvār as emissaries to God, signify the preceptors, absolutely pure, in and out, standing four-square against the temptations of worldly life, just like these birds with tremendous staying powers, taking up firm positions in the watersheds, coolly resisting the onslaught of the waves.[1]

(ii) + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அம் சிறைய அழகிய சிறகுகளையும்; மட நாராய்! மடப்பத்தையும் உடைய நாரையே!; அளியத்தாய்! எனக்கு இரங்கி அருள் செய்யும்; நீயும் நின் அருளோடு கூடின நீயும் உன்னுடைய; அம் சிறைய அழகிய சிறகுகளையுடைய; சேவலுமாய் சேவலுமாய்; ஆ ஆ என்று ‘ஆவா’ என்று என் தனிமை கண்டு; எனக்கு அருளி எனக்கு அருள் செய்து; வெம் சிறை கொடிய சிறகுகளையுடைய; புள் உயர்த்தார்க்கு கருடனைக் கொடியாக உள்ளவர்க்கு; என் விடு தூதாய் என்னால் விடப்பட்ட தூதாய்; சென்றக்கால் சென்றால் முகம் பார்த்துக் கேளாமையாகிற; வன்சிறையில் வலிய சிறையில்; அவன் வைக்கில் அவன் உங்களை வைப்பானாகில்; வைப்புண்டால் அதற்கு நீங்கள் இசைந்திருந்தால்; என் செய்யுமோ? அதனால் என்ன குற்றம் உண்டாகுமோ?
al̤iyaththāy one who has the characteristics to bless/give me; am siṛaiya having beautiful wings/feathers which will help fulfil my desire; mada nārāy tender/shy female crane being lethargic after the union with the male crane; nīyum you who are inseparable from your partner; nin am siṛaiya sĕvalumāy your beautiful partner whose wings/feathers are shining due to the union with you; ā ā enṛu ḫeeling for my separation and crying out -alas! alas!-; enakku arul̤i blessing me; vem siṛai the wings which are dreaded by the enemies; pul̤ periya thiruvadi (garuda); uyarththārkku one who raised (garuda) as the flag to protect others; en vidu thūdhāych chenṛakkāl while going as a messenger sent by me; van siṛaiyil in a cruel prison (of ignoring your presence and words); avan vaikkil if he keeps you; vaippuṇdāl if agreed to that; en seyyum what is wrong with that?; ŏ is it even possible?

TVM 1.4.2

2825 என்செய்யதாமரைக்கண் பெருமானார்க்கென்தூதாய் *
என்செய்யும்? உரைத்தக்கால் இனக்குயில்காள்! நீரலிரே? *
முன்செய்தமுழுவினையால் திருவடிக்கீழ்க்குற்றேவல் *
முன்செய்யமுயலாதேன் அகல்வதுவோ? விதியினமே.
2825 என் செய்ய தாமரைக்கண் * பெருமானார்க்கு என் தூதாய் *
என் செய்யும் உரைத்தக்கால்? * இனக் குயில்காள் நீர் அலிரே? **
முன் செய்த முழுவினையால் * திருவடிக்கீழ்க் குற்றேவல் *
முன் செய்ய முயலாதேன் * அகல்வதுவோ? விதியினமே (2)
2825 ĕṉ cĕyya tāmaraikkaṇ * pĕrumāṉārkku ĕṉ tūtāy *
ĕṉ cĕyyum uraittakkāl? * iṉak kuyilkāl̤ nīr alire? **
muṉ cĕyta muzhuviṉaiyāl * tiruvaṭikkīzhk kuṟṟeval *
muṉ cĕyya muyalāteṉ * akalvatuvo? vitiyiṉame (2)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Happy group of Kōels, what would happen if you conveyed my message to my lotus-eyed Lord? You know me well. What if it is decided that I, who stayed away from His service all this time because of my past sins, should still be kept away from His feet?

Explanatory Notes

Notes

(i) There are many points of comparison between the Kōels and the Ācāryas (preceptors).[1]

(ii) Here is an interesting anecdote to drive home the point that our accumulated sins cannot be washed off by our own efforts and that it is only the Lord’s spontaneous grace that can cut the gordian knot and absolve us. Kōḷari Āḻvān and Teṟkāḷvāṉ, two residents of + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இனக் குயில்காள்! கூட்டமான குயில்களே!; நீர் அலிரே? நெடுநாளாகப் பழகியவர்கள் நீங்கள் தானே!; என் செய்ய தாமரை செந்தாமரை மலர் போன்ற; கண் கண்களையுடைய; பெருமானார்க்கு எம்பெருமானுக்கு; என் தூதாய் என்னுடைய தூதாய் சென்று; உரைத்தக்கால்? நான் கூறுவதைக் கூறினால்; என் செய்யும் என்ன குற்றம் நேர்ந்திடும்; முன் செய்த முற்பிறப்பில் பண்ணின; முழுவினையால் நிறைந்த பாபங்களால்; திருவடிக்கீழ் திருவடிகளிலே; குற்றேவல் செய்ய கைங்கரியம் செய்வதற்கு; முன் முற்பிறவியிலேயே; முயலாதேன் முயற்சிசெய்யாத நான்; இனமே இன்னமும்; அகல்வதுவோ? விதி அகன்று போவது முறையோ?
inakkuyilgāl̤ ŏh group of cuckoos!; nīr alirĕ don-t you who have beautiful voice?; en for me whom he became bound to; seyya reddish; thāmarai like a lotus; kaṇ having eyes; perumānārkku one who is greater than every one else (unreachable for me); en thūdhāy being my messenger; uraiththakkāl if you speak; en seyyum what is wrong?; mun seydha previously committed; muzhu vinaiyāl complete sins; thiruvadik kīzh at your divine feet; kuṝĕval confidential service; seyya to perform; mun previous; muyalādhĕn me who did not engage in any means; inam still; agalvadhuvŏ vidhi īs staying away the right thing to do?

TVM 1.4.3

2826 விதியினால்பெடைமணக்கும் மென்னடையஅன்னங்காள்! *
மதியினால்குறள்மாணாய் உலகிரந்தகள்வற்கு *
மதியிலேன்வல்வினையே மாளாதோ? என்று * ஒருத்தி
மதியெல்லாமுள்கலங்கி மயங்குமாலென்னீரே.
2826 விதியினால் பெடை மணக்கும் * மென்நடைய அன்னங்காள் *
மதியினால் குறள் மாணாய் * உலகு இரந்த கள்வர்க்கு **
மதியிலேன் வல் வினையே * மாளாதோ? என்று * ஒருத்தி
மதி எல்லாம் உள் கலங்கி * மயங்குமால் என்னீரே (3)
2826 vitiyiṉāl pĕṭai maṇakkum * mĕṉnaṭaiya aṉṉaṅkāl̤ *
matiyiṉāl kuṟal̤ māṇāy * ulaku iranta kal̤varkku **
matiyileṉ val viṉaiye * māl̤āto? ĕṉṟu * ŏrutti
mati ĕllām ul̤ kalaṅki * mayaṅkumāl ĕṉṉīre (3)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

You fortunate swans, with your gentle walk, go tell the Lord who, as the midget Vāmaṉa, secretly received the worlds as a gift. Inform Him that here lies someone with endless sins, suffering from severe mental turmoil.

Explanatory Notes

(i) Lucky pair of swans or lucky Āzhvār?

It is not so much the felicity of the swans that they remain duly mated, enjoying conjugal bliss, as the luck of the Āzhvār himself. But for their lucky state of existence they would not have been available now for employment by the Āzhvār. Although Śrī Rāma was bemoaning his separation from Sītā, he felt greatly relieved after + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
விதியினால் விதிவசத்தால்; பெடை மணக்கும் பேடையோடு கூடிக் களித்திருக்கும்; மென் நடைய மென்மையான நடையையுடைய; அன்னங்காள்! அன்னங்களே!; மதியினால் அறிவின் சாமர்த்தியத்தால்; குறள் மாணாய் குறுகிய வடிவுடைய வாமனனாக; உலகு இரந்த உலகை யாசித்த; கள்வற்கு கபடமுடைய பெருமானிடம்; மதியிலேன் புத்தியில்லாத; வல் தன்னுடைய கொடிய; வினையே வினைகள்; மாளாதோ என்று மாளாதனவோ என்று கூறி; மதி எல்லாம் மதி எல்லாம் அடியோடு; உள் கலங்கி ஒருத்தி கலங்கப் பெற்று ஒருத்தி; மயங்குமால் அறிவழிந்து கிடக்கின்றாள் அந்தோ!; என்னீரே! என்று கூறுங்கள்
vidhiyināl out of great fortune (unlike me who is alone); pedai with the female swan; maṇakkum enjoying the union; mennadaiya annangāl̤ swans which have tender steps (due to their enjoying); madhiyināl with great intelligence (fulfilling indhra-s desire and preserving mahābali #s generosity); kuṛal̤ vāmanan- dwarf; māṇāy celibate boy; ulagu the world; irandha stood begging (showing small feet and measuring with huge feet in the guise of begging); kal̤varkku kruthrima- for the cheat/falsifier; madhiyilĕn me who is ignorant (about his cheating ways); valvinaiyĕyŏ those sins (which cannot be exhausted by experiencing the results); māl̤ādhu enṛu thinking that they are not destructible (like destroying the sins of chinthayanthī etal); oruththi one girl; madhi ellām her intelligence (that was given by you); ul̤ kalangi being bewildered totally; mayangum losing consciousness; ennīr please go and tell him

TVM 1.4.4

2827 என்நீர்மைகண்டிரங்கி இதுதகாதென்னாத *
என்நீலமுகில்வண்ணற்கு என்சொல்லியான் சொல்லுகேனோ? *
நன்னீர்மையினியவர்கண் தங்காதென்றொருவாய்ச்சொல் *
நன்னீலமகன்றில்காள்! நல்குதிரோ? நல்கீரோ?
2827 என் நீர்மை கண்டு இரங்கி * இது தகாது என்னாத
என் நீல முகில் வண்ணற்கு * என் சொல்லி யான் சொல்லுகேனோ? **
நன் நீர்மை இனி * அவர்கண் தங்காது என்று ஒரு வாய்ச்சொல்
நன் நீல மகன்றில்காள் * நல்குதிரோ? நல்கீரோ? (4)
2827 ĕṉ nīrmai kaṇṭu iraṅki * itu takātu ĕṉṉāta
ĕṉ nīla mukil vaṇṇaṟku * ĕṉ cŏlli yāṉ cŏllukeṉo? **
naṉ nīrmai iṉi * avarkaṇ taṅkātu ĕṉṟu ŏru vāyccŏl
naṉ nīla makaṉṟilkāl̤ * nalkutiro? nalkīro? (4)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

You sapphire-colored Aṉṟil birds, can you tell Him I'm about to die? What can I say to my cloud-colored Lord, who does not show mercy, knowing how I was during our time together? He doesn't see that it's unfair for Him to leave me.

Explanatory Notes

When Sri Parāśara Bhaṭṭar was discoursing on this song, a Tamil Scholar contended that the expression, “having seen my plight”, in the first line (original text) should be ‘having heard of my plight’. His doubt was how, when they had already been locked in the joy of union, could God, one of the pair, see the signs of pain of the other, after separation. To this, Bhaṭṭar + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் நீர்மை என் ஸ்வபாவத்தை; கண்டு நேரில் பார்த்திருந்தும்; இரங்கி இரங்கி; இது தகாது பிரிந்து இருத்தல் தகாதது என்று; என்னாத நினைக்காத; என் நீல முகில் என் ஸ்வாமியான காளமேகம் போன்ற; வண்ணற்கு நிறமுடையவர்க்கு; என் சொல்லி யான் என்ன வார்த்தைகளைச் சொல்லி; சொல்லுகேனோ? நான் புரிய வைப்பேனோ?; நன் நீர்மை நல்ல உயிரானது; இனி இனி அத்தலைவரின் பொருட்டு; தங்காது என்று அவளிடத்தில் தங்காது என்று; ஒரு வாய்ச்சொல் ஒரு வார்த்தைச் சொல்லுதலை; நன் நீல நல்ல நீல நிற; மகன்றில்காள்! மகன்றில் பறவைகளே! நீங்கள்; நல்குதிரோ? எம்பெருமானிடம் சொல்வீர்களா?; நல்கீரோ? மாட்டீர்களா?
en nīrmai (while being together) my inability to cope with separation; kaṇdu seen (while observing changes in my body during our embrace, etc); irangi having compassion (considering she is very tender natured); idhu thagādhu ennādha not understanding/saying that this separation is unbearable; en neela mugil vaṇṇārkku to the one who is having dark-cloud hued form (but not showing compassion like such dark-clouds which rain water); en solli saying what words; yān me; sollugĕnŏ can tell? (still); nal venerable; nīrmai her sustenance; ini now onwards; avar kaṇ to him; thangādhu will not be sustained; oru vāych chol saying a word; nanneela maganṛilkāl̤ beautifully blue colored love birds; nalgudhirŏ will you help?; nalgīrŏ will you not help?

TVM 1.4.5

2828 நல்கித்தான்காத்தளிக்கும் பொழிலேழும்வினையேற்கே *
நல்கத்தானாகாதோ? நாரணனைக்கண்டக்கால் *
மல்குநீர்ப்புனற்படப்பை இரைதேர்வண்சிறுகுருகே *
மல்குநீர்க்கண்ணேற்கு ஓர்வாசகங்கொண்டருளாயே.
2828 நல்கித் தான் காத்து அளிக்கும் * பொழில் ஏழும் வினையேற்கே
நல்கத் தான் ஆகாதோ? * நாரணனைக் கண்டக்கால் **
மல்கு நீர்ப் புனல் படப்பை * இரை தேர் வண் சிறு குருகே! *
மல்கு நீர்க் கண்ணேற்கு * ஓர் வாசகம் கொண்டு அருளாயே (5)
2828 nalkit tāṉ kāttu al̤ikkum * pŏzhil ezhum viṉaiyeṟke
nalkat tāṉ ākāto? * nāraṇaṉaik kaṇṭakkāl **
malku nīrp puṉal paṭappai * irai ter vaṇ ciṟu kuruke! *
malku nīrk kaṇṇeṟku * or vācakam kŏṇṭu arul̤āye (5)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Little lovely heron, searching for food in water-logged flower gardens, when you see Nāraṇaṉ, the sole sustainer of the seven worlds, could you please tell Him about me? Let Him know I have tearful eyes and am a sinner He cannot abandon. Can you bring back any reply He might have for me?

Explanatory Notes

(i) Line 4: With tearful eyes: Tears welling up and filling the eyes of the Āzhvār would, as it were, serve as an identification mark for him, whether in a state of separation from or union with the Lord. In the former case it would be tears of grief and in the latter, tears of Joy.

(ii) When a doubt was expressed as to how the Saints, soaked in God-love, could address + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பொழில் ஏழும் ஏழுலகங்களையும்; அளிக்கும் தானே விரும்பி அவற்றிற்கு விருப்பமில்லாதனவற்றை நீக்கி; நல்கித் தான் விரும்பியதைக் கொடுத்து; காத்து காக்கும்; வினையேற்கேயோ பாபியான எனக்குமாத்திரம் தான்; நல்கத் தான் ஆகாதோ? கிருபை பண்ணலாகாதோ? என்று; நாரணனைக் கண்டக்கால் அந்த நாராயணனை கண்டதும்; மல்கு நீர் புனல் நீர் நிறைந்த குளிர்ந்த; படப்பை பூந்தோட்டங்களிலே; இரை தேர் வண் இரை தேடுகின்ற அழகிய; சிறு குருகே! இனிய சிறிய குருகே!; மல்கு நீர் மிக்க நீரோடு கூடின; கண்ணேற்கு கண்களையுடைய எனக்கு; ஓர் அப்பெருமானிடத்திலிருந்து ஒரு; வாசகம் வார்த்தையை; கொண்டு கொண்டு வந்து; அருளாயே சொல்லி அருளவேண்டும்
pozhil ĕzhum seven worlds; nalgi being desirous without their seeking out for their well-being; thān without their expecting his help; kāththu removing their hurdles; al̤ikkum fulfilling their desires; thān him; vinaiyĕṛkĕyŏ for me who is very sinful; nalgal āgādhu being indifferent; nāraṇanai nārāyaṇan who has exclusive relationship with everyone to protect everyone; kaṇdakkāl on seeing him; malgum flowing abundantly; nīr having the nature; punal having water; padappai gardens; irai prey; thĕr searching for; vaṇ siṛu kurugĕ pleasing to the eyes and young kurugu; malgum abundant; nīr having tears; kaṇṇĕṛku me who is having (teary) eyes; ŏr vāsagam a sentence (a message); koṇdu taking from me; arul̤āy help me by informing him

TVM 1.4.6

2829 அருளாதநீரருளி அவராவிதுவராமுன் *
அருளாழிப்புட்கடவீர் அவர்வீதியொருநாளென்று *
அருளாழியம்மானைக் கண்டக்காலிதுசொல்லி
யருள் * ஆழிவரிவண்டே! யாமும்என்பிழைத்தோமே?
2829 அருளாத நீர் அருளி * அவர் ஆவி துவராமுன் *
அருள் ஆழிப் புட்கடவீர் * அவர் வீதி ஒருநாள் என்று **
அருள் ஆழி அம்மானைக் * கண்டக்கால் இது சொல்லி
அருள் ஆழி வரி வண்டே * யாமும் என் பிழைத்தோமே? (6)
2829 arul̤āta nīr arul̤i * avar āvi tuvarāmuṉ *
arul̤ āzhip puṭkaṭavīr * avar vīti ŏrunāl̤ ĕṉṟu **
arul̤ āzhi ammāṉaik * kaṇṭakkāl itu cŏlli
arul̤ āzhi vari vaṇṭe * yāmum ĕṉ pizhaittome? (6)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

You bee with lovely rings! If you meet my gracious Lord, please tell Him that although He hasn't softened yet, He should bestow His grace on me before my life ends. Ask Him to pass through this street someday while riding the gracious bird Garuḍa, so I can steal a glance at Him. What is my fault that makes Him harden His heart against me?

Explanatory Notes

In the preceding stanza, the Lord was advised against imperilling His position as Nārāyaṇa. On second thoughts, the Āzhvār now apprehends the frightful possibility of the Lord staying away from him, choosing the lesser of the two evils, the greater one being contamination by the Āzhvār. Here then is a compromise formula—the Lord, being an ocean of grace, will certainly + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆழி வரிவண்டே! வட்டமான வரிகளையுடைய வண்டே!; அருள் ஆழி அம்மானை அருள் கடலான பெருமானை; கண்டக்கால் கண்டால்; அருளாத நீர் அருள் செய்யாத நீர்; அருளி அருள் செய்து; அவர் ஆவி தலைவியின் உயிர்; துவராமுன் உலர்வதற்கு முன்; அருள் ஆழிப் புள் அருள் கடலான கருடனை; அவர் வீதி அவர் இருக்கும் வீதி வழியே; ஒரு நாள் ஒரு நாளாகிலும்; கடவீர் என்று செலுத்துவீர் என்று; இது சொல்லி இவ்வார்த்தைகளைச் சொல்லி; அருள் அருள் புரியவேண்டும்; யாமும் என் வராதவர் தாமே அன்றி யாம்; பிழைத்தோமே? என்ன குற்றம் செய்தோம்?
āzhi circle shaped; vari vaṇdĕ ŏh beetle that has stripes in your body!; arul̤ ḥaving mercy more than emperumān himself; āzhi having chakkaraththāzhvār (sudharṣana chakram); ammānai that master; kaṇdakkāl on seeing; arul̤ādha nīr ẏou who have vowed not to show your mercy onparāngusa nāyagi since she has committed many sins/mistakes; arul̤i breaking such sankalpam and showing compassion once; avar her; āvi āthmā (soul); thuvarāmun Before her existence dries up; arul̤āzhi ocean of mercy; pul̤ periya thiruvadi (garudāzhvār); avar vīdhi īn the street where she resides; oru nāl̤ at least one day; kadavīr enṛu take a stroll like you did to protect gajĕndhrāzhwān; idhu solli arul̤ please tell him this; yāmum (īf you don-t come) we,; en pizhaiththŏm what mistake was committed?

TVM 1.4.7

2830 என்பிழைகோப்பதுபோலப் பனிவாடை யீர்கின்ற *
என்பிழையேநினைந்தருளி அருளாததிருமாலார்க்கு *
என்பிழைத்தாள்திருவடியின்தகவினுக்கு என்றொருவாய்ச்சொல் *
என்பிழைக்குமிளங்கிளியே! யான்வளர்த்தநீயலையே?
2830 என்பு இழை கோப்பது போலப் * பனிவாடை யீர்கின்ற *
என் பிழையே நினைந்தருளி * அருளாத திருமாலார்க்கு **
என் பிழைத்தாள் திருவடியின் * தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல் *
என்பிழைக்கும்? இளங் கிளியே ! * யான் வளர்த்த நீ அலையே? (7)
2830 ĕṉpu izhai koppatu polap * paṉivāṭai yīrkiṉṟa *
ĕṉ pizhaiye niṉaintarul̤i * arul̤āta tirumālārkku **
ĕṉ pizhaittāl̤ tiruvaṭiyiṉ * takaviṉukku ĕṉṟu ŏru vāyccŏl *
ĕṉpizhaikkum? il̤aṅ kil̤iye ! * yāṉ val̤artta nī alaiye? (7)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

I'm tormented by the spine-chilling freezing wind. You, young parrot, aren't you the one I raised? What harm will it do you to go and ask 'Tirumāl', who focuses only on my faults and withholds His grace from me, what my specific fault is that prevents His forgiveness?

Explanatory Notes

This is the key stanza of this decad. The messages sent in this decad, keep in the forefront the Lord’s noble trait of forgiveness (aparādha sahatvaṃ). If the Lord is not prepared to concede even the simple request (as in the preceding stanza) of some day passing through the street where the Āzhvār lives, alienated by his shortcomings, the question is now asked, what has + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்பு இழைக்கும் எலும்பைச் செதுக்குகின்ற; இளங்கிளியே! இளம் கிளியே!; என்பு இழை எலும்பினைத் தொளைத்து நூலிழையை; கோப்பது போல கோப்பது போல; பனி வாடை வாடைக் காற்று என்னை; ஈர்கின்ற வருத்துகின்றது; என் பிழையே என்னுடைய குற்றங்களையே; நினைந்தருளி நினைத்து தன் குற்றம் பாராமல்; அருளாத அருள் புரியாத; திருமாலார்க்கு திருமாலிடம் சென்று; திருவடியின் ஸ்வாமியான உம்முடைய; தகவினுக்கு கிருபா குணத்துக்கு என் தலைவி; என் பிழைத்தாள் என்று என்ன பிழை செய்தாள் என்று; ஒருவாய்ச் சொல் ஒரு வார்த்தை சொல்லவேண்டும்; யான் வளர்த்த நான் வளர்த்த; நீ அலையே? கிளி அல்லவா நீ?
enbu izhaikkum il̤am kil̤iyĕ ŏh parrot who is piercing my bones with your brimming youth and beauty! enbu = elumbu- bone-; yān val̤arththa nīyalaiyĕ Were you not raised by me (as appropriate)?; enbu in the bone; izhai string; kŏppathu pŏla like piercing it through; pani vādai freeśing wind; īrginṛa torturing; en pizhaiyĕ ninaindhu arul̤i mercifully thinking about my mistakes only instead of thinking of his own; arul̤ādha not blessing me; thirumālārkku to the emperumān who is good towards pirātti who triggers his compassion; thiruvadiyin for you who are the master; thagavinukku for the compassion that is your intrinsic nature; en what; pizhaiththāl̤ enṛu mistake that was committed; oru vāy one word; sol have to tell

TVM 1.4.8

2831 நீயலையே? சிறுபூவாய்! நெடுமாலார்க்கென்தூதாய் *
நோயெனதுநுவலென்னநுவலாதேயிருந்தொழிந்தாய் *
சாயலொடுமணிமாமை தளர்ந்தேன்நான் * இனிஉனது
வாயலகிலின்னடிசில் வைப்பாரைநாடாயே.
2831 நீ அலையே? சிறு பூவாய் * நெடுமாலார்க்கு என் தூதாய்
நோய் எனது நுவல் என்ன * நுவலாதே இருந்தொழிந்தாய் **
சாயலொடு மணிமாமை * தளர்ந்தேன் நான் * இனி உனது
வாய் அலகில் இன் அடிசில் * வைப்பாரை நாடாயே (8)
2831 nī alaiye? ciṟu pūvāy * nĕṭumālārkku ĕṉ tūtāy
noy ĕṉatu nuval ĕṉṉa * nuvalāte iruntŏzhintāy **
cāyalŏṭu maṇimāmai * tal̤arnteṉ nāṉ * iṉi uṉatu
vāy alakil iṉ aṭicil * vaippārai nāṭāye (8)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Young bird, Pūvāy, you didn't answer my request to go to Neṭumāl and reveal my suffering from separation. Instead, you lingered quietly. Now that I am deteriorating, my color and charm fading, you shall leave and seek others who can feed you tiny bits of tasty food.

Explanatory Notes

(i) ‘Pūvai’ is a nice-looking, tiny bird.

(ii) Here is a thrilling anecdote. With declining health, Peria Tirumalai Nambi, one of the five Preceptors of Śrī Rāmānuja, became too feeble to offer the diurnal worship to the household Deity-Lord Kṛṣṇa, given the pet name of ‘The little one dancing for butter’. And so, one day, drawing aside the drapery that hung before + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிறு பூவாய்! சிறிய பறவையே!; நெடுமாலார்க்கு எம்பெருமானுக்கு; என் தூதாய் என் தூதாகிச் சென்று; நோய் எனது எனது பிரிவாற்றாமையை; நுவல் என்ன ‘சொல்’ என்று வேண்டச் செய்தேயும்; நுவலாதே போய்ச் சொல்லாதே; இருந்தொழிந்தாய் வாளா இருந்தாய்; நீ அலையே? நீ அல்லவோ?; நான் சாயலொடு ஒளியோடு கூடின நான்; மணி மாமை என் அழகிய நிறத்தை; தளர்ந்தேன் இழந்தேன்; இனி இனி இப்படியான பின்பு; உனது வாய் அலகில் உன் வாய் அலகுக்கு உள்ளே; இன் அடிசில் இனிய இரையை; வைப்பாரை ஊட்டவல்லவர்களை; நாடாயே நீயே தேடிக்கொள்
siṛu pūvāy ŏh bird that is small due to your tender age!; nedumālārkku ŏne who is greatly mad (ŏut of unbounded vāthsalyam towards his devotees); en thūdhāy going as my messenger; enadhu my; nŏy disease of separation; nuval enna having requested you to tell; nuvalādhĕ not telling him; irundhu ozhindhāy ignored me out out of pride (of not desiring to go on my behalf); nīyalaiyĕ isn-t that you?; nān ī; sāyalodu radiance; maṇi worthy of praise; māmai color; thal̤arndhĕn lost; ini after being engrossed in him like this; unathu your; vāy alagil inside your beak; in sweet; adisil rice/food; vaippārai one who would feed; nādāy search for them outside

TVM 1.4.9

2832 நாடாதமலர்நாடி நாள்தோறும்நாரணன்தன் *
வாடாதமலரடிக்கீழ் வைக்கவேவகுக்கின்று *
வீடாடிவீற்றிருத்தல் வினையற்றதென்செய்வதோ? *
ஊடாடுபனிவாடாய்! உரைத்தீராயெனதுடலே.
2832 நாடாத மலர் நாடி * நாள்தோறும் நாரணன் தன்
வாடாத மலர் அடிக்கீழ் * வைக்கவே வகுக்கின்று **
வீடாடி வீற்றிருத்தல் * வினை அற்றது என் செய்வதோ? *
ஊடாடு பனி வாடாய் * உரைத்து ஈராய் எனது உடலே (9)
2832 nāṭāta malar nāṭi * nāl̤toṟum nāraṇaṉ taṉ
vāṭāta malar aṭikkīzh * vaikkave vakukkiṉṟu **
vīṭāṭi vīṟṟiruttal * viṉai aṟṟatu ĕṉ cĕyvato? *
ūṭāṭu paṉi vāṭāy * uraittu īrāy ĕṉatu uṭale (9)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

You biting wind, always moving, ask my Lord Nāraṇaṉ why my limbs, meant to serve His floral feet daily, are denied this joy and sunk in sadness. If you receive no favorable reply from Him, then better return and tear my body apart.

Explanatory Notes

(i) The chill blast, inflicting severe pain on Parāṅkuśa Nāyakī, like unto the king’s executioners torturing the subjects found guilty of high treason, is addressed by her as follows:

“You see me deep down in dejection, due to long separation from my Lord and it is my grievous misfortune that, in such a state, I abstain from the stipulated daily service, such as gathering + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஊடாடு அங்குமிங்கும் நடையாடித்திரிகிற; பனி வாடாய்! குளிர்ந்த வாடைக் காற்றே!; நாடாத மலர் நாடி தேட அரிய மலர்களைத் தேடி; நாள் தோறும் தினந்தோறும்; நாரணன் தன் நாராயணனின்; வாடாத மலர் வாடாத தாமரை மலர் போன்ற; அடிக்கீழ் திருவடிகளில்; வைக்கவே ஸமர்ப்பிப்பதற்காகவே; வகுக்கின்று அவயவங்களை ஏற்படுத்தியிருக்க; வீடாடி வீற்றிருத்தல் இப்படி பிரிவால் தனித்திருக்கும்; வினையற்றது துர்பாக்கியம்; என் செய்வதோ? ஏன் நேர்ந்ததோ? வாடைக் காற்றே!; உரைத்து அவனிடம் சொல்லி அனுகூலமான; எனது உடலே மறுமொழி பெறாவிடின் என் சரீரத்தை; ஈராய் இரு பிளவாக்கிவிடு இல்லையேல் மாய்த்துவிடு
ūdu īn between (emperumān and me); ādu occurring/travelling; pani vādāy ŏh cool wind!; nādādha rare (difficult to find); malar flowers; nādi seek out; nāl̤ thŏṛum daily; nāraṇan than unto nārāyaṇa (who has eternal relationship with everyone as master); vādādha malar adik kīzh unto the fresh lotus feet of emperumān; vaikkavĕ on offering; vagukkinṛu engaging (the senses); vīdu in separation; ādi occurring; vīṝiruththal being alone; vinai aṝadhu unfortunate situation; en seyvadhŏ what is the result of it?; uraiththu telling him (and if he gives unfavourable answer); enadhu udal my body; īrāy kill it so it does not exist

TVM 1.4.10

2833 உடலாழிப்பிறப்புவீடு உயிர்முதலாமுற்றுமாய் *
கடலாழிநீர்தோற்றி அதனுள்ளேகண்வளரும் *
அடலாழியம்மானைக் கண்டக்காலிதுசொல்லி *
விடல் ஆழிமடநெஞ்சே! வினையோமொன்றாமளவே.
2833 உடல் ஆழிப் பிறப்பு வீடு * உயிர் முதலா முற்றுமாய் *
கடல் ஆழி நீர் தோற்றி * அதனுள்ளே கண்வளரும் **
அடல் ஆழி அம்மானைக் * கண்டக்கால் இது சொல்லி *
விடல் ஆழி மட நெஞ்சே * வினையோம் ஒன்றாம் அளவே (10)
2833 uṭal āzhip piṟappu vīṭu * uyir mutalā muṟṟumāy *
kaṭal āzhi nīr toṟṟi * ataṉul̤l̤e kaṇval̤arum **
aṭal āzhi ammāṉaik * kaṇṭakkāl itu cŏlli *
viṭal āzhi maṭa nĕñce * viṉaiyom ŏṉṟām al̤ave (10)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Oh, my fickle mind, it is our birthright to serve the Lord. Go to Him, the one holding the bright discus and reclining in the deep sea, the Creator of all worlds. Show Him our distress, and don't leave Him until we are restored to Him.

Explanatory Notes

When the details of service unto the Lord were spelt out by the Āzhvār in the preceding stanza, his mind, bent upon such service, was about to slip out of the body. It is held by some that the Āzhvār requested his mind not to get parted till stability with the Lord was attained. Being, however, a decad where the Āzhvār sends errands, it would be more appropriate to say + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆழி மட நெஞ்சே! ஆழ்ந்த மடநெஞ்சே!; உடல் சரீர ஸம்பந்தம் பெற்று; ஆழிப் பிறப்பு மாறி மாறி பிறத்தலும்; வீடு மோக்ஷமும்; உயிர் இவற்றை அடைவதற்க்கு உரிய ஆத்மாவும்; முதலா ஆகியவற்றுக்கு காரணபூதனாய்; முற்றுமாய் காப்பவனாய்; கடல் ஆழி நீர் ஆழ்ந்த நீரையுடைய; தோற்றி அதனுள்ளே பாற்கடலிலே தோன்றி அதனுள்; கண்வளரும் சயனித்திருக்கும்; அடல் ஆழி சக்கரத்தைக் கையிலுடைய; அம்மானை கண்டக்கால் பெருமானைக் கண்டால்; இது சொல்லி இந்த என் நிலைமையை அவனிடம் சொல்லி; வினையோம் பாபத்தையுடைய நான்; ஒன்றாம் அளவே அவனோடு ஒன்றாகும் வரை; விடல் விடாதே
āzhi deep; mada nenjĕ ŏh (my) humble mind!; udal in body; āzhi in the form of a chakram (disc/cyclic); piṛappu the material realm which is the abode of birth after birth; vīdu mŏksham (liberation) which is being relieved from previously explained cycle of birth; uyir āthmā which is the enjoyer of bhŏgam (in material realm) and mŏksham (in spiritual realm); mudhalāy being the controller of āthmā etc; muṝumāy being the prakāri (substratum) for the protection of everything; āzhi nīr deep water; kadal in the kshīrārṇavam (milk ocean); thŏṝi being visible; adhanul̤l̤ĕ inside that; kaṇ val̤arum lying down; adal being war-ready (towards the enemies of the devotees); āzhi chakkaraththāzhvār-s; ammānai master; kaṇdakkāl on seeing him; idhu (present) suffering; solli informing (him); vinaiyŏm us who are having sins (that is the cause for this separation); onṛāmal̤avu until ī become united (with him); vidal don-t leave

TVM 1.4.11

2834 அளவியன்றவேழுலகத்தவர் பெருமான்கண்ணனை *
வளவயல்சூழ் வண்குருகூர்ச் சடகோபன்வாய்ந்துரைத்த *
அளவியன்றவந்தாதி ஆயிரத்துள்இப்பத்தின் *
வளவுரையால்பெறலாகும் வானோங்குபெருவளமே. (2)
2834 ## அளவு இயன்ற ஏழ் உலகத்து அவர் * பெருமான் கண்ணனை *
வள வயல் சூழ் வண் குருகூர்ச் * சடகோபன் வாய்ந்து உரைத்த **
அளவு இயன்ற அந்தாதி * ஆயிரத்துள் இப் பத்தின் *
வள உரையால் பெறலாகும் * வான் ஓங்கு பெரு வளமே (11)
2834 ## al̤avu iyaṉṟa ezh ulakattu avar * pĕrumāṉ kaṇṇaṉai *
val̤a vayal cūzh vaṇ kurukūrc * caṭakopaṉ vāyntu uraitta **
al̤avu iyaṉṟa antāti * āyirattul̤ ip pattiṉ *
val̤a uraiyāl pĕṟalākum * vāṉ oṅku pĕru val̤ame (11)

Ragam

Kandā / கண்டா

Thalam

Ādi / ஆதி

Bhavam

Nāyaki (lovelorn lady)

Thoodhu

Simple Translation

Those who recite these sweet ten songs out of the perfectly composed thousand by Caṭakōpaṉ, chief of rich Kurukūr, in adoration of Kaṇṇaṉ, Lord of the seven worlds, will attain the supreme bliss of serving in SriVaikuntam.

Explanatory Notes

(i) In the preceding decad, expatiating on the Supreme Lord’s easy accessibility, the Saint wanted to abide in the proximate Kṛṣṇa avatāra but failure to achieve it led him to send errands to the Lord in this decad. Having seen the intensity of the love of Parāṅkuśa Nāyakī and her yearning for Divine presence, too deep for words, as revealed in the preceding ten stanzas, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அளவு இயன்ற எல்லையைக் கடந்த; ஏழு உலகத்தவர் ஏழுலகங்களிலுமுள்ள சேதநர்களுக்கும்; பெருமான் கண்ணனை தலைவனான கண்ணனை; வள வயல் சூழ் வளமுள்ள வயல்களால் சூழ்ந்த; வண் குருகூர் அழகிய திருக்குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; வாய்ந்து உரைத்த அன்புபூண்டு அருளிச் செய்த; அளவு சொல் பொருள் போன்ற; இயன்ற இலக்கண விதிகளோடு கூடிய; அந்தாதி ஆயிரத்துள் அந்தாதி ஆயிரத்துள்; இப் பத்தின் இப்பத்துப் பாசுரங்களின்; வள உரையால் இனிய சொற்களாலே; வான் ஓங்கு பரமபதத்தில் சிறந்த செல்வமாகிய; பெரு வளமே கைங்கரிய செல்வத்தை; பெறலாகும் பெறலாம்
al̤avu boundary; iyanṛa crossed/beyond; ĕzhu seven types of; ulagaththavar chĕthanas (sentients) who are residents of world; perumān one who is glorified as the master; kaṇṇanai krishṇa (who is easily approachable by his devotees); val̤am abundant/rich; vayal fertile fields; sūzh surrounded by; vaṇ beautiful; kurugūr controller of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; vāyndhu approached (with gyānam (knowledge) and prĕmam (devotion)); uraiththa mercifully spoken by; al̤avu in pramāṇams (which are decorated properly in poetic metrics); iyanṛa being present; andhādhi in andhādhi type of poem (last word/letter of one pāsuram remains consistent with the first word/letter of the next pāsuram); āyiraththu in the thousand pāsurams; ul̤ those which reveal āzhvār-s bhāva (mood) and bandha (relationship); ippaththin of these 10 pāsurams; val̤am sweet; uraiyāl words alone; vān in paramapadham; ŏngu lofty; peru val̤am kainkarya sāmrājyam (the kingdom of servitude); peṛalām can be achieved