67

Thirukkātkarai

திருக்காட்கரை

Thirukkātkarai

ஸ்ரீ பெருஞ்செல்வநாயகீ (வாத்சல்யவல்லி) ஸமேத ஸ்ரீ காட்கரையப்பன் ஸ்வாமிநே நமஹ

Thirukkakkara (Vamanakshetram) - About this Place

Thirukkakkara, also known as Vamanakshetram, is located in the Aluva region of Kerala, about 15 kilometers north of the Ernakulam railway station on the Shoranur-Ernakulam route. From Aluva, travel 8 kilometers and take another bus to reach the temple. It is about 4 kilometers east of Idappalli

+ Read more
கேரளாவில் ஆலவாய் திருச்சூர் இரயில் மார்க்கத்தில் இருஞானக்கொடி புகை வண்டி நிலயத்தில் இருந்தும் அங்காமலி புகை வண்டி நிலையத்தில் இருந்தும், வடக்கே சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஆலவாய் போகும் வழியில் . 8 கிலோமீட்டர் சென்று அங்கிருந்து இன்னொரு பேருந்தில் செல்ல வேண்டும். அதிக + Read more
Thayar: Sri Perunselva Nāyaki (Sri Vātsalya Valli) Nāchiyār
Moolavar: Katkaraiappan, Appan
Utsavar: Katkaraiappan
Vimaanam: Pushkala
Pushkarani: Kapila Theertham
Thirukolam: Nindra (Standing)
Direction: South
Mandalam: Malai Nādu
Area: Kerala
State: Kerala
Sampradayam: Common
Timings: 5:00 a.m. to 9:00 a.m. 4:00 p.m. to 7:00 p.m.
Search Keyword: Thirukkatkarai
Mangalāsāsanam: Namm Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

TVM 9.6.1

3728 உருகுமால்நெஞ்சம் உயிரின்பரமன்றி *
பெருகுமால்வேட்கையும் என்செய்கேன்தொண்டனேன்? *
தெருவெல்லாம்காவிகமழ் திருக்காட்கரை *
மருவியமாயன்தன் மாயம்நினைதொறே. (2)
3728 ## உருகுமால் நெஞ்சம் * உயிரின் பரமன்றி *
பெருகுமால் வேட்கையும் * என் செய்கேன் தொண்டனேன் **
தெருவு எல்லாம் காவி கமழ் * திருக்காட்கரை *
மருவிய மாயன் தன் * மாயம் நினைதொறே? (1)
3728 ## urukumāl nĕñcam * uyiriṉ paramaṉṟi *
pĕrukumāl veṭkaiyum * ĕṉ cĕykeṉ tŏṇṭaṉeṉ **
tĕruvu ĕllām kāvi kamazh * tirukkāṭkarai *
maruviya māyaṉ taṉ * māyam niṉaitŏṟe? (1)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

What can this doting vassal do, whose love knows no bounds for the mystic Lord residing lovingly in Tirukkāṭkarai, where the streets are perfumed with scarlet lilies? As I contemplate His wondrous traits, my heart melts in devotion.

Explanatory Notes

The Āzhvār wants to know how to stem the on-rush of his Godlove and the resultant melting down of his heart, so as to remain steady and stable and enjoy the Lord at Tirukkāṭkarai. But this is next to impossible because he is overwhelmed by the Deity’s extra-ordinary love and condescension. The heart is the principal functionary for enjoyment and if it gives way, no enjoyment + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தெருவு எல்லாம் வீதி தோறும்; காவி கமழ் செங்கழுநீர் பூக்களின் மணம் கமழ; திருக்காட்கரை திருக்காட்கரையில்; மருவிய மாயன் இருக்கும் மாயப் பெருமானின்; தன் மாயம் சிறந்த குணங்களையும் செயல்களையும்; நினைதொறே நினைக்கும் போதெல்லாம்; உருகுமால் நெஞ்சம் நெஞ்சு உருகுகிறது; உயிரின் ஆத்மா; பரமன்றி தாங்க முடியாத அளவு; வேட்கையும் ஆசை; பெருகுமால் பெருகி கரைபுரண்டு ஓடுகிறது; தொண்டனேன் சபலனான அடியேன்; என் செய்கேன்? என்ன செய்வேன்?
thirukkātkarai in thirukkātkarai; maruviya residing firmly; māyan than amaśing lord-s; māyam very amaśing qualities such as saundharya (beauty), ṣeela (simplicity) etc; ninaidhoṛum every time ī think about; nenjam my heart (which is the first tool for enjoyment); urugum became fluid after breaking down;; uyirin param anṛi to be unbearable for the āthmā (self); vĕtkai affection; perugum is growing greatly;; thoṇdanĕn ī who am very desirous; en seygĕn what shall ī do? (ṣhall ī change the breaking of the heart, shall ī control my affection, shall ī avoid the qualities etc which are enjoyable or shall ī avoid the desire towards him?); sunai kol̤ having ponds; pūm sŏlai having flower gardens

TVM 9.6.2

3729 நினைதொறும்சொல்லுந்தொறும் நெஞ்சிடிந்துகும் *
வினைகொள்சீர்பாடிலும் வேமெனதாருயிர் *
சுனைகொள்பூஞ்சோலைத் தென்காட்கரையென்னப்பா! *
நினைகிலேன்நான் உனக்குஆட்செய்யும்நீர்மையே.
3729 நினைதொறும் சொல்லும்தொறும் * நெஞ்சு இடிந்து உகும் *
வினைகொள் சீர் பாடிலும் * வேம் எனது ஆர் உயிர் **
சுனைகொள் பூஞ்சோலைத் * தென் காட்கரை என் அப்பா
நினைகிலேன் நான் உனக்கு ஆட்செய்யும் நீர்மையே (2)
3729 niṉaitŏṟum cŏllumtŏṟum * nĕñcu iṭintu ukum *
viṉaikŏl̤ cīr pāṭilum * vem ĕṉatu ār uyir **
cuṉaikŏl̤ pūñcolait * tĕṉ kāṭkarai ĕṉ appā
niṉaikileṉ nāṉ uṉakku āṭcĕyyum nīrmaiye (2)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Oh, Sire, residing in Teṉkāṭkarai with many a pond and fine orchard, as I dote on Your auspicious traits that steal away my sins, my heart gives way. When I begin to utter Your glory, my mind melts down and my soul burns with passion. If I could sing Your praise and serve You, I know not how I can.

Explanatory Notes

The Lord’s tender solicitude for the Āzhvār, His amazing simplicity and astounding love, exhibited in VIII-7, made it appear that the Āzhvār was His sole concern and He literally doted on him. In trying to recollect, in this decad, the extra-ordinary posture of the Lord, the Āzhvār only finds that he is attempting the impossible. His mind was not equal to the task, giving + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சுனைகொள் தடாகங்களையும்; பூஞ்சோலை பூஞ்சோலைகளையும் உடைய; தென் காட்கரை தென் திருக்காட்கரையில் இருக்கும்; என் அப்பா என் அப்பனே!; வினைகொள் என் பாபங்களைத் தீர்க்கும்; சீர் பாடிலும் உன் சீல குணத்தைப் பாடினாலும்; நினைதொறும் நினைத்தாலும்; சொல்லும்தொறும் பேசினாலும்; நெஞ்சு இடிந்து நெஞ்சு சிதிலமாகி; உகும் உருகுகிறது; எனது என்னுடைய; வேம் ஆருயிர் ஆத்மா எரிகிறது; நான் உனக்கு நான் உனக்கு; ஆட்செய்யும் கைங்கரியம் செய்யும்; நீர்மையே விதத்தைக் கூட; நினைகிலேன் என்னால் யோசிக்க முடியவில்லை
then attractive; kātkarai in thirukkātkarai; en appā oh one who is standing as my eternal relative!; vinai kol̤ revealing your activities relating to the great union; sīr qualities such as ṣeela (simplicity), saulabhya (easy approachability) etc; ninai thoṛum thinking about it, every moment; nenju the tool which is used for such thinking; idindhu becoming broken; sollum thoṛum every moment, ī speak; urugum the heart will melt and become fluid;; pādilum even if ī tried to sustain myself by singing (as said in thiruvāimozhi 1.7.10 “pādi il̤aippilam” (ī have no reason to take a break from glorifying his incomparable auspicious qualities)); enadhu ār uyir my āthmā (self) which is the abode of the senses; vĕm became burnt;; nān ī (who am like this); unakku ātcheyyum to perform service to you; nīrmai form/aspect; ninaigilĕn unable to even think.; nīrmaiyāl due to revealing the quality of svasvāmi sambandham (property-owner relationship); nenjam my heart

TVM 9.6.3

3730 நீர்மையால்நெஞ்சம் வஞ்சித்துப்புகுந்து * என்னை
ஈர்மைசெய்து என்னுயிராய்என்னுயிருண்டான் *
சீர்மல்குசோலைத் தென்காட்கரையென்னப்பன் *
கார்முகில்வண்ணன்தன் கள்வமறிகிலேன்.
3730 நீர்மையால் நெஞ்சம் * வஞ்சித்துப் புகுந்து * என்னை
ஈர்மைசெய்து * என் உயிர் ஆய் என் உயிர் உண்டான் **
சீர் மல்கு சோலைத் * தென் காட்கரை என் அப்பன் *
கார் முகில் வண்ணன் தன் * கள்வம் அறிகிலேன் (3)
3730 nīrmaiyāl nĕñcam * vañcittup pukuntu * ĕṉṉai
īrmaicĕytu * ĕṉ uyir āy ĕṉ uyir uṇṭāṉ **
cīr malku colait * tĕṉ kāṭkarai ĕṉ appaṉ *
kār mukil vaṇṇaṉ taṉ * kal̤vam aṟikileṉ (3)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

I thought the Lord entered me, being my Master, to sustain me, but what was really the matter? Once inside, He caught me unawares and shattered my mind with His simplicity, wanting to serve me, His vassal. The stealthy ways of the cloud-hued Lord, Who dwells in Teṉkāṭkarai amid lovely gardens, I can’t tell.

Explanatory Notes

If only the Āzhvār had a prior knowledge of the Lord’s intention to reverse the normal gear and serve him, His born vassal, he would not have allowed Him access to the interior of his heart. Having gained entry, the Lord displayed His amazing simplicity whereby He made the Āzhvār just melt down and dwindle. Having kindled God-love in the Āzhvār, the Lord just devoured

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நெஞ்சம் வஞ்சித்து ஏதோ வஞ்சனையினால்; புகுந்து என் நெஞ்சினுள்ளே புகுந்து; நீர்மையால் என்னை சீல குணத்தினால் என்னை; ஈர்மை செய்து என் நெஞ்சை இசைய வைத்தான்; என் உயிர் ஆய் என் உயிரை; என் உயிர் உண்டான் தன் உயிராக அநுபவித்தான்; சீர் மல்கு சோலை அழகு நிரம்பிய சோலைகளால்; தென் காட்கரை சூழ்ந்த தென் திருக்காட்கரையில்; என் அப்பன் இருக்கும் என் அப்பன்; கார் முகில் வண்ணன் தன் காளமேக வண்ணனின்; கள்வம் கள்ளத்தனத்தை; அறிகிலேன் அறிந்து கொள்ளாதவனாக இருக்கிறேன்
vanjiththu owning me; pugundhu entering me; ennai īrmai seydhu melting me; en uyir āy (with these two aspects) being the one who sustains me; en uyir uṇdān being the one who consumes me; sīr malgu having abundance of honey and flowers; sŏlai having garden; then beautiful; kātkarai due to the presence in thirukkātkarai; en appan being my benefactor; kār mugil vaṇṇan than the monsoon-cloud like greatly generous emperumān-s; kal̤vam his mischievous act where the means and end are different; aṛigilĕn ī don-t understand it to be in a particular manner.; thannul̤ in a fraction of his vow; anaiththulagum all entities of all worlds

TVM 9.6.4

3731 அறிகிலேன் தன்னுள் அனைத்துலகும்நிற்க *
நெறிமையால்தானும் அவற்றுள்நிற்கும்பிரான் *
வெறிகமழ்சோலைத் தென்காட்கரையென்னப்பன் *
சிறியவென்னாருயிருண்ட திருவருளே.
3731 அறிகிலேன் தன்னுள் * அனைத்து உலகும் நிற்க *
நெறிமையால் தானும் * அவற்றுள் நிற்கும் பிரான் **
வெறி கமழ் சோலைத் * தென் காட்கரை என் அப்பன் *
சிறிய என் ஆர் உயிர் உண்ட * திரு அருளே (4)
3731 aṟikileṉ taṉṉul̤ * aṉaittu ulakum niṟka *
nĕṟimaiyāl tāṉum * avaṟṟul̤ niṟkum pirāṉ **
vĕṟi kamazh colait * tĕṉ kāṭkarai ĕṉ appaṉ *
ciṟiya ĕṉ ār uyir uṇṭa * tiru arul̤e (4)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The Lord Supreme sustains all things and beings and abides in them all. It is beyond me to understand why my Sire, dwelling in Teṉkāṭkarai amid fragrant gardens, should deign to lavish His affections on this petty soul.

Explanatory Notes

It is indeed incredible that the Lord, higher than whom there is none, should pounce upon a frail being like the Āzhvār, with such avidity. As Nampiḷḷai would put it, the Āzhvār is at a loss to know whether the Lord did so out of love or He was out to kill him with His overwhelming kindness. The Lord just grabbed at the Āzhvār, saying that the latter, in his native humility,

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
தன்னுள் தன் ஸங்கல்பத்திலே; அனைத்து அனைத்து; உலகும் உலகங்களும் தன்னுள்ளே; நிற்க தங்கும்படி செய்யும் பெருமான்; தானும் அவற்றுள் தானும் அவற்றுள்ளே; நெறிமையால் முறை தவறாமல்; நிற்கும் பிரான் நிற்கும் பிரான்; வெறி கமழ் மணம் கமழும்; சோலை சோலைகளையுடைய; தென் காட்கரை தென் திருக்காட்கரையில்; என் அப்பன் இருக்கும் என் அப்பன்; சிறிய என் சிறியனான அடியேனின்; ஆர் உயிர் ஆத்ம வஸ்துவை; உண்ட அநுபவித்த; திரு அருளே அருளை இப்படிப்பட்டது என்று; அறிகிலேன் அறிய முடியவில்லை
niṛka to remain firmly; thānum he too; neṛimaiyāl in proper manner (of servitor-master which is a result of body-soul relationship); avaṝul̤ in them; niṛkum remaining; pirān being the benefactor; veṛi kamazh spreading distinguished fragrance; sŏlai having garden; then kākarai standing in thirukkātkarai; en appan my lord; siṛiya en very lowly me, my; ār uyir āthmā (soul); uṇda intently enjoyed; thiru arul̤ favour of sauṣeelyam (simplicity); aṛigilĕn ī am unable to precisely understand.; thiruvarul̤ the great favour (of accepting my service, as ī prayed in thiruvāimozhi 3.3.1 -adimai seyya vĕṇdunām-); seybavanpŏla like those who do

TVM 9.6.5

3732 திருவருள்செய்பவன்போல் என்னுள்புகுந்து *
உருவமுமாருயிரும் உடனேயுண்டான் *
திருவளர்சோலைத் தென்காட்கரையென்னப்பன் *
கருவளர்மேனிநங்கண்ணங்கள்வங்களே.
3732 திரு அருள் செய்பவன் போல * என்னுள் புகுந்து *
உருவமும் ஆர் உயிரும் * உடனே உண்டான் **
திரு வளர் சோலைத் * தென் காட்கரை என் அப்பன் *
கரு வளர் மேனி * என் கண்ணன் கள்வங்களே (5)
3732 tiru arul̤ cĕypavaṉ pola * ĕṉṉul̤ pukuntu *
uruvamum ār uyirum * uṭaṉe uṇṭāṉ **
tiru val̤ar colait * tĕṉ kāṭkarai ĕṉ appaṉ *
karu val̤ar meṉi * ĕṉ kaṇṇaṉ kal̤vaṅkal̤e (5)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

How stealthy indeed are the ways of the dark-hued Lord! Kaṇṇaṉ, my Sire, who dwells in Teṉkāṭkarai amid lovely orchards, entered my heart as if to bestow His grace and reclaim me, His vassal. But He pounced on me, body and soul alike, with immense delight.

Explanatory Notes

The Lord sheds His grace, according to the Āzhvār, when He takes service from him, true to his essential nature. The Āzhvār welcomed the Lord’s entry into the interior of his heart, thinking that it would help to sustain his basic stance, as His exclusive vassal from time immemorial. But what actually transpired sent him aghast. Prior to the dawn of true knowledge of his + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
திரு அருள் அடிமை கொள்ள அருள்; செய்பவன் போல செய்பவன் போல; என்னுள் புகுந்து என்னுள் புகுந்து; உருவமும் ஆர் உயிரும் என் உடலையும் உயிரையும்; உடனே உண்டான் உடனே அநுபவித்தான்; திரு வளர் அழகு மிகுந்த; சோலை சோலைகளையுடைய; தென் காட்கரை தென் திருக்காட்கரையில்; என் அப்பன் இருக்கும் என் அப்பன்; கரு வளர் மேனி கருத்த திருமேனியை உடைய; என் கண்ணன் என் கண்ணனின்; கள்வங்களே! கள்ளத்தனங்களை நான் அறியவில்லை
ennul̤ in my heart; pugundhu entered; uruvamum my body (which is to be given up by me); ār uyirum and the soul which is pervading (in the body); udanĕ uṇdān he desired without discriminating between what is to be given up and what is to be pursued!; thiruval̤ar most beautiful; sŏlai having garden; thenkātkarai in thirukkātkarai; en appan being my lord; karuval̤ar mĕni having form with dark complexion (due to uniting with me); en kaṇṇan my very obedient krishṇa-s; kal̤vangal̤ĕ deceptive acts are!; em kaṇṇan krishṇa who has great love towards me, his; kal̤vam deceptive acts (which are one way on the face and other way in the inside)

TVM 9.6.6

3733 என்கண்ணன்கள்வம் எனக்குச்செம்மாய்நிற்கும் *
அங்கண்ணனுண்ட என்னாருயிர்க்கோதிது *
புன்கண்மையெய்திப் புலம்பியிராப்பகல் *
என்கண்ணனென்று அவன்காட்கரையேத்துமே.
3733 என் கண்ணன் கள்வம் * எனக்குச் செம்மாய் நிற்கும் *
அம் கண்ணன் உண்ட * என் ஆர் உயிர்க் கோது இது **
புன்கண்மை எய்திப் * புலம்பி இராப்பகல் *
என் கண்ணன் என்று * அவன் காட்கரை ஏத்துமே (6)
3733 ĕṉ kaṇṇaṉ kal̤vam * ĕṉakkuc cĕmmāy niṟkum *
am kaṇṇaṉ uṇṭa * ĕṉ ār uyirk kotu itu **
puṉkaṇmai ĕytip * pulampi irāppakal *
ĕṉ kaṇṇaṉ ĕṉṟu * avaṉ kāṭkarai ettume (6)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Guileless that I am, I fell an easy prey to the wily overtures of Kaṇṇaṉ, my Lord. My soul, sapped by Him, cries out His name night and day, and meditates on Kāṭkarai where He resides.

Explanatory Notes

The Āzhvār, who points the accusing finger at the Lord and calls Him names while in a state of desolation due to separation from Him, sinks all such thoughts, rather, forgets all about them, when the Lord presents Himself before him. Here then is the tantalising charm of the Lord. The Āzhvār took Him at His face value and thoroughly enjoyed his erstwhile union with Him. + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
என் கண்ணன் எனக்கு அடங்கினவன் போல் தோன்றும்; கள்வம் எனக்கு கண்ணனின் கள்ளத்தனங்கள் எனக்கு; செம்மாய் உண்மையானவைகளாகவே; நிற்கும் தோன்றுகின்றன; அம் கண்ணன் அழகிய கண்ணன்; உண்ட அநுபவித்த; என் ஆருயிர் என் ஆத்மா; கோது இது ஸாரமற்றதாகி விட்டது; புன் கண்மை எய்தி மீண்டும் ஸாரமுள்ளதாக ஆகி; என் கண்ணன் என்று என் கண்ணன் என்று; புலம்பி இராப் பகல் இரவும் பகலும் கதறியழுது; அவன் காட்கரை அவனுடைய திருக்காட்கரையையே; ஏத்துமே புகழ்ந்து துதிக்கிறது
enakkuch chemmāy irukkum look truthful to me;; angaṇṇan being desirous, due to his love; uṇda due to consuming; kŏdhu faulty; en ār uyir idhu my soul; punkaṇmai eydhi attaining a miserable state; en kaṇṇan enṛu saying that he is obedient to me; irāp pagal pulambi lamenting in night and day; avan kātkarai thirukkātkarai where he is residing; ĕhthum praising.; ātkol̤vān oththu entering in as if accepting my service; en uyir my āthmā (soul)

TVM 9.6.7

3734 காட்கரையேத்தும் அதனுள்கண்ணா! என்னும் *
வேட்கைநோய்கூர நினைந்துகரைந்துகும் *
ஆட்கொள்வானொத்து என்னுயிருண்டமாயனால் *
கோட்குறைபட்டது என்னாருயிர்கோளுண்டே.
3734 காட்கரை ஏத்தும் * அதனுள் கண்ணா என்னும் *
வேட்கை நோய் கூர * நினைந்து கரைந்து உகும் **
ஆட்கொள்வான் ஒத்து * என் உயிர் உண்ட மாயனால் *
கோள் குறைபட்டது * என் ஆர் உயிர் கோள் உண்டே (7)
3734 kāṭkarai ettum * ataṉul̤ kaṇṇā ĕṉṉum *
veṭkai noy kūra * niṉaintu karaintu ukum **
āṭkŏl̤vāṉ ŏttu * ĕṉ uyir uṇṭa māyaṉāl *
kol̤ kuṟaipaṭṭatu * ĕṉ ār uyir kol̤ uṇṭe (7)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

The wondrous Lord did consume my soul after getting inside me, as if to make me His vassal. Yet, what little remains of my soul proclaims the glory of Kāṭkarai and calls out to Him who dwells therein. Oh, my Lord Kaṇṇā, love-sick, my soul dwindles, recounting His ravishing love during our erstwhile union.

Explanatory Notes

Consumed by God-love, the Āzhvār feels that he has been fully consumed by God. Still, he keeps pining for Him and the pilgrim centre where He stands enshrined and this shows that a little bit of his partly eaten-up soul is still lingering. Wonder-struck and overwhelmed indeed is the Āzhvār, that the Omniscient Lord should dote on a frail being, like him, in this manne

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஆட்கொள்வான் ஒத்து அடிமை கொள்வது போல் புகுந்து; மாயனால் மாயனான எம்பெருமான்; என் உயிர் என் ஆத்மாவை அநுபவித்து; உண்ட கோள் உண்டே விழுங்கியது போக; கோள் குறை பட்டது சிறிதே எஞ்சி உள்ளது; என் ஆர் உயிர் என் ஆத்மா; காட்கரை திருக்காட்கரையை; ஏத்தும் வாழ்த்தி வணங்கும்; அதனுள் திருக்காட்கரையில் இருக்கும்; கண்ணா! என்னும் கண்ணனை கண்ணா என்று; வேட்கை நோய் கூற காதல் நோய் மிகுதியால் கூற; நினைந்து நினைத்து என் மனம்; கரைந்து உகும் கரைந்து உருகி சிதிலமாகிறது
uṇda consumed inside him; māyanāl by the amaśing personality; kŏl̤ uṇdĕ even after being consumed; kŏl̤ enjoyment; kuṛaipattadhu said to be remainder; en ār uyir my soul; kātkarai thirukkātkarai (where he is residing); ĕththum will praise;; adhanul̤ standing in there; kaṇṇā ennum will call him who is obedient, as -kaṇṇā-;; vĕtkai nŏy desire to enjoy; kūra to increase; ninaindhu thought (about his interactions); karaindhu becoming broken; ugum will melt to become fluid;; kŏl̤ uṇdān anṛi vandhu coming unconditionally instead of being pursued (by me); en uyir my āthmā (soul)

TVM 9.6.8

3735 கோளுண்டானன்றிவந்து என்னுயிர்தானுண்டான் *
நாளுநாள்வந்து என்னைமுற்றவும்தானுண்டான் *
காளநீர்மேகத் தென்காட்கரையென்னப்பற்கு *
ஆளன்றேபட்டது என்னாருயிர்பட்டதே.
3735 கோள் உண்டான் அன்றி வந்து * என் உயிர் தான் உண்டான் *
நாளும் நாள் வந்து * என்னை முற்றவும் தான் உண்டான் **
காள நீர் மேகத் * தென் காட்கரை என் அப்பற்கு *
ஆள் அன்றே பட்டது? * என் ஆர் உயிர் பட்டதே (8)
3735 kol̤ uṇṭāṉ aṉṟi vantu * ĕṉ uyir tāṉ uṇṭāṉ *
nāl̤um nāl̤ vantu * ĕṉṉai muṟṟavum tāṉ uṇṭāṉ **
kāl̤a nīr mekat * tĕṉ kāṭkarai ĕṉ appaṟku *
āl̤ aṉṟe paṭṭatu? * ĕṉ ār uyir paṭṭate (8)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

There’s indeed nothing I could offer unto the Lord, and yet, He did out of His voluntary grace enter my soul and day by day consumed it in full. Should my cloud-hued Lord, who dwells in Kāṭkarai, afflict my soul thus, simply because I am His vassal?

Explanatory Notes

(i) Even as the Āzhvār experiences the marvellous communications unfolded unto him from the Lord, an inexhaustible fountain of bliss, ever fresh, the Lord enjoys the Āzhvār with a similar feeling of reciprocity. The Āzhvār says:

(a) The Lord lavished His affections on the Āzhvār’s soul, purely as a matter of spontaneous grace;

(b) The Lord enjoyed the Āzhvār with + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கோள் என்பக்கல் நிர்ஹேதுகமாக வந்து; அன்றி வந்து என் ஆத்மாவை; உண்டான் அநுபவித்தான்; நாளும் நாள் வந்து நாள் தோறும் வந்து; என்னை முற்றவும் சிறிதும் மிச்சமில்லாதபடி; என் உயிர் என் ஆத்மாவை முழுதும்; தான் உண்டான் அநுபவித்தான்; காள நீர் கருத்த நீரை உடைய; மேக மேகம் போன்ற வடிவையுடைய; தென் காட்கரை திருக்காட்கரை; என் அப்பற்கு எம்பெருமானுக்கு; ஆள் பட்டது நான் அடிமை; அன்றே பட்டதனாலன்றோ? அவனையும்; என் ஆர் உயிர் அவன் குணத்தையும் விரும்பியதால்; பட்டதே! நான் படும் துயரம்
thān he; uṇdān eagerly consumed;; nāl̤u nāl̤ vandhu arriving fresh everyday; ennai me (soul, qualities and body) (with great affection); muṝavum thān uṇdān consumed me without any remainder;; kāl̤a black coloured; nīr risen after extracting water; mĕgam like a dark cloud; then kātkarai residing in thirukkātkarai; en appaṛku for my lord; ātpattadhau anṛĕ did ī not become a servitor?; en ār uyir pattadhĕ my āthmā became a servitor!; pĕr idhazh having large petal; thāmarai like a lotus

TVM 9.6.9

3736 ஆருயிர்பட்டது எனதுயிர்பட்டது? *
பேரிதழ்த்தாமரைக்கண் கனிவாயது * ஓர்
காரெழில்மேகத் தென்காட்கரைகோயில்கொள் *
சீரெழில்நால்தடந்தோள் தெய்வவாரிக்கே.
3736 ஆர் உயிர் பட்டது * எனது உயிர் பட்டது *
பேர் இதழ்த் தாமரைக் கண் * கனி வாயது ஓர் **
கார் எழில் மேகத் * தென் காட்கரை கோயில் கொள்
சீர் எழில் நால் தடம் தோள் * தெய்வவாரிக்கே? (9)
3736 ār uyir paṭṭatu * ĕṉatu uyir paṭṭatu *
per itazht tāmaraik kaṇ * kaṉi vāyatu or **
kār ĕzhil mekat * tĕṉ kāṭkarai koyil kŏl̤
cīr ĕzhil nāl taṭam tol̤ * tĕyvavārikke? (9)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

Is there yet another soul like mine, smitten by love unto the Lord of exquisite charm? With four graceful shoulders, large and lovely lotus eyes, red lips, and a form of unparalleled beauty, like dark, lovely clouds, He is a delectable ocean to the demi-gods above. This wondrous Lord has taken up His abode in Teṉkāṭkarai.

Explanatory Notes

To a question, supposed to have been put to the Āzhvār, as to whether all those engrossed with the Lord’s attributes are not in the same plight as he and why he should make much ado about it, this is the Āzhvār’s reply. He avers that even the ‘Nitya Sūrīs’ in spiritual world, the Eternal Angels, known for their deep absorption in the Lord’s auspicious traits and incessant + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பேர் இதழ் பெரிய இதழை உடைய; தாமரை தாமரை போன்ற; கண் கண்களையும்; கனி வாயது ஓர் கனி போன்ற சிவந்த வாயையுமுடைய; கார் எழில் கருத்த அழகிய; மேக மேகம் போன்ற வடிவையும் உடைய; தென் காட்கரை தென் திருக்காட்கரையில்; கோயில் கொள் கோயில் கொண்டுள்ள; தெய்வ வாரிக்கே தெய்வவாரி என்ற பெயரும்; சீர் எழில் நால் அழகு மிக்க நான்கு; தடம் தோள் தோள்களையுடைய பெருமானுக்கு அடிமைப்பட்டதனால்; எனது உயிர் பட்டது என் ஆத்மா துன்பப்பட்ட அளவு; ஆர் உயிர் பட்டது வேறு யாருடைய ஆத்மாவும் பட்டிராது
kaṇ eyes; kani reddish like a fruit; vāyadhu having lips/mouth; ŏr distinguished; kār ezhil having dark beauty; mĕga like a cloud; then beautiful; kātkarai thirukkātkarai; kŏyil kol̤ having as residence; sīr ezhil having vīraṣrī (bravery) and beauty; nāl four different; thadam huge; thŏl̤ having divine shoulders; dheyvam for dhĕvathās; vārikku being the ocean which is the originating place; enadhu uyir my āthmā; pattadhu being immersed as the enjoyable object; ār uyir pattadhu did the nithyasūris who enjoy him eternally immerse in the same way?; unnaik kāṇil if ī see you; vārik koṇdu without leaving anything such as your svarūpam (true nature), rūpam (form), guṇa (qualities), vibhūthi (wealth), behind

TVM 9.6.10

3737 வாரிக்கொண்டு உன்னைவிழுங்குவன்காணிலென்று *
ஆர்வுற்ற என்னையொழிய என்னின்முன்னம்
பாரித்து * தானென்னை முற்றப்பருகினான் *
காரொக்கும் காட்கரையப்பன்கடியனே.
3737 வாரிக்கொண்டு * உன்னை விழுங்குவன் காணில் என்று *
ஆர்வு உற்ற என்னை ஒழிய * என்னில் முன்னம்
பாரித்துத் ** தான் என்னை முற்றப் பருகினான் *
கார் ஒக்கும் * காட்கரை அப்பன் கடியனே (10)
3737 vārikkŏṇṭu * uṉṉai vizhuṅkuvaṉ kāṇil ĕṉṟu *
ārvu uṟṟa ĕṉṉai ŏzhiya * ĕṉṉil muṉṉam
pārittut ** tāṉ ĕṉṉai muṟṟap parukiṉāṉ *
kār ŏkkum * kāṭkarai appaṉ kaṭiyaṉe (10)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Reference Scriptures

BG. 9-22, 18-66,

Divya Desam

Simple Translation

Eager I was indeed to gather the Lord up and devour if only I could behold Him. But my cloud-hued Sire, ever alert, who has taken abode in Kāṭkarai, consumed me in full, going well ahead.

Explanatory Notes

It can be firmly asserted that this song is indeed the very cream of the entire hymnal, yielding, as it does, the grand thesis that attainment of the individual soul is the Lord’s great gain. This incidentally sets at naught the oft-debated concept of the individual gaining the Lord and striving to that end. In the ‘Song Celestial’, Lord Kṛṣṇa said, in a tone of frustration, + Read more

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உன்னை காணில் உன்னைக் காணப் பெறில்; வாரிக்கொண்டு வாரிக் கபளீகரித்து; விழுங்குவன் என்று விழுங்க; ஆர்வு உற்ற என்னை விரும்பும் என்னை; ஒழிய என்னில் எனக்கு முன்பாக; முன்னம் பாரித்து தான் என்னை நீ என்னைப் பாரித்து; முற்றப் பருகினான் முழுவதுமாக அநுபவித்தவனான; கார் ஒக்கும் காளமேகம் போன்ற; காட்கரை திருக்காட்கரையில் இருக்கும்; என் அப்பன் என் அப்பன்; கடியனே தன் கார்யத்தில் தான் முற்பட்டவனாக இருக்கிறான்
vizhunguvan enṛu vowing to swallow completely; ārvuṝa desired; ennai ozhiya more than me; ennil munnam before me (from the time of my existence); pāriththu being eager; thān he (who is beyond limits); ennai me (who is insignificant); muṝa fully; paruginān drank;; kār okkum like a dark cloud (which drinks ocean); kātkarai appan the benefactor who is standing in thirukkākarai; kadiyan is very quick (in not allowing others to enjoy).; kadiyanāy being ahead of kamsa-s thoughts; kanjanaik konṛa one who killed kamsa

TVM 9.6.11

3738 கடியனாய்க் கஞ்சனைக்கொன்றபிரான்தன்னை *
கொடிமதிள்தென்குருகூர்ச் சடகோபன்சொல் *
வடிவமையாயிரத்து இப்பத்தினால் * சன்மம்
முடிவெய்தி நாசங்கண்டீர்களெங்கானலே. (2)
3738 ## கடியனாய்க் கஞ்சனைக் * கொன்ற பிரான் தன்னை *
கொடி மதிள் தென் குருகூர்ச் * சடகோபன் சொல் **
வடிவு அமை ஆயிரத்து * இப் பத்தினால் சன்மம்
முடிவு எய்தி * நாசம் கண்டீர்கள் எம் கானலே (11)
3738 ## kaṭiyaṉāyk kañcaṉaik * kŏṉṟa pirāṉ taṉṉai *
kŏṭi matil̤ tĕṉ kurukūrc * caṭakopaṉ cŏl **
vaṭivu amai āyirattu * ip pattiṉāl caṉmam
muṭivu ĕyti * nācam kaṇṭīrkal̤ ĕm kāṉale (11)

Ragam

Kalyāṇi / கல்யாணி

Thalam

Ādi / ஆதி

Bhavam

Self

Divya Desam

Simple Translation

These ten songs, from the beautiful thousand of Kurukūr Caṭakōpaṉ, praise the great Benefactor who swiftly vanquished Kañcaṉ. To those who chant them, they will ensure the destruction of the mirage of Saṃsāra and halt the recurrence of birth.

Explanatory Notes

The chanters of this decad, it is claimed, will get the terrific cycle of birth and rebirth halted, by cutting out the bondage of Saṃsāra, the root-cause of the dreadful succession of lives. The family ties and sensual pleasures breed empty and worthless desires and running after them is just as futile and meaningless as trying to quench one’s thirst, mistaking the mirage

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
கடியனாய் விரைந்து; கஞ்சனைக் கொன்ற கம்ஸனைக் கொன்ற; பிரான் தன்னை கண்ணனைக் குறித்து; கொடி கொடிகளொடு கூடின; மதிள் மதிள்களை உடைய; தென் குருகூர் தென் குருகூரில் அவதரித்த; சடகோபன் நம்மாழ்வார்; சொல் அருளிச் செய்த; வடிவு அமை சொற்பொருளழகு பொலிந்த; ஆயிரத்து ஆயிரம் பாசுரங்களுள்; இப் பத்தினால் இந்தப் பத்துப் பாசுரங்கள்; சன்மம் முடிவு எய்தி ஜன்ம சாபல்யம் பெற்று; கானலே கானல் நீர் போல் ஸம்ஸார துக்கத்தை; எம் நாசம் கண்டீர்கள் போக்கி விடும்
pirān thannai krishṇa, the great benefactor; kodi madhil̤ wall around fort, having flag; then kurugūr leader of āzhvārthirunagari; satakŏpan nammāzhvār; sol mercifully spoke; vadivu amai rich, due to presenting bhagavān-s qualities in a nice form; āyiraththu among the thousand pāsurams; ippaththināl by this decad; em our; sanmam births; mudivu eydhi reaching the end; kānal samsāra, the mirage; nāsam kaṇdīr will be destroyed.; em kānal agam kazhivāy residing in the salt pan inside the garden on the seashore, to be considered as ours, to be engaged in your service; irai thĕrndhu with liking towards the food here, highlighting your great relationship