PT 7.1.6

நம்பி! உன்னைக் கண்டு நான் உய்ந்தேன்

1553 பனியேய்பரங்குன்றின் பவளத்திரளே! *
முனியே! திருமூழிக்களத்துவிளக்கே! *
இனியாய்தொண்டரோம் பருகுஇன்னமுதாய
கனியே! * உன்னைக்கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.
1553 paṉi ey paraṅ kuṉṟiṉ * paval̤at tiral̤e *
muṉiye * tirumūzhikkal̤attu vil̤akke **
iṉiyāy tŏṇṭarom * parukum iṉ amutu āya
kaṉiye * uṉṉaik kaṇṭukŏṇṭu * uyntŏzhinteṉe-6

Ragam

Mukhāri / முகாரி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1553. You are a treasure of coral, a sage, you are the light of Thirumuzhikkalam and you stay in the divine hills of Thirpuprithi surrounded with snow. You are a fruit sweet as nectar, and a sweet drink for your devotees. I found you my Lord of Naraiyur and I am saved.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பணி ஏய் பனி நிறைந்த; பரங் குன்றின் பெரிய மலையிலிருக்கும்; பவளத் திரளே! பவளத் திரள் போன்றவனே!; முனியே! முனியே!; திருமூழிக்களத்து திருமூழிக்களம் என்னுமிடத்து; விளக்கே! இனியாய்! விளக்கே! இனியவனே!; தொண்டரோம் தொண்டர்களான நாங்கள்; பருகு பருகும்படி; இன் அமுதாய இனிமையான அம்ருதம் போன்ற; கனியே! கனியே!; உன்னை உன்னை; கண்டு கொண்டு கண்டு கொண்டு; உய்ந்தொழிந்தேனே உய்ந்து போனேனே