Chapter 3

Saulabhyam (easy approachability) - (பத்து உடை)

அடியவர்க்கு எளியவன்
Amongst Bhagavān’s innumerable auspicious qualities, He is not only known for His supremacy (parathvam) but also for His ease in approachability (saulabhyam). The following divine hymns elaborate on the auspicious trait, saulabhyam. Āzhvār completely immerses himself enjoying this divine trait that he falls into a trance for the next six months.
பகவானிடம் பரத்வம் இருப்பது போல், ஸெளலப்யமும் இருக்கிறது. இத்திருவாய்மொழியில் ஸெளலப்ய குணம் கூறப்படுகிறது. இப்பண்பு ஆழ்வாரை ஆறு மாத காலம் மோஹிக்கச் செய்தது.

முதல் பத்து -மூன்றாம் -திருவாய்மொழி -பத்துடை அடியவர்க்கு எளியவன்-பிரவேசம்-

சர்வ ஸ்மாத் பரன் ‘எல்லாரினும் உயர்வு அற உயர்ந்தவன்’ + Read more
Verses: 2813 to 2823
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: நட்டபாடை
Timing: 1.13-2.24 PM
Recital benefits: will not be born again and they will go to heaven and stay with the gods.
  • TVM 1.3.1
    2813 ## பத்து உடை அடியவர்க்கு எளியவன் * பிறர்களுக்கு அரிய
    வித்தகன் * மலர்மகள் விரும்பும் * நம் அரும்பெறல் அடிகள் **
    மத்து உறு கடை வெண்ணெய் * களவினில் உரவிடை யாப்புண்டு
    எத்திறம் ! உரலினோடு * இணைந்திருந்து ஏங்கிய எளியவே (1)
  • TVM 1.3.2
    2814 எளிவரும் இயல்வினன் * நிலை வரம்பு இல பல பிறப்பாய் *
    ஒளிவரும் முழு நலம் * முதல் இல * கேடு இல வீடு ஆம் **
    தெளிதரும் நிலைமையது * ஒழிவு இலன் முழுவதும் இறையோன் *
    அளிவரும் அருளினோடு * அகத்தனன் புறத்தனன் அமைந்தே (2)
  • TVM 1.3.3
    2815 அமைவு உடை அறநெறி * முழுவதும் உயர்வு அற உயர்ந்து *
    அமைவு உடை முதல் கெடல் * ஒடிவு இடை அற நிலம் அது ஆம் **
    அமைவு உடை அமரரும் * யாவையும் யாவரும் தான் ஆம் *
    அமைவு உடை நாரணன் மாயையை * அறிபவர் யாரே? (3)
  • TVM 1.3.4
    2816 யாரும் ஓர் நிலைமையன் என * அறிவு அரிய எம் பெருமான் *
    யாரும் ஓர் நிலைமையன் என * அறிவு எளிய எம் பெருமான் **
    பேரும் ஓர் ஆயிரம் * பிற பல உடைய எம் பெருமான் *
    பேரும் ஓர் உருவமும் உளது இல்லை * இலது இல்லை பிணக்கே (4)
  • TVM 1.3.5
    2817 பிணக்கு அற அறு வகைச் சமயமும் * நெறி உள்ளி உரைத்த *
    கணக்கு அறு நலத்தனன் * அந்தம் இல் ஆதி அம் பகவன் **
    வணக்கு உடைத் தவநெறி * வழிநின்று புறநெறி களைகட்டு *
    உணக்குமின் பசை அற * அவனுடை உணர்வுகொண்டு உணர்ந்தே (5)
  • TVM 1.3.6
    2818 உணர்ந்து உணர்ந்து இழிந்து அகன்று * உயர்ந்து உரு வியந்த இந் நிலைமை *
    உணர்ந்து உணர்ந்து உணரிலும் * இறைநிலை உணர்வு அரிது உயிர்காள் ! **
    உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து * அரி அயன் அரன் என்னும் இவரை *
    உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து * இறைஞ்சுமின் மனப்பட்டது ஒன்றே (6)
  • TVM 1.3.7
    2819 ஒன்று எனப் பல என * அறிவு அரும் வடிவினுள் நின்ற *
    நன்று எழில் நாரணன் * நான்முகன் அரன் என்னும் இவரை **
    ஒன்ற நும் மனத்து வைத்து * உள்ளி நும் இரு பசை அறுத்து *
    நன்று என நலம் செய்வது * அவனிடை நம்முடை நாளே (7)
  • TVM 1.3.8
    2820 நாளும் நின்று அடு நம பழமை * அம் கொடுவினை உடனே
    மாளும் * ஓர் குறைவு இல்லை * மனன் அகம் மலம் அறக் கழுவி **
    நாளும் நம் திரு உடை அடிகள் தம் * நலம் கழல் வணங்கி *
    மாளும் ஓர் இடத்திலும் * வணக்கொடு மாள்வது வலமே (8)
  • TVM 1.3.9
    2821 வலத்தனன் திரிபுரம் எரித்தவன் * இடம்பெறத் துந்தித்
    தலத்து * எழு திசைமுகன் படைத்த * நல் உலகமும் தானும்
    புலப்பட ** பின்னும் தன் உலகத்தில் * அகத்தனன் தானே
    சொலப் புகில் * இவை பின்னும் வயிற்று உள * இவை அவன் துயக்கே (9)
  • TVM 1.3.10
    2822 துயக்கு அறு மதியில் நல் ஞானத்துள் * அமரரைத் துயக்கும்
    மயக்கு உடை மாயைகள் * வானிலும் பெரியன வல்லன் **
    புயல் கரு நிறத்தனன் * பெரு நிலங் கடந்த நல் அடிப் போது *
    அயர்ப்பிலன் அலற்றுவன் * தழுவுவன் வணங்குவன் அமர்ந்தே (10)
  • TVM 1.3.11
    2823 ## அமரர்கள் தொழுது எழ * அலை கடல் கடைந்தவன் தன்னை *
    அமர் பொழில் வளங் குருகூர்ச் * சடகோபன் குற்றேவல்கள் **
    அமர் சுவை ஆயிரத்து * அவற்றினுள் இவை பத்தும் வல்லார் *
    அமரரோடு உயர்வில் சென்று * அறுவர் தம் பிறவி அம் சிறையே (11)