27

Thiruk Kāvalampādi

திருகாவளம்பாடி

Thiruk Kāvalampādi

Thiru Nāngur

ஸ்ரீ மடவரல்மங்கை ஸமேத ஸ்ரீ கோபாலக்ருஷ்ணாய நமஹ

### Thirunangur Divya Desams

The eleven Divya Desams in Thirunangur are:

1. **Thirukkavalampadi**
2. **Thiruarimeya Vinnagaram**
3. **Thiruvanpurushothamam**
4. **Thiruchhemponsey Koil**
5. **Thirumanimadakkovil**
6. **Thiruvaikunta Vinnagaram**
7. **Thiruthevanar Thogai**
8. **Thiruthetriyambalam**
9. **Thirumanikoodam**
10. **Thiruvellakkulam**
11. + Read more
திருநாங்கூர் திவ்யதேசங்கள் பதினொன்று. அவை

1. திருக்காவளம்பாடி
2. திருஅரிமேய விண்ணகரம்
3. திருவண்புருடோத்தமம்
4. திருச்செம்பொன் செய்கோவில்
5. திருமணிமாடக்கோவில்
6. திருவைகுந்த விண்ணகரம்
7. திருத்தேவனார்த் + Read more
Thayar: Sri Madavaral Mangai
Moolavar: Sri Gopāla krishnan, Raja Gopālan
Utsavar: Kannan, Raja Gopālan
Vimaanam: Svaymbu
Pushkarani: Thadamalar Poigai
Thirukolam: Nindra (Standing)
Direction: East
Mandalam: Chozha Nādu
Area: Seerkaazhi
State: TamilNadu
Sampradayam: Thenkalai
Timings: 8:00 a.m. to 1:00 p.m. 3:00 p.m. to 8:00 p.m. (Please take the archaga from their home for darshan.)
Search Keyword: Kavalambadi
Mangalāsāsanam: Thirumangai Āzhvār
Tamil
Simplified
English
Verse info
Synonyms
Translation

PT 4.6.1

1298 தாவளந்துஉலகமுற்றும் தடமலர்ப்பொய்கைபுக்கு *
நாவளம்நவின்றிங்கேத்த நாகத்தின்நடுக்கந்தீர்த்தாய் *
மாவளம்பெருகி மன்னும்மறையவர்வாழும்நாங்கை *
காவளம்பாடிமேய கண்ணனே! களைகண்நீயே. (2)
1298 ## தா அளந்து உலகம் முற்றும் *
தட மலர்ப் பொய்கை புக்கு *
நா வளம் நவின்று அங்கு ஏத்த *
நாகத்தின் நடுக்கம் தீர்த்தாய் **
மா வளம் பெருகி மன்னும் *
மறையவர் வாழும் நாங்கை *
காவளம்பாடி மேய *
கண்ணனே களைகண் நீயே-1
1298. ##
thāvaLan^thu ulagamuRRum * thadamalarp Poygaipukku *
nāvaLam navinRaNGkEththa * nāgaththin nadukkam theerththāy *
māvaLam perugi mannu * maRaiyavar vāzhum nāngai *
kāvaLam pādimEya * kaNNanE! kaLaikaN_neeyE (4.6.1)

Ragam

மத்யமாவதி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1298. O Kannā, you measured the earth and the sky with your feet at the sacrifice of king Mahabali. You came to the large blooming pond, killed the crocodile and saved Gajendra the elephant when he worshiped you and called you. You stay in Kāvalambādi where wealth flourishes and Vediyars recite the Vedās. Take away our troubles.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உலகம் முற்றும் உலகமெல்லாம்; தா அளந்து சுற்றித்திரிந்து; தட மலர் பெரிய பூக்களையுடைய; பொய்கை ஒரு தடாகத்தில்; புக்கு இறங்கி; நா வளம் நாவுக்கு இனிய; நவின்று திருநாமங்களை சொல்லி; அங்கு ஏத்த துதிக்க; நாகத்தின் யானையின்; நடுக்கம் அச்சத்தை; தீர்த்தாய்! போக்கினவனே!; மா வளம் அதிக செல்வம்; பெருகி மன்னும் பெருகி இருக்கும்; மறையவர் வாழும் வைதிகர்கள் வாழும்; நாங்கை திருநாங்கூரின்; காவளம்பாடி மேய திருக்காவளம்பாடியிலிருக்கும்; கண்ணனே! கண்ணனே!; களைகண் நீயே நீயே காப்பாற்ற வேண்டும்
ualgam muRRum (SrI gajEndhrAzhwAn) all worlds; thAvaLandhu hopped around (seen at that time); thadam huge; malar having flower; poygai in the pond; pukku entered; angu in that pond; nA for the tongue; vaLam divine name which is decoration; navinRu recited; Eththa as it praised; nAgaththin (that) elephant-s; nadukkam fear; thIrththAy oh one who eliminated!; mA vaLam great wealth; perugi grew; mannu remaining fixed; maRaiyavar brAhmaNas; vAzhum living joyfully; nAngai in thirunAngUr; kAvaLambAdi in the dhivyadhESam named thirukkAvaLambAdi; mEya one who is residing firmly; kaNNanE Oh krishNa!; nIyE you who are partial towards devotees; kaLaigaN should be the protector

PT 4.6.2

1299 மண்ணிடந்துஏனமாகி மாவலிவலிதொலைப்பான் *
விண்ணவர்வேண்டச்சென்று வேள்வியில் குறையிரந்தாய் *
துண்ணெனமாற்றார்தம்மைத் தொலைத்தவர் நாங்கைமேய *
கண்ணனே! காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.
1299 மண் இடந்து ஏனம் ஆகி * மாவலி வலி தொலைப்பான் *
விண்ணவர் வேண்டச் சென்று * வேள்வியில் குறை இரந்தாய் **
துண் என மாற்றார்-தம்மைத் * தொலைத்தவர் நாங்கை மேய *
கண்ணனே காவளம் தண் பாடியாய் * களைகண் நீயே-2
1299
maNNidan^thu Enamāgi * māvali valiTholaippān *
viNNavar vENdachChenRu * vELviyil kuRaiyiranthāy! *
thuNNena māRRārthammaith * tholaiththavar nāngai mEya *
kaNNanE! kāvaLanthaN pādiyāy! * kaLaikaN_nEEyE (4.6.2)

Ragam

மத்யமாவதி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1299. O Kannā, as a boar, you split open the earth and brought the earth goddess from the underworld. You went to the sacrifice of Mahabali as a dwarf to help the gods, asked for three feet of land and measured the earth and the sky. You stay in Kāvalambādi in Nāngai where the warriors living there conquer their enemies easily. Take away our troubles.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏனமாகி வராஹமாக அவதரித்து; மண் பூமியை; இடந்து குத்தி எடுத்து வந்தவனே!; மாவலி வலி மஹாபலியின் பலத்தை; தொலைப்பான் போக்கும்படி; விண்ணவர் வேண்ட தேவர்கள் யாசிக்க; சென்றுவேள்வியில் யாக பூமியில் சென்று; குறை இரந்தாய்! யாசித்துப் பெற்றவனே!; மாற்றார் தம்மை பகைவர்களை; துண் என சீக்கிரமாக; தொலைத்தவர் வென்று வாழும் வீரர்கள் இருக்கும்; நாங்கை மேய திருநாங்கூரின்; தண் குளிர்ந்த சோலைகளையுடைய; காவளம் பாடியாய்! திருக்காவளம்பாடியிலிருக்கும்; கண்ணனே! கண்ணனே!; களைகண் நீயே நீயே காப்பாற்ற வேண்டும்
EnamAgi Being AdhivarAha; maN earth which was stuck in the wall of the aNdam (oval shaped universe); idandhu dug out; mAvali mahAbali-s; vali strength; tholaippAn to eliminate; viNNavar dhEvathAs; vENda as they prayed; senRu went; vELviyil (in his) fire sacrifice; kuRai earth which was missing from his possession; irandhAy Oh one who begged!; thuNNena quickly; mARRAr thammai enemies; thulaiththavar where the brave men who won over, are residing; nAngai in thirunAngUr; kAvaLam thaN pAdiyAi Oh one who is present in the dhivyadhESam named thirukkAvaLambAdi!; mEya One who is eternally residing (in that dhivyadhESam); kaNNanE Oh krishNa!; nIyE kaLaigaN You should be the protector.; kAvaLandhaNpAdi Note that the meaning for this word is as in, kA – gardens-, vaLam – due to abundance, thaN – cool, pAdi – dhivyadhESam. dhivyadhESam which is cool due to abundance of gardens.

PT 4.6.3

1300 உருத்தெழுவாலிமார்வில் ஓருகணை உருவவோட்டி *
கருத்துடைத்தம்பிக்கு இன்பக்கதிர்முடியரசு அளித்தாய் *
பருத்தெழுபலவும்மாவும் பழம்விழுந்தொழுகும்நாங்கை *
கருத்தனே! காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.
1300 உருத்து எழு வாலி மார்வில் *
ஒரு கணை உருவ ஓட்டி *
கருத்து உடைத் தம்பிக்கு * இன்பக்
கதிர் முடி அரசு அளித்தாய் **
பருத்து எழு பலவும் மாவும் *
பழம் விழுந்து ஒழுகும் நாங்கை *
கருத்தனே காவளம் தண்
பாடியாய் * களைகண் நீயே-3
1300
uruththezhu vāli mārvil * OrukaNai uruvavOtti *
karuththudaith thambikku * inbak kathirmudi arachaLiththāy *
paruththezhu palavummāvum * pazhamvizhun^thozhugum nāngai *
karuththanE! kāvaLanthan pādiyāy! * kaLaikaN_nEEyE (4.6.3)

Ragam

மத்யமாவதி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1300. You shot your arrow through Vāli’s chest when he came to fight with you angrily and killed him and you gave the kingdom and the shining crown of Kishkinda to his brother, good-natured Sugrivan. You stay in Kāvalambādi in Nāngai where mango fruits ripening on the trees fall on jackfruits and the juice of both fruits flows on the ground. Take away our troubles.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
உருத்து கோபத்துடன்; எழு வாலி வந்த வாலியின்; மார்வில் மார்பிலே தைக்கும்படி; ஓரு கணை ஒரு பாணத்தை; உருவ ஓட்டி பிரயோகித்து; கருத்து உடை கருத்து உடைய; தம்பிக்கு அவன் தம்பிக்கு; இன்ப இன்பமயமான; கதிர் ஒளிபொருந்திய; முடி அரசு கிரீடத்தையும் ராஜ்யத்தையும்; அளித்தாய் அளித்தாய்; பருத்து எழு பருத்த; பலவும் பலாப்பழங்களும்; மாவும் பழம் மாம்பழங்களும்; விழுந்து கீழேவிழுந்து; ஒழுகும் தேன் வெள்ளமிடும்; நாங்கை திருநாங்கூரின்; தண் குளிர்ந்த சோலைகளையுடைய; காவளம் பாடியாய்! திருக்காவளம்பாடியிலிருக்கும்; கருத்தனே! கர்த்தாவானவனே!; களைகண் நீயே நீயே காப்பாற்ற வேண்டும்
ezhu rising; uruththu having anger; vAli vAli-s; mArvil on the chest; oru kaNai an arrow; uruva to pierce well; Otti shot; karuththudai being the target of your divine heart; thambikku sugrIva mahArajar who is the brother (of such vAli); inbam to cause joy; kadhir radiant; mudi crown; arasu and the kingdom; aLiththAy oh you who mercifully granted!; paruththu being stout; ezhu sprouting; palavum jack fruit tree-s; mAvum mango trees-; pazham fruits; vizhundhu fell down; ozhugum honey is flooding; nAngai in thirunAngUr; kAvaLam thaN pAdiyAi Oh one who is present in the dhivyadhESam named thirukkAvaLambAdi!; karuththanE Oh you who are skillful!; nIyE kaLaigaN You should be the protector.

PT 4.6.4

1301 முனைமுகத்துஅரக்கன்மாள முடிகள்பத்தறுத்துவீழ்த்து * ஆங்கு
அனையவற்கிளையவற்கே அரசளித்தருளினானே! *
சுனைகளில்கயல்கள்பாயச் சுரும்புதேன்நுகரும்நாங்கை *
கனைகழல்காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.
1301 முனைமுகத்து அரக்கன் மாள *
முடிகள் பத்து அறுத்து வீழ்த்து * ஆங்கு
அனையவற்கு இளையவற்கே *
அரசு அளித்து அருளினானே **
சுனைகளில் கயல்கள் பாயச் *
சுரும்பு தேன் நுகரும் நாங்கை *
கனை கழல் காவளம் தண்
பாடியாய் * களைகண் நீயே-4
1301
muNnaimakaththu arakkanmāLa * mudikaL paththaRuththu veezhththu *
āNGku_anaiyavaRku _iLaiyavaRkE * arachaLith_tharuLiNnānE *
chuNnaikaLil kayalkaLpāyach * churumbuthENn_nugarum nāngai *
kanaikazhal kāvaLanthaN pādiyāy! * kaLaikaN_nEEyE (4.6.4)

Ragam

மத்யமாவதி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1301. You fought with the Rākshasa Rāvana, cut off his ten heads and gave the kingdom of Lankā to his brother Vibhishanā, granting him your grace. Ornamented with anklets, you stay in Kāvalambādi in Nāngai, where fish frolic in the mountain springs and bees drink honey from the flowers. Take away our troubles.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முனை முகத்து யுத்தகளத்தில்; அரக்கன் மாள இராவணன் முடியும்படி; முடிகள் பத்து பத்துத் தலைகளையும்; அறுத்துவீழ்த்து அறுத்து வீழ்த்தியவனும்; ஆங்கு அனையவற்கு அங்கு ராவணனின்; இளையவற்கே தம்பிக்கே; அரசு அளித்து அரசு அளித்து; அருளினானே! அருளினவனே!; சுனைகளில் நீர்நிலைகளில்; கயல்கள் பாய கயல்மீன்கள் துள்ளிஓட; சுரும்பு வண்டுகள்; தேன் நுகரும் தேன் பருகுமிடமான; நாங்கை திருநாங்கூரின்; கனை ஒலிக்கின்ற; கழல் வீரத்தண்டையை உடையவனான; தண் குளிர்ந்த சோலைகளையுடைய; காவளம் பாடியாய்! திருக்காவளம்பாடியிலிருக்கும்; களைகண் நீயே நீயே காப்பாற்ற வேண்டும்
munai mugaththu in the battlefield; arakkan rAvaNan; mALa to be killed; paththu mudigaL (his) ten heads; aRuththu severed; vIzhththu to make them fall down; Angu there; anaiyavaRku for such rAvaNan; iLaiyavaRkE for vibhIshaNan who is his younger brother; arasu kingdom; aLiththaruLinAnE Oh one who mercifully granted!; sunaigaLil in water-bodies; kayalgaL fish; pAya (feared) to run away; surumbu beetles; thEn honey; nugarum drank (with a roar); nAngai in thirunAngUr; kAvaLam thaN pAdiyAi Oh one who is present in the dhivyadhESam named thirukkAvaLambAdi!; kanai resounding; kazhal oh one who is having an anklet of valour!; nIyE kaLaigaN You should be the protector.

PT 4.6.5

1302 படவரவுச்சிதன்மேல் பாய்ந்துபன்னடங்கள்செய்து *
மடவரல்மங்கைதன்னை மார்வகத்திருத்தினானே *
தடவரைதங்குமாடத் தகுபுகழ்நாங்கைமேய *
கடவுளே! காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.
1302 பட அரவு உச்சி-தன்மேல் *
பாய்ந்து பல் நடங்கள்செய்து *
மடவரல் மங்கை-தன்னை *
மார்வகத்து இருத்தினானே **
தட வரை தங்கு மாடத் *
தகு புகழ் நாங்கை மேய *
கடவுளே காவளம் தண்
பாடியாய் * களைகண் நீயே-5
1302
padavara uchchithaNnmEl * pāynthupal nadangaLcheythu *
madavaral mangaithannai * mārvagaththu iruththiNnānE! *
thadavarai thangu mādath * thagupugazh nāngai mEya *
kadavuLE! kāvaLanthaN pādiyāy! * kaLaikaN_nEEyE (4.6.5)

Ragam

மத்யமாவதி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1302. O lord, you climbed on the head of the snake Kālingan and danced on it and you embrace beautiful Lakshmi on your chest. You stay in Kāvalambādi in famous Nāngai filled with palaces as large as hills. Take away our troubles.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
பட அரவு படங்களையுடைய; உச்சி தன் காளிய நாகத்தின் தலை; மேல் பாய்ந்து மேல் பாய்ந்து; பல் நடங்கள் செய்து பல நடனங்கள் ஆடி; மடவரல் மடமைக் குணம் வாய்ந்த; மங்கை தன்னை திருமகளை; மார்வகத்து மார்பில்; இருத்தினானே! இருத்தினவனே!; தட வரை பெரிய மலைகள் போன்ற; தங்கு மாட மாளிகைகளையுடையதும்; தகு புகழ் தகுந்த புகழையுடையதுமான; நாங்கை மேய நாங்கை திருநாங்கூரின்; தண் குளிர்ந்த சோலைகளையுடைய; காவளம் பாடியாய்! திருக்காவளம்பாடியிலிருக்கும்; கடவுளே! கடவுளே!; களைகண் நீயே நீயே காப்பாற்ற வேண்டும்
padam having (expanded) hoods; aravu kALiyan-s; uchchi than mEl on the head; pAyndhu jumped; pal nadangaL many different types of dances; seydhu performed; madavaral having humility; mangai thannai eternally youthful periya pirAtti; mArvagaththu on his divine chest; iruththinAnE oh you who have eternally placed!; thadam vast; varai like mountains; mAdam mansions; thangu present; thagu apt; pugazh glory; mEya is present; nAngai in thirunAngUr; kAvaLam thaN pAdiyAi Oh one who is present in the dhivyadhESam named thirukkAvaLambAdi!; kadavuLE Oh lord of all!; nIyE kaLaigaN You should be the protector.

PT 4.6.6

1303 மல்லரையட்டுமாளக் கஞ்சனைமலைந்துகொன்று *
பல்லரசுஅவிந்துவீழப் பாரதப்போர்முடித்தாய்! *
நல்லரண்காவின்நீழல் நறைகமழ்நாங்கைமேய *
கல்லரண்காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.
1303 மல்லரை அட்டு மாளக் *
கஞ்சனை மலைந்து கொன்று *
பல் அரசு அவிந்து வீழப் *
பாரதப் போர் முடித்தாய் **
நல் அரண் காவின் நீழல் *
நறை கமழ் நாங்கை மேய *
கல் அரண் காவளம் தண்
பாடியாய் * களைகண் நீயே-6
1303
mallarai_yattu_māLak * kaNYchanai malainthu KonRu *
pallarachu avinthu veezhap * pārathappOr mudiththāy *
nallaraN kāviNn neezhal * naRaikamazh nāngai mEya *
kallaraN kāvaLanthaN pādiyāy! * kaLaikaN_nEEyE (4.6.6)

Ragam

மத்யமாவதி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1303. You killed Kamsan and fought with the wrestlers he sent and you made the kingdom of the Kauravās fall and conquered the Pāndavās’ enemies in the Bhārathā war. You stay in Kāvalambādi protected by stone walls in Nāngai where the shade of the trees in the groves spreads along with the fragrance of pollen.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மல்லரை மல்லர்களை; அட்டு மாள மாளும்படி செய்து; கஞ்சனை கம்ஸனை எதிரிட்டு; மலைந்து கொன்று சென்று கொன்று; பல் அரசு பல்லாயிரம் அரசர்கள்; அவிந்து வீழ மாண்டு விழ; பாரதப் போர் பாரதப் போரை; முடித்தாய்! முடித்தவனே!; நல் அரண் நல்ல அழகிய; காவின் நீழல் சோலைகளின் நிழலிலே; நறை கமழ் மணம் வீசும்; நாங்கை மேய திருநாங்கூரின்; தண் குளிர்ந்த சோலைகளையுடைய; காவளம் பாடியாய்! திருக்காவளம்பாடியிலிருக்கும்; கடவுளே! கடவுளே!; களைகண் நீயே நீயே காப்பாற்ற வேண்டும்
mallarai wrestlers such as chANUra et al; attu fought; mALa killed; kanjanai kamsan; malaindhu fought; konRu killed; pal arasu many kings; avindhu vIzha to be destroyed; bAradhap pOr mahAbhAratha war; mudiththAy Oh one who completed!; nal distinguished (dense); araN having beauty (shade); kAvin gardens-; nIzhal in the shade; naRai fragrance; kamazh smelling; nAngai in thirunAngUr; mEya firmly residing; kal strong; araN being the one who is having protection; kAvaLam thaN pAdiyAi Oh one who is present in the dhivyadhESam named thirukkAvaLambAdi!; nIyE kaLaigaN You should be the protector.

PT 4.6.7

1304 மூத்தவற்குஅரசுவேண்டி முன்புதூதெழுந்தருளி *
மாத்தமர்பாகன்வீழ மதகரிமருப்புஒசித்தாய் *
பூத்தமர்சோலையோங்கிப் புனல்பரந்தொழுகும்நாங்கை *
காத்தனே! காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.
1304 மூத்தவற்கு அரசு வேண்டி *
முன்பு தூது எழுந்தருளி *
மாத்து அமர் பாகன் வீழ *
மத கரி மருப்பு ஒசித்தாய் **
பூத்து அமர் சோலை ஓங்கிப் *
புனல் பரந்து ஒழுகும் நாங்கை *
காத்தனே காவளம் தண்
பாடியாய் * களைகண் நீயே-7
1304
mooththavaRku arachuvEndi * munbuthoothezhun^tharuLi *
māththamar pāgan veezha * mathagari marupPochiththāy *
pooththamar chOlaiyOngip * puNnalparan^Thozhugum nāngai *
kāththanE! kāvaLanthaN pādiyāy! * kaLaikaN_nEEyE (4.6.7)

Ragam

மத்யமாவதி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1304. O lord, you went to Duryodhanā's assembly as a messenger and asked for a part of the kingdom for the Pāndavās. You killed the mahout and broke the tusks of the angry elephant Kuvalayābeedam. You stay in Kāvalambādi in Nāngai where groves flourish and bloom with abundant flowers that spread their fragrance everywhere and the water of the Kāviri flows all over the land. Take away our troubles.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
முன்பு முன்பொரு சமயம்; மூத்தவற்கு தருமபுத்திரனுக்கு; அரசு வேண்டி அரசளிக்க விரும்பி; தூது எழுந்தருளி தூது சென்றவனே!; மாத்து அமர் யானையின் மீது அமர்ந்த; பாகன் வீழ பாகன் கீழே விழ; மத கரி யானையின் கொம்பை; மருப்பு ஒசித்தாய் முறித்தவனே!; பூத்து அமர் பூத்துக் குலுங்கும்; சோலை ஓங்கி சோலைகள் ஓங்கி வளர; புனல் பரந்து நீர் நாலாபக்கமும்; ஒழுகும் பாய்ந்து ஓடும்; நாங்கை திருநாங்கூரின்; தண் குளிர்ந்த சோலைகளையுடைய; காவளம் பாடியாய்! திருக்காவளம்பாடியிலிருக்கும்; கடவுளே! கடவுளே!; களைகண் நீயே நீயே காப்பாற்ற வேண்டும்
mUththavaRku for dharma puthra, who is the eldest; arasu vENdi desired for (to give) kingdom; munbu previously; thUdhu ezhundharuLi went as messenger; mAththu on elephant; amar sitting firm; pAgan mahout; vIzha to fall down and die; madham fleshy; kari kuvalayApIdam-s; maruppu tusk; osiththAy oh one who broke!; pU amar filled with flowers; sOlai gardens; Ongi being tall; punal water; parandhu spread (all over the garden); ozhugum flowing; nAngai in thirunAngUr; kAvaLam thaN pAdiyAi Oh one who is present in the dhivyadhESam named thirukkAvaLambAdi!; kAththanE Oh protector!; nIyE kaLaigaN You should be the protector.

PT 4.6.8

1305 ஏவிளங்கன்னிக்காகி இமையவர்கோனைச்செற்று *
காவளம்கடிதிறுத்துக் கற்பகம்கொண்டுபோந்தாய்! *
பூவளம்பொழில்கள்சூழ்ந்த புரந்தரன்செய்தநாங்கை *
காவளம்பாடிமேய கண்ணனே! களைகண்நீயே.
1305 ஏவு இளங் கன்னிக்கு ஆகி *
இமையவர்-கோனைச் செற்று *
கா வளம் கடிது இறுத்துக் *
கற்பகம் கொண்டு போந்தாய் **
பூ வளம் பொழில்கள் சூழ்ந்த *
புரந்தரன் செய்த நாங்கை *
காவளம்பாடி மேய *
கண்ணனே களைகண் நீயே-8
1305
EviLaNG kannikkāki * imaiyavar kOnaichcheRRu *
kāvaLam kadithiRuththuk * kaRpagam Kondu pOnthāy *
poovaLam PozhilgaL choozhntha * purantharaNncheytha nāngai *
kāvaLam pādi mEya * kaNNanE! kaLaikaN_nEEyE (4.6.8)

Ragam

மத்யமாவதி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1305. You went to Indra’s world, conquered Indra and brought the Karpaga tree for your young wife Rukmani. You stay in Kāvalambādi in Nāngai where Indra, the god of the gods, planted a flower garden in the groves. O Kanna, take away our troubles.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
ஏவு இளம் இளம்பெண்; கன்னிக்கு ஆகி ஸத்யபாமைக்காக; இமையவர் கோனை யுத்தத்திலே தேவேந்திரனை; செற்று வென்று; கடிது காவளம் சீக்கிரமாக நந்தவனத்தின்; இறுத்து அழகை அழித்து; கற்பகம் கல்ப விருக்ஷத்தை; கொண்டு போந்தாய்! கொண்டு வந்தவனே!; புரந்தரன் செய்த இந்திரனால் ஏற்படுத்தப்பட்ட; பூவளம் புஷ்பங்களின் வளம் மிக்க; பொழில்கள் சூழ்ந்த சோலைகள் சூழ்ந்த; நாங்கை மேய திருநாங்கூரின்; தண் குளிர்ந்த சோலைகளையுடைய; காவளம் பாடி! திருக்காவளம்பாடியிலிருக்கும்; கடவுளே! கடவுளே!; களைகண் நீயே நீயே காப்பாற்ற வேண்டும்
Evu in battle; iLam kannikkAgi for the young sathyabhAmA; imaiyavar kOnai dhEvEndhran; seRRu defeated; kA garden-s; vaLam beauty; kadidhu quickly; iRuththu destroyed; kaRpagam kalpaka tree [a type of tree which grants all the wishes prayed to it, for]; koNdu pOndhAy oh you who brought!; vaLam beautiful; pU having flowers; pozhilgaL gardens; sUzhndha surrounded; purandharan by indhran; seydha made; nAngai in thirunAngUr; kAvaLam pAdi mEya firmly present in the dhivyadhESam named thirukkAvaLambAdi; kaNNanE Oh krishNa!; nIyE kaLaigaN You should be the protector.

PT 4.6.9

1306 சந்தமாய்ச்சமயமாகிச் சமயவைம்பூதமாகி *
அந்தமாய்ஆதியாகி அருமறையவையும் ஆனாய்! *
மந்தமார்பொழில்கள்தோறும் மடமயிலாலும்நாங்கை *
கந்தமார்காவளந்தண்பாடியாய்! களைகண்நீயே.
1306 சந்தம் ஆய்ச் சமயம் ஆகிச் *
சமய ஐம் பூதம் ஆகி *
அந்தம் ஆய் ஆதி ஆகி *
அரு மறை-அவையும் ஆனாய் **
மந்தம் ஆர் பொழில்கள்தோறும் *
மட மயில் ஆலும் நாங்கை *
கந்தம் ஆர் காவளம் தண்
பாடியாய் * களைகண் நீயே-9
1306
chanthamāy chamayamākich * chamayavaim poothamāki *
anthamāy āthiyāki * arumaRaiyavaiyum āNnāy *
manthamār PozhilkaL_thORum * madamayilālum nāngai *
kanthamār kāvaLanthaN pādiyāy! * kaLaikaN_nEEyE (4.6.9)

Ragam

மத்யமாவதி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1306. O lord, you are the beginning, the end, the sky, wind, water, fire and religion, the rhythm in music and all the wonderful Vedās. You stay in the Kāvalambādi temple in Nāngai where beautiful peacocks dance in the fragrant groves. Take away our troubles.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
சந்தமாய் சந்தங்களுக்கும் அவைகளின்; சமயமாகி இலக்கணங்களுக்கும் காரணமானவனே!; சமய ஐம் பூதம் பஞ்ச பூதங்களுக்கும்; ஆகி காரணமானவனே!; அந்தமாய் உலக முடிவுக்கும்; ஆதி யாகி உற்பத்திக்கும் காரணமானவனே!; அருமறை அவையும் வேதங்களுக்கும்; ஆனாய் காரணமானவனே!; மந்தமார் பாரிஜாத மரங்களின்; பொழில்கள் தோறும் சோலைகளில்; மடமயில் ஆலும் பெண் மயில்களாடும்; கந்தமார் மணம் மிக்க; நாங்கை திருநாங்கூரின்; தண் குளிர்ந்த சோலைகளையுடைய; காவளம் பாடியாய்! திருக்காவளம்பாடியிலிருக்கும்; கடவுளே! கடவுளே!; களைகண் நீயே நீயே காப்பாற்ற வேண்டும்
sandhamAy being the controller of chandhas (meter in poems); samayamAgi being the controller of the order (that is, count of letters) matching that chandhas; samayam the orderly nature; aimbUdhamAgi being the controller of the five elements; andhamAy being the cause of deluge; AdhiyAgi being the cause of creation; avai revealing those principles; aru difficult to know the meanings; maRaiyum AnAy Oh you who are the controller of vEdhams!; mandham mandhAra trees; Ar filled; pozhilgaL thORum in all the gardens; madam mayil humble peahens; Alum dancing; nAngai in thirunAngUr; gandham Ar very fragrant; kAvaLam thaN pAdiyAi Oh one who is present in the dhivyadhESam named thirukkAvaLambAdi!; nIyE kaLaigaN You should be the protector.

PT 4.6.10

1307 மாவளம்பெருகி மன்னும்மறையவர்வாழும்நாங்கைக் *
காவளம்பாடிமேயகண்ணணைக்கலியன்சொன்ன *
பாவளம்பத்தும்வல்லார் பார்மிசைஅரசராகி *
கோவிளமன்னர்தாழக் குடைநிழல்பொலிவர்தாமே. (2)
1307 ## மா வளம் பெருகி மன்னும் *
மறையவர் வாழும் * நாங்கைக்
காவளம்பாடி மேய *
கண்ணனைக் கலியன் சொன்ன **
பா வளம் பத்தும் வல்லார் *
பார்மிசை அரசர் ஆகிக் *
கோ இள மன்னர் தாழக் *
குடை நிழல் பொலிவர்-தாமே-10
1307. ##
māvaLam perugi mannu * maRaiyavar vāzhum *
nāngaikkāvaLam pādimEya * kaNNaNaik kaliyan sonna *
pāvaLam paththum vallār * pārmisai arasarāgi *
kOviLa mannar_thāzhak * kudain^izhal Polivar_thāmE (4.6.10)

Ragam

மத்யமாவதி

Thalam

ஜம்பை

Bhavam

Self

Saranagathi

Simple Translation

1307. The poet Kaliyan composed ten pāsurams on Kannan, the god of Kāvalambādi in Nāngai where Vediyars skilled in the Vedās live and wealth flourishes. If devotees learn these ten good pāsurams and recite them well, they will become kings on the earth and be shaded by royal umbrellas as kings bow to them.

Word by word (WBW) meaning

(The words may be rearranged to facilitate poetry to prose conversion. Please read the meanings (in black) continiously to form the sentence and understand the simple meaning of those verse.)
மாவளம் செல்வம்; பெருகி மன்னும் பெருகியிருக்கும்; மறையவர் நாங்கை வைதிகர்கள்; வாழும் வாழுமிடமான நாங்கூரின்; காவளம் பாடி மேய திருக்காவளம்பாடியிலிருக்கும்; கண்ணனைக் கண்ணனைக் குறித்து; கலியன் திருமங்கை ஆழ்வார்; சொன்ன அருளிச்செய்த; வளம் பா பத்தும் பாசுரங்கள் பத்தும்; வல்லார் ஓத வல்லார்; பார்மிசை பூலோகத்தில்; அரசராகி அரசர்களாகி; கோவிள மன்னர் அரசர்களும் இளவரசர்களும்; தாழ வணங்குமாறு; குடை நிழல் ஒருகுடை நிழலில்; பொலிவர் தாமே பொலிந்து விளங்குவர்
mA vaLam great wealth; perugi grew; mannum remaining firm; maRaiyavar best among brAhmaNas; vAzhum living happily; nAngai in thirunAngUr; kAvaLam pAdi in the dhivyadhESam named thirukkAvaLambAdi; mEya remaining firmly; kaNNanai on krishNa; kaliyan AzhwAr; sonna mercifully spoke; vaLam beautiful; pA paththum ten pAsurams; vallAr those who can recite; pAr misai on earth; arasarAgi being kings; kO (gO) on earth; iLa mannar all the princes; thAzha to be subservient; kudai nizhal in the shade of the umbrella; polivar will remain wealthy