PT 4.9.1

திருவிந்தளூர்ப் பெருமானே! எம்மைக் காப்பாற்று

1328 நும்மைத்தொழுதோம் நுந்தம்பணிசெய்திருக்கும் நும்மடியோம் *
இம்மைக்குஇன்பம்பெற்றோம் எந்தாய் இந்தளூரீரே! *
எம்மைக்கடிதாக்கருமம்அருளி ஆவா! என்றிரங்கி *
நம்மைஒருகால்காட்டிநடந்தால் நாங்கள்உய்யோமே? (2)
PT.4.9.1
1328 ## nummait tŏzhutom * num-tam paṇicĕytu irukkum num aṭiyom *
immaikku iṉpam pĕṟṟom * ĕntāy intal̤ūrīre **
ĕmmaik kaṭitāk karumam arul̤i * ā ā ĕṉṟu iraṅki *
nammai ŏrukāl kāṭṭi naṭantāl * nāṅkal̤ uyyome?-1

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1328. We, your slaves and servants, worship you, our father who stay in Indalur. We have enjoyed all the pleasures of this birth. Won’t you be kind to us? Give us your grace and show us the divine path. Isn’t that the way for us to survive?

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
நும்மைத்தொழுதோம் உம்மைத்தொழுது; நும் தம் வணங்கி உமக்கே; பணிசெய்து இருக்கும் பணிவிடை செய்து; நும் உம்முடைய; அடியோம் அடியவர்களான நாங்கள்; இம்மைக்கு இப்பிறவியிலே; இன்பம் ஞானமாகிற இன்பம்; பெற்றோம் பெற்றோம்; இந்தளூரீரே! திருவிந்தளூரிலிருக்கும்; எந்தாய்! எம்பெருமானே!; எம்மைக் கடிதா சீக்கிரமாக ஏதேனுமொரு; கருமம் அருளி கைங்கரியத்தை அருளிச்செய்து; ஆ வா! என்று இரங்கி ஆ வா என்று மனமிரங்கி; நம்மை ஒருகால் எங்களுக்கு ஒரு முறையாவது; காட்டி நடந்தால் நடந்து காட்சி தந்தால்; நாங்கள் உய்யோமே நாங்கள் உய்வடைவோமே
nummai ẏour highness; thozhudhŏm surrendered, considering to be the means;; nundham your highness-; paṇi kainkaryam (service); seydhu performed; irukkum to sustain; num adiyŏm became servitors;; immaikku now; inbam peṝŏm got the joy of acquiring knowledge;; indhal̤ūṛīr one who is mercifully present in thiruvindhal̤ūr; en thāy you who are like my mother!; emmai for me; kadidhā quickly; karumam kainkaryam which is the ultimate goal; arul̤i mercifully grant; ā ā enṛu saying -ālas! ālas!-; irangi being merciful; nammai for us; oru kāl some time; kātti showing your divine form; nadandhāl if you mercifully come; nāngal̤ we who are ananya prayŏjanar (who don-t seek anything other than kainkaryam); uyyŏmŏ will we not live well?