நீரே வாழ்ந்தே போம் அடியோமுக்கே எம்பெருமான் அல்லீரோ என்று எல்லாம் இப்படி ஸ்வரூபத்துக்கு சேராதவற்றைச் சொல்லக் கடவீரோ என்ன அருளிச் செய்கிறார் இதில் –
சொல்லாது ஒழிய கில்லேன் அறிந்த சொல்லில் நும் அடியார் எல்லாரோடும் ஒக்க எண்ணி இருந்தீர் அடியேனை நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் நமக்கு இவ் உலகத்து எல்லாம் அறிவீர் ஈதே அறியீர் இந்தளூரீரே —4-9-6-
நல்லார் அறிவீர் தீயார் அறிவீர் விரஹ