PT 4.9.2

இந்தளூராய்! இரக்கம் காட்டு

1329 சிந்தைதன்னுள் நீங்காதிருந்ததிருவே மருவினிய
மைந்தா! * அந்தணாலிமாலே! சோலைமழகளிறே! *
நந்தாவிளக்கின்சுடரே! நறையூர்நின்றநம்பீ! * என்
எந்தாய்! இந்தளூராய்! அடியேற்குஇறையும் இரங்காயே. (2)
PT.4.9.2
1329 ## cintai-taṉṉul̤ nīṅkātu irunta tiruve * maruviṉiya
maintā ** am taṇ āli māle colai mazha kal̤iṟe **
nantā vil̤akkiṉ cuṭare * naṟaiyūr niṉṟa nampī * ĕṉ
ĕntāy intal̤ūrāy * aṭiyeṟku iṟaiyum iraṅkāye-2

Ragam

Tōdi / தோடி

Thalam

Jambai / ஜம்பை

Bhavam

Self

Simple Translation

1329. You, our father, the god of Indalur are a treaure that never disappears from our hearts. You are our sweet god of Thiruvāli and you embrace us. You are the young elephant of Thirumālirunjolai, bright like an everlasting lamp. O Nambi of Thirunaraiyur, have pity on me and give me your grace—I am you slave.

Word by Word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion (Aṉvayam). Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சிந்தை சிந்தையில்; தன்னுள் ஒரு நொடிப்பொழுதும்; நீங்காது விட்டுப் பிரியாமலிருக்கிற; இருந்த திருவே! செல்வமே!; மருவினிய அனுபவிக்க அனுபவிக்க; மைந்தா! இனிமையாயிருப்பவனே!; அம் தண் அழகிய குளிர்ந்த; ஆலி மாலே! திருவாலிப் பெருமானே!; சோலை சோலையில் சஞ்சரிக்கும்; மழ களிறே ஒரு யானைக்குட்டி போன்றவனே!; நந்தா விளக்கின் ஒரு நாளுமணையா; சுடரே விளக்குப் போன்றவனே!; நறையூர் நின்ற நறையூரில் நின்ற; நம்பீ என் என் ஸ்வாமியே!; இந்தளூராய்! திருவிந்தளூரிலிருக்கும்; எந்தாய்! எம்பெருமானே!; அடியேற்கு தாஸபூதனான அடியேனுக்கு; இறையும் இரங்காயே! அருள் செய்வாயே
sindhai thannul̤ in the heart; nīngādhu without separating; irundha residing; thiruvĕ ŏh wealth!; maruva iniya one who is enjoyable as we experience him repeatedly; maindhā ŏh youthful one!; am beautiful; thaṇ cool; āli mercifully present in thiruvāli; mālĕ ŏh you who are very loving towards your devotees!; sŏlai roaming in the garden; mazha kal̤iṛĕ ŏh you who are like an elephant calf!; nandhā always burning; vil̤akkin lamp-s; sudarĕ ŏh you who are radiant like the light!; naṛaiyūr in thirunaṛaiyūr; ninṛa mercifully residing; nambī ŏh you who are complete!; indhal̤ūrāy being mercifully present in thiruvindhal̤ūr; en endhāy ŏh my lord!; adiyĕṛku for me, the servitor; iṛaiyum this small favour (kainkaryam); irangāy you are not granting.