PT 4.9.8

தங்கள் வண்ணத்தைக் காட்டக்கூடாதா?

1335 முன்னைவண்ணம்பாலின்வண்ணம்முழுதும்நிலைநின்ற *
பின்னைவண்ணம்கொண்டல்வண்ணம் வண்ணம் எண்ணுங்கால் *
பொன்னின்வண்ணம்மணியின்வண்ணம் புரையும் திருமேனி *
இன்னவண்ணமென்றுகாட்டீர் இந்தளூரீரே!
PT.4.9.8
1335 muṉṉai vaṇṇam pāliṉ vaṇṇam * muzhutum nilainiṉṟa *
piṉṉai vaṇṇam kŏṇṭal vaṇṇam * vaṇṇam ĕṇṇuṅkāl ** -
pŏṉṉiṉ vaṇṇam maṇiyiṉ vaṇṇam * puraiyum tirumeṉi *
iṉṉa vaṇṇam ĕṉṟu kāṭṭīr * intal̤ūrīre-8

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Divya Desam

Simple Translation

1335. From ancient times you have had the white color of milk, and always you have the color of the dark clouds. If someone thinks of you, you are precious gold for them, yet your body is the color of a dark sapphire. O god of Indalur, show us your real color.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
இந்தளூரீரே! இந்தளூர்! பெருமானே!; வண்ணம் தங்களின் திருமேனி நிறத்தை; எண்ணுங்கால் ஆராயுமளவில்; முன்னை வண்ணம் கிருதயுகத்தில் நிறம்; பாலின் வண்ணம் பாலின் நிறமான வெண்மை; பின்னை வண்ணம் பின்பு த்ரேதாயுகத்தில் நிறம்; பொன்னின் வண்ணம் பொன் போன்ற சிவந்த நிறம்; மணியின் த்வாபர யுகத்தில் மணியின்; வண்ணம் பச்சை நிறம்; முழுதும் நிலைநின்ற கலியுகத்தின் நிறம்; கொண்டல் வண்ணம் கருத்த மேகத்தின் நிறம்; புரையும் இப்படிப் பட்ட வர்ணங்களையுடைய; திருமேனி திருமேனி அழகை; இன்ன வண்ணம் இன்ன வண்ணமுடையது; என்று காட்டீர் என்று காட்டி அருள வேண்டும்
indhal̤ūrīrĕ ŏh one who is mercifully present in thiruvindhal̤ūr dhivyadhĕṣam!; vaṇṇam (your highness-) physical beauty; eṇṇungāl if we start thinking about it; munnai vaṇṇam the physical beauty in krutha yugam, first; pālin vaṇṇam will be milk-s complexion, that is white; pinnai vaṇṇam physical beauty in the subsequent thrĕthā yugam; ponnin vaṇṇam will have the reddish complexion of gold; maṇiyin vaṇṇam (subsequently the physical beauty in dhvāpara yugam) will have the complexion of a dark-blue gem; muzhudhum at all times; nilai ninṛa remaining firm; vaṇṇam physical beauty; koṇdal vaṇṇan cloud-s complexion; puraiyum remaining together (with the four complexions); thirumĕni divine form; inna vaṇṇam enṛu having such complexion; kāttīr mercifully show.