Chapter 7

ĀsrayaNa samaya athyantha sārasyam (being benevolent to those who approach Him) - (பிறவித்துயர் அற)

ஆராதிப்பார்க்கு மிக இனியன்
Āzhvār elaborates on the joys of attaining Bhagavān in the next set of divine hymns. Thirumāl is most benevolent to those who are devout to Him.
பகவானை அடைந்து பெற்ற இன்பங்களை ஆழ்வார் கூறுகிறார். தன்னைப் பூசிப்பார்க்குத் திருமால் இனியவன்.

முதல் பத்து -ஏழாம் திருவாய்மொழி–பிறவித்துயர் அற-பிரவேசம்-

கீழில் திருவாய்மொழியில் ஸ்வாராதன் என்றார் – அதில் சொன்ன ஆஸ்ரயணம் தான் போக ரூபமாய் இருக்கும்,’ என்கிறார் இத் திருவாய்மொழியில்

ஸ்ரீ + Read more
Verses: 2857 to 2867
Grammar: Kalinilaiththuṟai / கலிநிலைத்துறை
Pan: வியந்தம்
Recital benefits: any sickness will go away
  • TVM 1.7.1
    2857 ## பிறவித்துயர் அற * ஞானத்துள் நின்று *
    துறவிச் சுடர் * விளக்கம் தலைப்பெய்வார் **
    அறவனை * ஆழிப்படை அந்தணனை *
    மறவியை இன்றி * மனத்து வைப்பாரே (1)
  • TVM 1.7.2
    2858 வைப்பு ஆம் மருந்து ஆம் * அடியரை * வல்வினைத்
    துப்பு ஆம் புலன் ஐந்தும் * துஞ்சக்கொடான் அவன் **
    எப்பால் எவர்க்கும் * நலத்தால் உயர்ந்து உயர்ந்து *
    அப்பாலவன் * எங்கள் ஆயர் கொழுந்தே (2)
  • TVM 1.7.3
    2859 ஆயர் கொழுந்தாய் * அவரால் புடையுண்ணும் *
    மாயப் பிரானை * என் மாணிக்கச் சோதியை **
    தூய அமுதைப் * பருகிப் பருகி * என்
    மாயப் பிறவி * மயர்வு அறுத்தேனே (3)
  • TVM 1.7.4
    2860 மயர்வு அற என் மனத்தே * மன்னினான் தன்னை *
    உயர்வினையே தரும் * ஒண் சுடர்க் கற்றையை **
    அயர்வு இல் அமரர்கள் * ஆதிக் கொழுந்தை * என்
    இசைவினை * என் சொல்லி யான் விடுவேனோ? (4)
  • TVM 1.7.5
    2861 விடுவேனோ? என் விளக்கை * என் ஆவியை *
    நடுவே வந்து * உய்யக் கொள்கின்ற நாதனை **
    தொடுவே செய்து * இள ஆய்ச்சியர் கண்ணினுள் *
    விடவே செய்து * விழிக்கும் பிரானையே? (5)
  • TVM 1.7.6
    2862 பிரான் * பெரு நிலம் கீண்டவன் * பின்னும்
    விரா அய் மலர்த் துழாய் * வேய்ந்த முடியன் **
    மராமரம் * எய்த மாயவன் * என்னுள்
    இரான் எனில் * பின்னை யான் ஒட்டுவேனோ? (6) *
  • TVM 1.7.7
    2863 யான் ஒட்டி என்னுள் * இருத்துவன் என்றிலன் *
    தான் ஒட்டி வந்து * என் தனி நெஞ்சை வஞ்சித்து **
    ஊன் ஒட்டி நின்று * என் உயிரில் கலந்து * இயல்
    வான் ஒட்டுமோ? * இனி என்னை நெகிழ்க்கவே? (7)
  • TVM 1.7.8
    2864 என்னை நெகிழ்க்கிலும் * என்னுடை நன் நெஞ்சம்
    தன்னை * அகல்விக்கத் * தானும் கில்லான் இனி **
    பின்னை நெடும் பணைத் தோள் * மகிழ் பீடு உடை *
    முன்னை அமரர் * முழுமுதல் தானே (8)
  • TVM 1.7.9
    2865 அமரர் முழுமுதல் * ஆகிய ஆதியை *
    அமரர்க்கு அமுது ஈந்த * ஆயர் கொழுந்தை **
    அமர அழும்பத் * துழாவி என் ஆவி *
    அமரத் தழுவிற்று * இனி அகலுமோ? (9)
  • TVM 1.7.10
    2866 அகலில் அகலும் * அணுகில் அணுகும் *
    புகலும் அரியன் * பொரு அல்லன் எம்மான் **
    நிகர் இல் அவன் புகழ் * பாடி இளைப்பு இலம் *
    பகலும் இரவும் * படிந்து குடைந்தே (10)
  • TVM 1.7.11
    2867 * குடைந்து வண்டு உண்ணும் * துழாய் முடியானை *
    அடைந்த தென் குருகூர்ச் * சடகோபன் **
    மிடைந்த சொல் தொடை * ஆயிரத்து இப் பத்து *
    உடைந்து நோய்களை * ஓடுவிக்குமே (11)