Chapter 7

ĀsrayaNa samaya athyantha sārasyam (being benevolent to those who approach Him) - (பிறவித்துயர் அற)

ஆராதிப்பார்க்கு மிக இனியன்
Āzhvār elaborates on the joys of attaining Bhagavān in the next set of divine hymns. Thirumāl is most benevolent to those who are devout to Him.
பகவானை அடைந்து பெற்ற இன்பங்களை ஆழ்வார் கூறுகிறார். தன்னைப் பூசிப்பார்க்குத் திருமால் இனியவன்.
Verses: 2857 to 2867
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: வியந்தம்
Recital benefits: any sickness will go away
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 1.7.1

2857 பிறவித்துயரற ஞானத்துள் நின்று *
துறவிச்சுடர்விளக்கம் தலைப்பெய்வார் *
அறவனை ஆழிப்படையந்தணனை *
மறவியையின்றி மனத்துவைப்பாரே. (2)
2857 ## பிறவித்துயர் அற * ஞானத்துள் நின்று *
துறவிச் சுடர் * விளக்கம் தலைப்பெய்வார் **
அறவனை * ஆழிப்படை அந்தணனை *
மறவியை இன்றி * மனத்து வைப்பாரே (1)
2857 ## piṟavittuyar aṟa * ñāṉattul̤ niṉṟu *
tuṟavic cuṭar * vil̤akkam talaippĕyvār **
aṟavaṉai * āzhippaṭai antaṇaṉai *
maṟaviyai iṉṟi * maṉattu vaippāre (1)

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

(Oh, what a pity!) the Lord, gracious and immaculate, Sporting the effulgent discus, is tenaciously sought By those votaries wanting no more than to liberate Themselves from the miseries of birth and death and get lost in a state of ‘Self-enjoyment’ (of the Soul in its free state).

Explanatory Notes

Oh, what a pity! After ail the rigours of their disciplines, the ‘Kevalas’ rest contented with mere liberation from the cycle of birth and death, followed by4 ātmāvalokana’ (i.e.) enjoyment of their own selves in the disembodied state. The tragedy of it is heightened by the fact that they invoked the Lord’s grace for attaining this state but failed to be enthralled by + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிறவித்துயர் பிறவித் துன்பம் மட்டும்; அற நீங்கும்படி கைவல்யார்த்திகள்; ஞானத்துள் நின்று ஆத்ம ஞான நெறியில் நின்று; துறவி அனைத்து உபாதிகளையும் விட்டவனான; சுடர் ஆத்மாவினுடைய ஸாக்ஷாத்காரத்தின்; விளக்கம் விளக்கம் அது மட்டுமே கைவல்யார்த்திகள் விருப்பம்; அறவனை தருமத்தின் உருவானவனும்; ஆழிப்படை சக்கரத்தைக் கையிலுடையவனும்; அந்தணனை பரம பாவனனான எம்பெருமானை; தலைப் பெய்வார் பெற விரும்புகின்றவர்கள்; மறவியை இன்றி மறத்தல் இன்றியே அப்பயனை அடைய; மனத்து வைப்பாரே உபாஸிக்கின்றார்களே! அந்தோ!
piṛavith thuyar sufferings which arise out of birth; aṛa to remove; gyānaththil in knowledge (to see āthmā); ninṛu having conviction; thuṛavi being discharged from all bindings; chudar the radiant āthmā-s; vil̤akkam manifestation; thalaippeyvār ones who are interested in; aṛavanai most benevolent (due to his bestowing the results for such persons); āzhippadai one having the sudharsana chakram (which purifies the heart); anthaṇanai the purest īswara (supreme lord); maṛaviyai inṛi having him as means; manaththu vaippār how they are meditating! (accuses them)

TVM 1.7.2

2858 வைப்பாம்மருந்தாம் அடியரை * வல்வினைத்
துப்பாம்புலனைந்தும் துஞ்சக்கொடானவன் *
எப்பால்யவர்க்கும் நலத்தாலுயர்ந்துயர்ந்து *
அப்பாலவன் எங்களாயர்கொழுந்தே.
2858 வைப்பு ஆம் மருந்து ஆம் * அடியரை * வல்வினைத்
துப்பு ஆம் புலன் ஐந்தும் * துஞ்சக்கொடான் அவன் **
எப்பால் எவர்க்கும் * நலத்தால் உயர்ந்து உயர்ந்து *
அப்பாலவன் * எங்கள் ஆயர் கொழுந்தே (2)
2858 vaippu ām maruntu ām * aṭiyarai * valviṉait
tuppu ām pulaṉ aintum * tuñcakkŏṭāṉ avaṉ **
ĕppāl ĕvarkkum * nalattāl uyarntu uyarntu *
appālavaṉ * ĕṅkal̤ āyar kŏzhunte (2)

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

The Lord is, unto His devotees, the treasure fine And the unfailing drug; unto the senses five He shan’t make them succumb; of towering bliss, He’s above one and all, in all places, Beyond speech and thought and yet He’s (our Gopāla), the shepherd chief!

Explanatory Notes

Having decried and detested, in the preceding stanza, the ‘Kevalas’ seeking from the gracious Lord the inferior stature of Kaivalya, the Āzhvār now depicts the Lord in relation to those who seek Him as the goal, to the exclusion of everything else. Towering above all, beyond speech and comprehension, He still condescended to come down here as Gopālakṛṣṇa, of amazing simplicity.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அடியரை தன் அடியாரை; வல்வினை கொடிய கருமங்களை; துப்பு ஆம் செய்யத் தூண்டுகிற வழியில் இருக்கும்; புலன் ஐந்தும் புலன் ஐந்திலும் அகப்பட்டு; துஞ்சகொடான் வருந்தும்படி அவர்களை விடாதவனும்; வைப்பு ஆம் அவர்களுக்கு நிதி போன்றவனும்; மருந்து ஆம் மருந்தும் ஆவான்; அவன் அந்த எம்பெருமான்; எப்பால் அவன் மனுஷ்யானந்தம் முதல் பிரமானந்தம் வரை; எவர்க்கும் எவ்விடத்திலுமுள்ள எல்லா சேதநர்க்கும்; நலத்தால் ஆனந்த குணத்தினால்; உயர்ந்து உயர்ந்து மிகவும் உயர்ந்து; அப்பால் வாக்குக்கும் மனத்துக்கும் எட்டாதவனும்; எங்கள் எங்கள்; ஆயர் கொழுந்தே ஆயர் குலத் தலைவனும் அவனே
adiyarai (bhagavān-s distinctive) sĕshabhūthar (servitors); val popular; vinai karmas; thuppām capable; pulan aindhum senses (which control); thunjak kodān one who does not let them perish; vaippām being the wealth (that is their purushārththam [goal]); marundhām medicine (that is the means to remove the obstacles to accomplish that goal); eppāl all places (starting from ānandham of humans up to brahmā); evarkkum all chĕthanas (jīvāthmās); nalaththāl bliss; uyarndhu uyarndhu in large quantity; appāl avan unreachable (for the words and mind); engal̤ being for us (who are fully for him) alone; āyar (ignorant) cow-herd clan; kozhundhu leader

TVM 1.7.3

2859 ஆயர்கொழுந்தாய் அவராற்புடையுண்ணும் *
மாயப்பிரானை என்மாணிக்கச்சோதியை *
தூயவமுதைப் பருகிப்பருகி * என்
மாயப்பிறவி மயர்வறுத்தேனே.
2859 ஆயர் கொழுந்தாய் * அவரால் புடையுண்ணும் *
மாயப் பிரானை * என் மாணிக்கச் சோதியை **
தூய அமுதைப் * பருகிப் பருகி * என்
மாயப் பிறவி * மயர்வு அறுத்தேனே (3)
2859 āyar kŏzhuntāy * avarāl puṭaiyuṇṇum *
māyap pirāṉai * ĕṉ māṇikkac cotiyai **
tūya amutaip * parukip paruki * ĕṉ
māyap piṟavi * mayarvu aṟutteṉe (3)

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-2

Simple Translation

I drank and drank, without intermission, the nectar pure, The dazzling gem, the mystic Lord of wondrous deeds, (Gopāla) the shepherd chief, bound and beaten by cowherds (For theft of butter) and got my nescience, matter-born, severed.

Explanatory Notes

(i) Speaking about Gopālakṛṣṇa, in the last song, the Āzhvār had before him the entire panorama of His mysterious deeds and by merely meditating on them, he got all his accumulated nescience, born of age-long material contacts, eradicated in toto, root and branch.

(ii) In the by-gone days, the Devas got nectar subject to various conditions. Even so, it is by no means + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆயர் கொழுந்தாய் ஆயர்குலக் கொழுந்தான கண்ணன்; அவரால் அந்த ஆயர்களால்; புடையுண்ணும் அடியுண்டு; மாயப் பிரானை மாயச்செயல் வல்லவனும்; என் மாணிக்க எனக்கு மாணிக்கம்போல்; சோதியை ஒளி பெற்ற வடிவையுடையவனும்; தூய பரிசுத்தமான; அமுதை அம்ருதம் போன்றவனுமான பெருமானை; பருகிப் பருகி இடைவிடாமல் அநுபவித்து; என் மாய பிரகிருதியின் காரியமாய் வருகின்ற; பிறவி பிறவியினாலுண்டான; மயர்வு அஞ்ஞானத்தை; அறுத்தேனே போக்கிக் கொண்டேன்
āyar for the cow-herd boys; kozhundhāy being the leader; avarāl (for stealing butter etc) by those; pudaiyuṇṇum beaten; māyap pirānai performing amaśing acts (such as crying due to being beaten etc) and giving them joy; en māṇikkach chŏthiyai one who presented his (well polished) carbuncle-like radiantly shining form (due to his being submissive towards cow-herd boys) for me; thūya amudhai pure nectar (which is not mixed with supremacy and only presenting simplicity); parugip parugi eternally enjoying; en (just like for the one who drinks milk as a medicine will be cured of indigestion) my; māyam that which is caused by prakruthi; piṛavi due to the birth; mayarvu ignorance; aṛuththĕn finished

TVM 1.7.4

2860 மயர்வறவென்மனத்தே மன்னினான்தன்னை *
உயர்வினையேதரும் ஒண்சுடர்க்கற்றையை *
அயர்விலமரர்கள் ஆதிக்கொழுந்தை * என்
இசைவினை என்சொல்லியான்விடுவேனோ?
2860 மயர்வு அற என் மனத்தே * மன்னினான் தன்னை *
உயர்வினையே தரும் * ஒண் சுடர்க் கற்றையை **
அயர்வு இல் அமரர்கள் * ஆதிக் கொழுந்தை * என்
இசைவினை * என் சொல்லி யான் விடுவேனோ? (4)
2860 mayarvu aṟa ĕṉ maṉatte * maṉṉiṉāṉ taṉṉai *
uyarviṉaiye tarum * ŏṇ cuṭark kaṟṟaiyai **
ayarvu il amararkal̤ * ātik kŏzhuntai * ĕṉ
icaiviṉai * ĕṉ cŏlli yāṉ viṭuveṉo? (4)

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Oh! what pretext can I find, from Him to part, The first Lord of Celestials ever alert, A beautiful bundle of brilliance, heaping on me continually, Torrents of knowledge and wisdom, who brought me Round and to root out my ignorance lodged in me firmly?

Explanatory Notes

(i) In the preceding song, the Āzhvār acknowledged the Lord’s benevolence in rooting out all his ignorance. This is exactly what he had prayed for in his supplication to the Lord in the very first song of his first work (Tiruviruttam). Having achieved his purpose, can the Āzhvār now afford to forget the Lord? No, having removed all the vestiges of ignorance in the Āzhvār, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மயர்வு அற அறிவின்மை அடியோடு நீங்க; என் மனத்தே என்மனத்திலே; மன்னினான் தன்னை நிலைபெற்று இருப்பவனும்; உயர்வினையே உயர்ந்த ஞானம் பக்தி ஆகியவற்றை; தரும் அளிப்பவனும்; ஒண் சுடர் கற்றையை ஒளிமயமானவனும்; அயர்வு இல் மறதி என்பது என்றும் இல்லாத; அமரர்கள் நித்யஸூரிகள் இருக்கும்; ஆதிக் கொழுந்தை வைகுந்தத்துக்குத் தலைவனும்; என் தன்னை அடைய எனக்கு; இசைவினை இசைவை விளைவித்த எம்பெருமானை; என் சொல்லி என்ன காரணம் சொல்லி; யான் விடுவேனோ நான் விட்டு விலகுவேன்
mayarvu ignorance; aṛa to remove; en manaththĕ into my heart/mind; manninān thannai residing eternally; uyarvinaiyĕ increasing my gyānam, bhakthi etc; tharum one who gives; oṇ being infinitely enjoyable; sudark kaṝaiyai having a radiantly shining form; ayarvu forgetfulness; il not having; amarargal̤ for the nithya sūris; ādhik kozhundhai being the leader (who sustains them etc); en isaivinai one who has full control over my acceptance (to approach him); en solli what reason can ī say; yān me (who knows about him); viduvĕn give up

TVM 1.7.5

2861 விடுவேனோ? என்விளக்கை என்னாவியை *
நடுவேவந்து உய்யக்கொள்கின்றநாதனை *
தொடுவேசெய்து இளவாய்ச்சியர் கண்ணினுள் *
விடவேசெய்து விழிக்கும்பிரானையே.
2861 விடுவேனோ? என் விளக்கை * என் ஆவியை *
நடுவே வந்து * உய்யக் கொள்கின்ற நாதனை **
தொடுவே செய்து * இள ஆய்ச்சியர் கண்ணினுள் *
விடவே செய்து * விழிக்கும் பிரானையே? (5)
2861 viṭuveṉo? ĕṉ vil̤akkai * ĕṉ āviyai *
naṭuve vantu * uyyak kŏl̤kiṉṟa nātaṉai **
tŏṭuve cĕytu * il̤a āycciyar kaṇṇiṉul̤ *
viṭave cĕytu * vizhikkum pirāṉaiye? (5)

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

The amorous Lord who, by His sweet looks, Enticed away the young damsels (of Gokula) Is my Soul, the beacon light, Who unto me reveals All things; how can I from Him separation brook, My Saviour grand who did on me alight, all on a sudden?

Explanatory Notes

The damsels of Gokula would even spurn spiritual world, but not give up the inseparable company of Śrī Kṛṣṇa. The Lord having enthralled the Āzhvār likewise, there is no question of his giving Him up.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் விளக்கை எனக்கு ஞான விளக்காய் இருக்கின்றவனை; என் ஆவியை என் ஆத்மாவை; நடுவே வந்து இடையில் வந்து; உய்ய அஹங்கார மமகாரங்களால் அழியாதபடி; கொள்கின்ற நாதனை காக்கும் பெருமானை; தொடுவே செய்து கபடச் செயல்களையே செய்து; இள ஆய்ச்சியர் இளம்பருவ ஆய்ச்சியர்களின்; கண்ணினுள் கண்களுக்குள்; விடவே செய்து தூது விடுவதைச் செய்து; விழிக்கும் கண்கலப்புச் செய்கிற உபகாரகனான; பிரானையே? பெருமானை; விடுவேனோ விடுவேனோ விடமாட்டேன்
en vil̤akkai ŏne who lights up the lamp of knowledge which makes me understand the nature of my true self; en āviyai my soul; naduvĕ in-between; vandhu entered (seeing the right time/opportunity); uyyak kol̤ginṛa uplifting me (so ī don-t perish); nādhanai being the master; thoduvĕ mischievous pastimes; seydhu performed; il̤am having youthful state (which is not qualified to be used by anyone); āychchiyar cow-herd girls-; kaṇṇinul̤ inside [their] eyes; vidavĕ seydhu engaged in cunning/subtle acts (which are known to krishṇa and gŏpis only); vizhikkum glancing/meeting of eyes; pirānai the one who gives favours; viduvĕnŏ can ī leave him?

TVM 1.7.6

2862 பிரான் பெருநிலங்கீண்டவன் * பின்னும்
விராய் மலர்த்துழாய்வேய்ந்தமுடியன் *
மராமரமெய்தமாயவன் * என்னுள்
இரானெனில் பின்னையானொட்டுவேனோ?
2862 பிரான் * பெரு நிலம் கீண்டவன் * பின்னும்
விரா அய் மலர்த் துழாய் * வேய்ந்த முடியன் **
மராமரம் * எய்த மாயவன் * என்னுள்
இரான் எனில் * பின்னை யான் ஒட்டுவேனோ? (6) *
2862 pirāṉ * pĕru nilam kīṇṭavaṉ * piṉṉum
virā ay malart tuzhāy * veynta muṭiyaṉ **
marāmaram * ĕyta māyavaṉ * ĕṉṉul̤
irāṉ ĕṉil * piṉṉai yāṉ ŏṭṭuveṉo? (6) *

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

How low can I at all survive, if the Benefactor great Who once retrieved the Earth from the ocean, On whose crown is the tulacī garland of aroma sweet, The wonder-Lord whose arrow sped thro’ the trees seven, Should desert me and stay not in my heart?

Explanatory Notes

This is the Āzhvār’s reply to a question supposed to have been put to him as to what he would do, in case the Lord forsook him once again. The Āzhvār rules out such a contingency, seeing that the Lord is a self-less Benefactor like Sandal paste, flower, southerly breeze and the Moon, catering to the happiness of others, seeking nothing in return. Surely, the Āzhvār would + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பிரான் உபகாரகனும்; பெரு நிலம் வராஹாவதாரத்தில் பெரிய பூமியை; கீண்டவன் பிளந்தெடுத்தவனும்; பின்னும் மேலும்; விராய் துழாய் மலர் மணம் மிக்க துளசியால்; வேய்ந்த முடியன் தொடுக்கப்பட்ட மாலை அணிந்தவனும்; மராமரம் ஏழு மராமரங்களையும் துளைக்க; எய்த ஒரே அம்பு எய்தவனும்; மாயவன் என்னுள் மாயவன் என் மனத்தில்; இரான் எனில் இருக்கமாட்டேன் என்றால்; பின்னை யான் என்னைவிட்டுப் பிரிந்து செல்வதற்கு நான்; ஒட்டுவேனோ உடன்படுவேனோ? தரித்திருப்பேனோ?
pirān being a upakāraka (benefactor); peru nilam great earth; kīṇdavan one who dug it up; pinnum combined (prepared as a garland); virāy mixed; malar with flowers; thuzhāy using thul̤asi leaves; vĕyndha covered fully; mudiyan one who has a crown; marāmaram eydha shot the peepal tree (to instill confidence in sugrīva mahārāja); māyavan amaśing personality; en my; ul̤ in the heart; irān enil when he would not stay; pinnai subsequently; yān me (who cannot sustain without him); ottuvĕnŏ will ī allow? will ī sustain (being separated)?

TVM 1.7.7

2863 யானொட்டியென்னுள் இருத்துவமென்றிலன் *
தானொட்டிவந்து என்தனிநெஞ்சைவஞ்சித்து *
ஊனொட்டிநின்று என்உயிரில்கலந்து * இயல்
வானொட்டுமோ? இனியென்னைநெகிழ்க்கவே.
2863 யான் ஒட்டி என்னுள் * இருத்துவன் என்றிலன் *
தான் ஒட்டி வந்து * என் தனி நெஞ்சை வஞ்சித்து **
ஊன் ஒட்டி நின்று * என் உயிரில் கலந்து * இயல்
வான் ஒட்டுமோ? * இனி என்னை நெகிழ்க்கவே? (7)
2863 yāṉ ŏṭṭi ĕṉṉul̤ * iruttuvaṉ ĕṉṟilaṉ *
tāṉ ŏṭṭi vantu * ĕṉ taṉi nĕñcai vañcittu **
ūṉ ŏṭṭi niṉṟu * ĕṉ uyiril kalantu * iyal
vāṉ ŏṭṭumo? * iṉi ĕṉṉai nĕkizhkkave? (7)

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

In my mind I lodged Him not, on my own; Pledged to get in, the Lord did, on His own, Enter my mind imperious, unsought, Stuck avidly to my body and soul and wrought A silent change in me, drawing me unto Him, so well. To part from me hence, will such a One agree at all?

Explanatory Notes

(i) The Lord entered the Āzhvār’s mind, pledged, as it were, to do so. This would show that the Āzhvār took no initiative in the matter. On the other hand, self-reliant and imperious that he was, he stood aloof, very much away from Him. But once a determined Lord took possession of the Āzhvār, the latter came under His magic spell, just like the miser who yielded to the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
யான் ஒட்டி நான் இசைந்து; என்னுள் இறைவனை என் மனதில்; இருத்துவம் இருக்கச்செய்வேன்; என்றிலன் என்று செய்தேன் அல்லேன்; தான் ஒட்டிவந்து தானே சூளுறவு செய்து வந்து; என் தனி நெஞ்சை என் மனதை; வஞ்சித்து தன் குணங்களாலும் செயல்களாலும் வசீகரித்து; ஊன் ஒட்டி நின்று என் சரீரத்திலே பொருந்தி புகுந்துநின்று; என் உயிரில் கலந்து எனது ஆத்மாவோடு கலந்து; இயல் வான் இப்படி இருக்கும் பெருமானை; இனி என்னை இப்பொழுது நான் உன்னைவிட்டு; நெகிழ்க்கவே விலகிப் போவேன் என்றால்; ஒட்டுமோ? நான் உடன்படுவேனோ?
yān ī; otti with acceptance; ennul̤ iruththuvam will keep inside; enṛu ilan did not think like that; thān ḥe; otti vanthu arrived with a vow; en my; thani independent; nenjai heart; vanjiththu attracted without my knowing it; ūn in the body; otti being together; ninṛu entered and stayed; en uyirul̤ in my āthmā; kalanthu mixed; iyalvān (as if existing due to that) sustained himself; ini now; ennai me; negizhkka to leave; ottumŏ is it possible?

TVM 1.7.8

2864 என்னைநெகிழ்க்கிலும் என்னுடைநன்னெஞ்சந்
தன்னை * அகல்விக்கத் தானும்கில்லானினி *
பின்னைநெடும்பணைத்தோள் மகிழ்பீடுடை *
முன்னையமரர் முழுமுதலானே.
2864 என்னை நெகிழ்க்கிலும் * என்னுடை நன் நெஞ்சம்
தன்னை * அகல்விக்கத் * தானும் கில்லான் இனி **
பின்னை நெடும் பணைத் தோள் * மகிழ் பீடு உடை *
முன்னை அமரர் * முழுமுதல் தானே (8)
2864 ĕṉṉai nĕkizhkkilum * ĕṉṉuṭai naṉ nĕñcam
taṉṉai * akalvikkat * tāṉum killāṉ iṉi **
piṉṉai nĕṭum paṇait tol̤ * makizh pīṭu uṭai *
muṉṉai amarar * muzhumutal tāṉe (8)

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

With his sinewy shoulders in Piṉṉai nestled, The joyous Lord Who unto the hoary Celestials Is all in all, cannot from Him separate, with all His might, My chastened mind, in Him entwined so well, albeit He. His grip on me, loosens and makes me stay apart.

Explanatory Notes

The Āzhvār avers that history will not repeat itself. Even if the Almighty Lord, in His unbridled independence, tried His utmost to keep the Āzhvār away, He wouldn’t succeed in putting aside his chastened mind, inseparably steeped in Him. This robust confidence has indeed the solid backing of Piṉṉai (Goddess Nappinna) the unfailing Intercessor through whose good offices the Āzhvār courted the Lord.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என்னை நெகிழ்க்கிலும் ஒருகால் என்னைப் பிரித்தாலும்; என்னுடைய என்னுடைய; நன் நெஞ்சம் தன்னை குற்றமற்ற நெஞ்சினை; அகல்விக்க பிரிப்பதற்கு அசக்தன் ஏனெனில்; தானும் இனி கில்லான் தானும் ஆற்றலுடையவன் அல்லன்; பின்னை நெடும் நப்பின்னையின் நீண்ட; பணைத் தோள் மூங்கில் போன்ற தோள்களை அணைத்து; மகிழ் பீடு உடை மகிழும் பெருமையுடையவனும்; முன்னை அமரர் முதன்மைபெற்ற நித்யஸூரிகளின்; தானே முழு எல்லாச்செயல்களுக்கும் தானே முழு; முதல் முதல் காரணமாய் இருப்பவனுமான பெருமான் ஆனதால்
ennai me (who was bestowed with gyānam (knowledge), prĕmam (love) by bhagavān himself and one who cannot look at anyone else); negizhkkilum push me aside; nal well-wishing (captured by emperumān to be partial towards him); ennudai nenjam thannai my heart; agalvikka to separate from him; thānum himself (who is sarvasakthi (omnipotent)); ini killān will not do it; pinnai (he is) nappinnai pirātti #s [nappinnai is an incarnation of nīl̤ā dhĕvi and is one of the foremost wives of krishṇa]; nedum wide; paṇai well-rounded; thŏl̤ being embraced with such shoulder; magizh joyful; pīdu udai having the greatness; munnai ancient; amarar nithyasūris; muzhu for their sustenance etc.,; mudhalānĕ isn-t he the only primary person?

TVM 1.7.9

2865 அமரர்முழுமுதல் ஆகியவாதியை *
அமரர்க்கமுதீந்த ஆயர்கொழுந்தை *
அமரவழும்பத் துழாவிஎன்னாவி *
அமரத்தழுவிற்று இனியகலுமோ?
2865 அமரர் முழுமுதல் * ஆகிய ஆதியை *
அமரர்க்கு அமுது ஈந்த * ஆயர் கொழுந்தை **
அமர அழும்பத் * துழாவி என் ஆவி *
அமரத் தழுவிற்று * இனி அகலுமோ? (9)
2865 amarar muzhumutal * ākiya ātiyai *
amararkku amutu īnta * āyar kŏzhuntai **
amara azhumpat * tuzhāvi ĕṉ āvi *
amarat tazhuviṟṟu * iṉi akalumo? (9)

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

The Primate Who unto Celestials is the fountain source Of all felicities, Who unto Amarar (Devas) delivered ambrosia, The Chief of the cowherds got into my soul, in tight embrace, With pleasure immense; Could He from me be apart anymore?

Explanatory Notes

Unto the Devas, who wanted ‘Amṛt’ (ambrosia), the mere extract from the ocean and not the Lord Himself, He gave the Amṛt; He, however, gave Himself to the Cowherds in whose midst He was born, because they wanted Him, the real ‘Amṛt’ and not that artificial stuff. The Āzhvār’s soul got steeped in Him to such an extent and in such a manner that the one couldn’t be told from the other and hence there was no question of separation, as if they were two different entities,

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அமரர் நித்யஸூரிகளுடைய; முழுமுதல் ஆகிய எல்லாச்செயல்களுக்கும் காரணமானவனும்; அமரர்க்கு தேவர்களுக்கு; அமுது கடல் கடைந்து அமுதம்; ஈந்த எடுத்துக் கொடுத்தவனும்; ஆயர் ஆயர்களின் தலைவனான; கொழுந்தை பெருமானை; அமர அழும்ப எனது ஆத்மாவானது அருகில் சென்று; துழாவிய எங்கும் புகுந்து அநுபவித்து ஒருபொருள் என்று; ஆதியை கூறலாம்படி பெருமானைத் தழுவி; அமர இனிமேல் ஒருவராலும் பிரிக்கமுடியாதபடி; என் ஆவி தழுவிற்று என் ஆத்மா கலந்தது; இனி அகலுமோ? இனிமேல் பிரிய வழியுண்டோ?
amarar nithyasūris-; muzhu (svarūpa- true nature, sthithi #existence, pravruththi #actions etc) all; mudhalāgiya have it as cause; ādhiyai being the primary/leader; amararkku for the dhĕvas; amudhu nectar (which they desired for); īndha one who gave; āyar for the cow-herd boys (who were related to him); kozhundhai one who is the leader; en āvi my āthmā (soul); amara becoming fit (to be only existing for emperumān); azhumba mixing with him (to eliminate the hurdles such as svāthanthriyam (independence) etc); thuzhāvi analysed (through many aspects such as svarūpam etc); amara being together (without separation); thazhuviṝu embraced him; ini agalumŏ is there any scope for separation?

TVM 1.7.10

2866 அகலிலகலும் அணுகிலணுகும் *
புகலுமரியன் பொருவல்லனெம்மான் *
நிகரிலவன்புகழ் பாடியிளைப்பிலம் *
பகலுமிரவும் படிந்துகுடைந்தே.
2866 அகலில் அகலும் * அணுகில் அணுகும் *
புகலும் அரியன் * பொரு அல்லன் எம்மான் **
நிகர் இல் அவன் புகழ் * பாடி இளைப்பு இலம் *
பகலும் இரவும் * படிந்து குடைந்தே (10)
2866 akalil akalum * aṇukil aṇukum *
pukalum ariyaṉ * pŏru allaṉ ĕmmāṉ **
nikar il avaṉ pukazh * pāṭi il̤aippu ilam *
pakalum iravum * paṭintu kuṭainte (10)

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

Apart from them who from Him keep apart, Close to them who unto Him get close, Beyond approach (to the ungodly) but easy of access (To devotees); entranced do I sing His glory peerless, Day and night and never feel satiate.

Explanatory Notes

In the immense struggle between the Lord on the one side and the worldlings on the other, the latter, swayed by the stronger pull of earthly pleasures, stray away from Him. Indeed, the Lord grieves over this state of affairs. Unto those who seek Him exclusively, He responds so well that it is said, when man walks towards God, He runs towards him. When man ascends to the + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
அகலில் உயிர்கள் அகன்று போக நினைத்தால்; அகலும் தானும் அகன்றே நிற்பான்; அணுகில் தன்னைச் சார்ந்து நிற்பராகில்; அணுகும் அவர்களோடு சார்ந்தே நிற்பான்; புகலும் அரியன் பிரதிகூலர்க்கு அணுக முடியாதவன்; பொரு அல்லன் அநுகூலர்க்குத் தடையற்றவன்; எம்மான் எனக்கு ஸ்வாமியானவன்; நிகரில் அவன் இப்படிப்பட்ட ஒப்பில்லாத பெருமானின்; புகழ் பகலும் இரவும் புகழை பகலும் இரவும்; படிந்து எப்போதும் எங்கும் உட்புகுந்து; குடைந்தே அன்புடன் கலந்து; பாடி விடாமல் பாடி; இளைப்பு இலம் பிரிவு இன்றியே இருப்போம்
agalil for those who leave him (after being fulfilled with ulterior benefits); agalum he also will be interested in leaving them (since there is nothing more to do); aṇugil for those who pursue him (without any other benefit); aṇugum he will mix with those (just like water mixes with water); pugalum ariyan (for those with ulterior motives) he is difficult to reach; poruvallan (for those who want him alone) there are no obstacles to reach him; emmān (for such auspicious quality) being my master; nigaril avan (for such quality) having none comparable to him; pugazh his glories; pagalum iravum day and night without break; padindhu entered in me; kudaindhu mixing everywhere; pādi singing (with love); il̤aippilam never stops doing it (not taking rest at all)

TVM 1.7.11

2867 குடைந்துவண்டுண்ணும் துழாய்முடியானை *
அடைந்த தென்குருகூர்ச்சடகோபன் *
மிடைந்தசொல்தொடை ஆயிரத்திப்பத்து *
உடைந்துநோய்களை ஓடுவிக்குமே. (2)
2867 * குடைந்து வண்டு உண்ணும் * துழாய் முடியானை *
அடைந்த தென் குருகூர்ச் * சடகோபன் **
மிடைந்த சொல் தொடை * ஆயிரத்து இப் பத்து *
உடைந்து நோய்களை * ஓடுவிக்குமே (11)
2867 * kuṭaintu vaṇṭu uṇṇum * tuzhāy muṭiyāṉai *
aṭainta tĕṉ kurukūrc * caṭakopaṉ **
miṭainta cŏl tŏṭai * āyirattu ip pattu *
uṭaintu noykal̤ai * oṭuvikkume (11)

Ragam

Madhyamāvati / மத்யமாவதி

Thalam

Aḍa / அட

Bhavam

Self

Simple Translation

These songs ten, out of the well-knit thousand. Composed by Caṭakōpaṉ of Teṉkurukūr, in worship bound To the Lord, wearing on His crown tulacī garland, Whose honey the swarming bees partake, will all our ill disband.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
வண்டு குடைந்து வண்டுகள் உள்ளே சென்று; உண்ணும் துழாய் தேனைப் பருகும் துளசி மாலை; முடியானை அடைந்த அணிந்தவனை அடைந்த; தென் குருகூர் திருகுருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; மிடைந்த சொல் தொடை செறிந்த சொற்களால் தொடுத்த; ஆயிரத்து ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்து இந்தப் பத்துப் பாசுரங்கள்; நோய்களை உடைந்து நோய்களனைத்தையும் நிலை கெட்டு; ஓடுவிக்குமே ஓடச்செய்யும்
vaṇdu beetle; kudaindhu submerged; uṇṇum eating the honey; thuzhāy thul̤asi; mudiyānai sarvĕsvaran who is having it on his head; adaindha (by all means) rich; then most benevolent; kurukūrch chatakŏpan nammāzhvār-s; midaindha closely knit; sol words; thodai having poetic meter; āyiraththu ippaththu this decad among the thousand pāsurams of thiruvāimozhi; nŏygal̤ai great disease (of actions which are result of ahankāra, wealth, lust); udaindhu breaking them; ŏduvikkum will make them leave instantaneously